வியாழன், 16 செப்டம்பர், 2010

விடிந்தால் திருமணம்

விடிந்தால் திருமணம், இரவு இரண்டு மணிவரையில் ஏதேதோ சடங்குகளை செய்தனர், மீதமிருந்த இரண்டுமணி நேரத்தில் சத்திரத்தில் இருந்த அறையில் உறங்கிக்கொண்டிருந்தவர்களுடன் படுத்த போது மீண்டும் மீண்டும் மண்டைக்குள் நண்டூருவது போல உறுத்தல், தனக்கு பார்த்த பெண்களையெல்லாம் ஏதேனும் காரணம் சொல்லி திருமணத்தை தவிர்த்தும் கடைசியில் மாமன் மகள் சொரணாவிர்க்கு பேசி முடித்துவிட்டனர், இந்த சம்பந்தத்தை எந்த குறையும் சொல்லி நிறுத்த முடியாதபடி பெற்றோரும் அக்காவும் சேர்ந்து ரகுவின் சமதமின்றி முடிவு செய்துவிட்டு நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த இரண்டு மணிநேரத்திற்கு முன்னர் ரகுவிற்கு தெரிவித்தனர்.

தாலி கட்டிவிட்டாலும் கட்டாவிட்டாலும் இனி சொர்ணாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க இயலாது, ரகுவிற்கு தான் வாழ்வதில் அர்த்தமே இல்லை என்று தோன்றியது, விடியற்காலை நான்கு மணிக்கு முகூர்த்தம் என்பதால் திருமண மண்டபத்தில் பரபரப்பு துவங்கிவிட்டது, குறித்த நேரத்தில் எல்லாவித சடங்குகளுடன் ரகுவிற்கும் சொரணாவிர்க்கும் திருமணம் நடந்து முடிந்தது. அடுத்தநாள் காலை அலுவலகத்திற்கு நிச்சயம் போக வேண்டும் என்று சொல்லிவிட்டு ரகு அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான், சொர்ணாவின் முகத்தில் சிறிதும் வருத்தம் தெரியவில்லை,

அலுவலகம் சென்ற ரகு இரவு மணி பதினொன்று ஆகியும் வீட்டிற்கு திரும்பி வராமல் போனதால் அவனது கைபேசிக்கு தொடர்பு கொண்டு பேசியபோது கைபேசி அலுவலகத்திலிருந்த அவனது மேசையிலிருந்ததாக ஊழியர் ஒருவர் சொல்ல ரகு கைபேசியை மறந்து அலுவலகத்தில் வைத்துவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது. அது மட்டுமில்லாமல் ரகு தனது வேலையை ராஜினமா செய்வதாக கடிதம் ஒன்றையும் அலுவலகத்தில் கொடுத்திருப்பதும் தெரிய வந்தது. இதை கேட்ட ரகுவின் வீட்டாருக்கு அதிர்ச்சி, நடந்த திருமணத்தில் ரகுவிற்கு உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கலாம் என்பது விளங்கியது.

நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருஷங்களாகியும் ரகு எங்கே போனான் என்ன ஆனான் என்பதே யாருக்கும் தெரியவில்லை, சொர்ணாவை இரண்டாம் தாரமாக வேறு ஒருவருக்கு திருமணம் செய்துவைத்தனர். புண்ணியத்தலங்களை பாரத்துவிட்டு வருவதற்கு கிளம்பிய ரகுவின் பெற்றோர் காசிக்கு புனித நீராடச் சென்றபோது அங்கு சடை முடியும் காவி உடையுமாக நடந்து கொண்டிருந்த சாதுக்களில் ஒருவராக ரகு இருப்பான் என்று அவன் பெற்றோர் நினைத்திருக்க வாய்ப்பில்லை, பெற்றோர் காசிக்கு வந்திருப்பதை ரகும அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவனது தாய் மட்டும் மகன் ரகுவின் வயதையொத்த ஆண்களை காணும்போது அது ரகுவாக இருக்குமா என்று உற்று நோக்கத் தவறுவதில்லை.

ரகு தனக்கேற்ற பாதையை சரியாக தெரிந்து கொண்டதால் வாழ்க்கை சுமையாக இருக்கவில்லை, சம்சாரியாவதற்க்கு தேவையான எந்த தகுதியும் தனக்கில்லை என்பதையுணர்ந்த ரகு சன்யாசம் தேர்தெடுத்தது சரியானதே, சம்சாரியாவதற்க்கு தேவையான உணர்வுகளை அதிகம் கொண்டவர்கள் சன்யாச வாழ்வை தேர்தெடுப்பதில் உள்ள சிரமங்களை ரகு நன்கு உணர்திருந்தான், இதை சரியாக அறிந்து கொள்ளாத பெற்றோரின் தவறுக்கு ரகு பொறுப்பேற்க தயாராக இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக