ஆனந்திற்கும் உமாவிற்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது, இரண்டு ஆண்டுகள் முடிந்தது போன்று இல்லாமல் மிகவும் நெருக்கத்துடனும் அன்யோன்யத்துடனும் இருந்து வந்தனர், உமாவின் அக்காள் கணவன் சுரேஷ் விற்பனை அதிகாரியாக தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்தான், அடிக்கடி வெளியூர் சென்று வருவது வழக்கம், ஒரு முறை பெங்களுருவிற்கு சென்றிருந்தபோது ஆனந்தை தற்ச்செயலாக ஒரு இளம் பெண்ணுடன் பார்த்தான், பார்த்தவுடன் சந்தேகம் எழவில்லை, அப்படியே சந்தேகம் ஏற்பட்டிருந்தாலும் அதை உடனடியாக தனது மனைவியிடம் தெரிவிக்கவேண்டாம் என்ற முடிவில் இருந்தான் சுரேஷ், அதற்க்கு காரணம் தனது மாமனார் உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாலும் ஆனந்திற்கும் உமாவிற்கும் திருமணமாகி ஒருவருடம் மட்டுமே ஆகி இருந்ததால் குடும்பத்தில் கலவரங்களை உண்டாக்க சுரேஷ் விரும்பவில்லை.
ஆனால் இன்னொரு வருடமும் கடந்துவிட்ட நிலையில் மற்றொருநாள் சென்னையில் ஜனத்திரள் நிறைந்து கிடக்கும் ஒரு வீதியில் ஆனந்தையும் அதே இளம் பெண்ணையும் மறுபடியும் சேர்ந்து பார்த்த போது இதைப்பற்றி முதலில் ஆனந்திடம் விசாரிப்பதா தனது மனைவி மூலம் உமாவிற்கு தெரியப்படுத்துவதா என்ற கேள்வி அவனுள் எழுந்தது. சரியான முடிவிற்கு வர இயலாமல் அவர்களை பின் தொடர்வதென முடிவிற்கு வந்தான் சுரேஷ்.
ஆட்டோ ஒன்றில் ஏறிய இருவரையும் மற்றொரு ஆட்டோவில் பின்தொடர்ந்தான், அவர்கள் சென்ற ஆட்டோ அடையாற்றிலுள்ள ஒரு வீதியில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் எதிரில் சென்று நின்றது, வெளியே இறங்கிய இருவரும் ஒன்றாக அடுக்குமாடி குடியிருப்பினுள் சென்று மறைந்தனர். இவர்களை பற்றிய தகவல்களை எப்படி யாரிடம் கேட்டு தெரிந்துகொள்வதென்று தெரியாமல் சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தவன் அந்த அடுக்குமாடியிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த சற்று வயதான ஆள் ஒருவர் சற்று தொலைவில் நிருத்தபட்டிருக்கும் நடமாடும் துணிகளை சுருக்கம் நீக்கும் இரும்பு பெட்டியுடன் நின்றிருந்த இரண்டு சக்கர வண்டியை வந்தடைந்தார்.
அவரிடம் சென்று அடுக்குமாடியைப் பற்றிய விவரங்களை கேட்டறிய முற்பட்ட போது அந்த ஆள் சற்று கோபமடைந்தவராக சுரேஷை ஏற இறங்க பார்த்தார், சுரேஷுக்கு ஒரு நிமிடம் தனது அவசரத்தின் மீது வெட்கம் ஏற்ப்பட்டது, மறுபடியும் சில துணிகளை எடுத்துக்கொண்டு அந்த ஆள் வேறு ஒரு வீட்டை நோக்கி நடக்கலானார், அந்த இருசக்கர வண்டியின் அருகே உட்கார்ந்திருந்த வயதான பெண் சுரேஷை கவனிக்காதவள் போல் உட்கார்ந்திருந்தாள் அவள் வயதான ஆசாமியின் மனைவியாக இருக்ககூடும் என்று யோசித்த வண்ணம், அம்மா அந்த அப்பார்ட்மென்ட்ல இப்போ உள்ள போனாங்களே அவங்கள பத்தி ஏதாவது தெரிஞ்சா சொல்லமுடியுமா என்றான்.
கிழவி சிறிது நேரத்திற்குப் பின் சுரேஷை நிமிர்ந்து பார்த்துவிட்டு தெரியாது என்றாள். அடுத்தது என்ன செய்வது என யோசிக்க முடியாமல் அன்றைய அலுவலக பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புவதற்குள் எப்போதும் போல இரவு மணி பத்தை தாண்டிவிட்டிருந்தது. அவனுக்கு இரவு உணவு பரிமாறுவதற்கு வந்த அவன் மனைவியிடம் ஒரு முக்கிய விஷயம் உன்னிடம் சொல்ல வேண்டும் என்றான். முதலில் சாப்பிடுங்கள் பிறகு பேசலாம் என்று சொல்லிவிட்டு தானும் தட்டில் உணவை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடத் துவங்கினாள் சுரேஷின் மனைவி சாரு.
ஒரு வருடத்திற்கு முன்னர் பெங்களுருவில் தான் பார்த்த அதே பெண்ணுடன் இன்றும் ஆனந்தை சேர்த்து பார்த்தவற்றை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான் சுரேஷ், இதை உமாவிடம் எப்படி சொல்லுவது, ஆனந்தும் உமாவும் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வருவதைப் பற்றி யாவரும் அறிந்திருக்கும் போது இது எப்படி சாத்தியம் என்பது போன்ற விவாதங்கள் இருவருக்கும் ஏற்ப்பட்டது. சுரேஷும் சாருவும் சேர்ந்து ஒரு முடிவிற்கு வந்தனர்.
அன்று ஞாயிற்று கிழமை மணி காலை ஒன்பது, அடையாற்றிலிருந்த அடுக்குமாடியில் எந்த வீட்டில் அந்த பெண் வசிக்கிறாள் அவள் பெயர் என்ன என்பது போன்ற விவரங்கள் ஏதும் தெரியாத நிலையில் ஒவ்வொரு வீடாகச்சென்று அழைப்புமணியை தட்டிவிட்டு வெளியே காத்திருந்தனர், முதல் மாடியில் மூன்றாவது வீட்டில் அதே பெண் கதவை திறந்தாள், லேசாக சாருவிடம் சமிஞை செய்தான் சுரேஷ். குடும்ப அட்டைகளை சரி பார்க்க வந்திருப்பதாக சொல்லிவிட்டு அவளது பெயர் கணவர் அல்லது பாதுகாப்பவர் பெயர் போன்ற விவரங்களை அவளிடம் விசாரித்த போது அந்த பெண் தனக்கு குடும்ப அட்டை பெங்களூருவில் இருப்பதாகவும் அதை முறைப்படி மாற்றிக்கொள்ள தேவைபட்டால் மாற்றிகொள்வதாகவும் தெரிவித்துவிட அவளது பெயரைக் கூட தெரிந்து கொள்வதற்கு இயலாமல் திரும்பிவிட்டனர் சுரேஷும் சாருவும்.
இத்தனை அழகியப் பெண் இவளுடன் ஆனந்திற்கு மறைவான தொடர்பு இருக்க வாய்ப்புகள் உண்டு என்று ஊகித்து வீடு திரும்பும் வழியில் உமாவின் வீட்டிற்கு சென்றனர். சாருவிற்கு உமாவையும் ஆனந்தையும் பார்த்த போது உள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த பெண் விவகாரம் அடிக்கடி நினைவில் வந்து இயல்பாக பேச விடாமல் தடுத்து தடுமாறச் செய்தது. உமா கொடுத்த காப்பியைமட்டும் அருந்திவிட்டு ஆனந்தின் எதிரே உமாவிடம் ரகசியத்தை சொல்ல இயலாமல் வீடு திரும்பினர்.
சுரேஷிற்கு மனதில் குழப்பம் இன்று எப்படியாவது அதை தீர்த்து விடுவது என்ற முடிவில் நேரே அடையாற்றிலிருந்த அடுக்குமாடி வீட்டை சென்றடைந்து மணியை அழுத்திவிட்டு காத்திருந்தான், அதே பெண் வந்து கதவைத் திறந்தாள், உங்களிடம் ஒரு முக்கிய விஷயம் விசாரிக்க வேண்டும் என்றான், உள்ளே வாங்களேன் என்றாள், உள்ளேச் சென்றவன் அதிர்ச்சியில் உறைந்து போனான், சுவற்றில் ஆனந்தும் அந்த பெண்ணும் கணவன் மனைவி போன்று நெருங்கி நிற்கும் புகைப்படங்கள்.
உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா என்றான், எடுத்த எடுப்பிலேயே அவசரம் தொனித்தது சுரேஷின் குரலில், என் பெயர் ஷீலா. திருமணமாகிவிட்டதா, இல்லை, புகைப் படங்களில் உங்களுடன் இருப்பது உங்கள் கணவரா அல்லது, கேட்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம், அதற்க்கு ஷீலா பரவாயில்லை, அவர் எனது நண்பர் என்றாள், உடனே சுரேஷ் புகைப்படத்தைப்பார்த்தால் அப்படித் தெரியவில்லையே என்றான்.
அவள் சற்றும் தாமதிக்காமல் நீங்கள் நினைப்பது போல்தான், அவர் என் காதலனும் கூட என்றாள், அதற்க்கு சுரேஷ் அவருக்கு திருமணமாகி மனைவி இருப்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா என்றான். தெரியுமே என்றாள் ஷீலா. அவர் மனைவிக்குத் தெரிந்தால் என்னவாகும் என்று தெரியுமா உங்களுக்கு என்றான் சுரேஷ். ஷீலா அதற்க்கு பதிலேதும் பேசவில்லை, கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியே வந்து நேரே ஆனந்தின் அலுவலகம் நோக்கி விரைந்தான்.
ஆனந்தின் அலுவலகத்தை அடைந்த போது ஆனந்த் சுரேஷை வரவேற்க்கதயாராக இருந்ததுபோல் இருந்தான், ஷீலா தொலைபேசியில் ஆனந்திடம் இதைப்பற்றி தெரிவித்திருக்க கூடும் என்று அனுமானித்தான் சுரேஷ். அலுவலகத்தின் வேறு பக்கத்தில் இருந்த விசிட்டர் அறையில் இருவரும் சென்று அமர்ந்தனர், ஷீலாவுடன் ஆனந்தை தான் பார்த்த எல்லா விவரத்தையும் கூறி உமாவின் வாழ்க்கை பிரச்சினையை தட்டி கேட்க தான் இருப்பதாக எச்சரிக்கை செய்தான், ஆனந்த் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அலுவலகத்தில் சொந்த பிரச்சினைகளைப் பற்றி பேச தான் விரும்பவில்லை என்று சொல்லி சுரேஷை திருப்பி அனுப்பி விட்டான்.
தனது மனைவி சாருவிடம் கலந்தாலோசித்து, பிரச்சினையை உமாவிடமே விட்டுவிடுவது நல்லது என்று இருவரும் கைபேசியில் உமாவிடம் நடந்தவற்றைப் பற்றி விவரமாக சொல்லி ஆனந்திடம் பொறுமையாக விசாரிக்கச் சொன்னார்கள். உமாவிற்கு ஆச்சரியம், ஷீலா என்ற பெண்ணுடன் ஆனந்திற்கு உறவு இருப்பதற்கு வாய்ப்பே இருக்க முடியாது என்று உறுதியாக நம்பினாள். ஆனந்த் அன்று வீட்டிற்கு வந்து இரவு சாப்பிட்டு முடித்த பின் ஷீலாவைப்பற்றி விசாரித்தாள் உமா. ஆனந்த் உமாவிடம் தன் மீது சந்தேகம் உள்ளதா தான் அப்படியொரு பெண்ணிடம் பழகும் குணம் உள்ளவனா என்று கேட்டான். இதுவரையில் ஆனந்தை தான் முழுமையாக நம்பி வந்ததாகவும் சொன்னாள் உமா, தனது வாழ்க்கையில் எதையும் உமாவிடம் மறைத்ததே கிடையாது என்று சொன்னான் ஆனந்த்.
அப்படியென்றால் தனது அக்காவும் அவளது கணவனும் பார்த்த ஷீலா என்ற பெண் யார் என்று கேட்டாள் உமா. தன்னுடன் ஒன்றாக படித்த தனது பால்ய வயது முதல் தனக்கு மிகவும் நெருங்கிய சிநேகிதன் கண்ணன் என்றான் ஆனந்த்.
வியாழன், 13 மே, 2010
புதன், 12 மே, 2010
குர்காக்கள், கங்காணிகள்
இரவு நேரங்களில் வீடுகளின் வாசலிலிருக்கும் கேட்டை கொம்பினால் தட்டிவிட்டுச் செல்லும் குர்காக்களை பற்றி யாவரும் அறிந்திருக்கிறோம் ஆனால் அப்படி அவர்கள் தெருத் தெருவாக தட்டி விட்டு செல்வதால் திருடனோ மற்ற சமூக விரோதிகளோ வீடுகளில் திருட வருவதில்லையா என்று கேட்டால் அது எப்படி ஒரு கொம்பின் உதவியுடன் திருடனை குர்க்காவால் பிடிக்க முடியும் என்று பதில் சொல்லிவிடலாம், அப்படியென்றால் குர்காக்கள் ஏன் இரவில் தெருதெருவாக அலைய வேண்டும் என்ற கேள்வி மிஞ்சும்.
எனக்கு கிடைத்த செவி வழி செய்தி, இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்ச்சியில் இருந்த சமயத்தில் அண்டை நாடான நேபாளத்திலிருந்து வந்த குர்காக்கள் இந்தியர்களுடன் இணைந்து ஆங்கிலேயரிடம் போராடி நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து விடுவிக்க பெரிதும் உதவியதாகவும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் சென்ற பின்பு, அவர்கள் பெரும்பாலானோர் படித்திராமல் இருப்பதால் காவலர் வேலையை செய்து பிழைப்பு நடத்த உரிமை கொடுக்கப்பட்டதாகவும், அவர்கள் தங்களது வேலையை பொறுப்புடன் செய்வதால் அவர்களை தொடர்ந்து அவ்வேலைகளில் அமர்த்தப்பட்டதாக தகவல் சொல்லி கேட்டிருக்கிறேன்.
ஆனால் சில திருடர்களும் சில போலீஸ்காரர்களுக்கும் சில சமயங்களில் இவர்கள் உதவிகரமாக இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது, எது எப்படி இருந்தாலும் இந்த குர்காக்கள் இரவில் தட்டிவிட்டு செல்வதனால் திருடர்களும் சமுதாய விரோதிகளும் இரவில் நடமாடாமல் இல்லை என்பது உறுதி. ஒவ்வொரு வட்டாரத்திலும் போலீசுக்கு கங்காணிகள் இருப்பதால் எங்கு என்ன நடக்கிறது என்கின்ற தகவல்கள் போலீசுக்கு கிடைத்துவிடுவதற்க்கு உதவியாக இருந்துவிடும். கங்காணிகளை எளிதில் கண்டுபிடித்து விட முடிகிறது, இதனால் இடம் விட்டு இடம் புதிதாய் வருகின்ற சமூக விரோதிகளும் திருடர்களும் மட்டுமே கங்காணிகள் யாரென்று அறியாமல் போக வழியுண்டு, ஏனையோர் குறிப்பாக சமூகவிரோதிகள், திருடர்கள், தவறான முறையில் நடந்து கொள்ள சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பவர்கள் இந்த கங்காணிகளையும் விரைவிலேயே இனம் கண்டுகொள்கின்றனர் என்பது நமக்கு நன்கு புரிகிறது.
சந்தேகத்துக்குரியவர்களின் நடமாட்டமென்பது சகஜமாகிவருகின்ற சூழல் தற்போது எங்கும் காணப்படுகிறது, சந்தேகத்திற்க்குரியவர்கள் தங்களை யாரும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்க எடுத்துக் கொள்ளும் முயற்ச்சிகளும் ஏராளம். குர்காவின் எதிரிலேயே ஒருவன் ஒரு வீட்டின் சுவற்றின் மீது ஏறி குதித்தாலும் கூட குர்க்காவால் ஒன்றும் செய்ய இயலாமல் பார்க்காதவன் போல நடந்து போய்விடதான் செய்வான். கங்காணிகள் எவற்றைப் பற்றி விவரம் சேகரிப்பார்கள் என்பது நமக்கு தெரிவதற்கில்லை, என்றாலும் அந்தந்த வட்டாரத்தில் இருக்கும் சமூக விரோதிகளுக்கு நிச்சயமாக அங்குள்ள கங்காணி யாரென்பதும் தெரிந்துதான் உள்ளது, இதனால் பல குற்றங்கள் நடப்பதை தவிர்க்க இயலாமல் போய்விடுகிறது.

சனி, 8 மே, 2010
காமத்திற்கு உறவில்லை
கமலாவின் மூத்த பெண் அன்னபூர்ணாவிற்க்குத் திருமணம் முடிந்த பின் வீடுவெறிச்சோடி போனது, கமலாவிற்கும் ஏகாம்பரத்திற்க்கும் விளைச்சல் நிலங்கள் ஏராளம், குடும்ப வழக்கத்தின்படி கமலா பூபெய்திய அடுத்த வருடத்தில் திருமணம் முடிந்தது, கமலாவின் பதினைந்தாவது வயதில் அன்னபூர்ணா பிறந்தாள், அன்னபூர்ணாவிற்க்கு உறவுமுறையில் திருமணம் செய்துகொள்ள ஆட்களிருந்தும் வெளியிலிருந்து திருமணம் செய்து கொடுக்கவேண்டிய சூழல் உருவானது, கமலாவின் தகப்பனின் பரம்பரை சொத்துக்கள் பல வருடங்களாக வழக்கில் கிடப்பில் கிடந்தன, சென்னையின் மையப்பகுதி இருந்த பல ஏக்கர் நிலம் என்பதால் அந்த வழக்கு தங்களுக்கு சாதகமாக வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று நினைத்து பங்காளிகள் அனைவரும் வழக்கிலிருந்து விலகி இருந்தனர், ஆனால் ஏகாம்பரம் விடா முயற்ச்சியில் இருந்து வந்தார்.
கமலாவின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் உடன் பிறந்த சகோதரர்கள் யாவரும் கேசில் ஜெயித்தால் அதில் கிடைக்கின்ற பணத்தில் செலவழிந்த பணம் போக மீதியை பங்கு கேட்க்க திட்டம் தீட்டி இருந்தனர், ஏகாம்பரம் அதை அறிந்திருந்தாலும் ஏற்றுக் கொள்வதாக இல்லை, பல வருடங்களாக கேசுக்கு செலவுகள் செய்து நீதிமன்றம் அழைத்த போதெல்லாம் தவறாமல் சென்று வந்ததால் வருமானத்தை மட்டும் பங்கு கேட்க்கும் பங்காளிகளிடம் பகை ஏற்பட்டது, இதனால் அன்ன பூர்ணாவிற்கு திருமணம் செய்து கொள்ளும் முறையிலிருந்த மாமன் மகனை வேறு இடத்தில் திருமணம் செய்து விட்டதால், பூபெய்திய சில வருடங்கள் திருமணம் செய்து வைக்காமல் நாட் கடத்தி வந்தனர்.
அன்ன பூர்ணா ஒரே மகள், ஏகாம்பரத்திற்கு செல்லப் பெண் வீட்டின் நிர்வாகம் அனைத்தையும் மிகவும் கவனமுடன் நிர்வகித்து வந்தவள், கறவை மாடுகள் ஐம்பதுக்கும் மேல் இருந்தது, எல்லா கணக்கு வழக்குகள் நில பத்திரங்கள் பணம் எல்லாவற்றையும் பத்திரபடுத்தி வைப்பது, மற்ற எல்லாவித குடும்ப பொறுப்பையும் பார்த்து நடத்தி வந்தவள் திருமணமாகியப் பின் கணவரின் வீட்டிற்க்குச் சென்றதும் வீட்டை நிர்வகிக்க சரியான ஆள் இன்றி இருந்தது. கமலாவின் ஒரே தங்கை கங்காவிற்கு ஆறு பெண் குழந்தைகள் ஒரே ஆண் குழந்தையுடன் போதிய வருமானமின்றி வறுமையில் வாழ்ந்து வந்தாள், கங்காவின் மூத்த மகள் தனத்தை தன் வீட்டிற்கு அழைத்துக் வந்து உதவிக்கு வைத்துக் கொண்டாள் கமலா, அன்ன பூர்ணாவைப் போல சாமர்த்தியத்தை தனத்திடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் ஒத்தாசை செய்வதற்கு பழக்கப்படுத்தி வந்தாள் கமலா.
கமலாவின் மூத்த மகன் ஜகன் தனத்தைக் காட்டிலும் வயதில் மூத்தவன் தனத்தை தங்கை என்ற முறையின்றி தவறான எண்ணத்தில் நோட்டமிட்டு, தனத்துடன் உடலுறவு கொள்வதற்கு முயன்று சரியான தருணத்திற்காக காத்திருந்தான், ஒரு நாள் கமலாவும் ஏகாம்பரமும் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து இளநீரில் தூக்க மாத்திரைகளை கலந்து அருந்துவதற்கு கொடுத்து தனம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சமயம் அவளுடன் உடலுறவு கொண்டான்.
உறக்கம் விழித்து எழுந்த தனம் தனக்கு செய்யபட்டிருந்த பாதக செயலை உணர்ந்து அழ ஆரம்பித்தாள், இதை கண்ட ஜகன், தனத்திடம் தான் தான் இதை செய்ததாகவும் வேறு யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லி பயமுறுத்தினான், தனத்தை பயமுறுத்தி ஜகன் உடலுறவு கொள்வதை வீட்டில் வேலை பார்த்து வந்த சேகர் கவனித்தான். கமலாவிடம் தனக்கு தெரிந்ததை மற்றவரிடம் சொன்னால் குடும்பத்திற்கு கேவலம் என்று குத்தி காண்பித்து வந்தான் சேகர், கமலா சேகருக்கு நிறைய பணத்தை கொடுத்து வாயை திறவாதபடி அடைத்து வந்தாள்.
தனம் தன் தாய் வீட்டிற்கு போக வேண்டும் என்று கமலாவிடம் கேட்டு வந்தாள், அதனால் அவளுக்கு அளவிற்கு அதிகமான புடவைகள் ரவிக்கைகள் இன்னும் என்னவெல்லாம் வேண்டுமோ அவற்றையெல்லாம் வாங்கி குவித்து வந்தாள் கமலம். தனது அண்ணன் மகனை வற்புறுத்தி தனத்திற்கு திருமணம் செய்து வைத்தாள், கடைசி வரையில் தன் மகன் ஜெகனிடம் ஒரு வார்த்தை கூட நடந்தவற்றை பற்றி விசாரிக்காமலேயே இருந்து வந்தாள் கமலம், ஜெகனின் தவறான பழக்க வழக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தன, ஒரு கட்டத்தில் ஏகாம்பரத்திற்கு ஜெகனின் நடத்தை ஏதோ ஒன்று தெரிந்துவிட்டது, அதை பற்றி தன் மகன் ஜெகனிடம் விசாரிக்க விடாமல் கமலா தடுத்து விட்டாள், இதனால் தனது வீட்டில் இருக்க பிடிக்காத ஏகாம்பரம் வேறு வீட்டிற்கு சென்று தனியே சில காலம் வாழ்ந்து வந்தார்,
மேலும் மேலும் ஜெகனின் அட்டகாசம் எல்லை மீறி சென்று கொண்டிருந்தது ஏகாம்பரம் வீட்டைவிட்டு தூரத்தில் வாழ்ந்து வந்தாலும் அவரது காதுகளுக்கு வேறு ஆட்கள் மூலமாக ஜகனைப்பற்றிய செய்திகள் சென்ற வண்ணமிருந்தது, ஏகாம்பரம் தனது எழுபத்தைந்தாவது வயதில் வயலுக்கு தெளிப்பதற்கு வாங்கிய பூச்சு கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து இறந்து போனார் . ஜகன் இன்னும் மாறவே இல்லை.

வியாழன், 6 மே, 2010
இரவுபகலென்று பாராமல் உழைக்கும் கழுகள்
கோடை விடுமுறை துவங்கி விட்டது, கோடையின் வெப்பத்தின் தாக்குதலிலிருந்து தப்பிக்க சிலர் குளிர் பிரதேசங்களுக்கு சிலர் உறவுகளை கண்டு வருவதற்கு என்று பல விதங்களில் ஊர் விட்டு ஊர் செல்வது வழக்கம், இன்னும் சிலர் எங்கேயும் போகாமல் தங்கள் குழந்தைகளின் அறிவுத்திறனை அதிகபடுத்தும் கோடை வகுப்புகளுக்கு அனுப்புவதில் தீவிரம் காட்டுவார்கள், இதில் அவரவர் விருப்பமும் நாட்டமும் அதற்க்கு அவரவர் சொல்லும் காரணங்களும் அபிப்பிராயங்களும் ஒவ்வொரு விதமாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ஒரு வருடமாக பள்ளிக்கூடமும் படிப்புமாக இருந்த பிள்ளைகள் வெயல் காலத்திலாவது விடுமுறை என்ற பெயரில் கிடைக்கும் விடுதலையில் கூட மீண்டும் அவர்களை பாடாய்படுத்த கோடைகால வகுப்புகள் என்ற புதிய சிறைவாசத்தில் தள்ளுவது வருந்த தக்கது, புதியமுறை கணக்குசொல்லித் தருவதும் கையெழுத்து சீராக்குவதும் இன்னும் என்னெனவோ வகுப்புகள்; நகர்புற மக்களின் பணத்திற்கும் குழந்தைகளின் மனத்திற்கும் வேட்டு வைக்க காத்து கிடப்பது ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தி வரும் புதிய வரவுகள்.
உறவுகளை அறியாமல் வருடம் முழுவதும் இயந்திர கதியில் வாழும் குழந்தைகளின் எதிர்காலம் என்பது எப்படி இருக்குமோ தெரியவில்லை, விடுமுறையில் ஊருக்கு போகிறேன் பேர்வழி என்று கிளம்பி போகும் போது காலம் கெட்டு கிடக்கின்ற பிரக்ஞையே இல்லாமல் வீட்டை பூட்டிவிட்டு போவதில் தவறு இல்லை ஆனால் வீட்டு வேலைக்காரி அந்த வீதியில் இதற்காகவே தினம் தினம் இரவு பகலாக அலைந்து கொண்டிருக்கும் 'கழுகுகள்' எப்படி இவர்களை நினைவில் கொள்ளமுடியாமல் போகிறது என்பது விசித்திரம்தான். ஊருக்கு போகும் முன்னர் அருகிலிருக்கும் காவல்நிலயத்திற்க்கு அறிவித்துவிட்டு பின்னர்தான் ஊர்களுக்குப் போகவேண்டுமென்கிற விதிமுறையை படித்தவர்கள் கூட அறியாதிருப்பதை எதில் சேர்த்துக்கொள்வது என்று தெரியவில்லை.
ஒருசமயம் காவல் நிலையத்திற்கு அறிவித்துவிட்டு போவதால் பயன் ஒன்றும் இல்லை என்கின்ற எண்ணமாகக் கூட இருக்கலாம், எது எப்படியோ கழுகுகளுக்கு சரியான தீனியை கொடுத்துவிட்டு பின்னர் 'குய்யோ முறையோ' என்று தலை மீது கைவைத்துக்கொண்டு உட்காருவதிலும் காவல்நிலயத்திற்க்கு சென்று புகார் கொடுத்து கைரேகை நிபுணர் வந்து மாவு தூவி படம் பிடிப்பதை பித்தம் பிடித்த நிலையில் பார்த்துகொண்டிருப்பதில் என்ன இருக்கிறது, ஊருக்கு போகும் முன்னர் காவல்நிலயத்திற்க்கு அறிவிக்காவிட்டாலும் வீட்டை காவல்காக்க உத்திரவாதமான ஆட்களை வைத்துவிட்டு அக்கம்பக்கத்திலிருப்பவர்களிடம் ஊருக்கு போவதையும் திரும்பி வருவதைப்பற்றியும் சொல்லிவிட்டாவது போவது நல்லதாக தோன்றவில்லையா.
கோடைவிடுமுறையில் வீட்டிலிருப்பவர்களும் வெயலில் அதிகம் நடமாடவேண்டிய வேலையில் இருப்பவர்களும் அடிக்கடி உப்பு போட்ட மோர் குடிப்பது இளநீர், மற்றும் வைட்டமின் சி அடங்கிய பழங்கள் அதாவது எலுமிச்சை சாறு போன்றவற்றை உப்பும் இனிப்பும் கலந்து பருகுவது மிகவும் அவசியம், முடிந்தவரையில் வெயலில் போகாமல் இருப்பது நல்லது. கோடை என்பது தற்போதெல்லாம் மார்ச் மாதம் துவங்கி பருவ மழைப் பொழியும் வரையில் பாடு படுத்திவருவதை நாம் அறிந்திருப்பதால் கத்திரி வெயல் போனால் கோடை முடிந்ததாக நினைத்துக் கொண்டு வெயலில் போவது ஆபத்தான உடல் தீமைகளை ஏற்ப்படுத்தும்.
அக்கம்பக்கத்து வீட்டுகாரர்கள் ஊர்களுக்கு போய்விட்டு இருந்தால் தனியே வீட்டிலிருப்பவர்கள் வீட்டு கதவுகளை அனாவசியமானவர்கள் தட்டும்போது திறக்காமல் இருப்பது நலம், காற்று வருவதற்காக கதவுகளை திறந்து வைப்பது அவசியம் காற்று மட்டுமே வரும் என்று நாம் எதிர்பார்த்திருந்தால் காற்றுடன் தூசு, கழுகு எல்லாம் சேர்ந்து வந்துவிடுவதும் உண்டு கவனத்துடன் இருப்பது சிறந்தது. திருடர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒருவிதம், மற்றவர்களின் அஜாக்கிரதையை எதிர்நோக்கி காத்திருக்கும் கழுகுகள்.

புதன், 5 மே, 2010
இது ஒரு தொடர் கதை !!!!
காலாவதியான மருந்து மாத்திரைகளை விற்ற கும்பலை பிடிக்கும் நடவடிக்கையும் விசாரணையும் சூடு அடங்குவதற்குள் காலாவதியான உணவுப்பொருட்களை விற்ற வியாபாரிகளை பிடிக்கும் பரபரப்பில் மூழ்கத்துவங்கியுள்ளது காவல் துறையும் மற்ற அதிகாரிகளும், திடீரென்று வருமான வரித்துறை நடத்தும் அதிரடி நடவடிக்கைகளைப் போல காலாவதியான பொருட்களின் மீது தற்போது கவனம் ஈர்க்கப்பட்டிருப்பது மிகவும் அவசியமான ஒன்று தான் என்பதில் இதில் சம்பந்தபட்டிருக்கும் கும்பலைத்தவிர வேறு யாருக்கும் மாற்று கருத்துகள் இருக்க வாய்ப்பு இல்லை,
ஆனால் தரக்கட்டுபாடு, வருமான வரித்துறை போன்ற மிக முக்கிய இலாகாக்கள் மற்றும் அதில் பணியாற்றும் அதிகாரிகள் மற்ற உழியர்கள் இதுவரையில் பணி புரிந்தார்களா அல்லது லஞ்சம் வாங்கிக் கொண்டு வேறு ஸ்தாபனங்களை நடத்திக்கொண்டு அல்லது சம்பளம் கிம்பளம் எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்தார்களா, அப்படியென்றால் அந்த இலாக்காக்களும் அதன் உழியர்களுக்கும் இதுநாள் வரையில் அரசு கொடுத்துவந்த சம்பளம் வீணானதுதான் மிச்சம்,
இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஊழியர்களும் வேலையிலிருந்து நீக்கப்படுவார்களா அல்லது சட்டத்திலுள்ள ஓட்டைகளைக் கொண்டும் இதுநாள் வரையில் சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் பணபலத்தைக் கொண்டு முன் ஜாமீன், ஜனாதிபதியிடம் கருணை மனு, நன்னடத்தை என்ற பெயர்களில் அதிக பட்ச தண்டனையிலிருந்து குறைந்த பட்ச தண்டனைக்கு மாற்றி திரும்பவும் வெளியே வந்து தாங்கள் சம்பாதித்து சேர்த்திருக்கும் பினாமி சொத்துகளில் சுகம் அனுபவிக்கப்போகிறார்களா. இப்படி நடப்பது நமது நாட்டில் வழக்கமான ஒன்றுதானே.
பல அரசு இலாகாக்கள் இப்படித்தான் இயங்கி வருகிறது, இதற்க்கு சான்றாகத்தான் சமீபகாலமாக பிடிபட்டு வருகின்றவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது, பரபரப்பை ஏற்ப்படுத்தி வரும் இந்த திடீர் நடவடிக்கைகள், செய்திகள் மக்களால் மறக்கப் பட்டபின் மறுபடியும் திருடர்களின் புதிய சாகசங்கள் தலை தூக்கும், இது ஒரு தொடர்கதை தானே தவிர சிறுகதையாக இருக்க வாய்ப்புகள் குறைவு.

ஞாயிறு, 2 மே, 2010
உறவு
கோழி இறகின் நுனியில் காதை குடைவது சுகம்தான், ஆனால் அதை கூட சுகமாக யாராவது குடைந்து விட்டால் எத்தனை சுகமாக இருக்கும், சற்று தொலைவில் அரிசியை உமியிலிருந்து தூற்றிக் கொண்டிருந்த பெண்களை பார்த்த போது மனசில் சிறிது காமமும் சேர்ந்து கொண்டது, மனசு கிடந்து ஆலாய் பறந்தாலும் மனதில் ஊர் பயம், தன் மானத்தை காப்பாற்றும் பயம் எல்லாம் ஒன்று சேர்ந்து கொள்ளவே காது குடைந்த சுகத்தில், வேப்பமர நிழலில் கயிற்றுகட்டிலில் சாய்ந்த போது, மதியம் சாப்பிட்ட கேப்பை கூழின் போதை கண்களை இறுக்கியதில் அயர்ந்து உறங்கியவன் யாரோ முதுகில் தட்டி கனத்த குரல் கொடுத்து எழுப்ப முயற்ச்சிப்பது நினைவிற்கு வந்துவிட அடித்து பிடித்து கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்தவனின் அருகே அவனது தாய் மாரியம்மாள் நின்றிருந்தாள், வேலை செய்து கொண்டிருந்த பெண்களை காணவில்லை, அதிக நேரம் கண் அசந்துவிடோமோ என்ற பதற்றத்தில்,
அரிசிய கெடங்குல போட்டுட்டானுன்களா, என்று கேட்டபடி கிடங்கிலிருந்த அரிசி குவியலை கண்காணிக்க எழுந்து வேகமாக கிடங்கை நோக்கி விரைந்தான் குப்பன், கெடங்கை நீ பார்த்தப்புறம் பூட்டிகிடலாம்முன்னுதான் உன்னைய வந்து எழுப்புனேன் என்றாள் அவன் தாய் மாரியம்மாள், கிடங்கில் கொட்டபட்டிருந்த அரிசியை மூட்டைகளில் நிரப்பிக்கொண்டிருந்தனர் சில வேலையாட்கள், எத்தன மூட்ட தேருச்சி என்று கேட்டபடி மூட்டைகளை எண்ண ஆரம்பித்தான் குப்பன், வயது சற்று முதிர்ந்த வேலையாள் ஒருவர் குப்பனின் அரிசி மில்லில் பரம்பரையாக வேலை செய்பவர், நூறு மூட்டதானுங்க தேருச்சி என்று சொல்லிக் கொண்டே தனது வேலையை செய்துகொண்டிருந்தார்.
குப்பனின் பரம்பரைத் தொழில் விவசாயம் அதிலும் குப்பனின் தந்தையிடம் மட்டுமே நெல்லிலிருந்து அரிசியை பிரிக்கும் மில் சொந்தமாக இருந்தது, அருகிலிருந்த பல கிராமங்களிலிருந்து நெல் வந்தபடி இருக்கும், அரிசி பிரித்தெடுக்கும் இயந்திரத்துடன் எள் தேங்காய் போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கும் இயந்திரத்தையும் வாங்கி சேர்த்திருந்தனர், குப்பனின் அப்பா காலத்தில் செக்கு மாடுகள் செய்த வேலையை நொடியில் இயந்திரங்களில் செய்துவிட நவீன ரக இயந்திரத்தை வாங்கியிருந்தனர். அரிசி மில் எப்போதுமே திறந்திருப்பது வழக்கமாக இருந்தது. இதனால் குப்பனையும் அவனது பரம்பரையையும் தெரியாதவர் என்று யாரும் இல்லை என்ற அளவிற்கு பிரபலம் ஏற்ப்பட்டு இருந்தது.
குப்பனுக்கு காலையில் கள் இறக்கியவுடன் குடிக்கச் சொல்லி வைத்தியர் சொல்லியிருந்ததால் தினமும் காலையில் மரத்திலிருந்து கள்ளை இறக்கியவுடன் குடித்துவிட்டு வருவது வழக்கம், சிலர் போதைக்காக கள்ளை குடித்து வழியோரங்களில் கிடப்பதை குப்பன் பார்ப்பது புதியது இல்லை என்றாலும் குப்பனின் பள்ளிகூட நண்பன் அடுத்த கிராமத்திலிருக்கும் வேலுவிற்க்கு கல்லூரி படிப்பிற்காக பட்டினம் சென்று படிக்கும் போது அங்கு ஏற்பட்ட நண்பர்களின் சகவாசத்தால் குடிப்பழக்கம் தொற்றிகொண்டது, கல்லூரி விடுமுறை சமயங்களில் வேலு குப்பனுடன் பொழுதை கழிப்பது வழக்கம் என்பதால் அவ்வூரில் கிடைத்த கள்ளை வாங்கி குடிக்கும் போது குப்பனுக்கும் அந்த பழக்கம் தொற்றிகொண்டது, நாளடைவில் குப்பனும் கள் குடித்து போதை ஏற்றிகொள்ளும் பழக்கத்திற்கு அடிமையானான்.
இந்நிலையில் குப்பனிடம் வேலை செய்து வந்த செண்பகத்திற்கு குப்பனிடம் பல காலமாக மையல் ஏற்பட்டிருந்தது, இதை கவனித்த குப்பன் கள் குடித்து போதை தலைகேறி இருக்கும் சமயத்தில் செண்பகத்துடன் உறவு கொள்ள ஆரம்பித்தான், சில மாதங்களாக இந்த உறவு தொடர ஆரம்பித்தது, இடையில் குப்பனுக்கு திருமணம் முடிக்க முடிவு செய்து பெண் பார்த்து திருமணமும் முடிந்தது. செண்பகத்திற்கு குப்பனால் ஏற்பட்ட கர்பத்தை சிதைக்கத் வழி அறியாத செண்பகம் அந்த ஊரைவிட்டு வேற்று ஊர் சென்று குழந்தை பெற்று அங்கேயே வாழ்ந்து வந்தாள்,
குப்பனின் நண்பன் வேலு கல்லூரியில் ப்ரொபசராக வேலை பார்த்து வந்தான், வருடங்கள் கடந்தன, செண்பகம் தனக்குப் பிறந்த மகனை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று உறுதியுடன் படிக்க வைத்தாள், குப்பனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாதிருந்தது, தற்செயலாக தான் வேலைபார்க்கும் கல்லூரியில் படித்து வந்த செண்பகத்தின் மகன் சிவாவை பார்த்த போது வேலுவிற்க்கு ஆச்சரியம் தனது நண்பன் குப்பனின் மறு உருவமாக இருந்த சிவாவிடம் அவனுடைய விவரங்களை விசாரித்த போது வேலுவிற்கு ஆச்சரியம் மட்டுமே மிஞ்சியது.
ஒருநாள் வேலுவை பார்க்க கல்லூரிக்கு வந்திருந்த குப்பனிடம் சிவாவை நேரில் அழைத்து காண்பித்து தனது ஆச்சரியத்தை எடுத்து சொன்னான் வேலு, சிவாவை பார்த்த குப்பனுக்கும் ஆச்சரியம், அவனது தாயின் பெயரை விசாரித்தபோது அவன் செண்பகம் என்று சொன்னான், அவனது அப்பாவின் ஊர் பெயர் போன்றவற்றை விசாரித்த போது அவனது தாய் அவற்றை பற்றிய விவரங்களை தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று சொல்லி விட்டான் சிவா. வருடங்கள் கடந்த பிறகு, குப்பன் வேலுவிடம் தான் கள் போதையிலிருந்த போது செண்பகத்தை தனது உறவாக்கிகொண்ட கதையை சொல்லி அதன் பிறகு தனது திருமணம் நடந்ததும் செண்பகத்தை தேடிய போது அவள் அந்த ஊரை விட்டு வேறெங்கோ சென்றுவிட்ட செய்தி மட்டுமே தனக்கு கிடைத்ததைப் பற்றியும் சொல்லி வருந்தினான்.
வேலு செண்பகத்தை சென்று நேரில் பார்த்து அவளுக்கு தேவையான உதவிகளை குப்பனிடமிருந்து பெற்றுத் தருவதாக எடுத்து சொன்னான், தனக்கு குப்பனிடமிருந்து எந்தவித உதவியும் வேண்டாமென நிராகரித்துவிட்டு தனது மகன் சிவாவுடன் வேறு ஊர் மாற்றி சென்று விட்டாள் செண்பகம். பரம்பரையாக சுழன்று வந்த அரிசி மில்லும் எண்ணெய் இயந்திரங்களும் ஆள் நடமாட்டமின்றி காடு போல் செடி கொடிகள் வளர்ந்து மௌனக் கதைகளை உள்ளடக்கி கொண்டு நின்றது.

சனி, 1 மே, 2010
மே தினம்
உழைப்பாளர் தினம் என்றாலே உடனே நம் நினைவிற்கு வருவது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நடை பெரும் போராட்டங்கள், அதிலும் சிவப்பு நிற கொடியுடன் காக்கிச் சட்டை அணிந்தவர்கள் ஒன்று திரண்டு கோஷங்கள் இடுவது தான் நம் கண் முன் காட்சியாக நினைவிற்கு வரும், இவற்றிற்கு முன்னோடிகள் 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் போராடிய முதல் போராட்ட தியாகிகள் என்றால் அது மிகையில்லை, உலகின் பல்வேறு நாடுகளில் பரவிய இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக ஒரு உழைப்பாளியின் ஒரு நாளைய பணி நேரம் 8 மணி நேரம் என்பது தான்.
எந்த போராட்டமும் எளிதில் முடிவிற்கு வந்து விடுவதில்லை அதிலும் முதலாளிகளை எதிர்த்து போராடும் உழைப்பாளர்களால் அத்தனை எளிதில் கோரிக்கைகளை முடிவிற்கு கொண்டுவருவது என்பது சிரமம், 19 ஆம் நூற்றாண்டில் கடை பிடித்த முறைகள் தான் இன்றுவரையில் பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காக கையாளப்பட்டு வெற்றி தோல்விகள் சந்தித்து வருகிறது. முதன் முதலில் 1886ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி முதல் தொழிலாளர் இயக்கம் அமெரிக்காவில் ஆரம்பிக்கபட்டது இந்தநாளை உழைப்பாளர் தினம் என்று உலகின் பல்வேறு நாடுகளில் அனுசரித்து வருகின்றனர்.
பல்வேறு அரசியல் கட்சிகளை உள்ளடக்கியதாக இன்றைய இயக்கங்கள் இருந்தாலும் கம்யூனிஸ கட்சிகள் தான் போராட்டங்களை நடத்துவதும் உழைப்பாளர்களை இயக்கமாக ஒன்று திரட்டி போராட்டங்களுக்கு முன்னோடியாக இருந்து வந்துள்ளது, கம்யூனிஸ கொள்கைகள் காரல் மார்க்சின் தத்துவங்களின் அடிப்படையில் ஏற்ப்பட்ட பிரதானப்பிரிவாக கம்யூனிஸம் இருப்பதால், காரல் மார்க்சின் அடிப்படை கொள்கை என்பது முதலாளித்துவத்திற்கு எதிரானதும் இதனை கம்யூனிஸக் கொள்கைகள் என்று சொல்லபட்டாலும் காரல் மார்க்ஸ் அடிப்படையில் சோசியலிசத்தை கர்ப்பித்தார், 'முதலாளித்துவத்தை ஒழித்து உழைப்பவர் அனைவரும் சமம்' என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
இதன் வழியில் ரஷ்யா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இக்கொள்கைகள் பரவியுள்ளது. இன்றைய இந்தியாவில் மேற்கு வங்கம் கேரளா போன்ற இந்திய மாநிலங்களில் கம்யூனிஸம் வலுவுடன் செயல்பட்டு வருவதுடன் அதன் அதிகபட்ச உறுப்பினர்களை உடையதாகவும் உள்ளது. உழைப்பாளர்களின் நலன்களுக்காக எல்லா நாடுகளிலும் இயக்கங்கள் ஏற்ப்படுத்தி தங்களது உரிமைகளை கோரிக்கையாக வைப்பதற்கு இதன் சங்கங்கள் இருந்து வருவது யாவரும் அறிந்தது.
ஏனையோருக்கு இந்த ஒருநாள் விடுமுறை கிடைப்பது மிகவும் சந்தோசம். வாழ்க உழைப்பாளர்கள்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)