
இன்று பலரும் கிரிஸ்த்துவைப்பற்றியும் கிறிஸ்த்துவ வேதம் குருமார்கள் போன்றவற்றை பற்றி அந்த மாணவர்களைப் போலத்தான் தங்களுக்குத் தெரிந்த ஏதேதோ கருத்துக்களைச் சொல்லி தாங்கள் சொன்ன கருத்துதான் மிகவும் சரியானது என்று வாதிடுகின்றனர். மதகுருமார்களையும் கிறிஸ்த்துவையும் கிறிஸ்த்தவர்களையும் குறை சொல்லி விளம்பரப்படுத்தும் இவர்கள் எதற்கு முஸ்லீம்களைப் பற்றியோ குரானைப் பற்றி பேசவோ எழுதவோ குறை சொல்லவோ தரக்குறைவாக விமர்சிக்கவோ முடியவில்லை என்றால், முஸ்லீம்கள் தங்கள் வேதத்தையும் தங்களையும் தரக்குறைவாக பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் இயல்புடையவர்கள் என்பதால் அவர்களைப்பற்றி தரக்குறைவாக விமரிசிக்க இயலவில்லை என்பது விளங்குகிறது. கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பது குரான் சொல்வது, கிறிஸ்த்தவர்கள் பொறுமை காப்பவர்கள் அதற்க்கு காரணம், ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை திருப்பிக் கொடு என்று சொல்வது இயேசு கிறிஸ்த்து. இயேசு கிறிஸ்த்து புதிய ஏற்பாட்டில் உபதேசித்திருப்பதற்கேர்ப்ப பொறுமை அன்பு போன்ற நற்குணங்களை கடை பிடிக்க வேண்டும் என்பது புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்த மட்டில் இந்துக்களையும் அவர்களது வேதங்களையும் தெய்வங்களையும் அவதூறு பேசினால் கண்டனக் குரல் எழுப்பவும் எதிர்த்து போர் தொடுக்கவும் தயாராக உள்ளனர் இந்து முன்னணி, சிவ சேனா போன்ற கட்சிகள் என்பதால் அவற்றை இகழ்வாக தரக்குறைவாக ஒன்றும் பேச எழுத இயலவில்லை. கிறிஸ்த்தவர்கள் அமைதியாக இருப்பவர்கள் என்பதால் இளிச்சவாயர்கள் என்பது அர்த்தமல்ல, பொறுமை அன்பு அமைதி இன்னும் பல நற்பண்புகளை கடை பிடிக்கவேண்டியது வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் உபதேசங்கள் என்பது மட்டுமே அமைதிக்கு காரணம். கையாலாகாத்தனம் அல்ல என்பதை பலர் அறிந்திருக்கும் வாய்ப்பு இல்லை.
கிறிஸ்த்தவ வேதத்தை படிப்பவர்கள் பின்பற்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ள செய்திகள், அதை பின் பற்றுவது ஒவ்வொரு கிறிஸ்த்தவரின் கடமையாக கருதப்படுவதால் அமைதியாக இருந்துவிட்டு எதிர்ப்புகளை பெரிதுபடுத்துவது கிடையாது, அல்லாமல் திருப்பி தாக்கத் தெரியாமலோ இயலாமலோ யாரும் இருப்பதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக