பதிவுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 பிப்ரவரி, 2012

எல்லோருக்கும் எனது நன்றி [500வது பதிவு]









2000 ஆண்டு திடீரென்று கம்ப்யூட்டர் பற்றி படிக்கும் ஆர்வம் ஏற்ப்பட்டது அருகிலிருந்த NIIT யில் 15ooo ரூபாய் கட்டி ஒருவருட course படித்தேன், அங்கேயிருந்த கம்ப்யூட்டரில் செயல்முறை சொல்லி கொடுத்தபோதுதான் முதல் முதலாக கம்ப்யூட்டரை உபயோகித்தேன், கண்ணை கட்டி காட்டில் விட்டாற்போல ஒன்றுமே விளங்கவில்லை, சொல்லி கொடுப்பவர்களிடம் தலையாட்டி விட்டு வீடு வந்து சேருகின்ற வரையில் மனதில் ஒரு பெரும் போராட்டம் நடக்கும், 15,000 பணத்தை வீணடிக்கிறேனோ என்று மனம் பதறும், ஆறு மாதங்கள் பயின்றவுடன் தேர்வு, தேறிவிட்டேன், ஆனால் அடுத்த ஆறுமாதங்களில் கடுமையான பாடங்களையும் செய்முறைகளையும் புரிந்துகொள்ள இயலுமா என்ற கேள்வி என்னுள் எழுந்தது, கிளை தலைவரிடம் சென்று உண்மைகளை விளக்கிகூறினேன், அவர் மிகவும் நல்லவர் என்று நம்புகிறேன், எனது 10,000 பணத்தை இரண்டு அல்லது மூன்று மாதங்களில் செக் மூலம் அனுப்பிவைத்தார், ஆனால் மனதில் நிறைவு ஏற்படவில்லை, காரணம் வீட்டில் கம்ப்யூட்டர் இருந்திருந்தால் செய்முறை விளக்கத்தையும் வேறு விளக்கங்களையும் அறிந்துகொண்டு தேர்வு எழுதும் தைரியம் ஏற்ப்பட்டிருக்கும் அதற்காக கம்ப்யூட்டர் வாங்கிகொடுக்க சொல்ல முடியுமா,

2002 ஆம் ஆண்டு HP Home கம்ப்யூட்டர் வாங்கியபோது அதனுடன் இலவசமாக அப்போது பிரபலமாக இருந்த சத்யம் ஆன்லைன் இணையதள சேவை கிடைத்தது, அப்போதிலிருந்து இணையத்தை பயன்படுத்தினாலும் ப்ளாக் எழுதுவது பற்றி யோசித்ததே கிடையாது, அப்படியொன்று இருப்பது கூட அறிந்துகொள்ளாமல் வேறு எதையெல்லாமோ [சில சமயம் பொழுது போக்கிற்காக தேவையற்ற சாட்டிங் ] செய்துள்ளேன், அவற்றில் எனக்கு எப்போதுமே ஈடுபாடு இருந்ததில்லை, மன நிறைவும் கிடைத்ததில்லை மாறாக பொன்னான நேரத்தை வீணடித்தது மட்டுமே எஞ்சியது. இந்நிலையில் ஒருமுறை எதேச்சையாக 2009 ஆம் ஆண்டு இயக்குநர் ராம் அவர்கள் ஆன்லைனில் ஒருமுறை ப்ளாக் எழுதுங்கள் என்று சொன்னார், அதற்க்கு பின்னர் அவரை இன்றுவரையில் காணவேயில்லை. ஆனால் அவர் சொன்ன பிறகுதான் ப்ளாக் எழுத ஆரம்பித்தேன்.

நான் எழுத ஆரம்பித்தபோது நிறைய bloggers எனது எழுத்துக்களை படித்துவிட்டு கருத்துகள் கூறுவதுண்டு, அவர்களில் ஒருவரைக் கூட இப்போது காணவில்லை. அப்போதெல்லாம் எனக்கு தமிழ் திரட்டிகளைப்பற்றிய விவரம் ஏதும் தெரியாது, ப்ளாக்கிற்கு வந்து போகின்றவர்களை எண்ணுகின்ற widget பற்றியோ வேறு எந்த விவரமும் தெரியாது, ஏறக்குறைய இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரே இவற்றைப்பற்றிய விவரங்களை நானே அறிந்துகொண்டேன், இன்றைய தேதிவரையில் bloggers ஒருவரைக்கூட பரிச்சயம் கிடையாது. பரிச்சயப்படுத்திகொள்வதில் சிக்கல் இருப்பதாக பலரது ப்ளாகில் எழுதியதை படித்தப் பின்னர்தான் அதை பற்றி எனக்குத் தெரிந்தது, இங்கேயும் சண்டைகள் உண்டு என்பதை இரண்டு வருடங்கள் கழித்தே அறிந்துகொள்ள முடிந்தது.

இதையெல்லாம் எதற்க்காக எழுதி நேரத்தை வீணடிக்கிறேன் என்று நீங்கள் குறைகூறுவது எனக்கு கேட்கிறது, இது என்னுடைய 500வது பதிவு, இதுவரையில் நான் எழுதிய எந்த பதிவையும் மீண்டும் மீள் பதிவாக இடுவது கிடையாது. அதற்க்கு காரணம் எனக்கு எதையுமே ஒருமுறைதான் படிக்க பிடிக்கும், அதே போன்று எதையும் முன்னேற்பாடாக சிந்தித்து வைத்து 'இவற்றையெல்லாம் எழுதியே தீர வேண்டும்' என்று எழுதுவது கிடையாது, சில சமயங்களில் கூகுளின் உதவியுடன் சில படங்களை தேடி என் பதிவில் போடுவேன், இதைத்தவிர வேறு ஒரு இடத்திலிருந்து எடுத்து எழுதுவதில் ஆர்வம் இல்லை, மாறாக அவற்றை படித்துவிட்டு என் சொந்த வாக்கியங்களில் கட்டுரையாக்குவதிலேயே எனக்கு திருப்தி கிடைக்கிறது. இன்னொரு இடத்தில் பிரசுரித்திருப்பதை அப்படியே எடுத்து நான் எழுதுவதால் எனக்கு திருப்தியோ புகழோ வேறு எதவும் கிடைக்கபோதில்லை, முக்கியமாக எனக்கு மனநிறைவை தரப்போவதில்லை.

இதுவரையில் எனது பதிவுகளை வாசித்தும் தங்களது கருத்துக்களை எனது பதிவில் குறிப்பிடாமல் இருந்தாலும், படித்தவர்கள் அனைவருக்கும் எனது நன்றி, எனது பதிவுகளை திரட்டி மூலம் இன்னும் பலருக்கு அறிமுகப்படுத்திய அனைத்து திரட்டிகளுக்கும் எனது நன்றிகள், உங்களது ஆதரவையும் கருத்துக்களையும் எப்போதும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி

புதன், 25 ஜனவரி, 2012

மனநோய் முற்றினால் ....காமம் அல்ல

என்னதான் காலம் படுவேகமாக முன்னேறினாலும் உணர்வுகள் மாறப்போவது கிடையாது, இந்தியாவில் வாழும் அத்தனை மனிதர்களுக்கும் மட்டுமின்றி உலகில் உள்ள அத்தனை மனிதர்களுக்கும் உணர்வுகள் ஒன்றுதான். பசி, தாகம், கோபம், சிரிப்பு, காதல் காமம், ஆசை, மோகம் இன்னும் எத்தனையோ இயற்கையில் கிடைத்துள்ள அதிசயங்கள். பசி எடுத்தால் விடுதிக்குச் சென்று தேவையான உணவு வகைகளை அவரவர் விருப்பபடி வாங்கி மக்கள் கூட்டத்தில் முன் பின் தெரியாதவர்களின் முன்னால் உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதில் யாரும் கூச்சப்படுவது கிடையாது, அக்கம்பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் நாம் உண்பதை பார்க்ககூடாது என்று நாம் நினைப்பதில்லை. ஆனால் சிறுநீர் கழிப்பதற்க்கோ, மலம் கழிப்பதற்க்கோ குளிப்பதற்க்கோ அடுத்தவரின் பார்வை படாதவாறு அமைக்கப்பட்டிருக்கும் கழிவறைக்கு தனித்தனியே சென்று அவற்றை செய்துவிட்டு வருகிறோம்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது எதற்க்காக என்பது எல்லோரும் அறிந்திருந்தும் அதனை வெளிப்படையாக பேசுவது என்பது உலகில் எங்கேயும் கிடையாது. அதே போன்று டைனிங் டேபிளில் குடும்பமாக ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்ணும் குடும்பத்தினர் அனைவரும் அவரவர் படுக்கையறையில் படுத்து தனித்தனியே உறங்குவதும் உலகம் முழுவதும் ஒன்று. என்னதான் பரம ஏழையாக இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் மட்டுமே இணைந்து படுத்துறங்குவது உலகெங்கும் ஒன்றுதான். குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஆணிற்கும் பெண்ணிற்கும் உடலுறவு தேவை என்பதை எல்லோரும் அறிந்திருந்தாலும், கணவன் மனைவியாக இருந்தாலும் அவர்கள் வெட்டவெளியில் பட்டபகலில் நடுத்தெருவில் உடலுறவில் ஈடுபடுவதில்லை. எல்லாவற்றிற்கும் நியமம் என்பது உலகமெங்குமுள்ள நீதி.

பொதுவிடங்களில் அடுத்தவரின் பார்வை படுகின்ற இடங்களில் கட்டிப்பிடித்து தழுவிக்கொள்வது என்பது ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே உள்ள வழக்கம், அதை மற்ற நாடுகளில் செய்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை யாவரும் அறிவர். சென்சார் போர்ட் என்பது திரைப்படத்திற்கு மட்டும் உள்ளது என்றிராமல் பத்திரிகை, பாடல் வரிகள் என இதன் எல்லை வளர்ந்து இன்றைக்கு இணையதளத்திற்கும் வந்துள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆபாச [porn] காட்சிகளை வழங்கும் இணையதளங்களை பார்ப்பதற்கு தனியாக பணம் செலுத்தி சந்தாதாரர்கள் ஆன பிறகே அனுமதிக்கப்படுகிறது. பொதுவாக வீடுகளில் சைல்ட் லாக் [ child lock] செய்யப்பட்டு குறிப்பிட்ட வலைத்தளங்களை தடை செய்துகொள்ளும் வசதிகள் செய்யப்பட்ட கணினிகளையே பெரும்பாலானோர் வீடுகளில் உபயோகிக்கின்றனர்.

பொது இடங்களில் சுவரொட்டிகளில் ஒரு பெண்ணின் அல்லது ஒரு ஆணின் நிர்வாண படத்தை ஒட்டி வைத்தால் அதை காவல்துறை கண்டும் காணாதது போன்று இருக்குமா. அல்லது ஒரு பெண்ணோ ஆணோ நிர்வாணமாக தெருவில் நடந்தால் காவல்துறை சும்மா இருக்குமா. இவற்றிக்கெல்லாம் தடை செய்யபட்டிருப்பது எதற்க்காக, எல்லோரது உடலும் ஒரே மாதிரியானது தானே ஒருவர் நிர்வாணத்தை அடுத்தவர் ஏன் பார்க்க கூடாது என்று கேட்டால் அதற்க்கு பதில் என்னவாக இருக்க முடியும், காமம் எல்லாருக்கும் உண்டு அதை குறித்து பேசினால் எழுதினால் என்ன தவறு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறியாமலேயே தவறுதலாக அவ்வாறு செய்கின்றனர் என்று அர்த்தமா. எல்லோர் வயிற்றிலும் கழிவுகள் உள்ளது கழிவறைக்குச் சென்றால் கழிவை கழிக்கத்தான் செல்லுகிறார்கள் என்பதை எல்லோருமே அறிந்திருப்பது போல படுக்கையறைக்குள் இருக்கும் கணவன்மனைவி உடலுறவில் ஈடுபடுவதற்க்குத்தான் போகின்றனர் என்பதை சுற்றியுள்ளவர்கள் அறிந்திருப்பது போல காமம் என்பதை சொல்லுவதற்கும் எழுதுவதற்கும் தனி இடம் உண்டு.

காமத்தை சித்தரிக்கும் காட்சிகளை சொற்களை பொதுவிடங்களில் எழுதுவதும் எழுதியதுடன் நில்லாமல் அவற்றை எல்லோரது கண்களிலும் காண்பது போன்று விளம்பரப்படுத்துவதும் குற்றம், தனது பதிவிலே மட்டும் வைத்துக்கொண்டால் அவரை பின்தொடருகின்றவர்கள் மட்டுமே படிக்கவும் காணவும் முடியும் ஏனைய வலைதளங்களில் அவற்றை பிரபலப்படுத்தி எல்லோரையும் காணச்செய்வது என்பது ஒருவகை மனநோய். சில ஆண்கள் தனியே வீதியில் செல்லும் பெண்களிடம் தங்களது ஆணுறுப்பை எடுத்து காண்பித்துக்கொண்டு நின்றுகொண்டிருப்பார்கள். அவ்வாறு தனது உறுப்பை பெண்கள் பார்ப்பதில் அந்த கயவர்களுக்கு என்னதான் சந்தோசம் கிடைக்கப் போகிறது என்பது கடவுளுக்குதான் தெரியும். அதை காண்கின்ற ஒரு பெண்ணும் அதை ரசிக்கமாட்டார், மாறாக மலத்தை கண்டது போன்ற அருவருப்பு அடைவார்கள். இதை ஒருவகை மேனியாக் [maniac - a person who has an obsession with or excessive enthusiasm for something, afflicted with or characteristic of mental derangement] என்று கூறுகின்றனர். இவர்களுடைய அளவிற்கு மீறிய காம உணர்வை வெளிபடுத்தும் ஒரு வழியாக இணையத்தில், அதிலும் பொது இடங்களில் தங்களது பலகீனத்தை காட்டி சந்தோஷப்படுகின்றனர். இவர்கள் நல்லதொரு மனநல மருத்துவரை அணுகினால் மட்டுமே இதற்க்கு தீர்வு கிடைக்கும் அதுவரையில் யார் எதிர்த்து நின்று கேள்விகள் எழுப்பினாலும் அதிலிருக்கும் நியாயத்தைப் பற்றிய அக்கறை அவர்களுக்கு ஏற்ப்படுகின்ற வாய்ப்பே கிடையாது.




..

வியாழன், 29 செப்டம்பர், 2011

அப்ஸ்ஷெஷனா லாபமா நட்டமா

கணிணி மூலம் வலைதளத்தை அடைந்து, அங்கே கொட்டி கிடக்கும் ஆயிரம் ஆயிரம் வகையான வலைத்தளங்களை படிப்பதும் அறிந்து கொள்வதும் காண்பதும் சுவாரஸ்யமானது, இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற தொழில் நுட்ப்பங்களுள் ஒன்று. அவ்வாறு அறிந்து கொள்கின்ற தகவல் ஒருபுறம் இருக்க, வலைபூக்கள் [ப்ளாக்] மூலம் நமது உணர்வுகளை கருத்துக்களை எழுதி வைப்பது இன்னொரு வகையான அனுபவம், இவற்றில் லாப நட்ட கணக்கு பார்ப்பது என்பதை எவ்வகையில் நியாயப்படுத்த முடியும், சிலருக்கு பொழுது போக்கிற்காக பயன்படுகின்ற ஒரு அம்சம் மற்றவருக்கு தொழிலாக இருக்கும்போது, யார் லாப நட்டம் எதிர்பார்க்க முடியும்.

சினிமா என்பது ரசிகனுக்கு பொழுது போக்கு அம்சமாக கருதபட்டாலும் அவற்றை உருவாக்குபவர்களுக்கும் அதில் ஈடுபடுகின்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அது ஒரு வேலையாக வயிற்று பிழைப்பாக உள்ளது போன்றே வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் நோக்கம் வெவ்வேராக இருக்கின்ற போதும் அவற்றை உருவாக்கிய அல்லது உருவாக்குகின்றவர்களுக்கு தொழிலாக உள்ளது. எந்த கருவியாக இருப்பினும் அதன் பயன்பாடும் அவற்றை உருவாக்கியதன் நோக்கமும் வெவ்வேறாக இருப்பது என்பது புதிதல்ல. கைபேசியின் அவசியம் என்பது மிகவும் உன்னதமானது, அதிலிருந்து மற்றவருக்கு அனுப்புகின்ற குறுஞ்செய்திகளுக்கான வசதி உருவாக்கியதன் நோக்கம் மிகவும் முக்கியமானதாக கருதபட்டடாலும் அதை பெரும்பாலும் பயன்படுத்துவது பொழுதுபோக்காகி போனது அதை உபயோகப்படுத்துபவரின் இழிச்செயல்.

ஈடு இணையற்ற இணையதள வசதிகளும் இழிச்செயல்களுக்கு உபயோகிப்பவரது நோக்கமாக இருப்பதும் அப்படிப்பட்ட ஒன்று. இதனால் இந்த கண்டுபிடிப்புகளெல்லாம் வீணென்று கருத இயலுமா, குறுஞ்செய்திகளை வீணாகவும் இழிச்செயல்களுக்கும் பயன்படுத்துகின்ற நிலை இந்தியாவில் மட்டுமே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வலைதளங்களை இழிச்செயல்களுக்காக, தவறான நோக்கத்திற்காக பயன்படுத்துகின்ற ஆசாமிகள் குறைவா என்ன, ஆனால் அப்படிப்பட்ட வலைத்தளங்களை தவிர்ப்பதும் அவரவரது பயன்பாட்டை பொறுத்துள்ளது. சில சமூக விரோதிகளின் அத்து மீறல்கள் வலைதளங்களில் மிக அதிகம். அப்படிப்பட்டவர்களின் நடவடிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கான தண்டனைகளும் நாளுக்குநாள் கூடி வருகிறது.

அரசுமயமாக்கப்பட்ட வங்கியொன்றின் வாடிக்கையாளரின் வங்கிகணக்கிலிருந்த பெருந்தொகை ஒன்றை மும்பையிலிருந்து செயல்படுகின்ற வலைதள திருடர்களின் கூட்டமொன்று அபகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது, இன்றளவும் அந்த கும்பல் அகப்படவில்லை என்பதன் காரணம் என்ன என்பது விளங்காத புதிர் என்றே சொல்லலாம். நெட் பாங்கிங் என்பது அந்த அளவிற்கு பாதுகாப்பற்றதாக உள்ளதா அல்லது வங்கியில் பணிபுரிகின்ற ஊழியரின் ஒத்துழைப்பும் சதித்திட்டமும் காரணமாக இருக்க முடியுமா என்பது கேள்வியாக உள்ளது. அந்த வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு வெவ்வேறு பாதுகாப்பு முறைகளை கையாள சொன்னாலும் திருடனை தன்னுள் வைத்துக் கொண்டு பாதுகாப்பு பற்றி பேசுவதில் என்ன லாபம் இருக்கப்போகிறது என்பது விளங்கவில்லை. கையும் மெய்யுமாக பிடிபடுகின்ற வரையில் வேலியே பயிரை மேய்கின்ற கதைதான்.

ப்ளாக் எழுதுவதை அப்ஷெஷன் என்று என்னால் ஒருக்காலும் சொல்ல இயலாது, அப்படி ஒரு பெயரை சூட்டுவதாக இருந்தால் நாம் அன்றாடம் செய்கின்ற பல காரியங்களையும் இந்த அப்ஷெஷன் பட்டியலில் சேர்த்தாக வேண்டும். ஏதேனும் ஆதாயம் எதிர்பார்த்துதான் ஒவ்வொரு காரியத்தையும் செய்யவேண்டும் என்று நினைத்தால் நிறைய காரியங்களை நாம் செய்யவே இயலாது. நாம் எழுதுவதை பத்து பேர் படிக்க வேண்டும் என எதிர்பார்த்தால் டயரி எழுதும் பழக்கத்தை எதனுடன் சேர்ப்பது. என்னைப் பொறுத்த அளவில் எழுதுவது என்பது எனக்கு பிடித்திருக்கிறது, எனது கருத்துக்களை உணர்வுகளை நான் நினைக்கின்ற போது எழுத ஒரு இடம் ப்ளாக். இதற்க்கு மேல் வியாக்கியானம் செய்வதில் போட்டி போட்டுக்கொண்டு எழுதுவதில், லாப நோக்கில் எழுதுவது போன்ற எழுதுவதற்கென்று எவ்வித எதிர்பார்ப்பும் என்னை பொருத்தமட்டில் இல்லை.

விதைக்கின்ற விதைகள் அனைத்துமே முளைப்பதில்லை, முளைக்கின்ற அனைத்துமே வளர்ந்து மரமாவதில்லை, மரமான அத்தனையுமே காய் கனிகளை தருவதில்லை. அப்படியே காய் கனிகள் விளைந்தாலும் எல்லாமே தின்பதற்கு உகந்தவைகளாக இருப்பதில்லை. இது இயற்கையின் விதி.


********************************************************************************************

வெள்ளி, 30 ஜூலை, 2010

சொந்தக்கதைகள்

பதிவுகள் எழுதுவதற்கு முன் அனுபவம் இருக்க வேண்டுமா அல்லது எவற்றைப்பற்றி எழுத வேண்டும் எவற்றைப் பற்றி எழுதக்கூடாது என்பதற்கு ஏதேனும் வரைமுறை இருக்கிறதா என்றால் கூகுளில் கொடுக்கபட்டிருக்கும் வரைமுறைகளில் மிகவும் முக்கியமானது ஆபாசம், மத இன கலவரங்களை தூண்டுகிற வகையில் எழுதி பிரபலபடுத்தக்கூடாது என்பவைகள்தான் மிகவும் முக்கியமானவைகளாக கருதப்படுகின்றது. இந்த வரையறைகளுக்கு உட்படவேண்டும் என்பது தனி மனித ஒழுக்கமும்தான் என்பதை யாவரும் அறிந்திருகக்கூடும் எவற்றை பிரசுரிக்கலாம் என்பதற்கும் கூகுளின் கட்டுபாடுகள் உள்ளன, அவற்றிற்கு மீறி பதிவு செய்தால் கூகிள் அவர்களது பதிவுகளை நிச்சயம் முடக்கும் என்பது குறிப்பிடபட்டு இருக்கிறது.

பதிவுகளை எழுதும் போது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும்படியாக எழுதுவதென்பது எல்லா சமயத்திலும் இயலாத காரியம். எல்லோரையும் திருப்திபடுத்த எழுதுவதும் இயலாத ஒன்று, பொதுவாக திரைப்பட விமர்சனங்களைக் கூட அவரவர் பார்வையில் எவ்வாறு இருந்தது என்றுதான் எழுத முடியும், அதில் ஒருவரது விமர்சனம் போல அடுத்தவரின் விமர்சனம் இருப்பதில்லை, ஒருவரால் புகழப்பட்ட திரைப்படம் அடுத்தவரால் இகழப்படும். கற்பனை கதைகளாக இருந்தாலும் கவிதைகளாய் இருந்தாலும் அதிலும் அவரவர் அணுகுமுறை அவரவரது பாணி தனித்தன்மைகள் கொண்டதாகத்தான் இருக்க முடியும், மட்டுமில்லாது அவரவர் அனுபவங்களின் அடிப்படையிலும் அவரவரது மனதிலும் கருத்திலும் இருக்கும் எண்ணங்களும் நினைவுகளும் தான் எழுத்தில் வரும்.

இதில் ஒருவரது பதிவில் அவர்களின் சொந்தகதைகளையே பதிவுசெய்கின்றார்கள் என்று குற்றம் கண்டுபிடிக்கும் சில 'பாமரத்தனம்' பற்றி 'குற்றம் கண்டு பிடித்தே பிரபலமானவர்கள் உண்டு, குறைகளை கண்டுபிடிப்பதே பொழுதுபோக்காக கையாண்டு வருகின்றவர்களின்' பதிவுகளை படிக்காமல் குப்பை என்று கருதி குப்பைதொட்டியில் போட்டுவிட்டு போவதுதான் நியாயமாக இருக்க முடியும். சொந்தக்கதைகளை சொந்த அனுபவங்களை பதிவுசெய்யாமல் வேறு என்னத்தை பதிவு செய்தால் வாயை மூடுவார்களோ. பொதுவாக பதிவர்கள் எல்லோருமே தங்களது அனுபவத்தை, மற்றும் தங்களது சொந்த கதைகளைத்தான் பதிவு செய்ய முடியுமே தவிர அடுத்த வீட்டுக்காரனின் பிரச்சினைகளையும் அனுபவங்களையும் எழுத இயலுமா.

நாட்டுப் பிரச்சினைகளை எழுதலாம் அதற்கும் கூட அனுபவம் தேவைப்படுகிறது, பொது பிரச்சினைகளை பற்றி எழுதும்போது அதில் கூட சில வரைமுறையோடுதான் நமது கருத்துக்களை முன்வைக்க முடியும். அரசியல் கட்சிகளைப்பற்றியும் அரசியல் பிரமுகர்களைப் பற்றியும் விளாவரியாக எழுதுவதென்ப
து எல்லோருக்கும் பிடிக்கின்ற விஷயம் இல்லை, உண்மைக்குப் புறம்பானத் தகவல்களை எழுதுவதும் அவதூறு பரப்புவதும் என்னைப்போன்ற பலருக்கும் பிடிக்காத விஷயம். பொதுமக்களின் பிரச்சினைகள் பற்றி எரிவாயு விலை பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு விலைவாசி அதிகரிப்பு இவற்றைப் பற்றி ஏற்கனவே நிறைய பேர் கத்தியின்றி ரத்தமின்றி உண்ணாவிரதம், ஊர்வலம் எல்லாம் செய்து கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். இதற்கிடையில் பதிவில் மட்டும் எழுதவில்லை என்ற ஒரே ஒரு குறையால்தான் அவைகள் தீர்க்க இயலாத பிரச்சினைகளாய் காத்துக் கிடக்கின்றதா என்ன,

சொந்தக் கதைகளை எழுத வேண்டாம் என்று கூகிள் ஒரு விதி ஏற்ப்படுத்தினால் சொந்தக் கதைகள் சொந்த அனுபவங்களின் அடிப்படையிலான கருத்துக்களை எழுதுவதை நிறுத்திக் கொள்ளலாம். யாரோ எதற்கோ அதைப்பற்றி விமர்சிப்பதற்காக சொந்த அனுபவத்திலிருந்தோ தெரிந்ததையோ எழுதுவதில் நிச்சயம் சொந்தக் கதைகளும் சொந்த அனுபவங்களும் இடம்பெறாமல் இருக்க முடியாது, கிண்டல் கேலி செய்யும் வியாதி உள்ளவர்களுக்கு மருத்துவம் பார்க்க யாராலும் இயலாது.


வியாழன், 29 ஜூலை, 2010

நன்றி சொல்வதைத் தவிர தமிழில்...

எனது பதிவுகளைப் படித்து ஓட்டுகள் அளித்தும் பின்னூட்டமிட்டும் கூகுளின் நண்பர்களாக பின் தொடர்ந்தும் என்னை உக்கமளித்து வருகின்ற உங்கள் எல்லோருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன், குறை நிறைகளை எடுத்துச் சொல்லி இன்னும் பிற ஆலோசனைகளையும் வழங்கி மேலும் பதிவுகளை பயனுள்ளதாக்க உதவி செய்யுங்கள். தமிழில் இருக்கின்ற ஒரே வார்த்தை நன்றி, வள்ளுவப்பெருந்தகை கூற்றின்படி

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு"

என்பதற்கிணங்க ஒத்துழைப்பு வழங்கும் நல்லுள்ளங்களுக்கு என் நன்றிகள் பல.

முகமூடியணிந்த ஓநாய்

படித்து அறிந்து கொள்ள ஏராளமான தகவல்கள் வலையிலும் புத்தகங்களிலும் கொட்டிக்கிடக்க, பாதிரியார்களின் காம லீலைகளைப் பற்றியும், பாதிரியார்கள் என்ற பெயரில் மதத்தின் உள் நுழைந்திருக்கும் போலிகளின் தவறுகளைப் பற்றி மட்டுமே மிகவும் நுட்பமாக ஆராய்ந்து அறிந்து வைத்துக்கொண்டு, [இவன் ஆராய்ச்சி செய்து சேர்த்திருக்கும் குப்பைகளைப் பார்த்தால் 'போலிப் பாதிரியார்களின் இழிநிலை' என்ற புத்தம் புதிய தகவல் களஞ்சியத்திற்கு உரிமைதாரரும் அதில் முனைவர் பட்டமும் கொடுத்து 'கவுரவிக்கப்பட' வேண்டியவனாக இருப்பான் என்று தோன்றுகிறது]. எதையெல்லாம் படித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறதோ அதைப்பற்றி தேடி படித்தறிவதர்க்கு கூகிள் என்ற பெரிய உலக சேவை இருக்க, இவன் எதற்கு பின்னூட்டம் போடும் இடத்தில் இவன் கண்டுபிடித்த பாதிரியார்களின் காம லீலைகளைப்பற்றிய லிங்க்குகளை உலக மகா வள்ளல் போல அள்ளி வழங்குகின்றான் என்பது தெரியவில்லை.

பாதிரியார்களின் காமலீலைகளை கண்டறிந்து அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் முகமூடி ஓநாயே புனைப்பெயருடன்
பின்னூட்டத்தில் உனது சாகசங்களை காண்பித்து உன் புகழை தேட நினைக்காதே, எங்களுக்கு வலையில் எதை படித்து அறிந்து கொள்வதற்கு விருப்பமோ அதை நாங்கள் தெரிவு செய்துகொள்வோம் யாரோ ஒருவனின் சிபாரிசோ அல்லது மேதாவித்தனத்தின் பெருமையை அறிந்து புகழுவதற்க்கோ நான் தயாரில்லை, தயாராக இருப்பவரிடம் சென்று உன் கண்டுபிடிப்பின் மகத்துவங்களை பறைசாற்றிக்கொள்.

புதன், 21 ஜூலை, 2010

பதிவுலக ரோமியோக்கள்

நான் கல்லூரியில் படித்த போது ராகிங் என்பது கிடையாது, ஆனால் சில 'வேலையற்ற' கூட்டங்கள் தெரு முனைகளில், பெட்டி கடைகளில், வாராவதியில் என்று அவர்களுக்கென்றே அமைந்திருக்கும் இடங்களிலெல்லாம் உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோருக்கு இடைஞ்சல் செய்வதோடு ஆண் பெண் என்ற வேறுபாடின்றி வயதானோர் என்ற மரியாதையின்றி கிண்டல் செய்வது உண்டு, இதைவிட மிகவும் நேர்த்தியான செய்கை அந்த ஏரியாவிலிருக்கும் இளம் பெண்களில் ஆளுக்கொரு இளம் பெண்ணை தாங்களாகவே தேர்வு செய்துகொண்டு (அந்த பெண்களுக்கு தெரியாமலேயே) 'இவ என்னோட ஆளு' 'அவ உன்னோட ஆளு' என்று பேசி மகிழ்வதும், பொறுப்பின்றி, எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய எண்ணமின்றி, வீணே பொழுதை பேசி பேசி கழித்துக்கொண்டிருக்கும் வீணரவர்கள், இவர்கள் பெண்களைப்பற்றி பேசுன்கின்ற விஷயம் எப்போது குறிப்பிட்ட பெண்ணின் காதுக்கு போகும் என்றால் அந்த கூட்டத்திலிருக்கும் யாரேனும் ஒருவன் வந்து யாரிடமாவது சொல்லிவிட்டால் அந்த 'செய்தி' வெளியே தெரியவரும்.

அந்த செய்தியை யாரும் பெரிதுபடுத்துவதோ, அதை வைத்து கிசு கிசு பேசப்படுவதோ கிடையாது, ஆனால் சில இளம் பெண்களை சார்ந்த குடும்பத்தார் காவல் துறைக்கு தெரியபடுத்துவார்கள், அந்த கும்பல் கூட்டம் கூடும் இடத்திற்கு காவலர்கள் வந்து அவர்களை கூட்டி சென்று காவல் நிலையத்தில் வைத்து 'விசாரிப்பது' வழக்கம், பின்னர் பல மாதங்களுக்கு அல்லது முற்றிலுமாக ஒன்று கூடுமிடத்தில் அவர்களை பார்க்கவே முடியாது. சில தெருமுனை ரோமியோக்கள் வெறும் கற்பனையிலேயே அந்தந்த பெண்களிடம் சரசமாடிவிட்டு பிறகு காணாமல் தொலைந்து போய் விடுவார்கள், அப்படி வாழ்க்கையை தொலைத்த பல இளைஞர்கள் வாழ்க்கையில் அடுத்தவருக்கோ அல்லது அவர்கள் குடும்பத்தினருக்கோ யாருக்கும், ஏன் அவர்களுக்கே கூட உபயோகமில்லாதவர்களாகிப் போனார்கள்.

பதிவுலகத்தில் கூட சிலர் இப்படி 'மதத்தைப்பற்றிய பொய் கதை'களைச் தங்கள் கற்பனைக்கு தோன்றியபடி இல்லாதவைகளைஎல்லாம் இருப்பது போல பதிவு செய்து தங்களைத் தாங்களே திருப்திபடுத்திக் கொள்கிறார்கள், சில வலைதளங்களில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல தனிமனித தாக்குதல்களோ இன மதங்களைப்பற்றிய தாக்குதல் உரை மற்றும் கட்டுரைகளை பிரசுரிப்பதில்லை என்ற வரையறைகளையும் மீறி வீணர்களின் நியாயமற்ற 'வயிற்ரெரிச்சல்களை ' வெளியிட அனுமதித்திருப்பது எந்தவிதத்தில் சரியென்பது தெரியவில்லை. கைக்கு கிடைக்காத, நிஜத்தில் நடக்க முடியாதவற்றை, நடந்திராதவற்றை கற்பனையில் திரித்து எழுதி அற்ப சந்தோசம் அடைய நினைக்கும் அற்பர்களை அந்தக் கடவுள் (கள்?) கூட காப்பாற்ற முடியாது என்பது அவர்களுக்கு விரைவிலேயே தெரிந்துவிடும்.

நாட்டுக்கும் உதவாமல் வீட்டிற்கும் உதவாமல் தண்ட பிண்டங்களாக இல்லாத கதைகளை கேவலமாக எழுதிவரும் இந்த கோழைகளின் முடிவுக்காலம் கொடூரமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

வியாழன், 3 ஜூன், 2010

திரு முகில் அவர்களே-பிரம்ம ராச்சசம், எச்சரிக்கை!!

நான் பதிவுலகிற்கு வந்து ஒருவருடம் முடிந்திருந்தாலும், பதிவுலகிற்கு வந்த புதிதில் இங்கு நிலவும் அரசியல் பற்றி அறியாமல் மிகவும் சகஜமாக ஒரு சில பதிவர்களின் பதிவுகளுக்கு எனது பின்னூட்டங்களை எழுதினேன், ஆனால் அந்த ஒரு சில பதிவர்களில் ஒருவர் மட்டும் எனது பின்னூட்டத்தை குப்பை போல மதித்தார், அவர் எனது பெயரை மட்டும் விட்டுவிட்டு மற்ற பின்னூட்டங்களை வரவேற்றும் நன்றி கூறியும் மதித்து பதில் போடுவதும் தொடர்ந்து எனது பின்னூட்டத்தை நிராகரித்து அவமானப்படுத்துவது போல நடந்து கொண்ட விதம் எனக்கு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது.

அந்த சம்பவத்திற்குப் பிறகு நான் பின்னூட்டம் எழுதும் வழக்கத்தையும் [அவரது] பதிவுகளை படிப்பதையும் முற்றிலுமாக விட்டுவிட்டேன், தற்போது ஏற்பட்டிருக்கும் வலையுலக சண்டைகளும் அவர் மூலமாகத்தான் தொடக்க விழா செய்யப்பட்டுள்ளது, இதில் சம்பந்தப்பட்ட இரு பதிவர்களும்(பேட்டி கண்டவரும் பேட்டி கொடுத்தவரும்) அப்படியொரு பதிவினை எழுதுவதற்கு முன்பே சதி ஆலோசனை செய்துதான் அல்லது திட்டம் தீட்டி தான் செய்திருக்கின்றனர் என்று தெளிவாகிறது.

நான் யாருடைய பதிவையும் பின்னூட்டத்தையும் படிப்பதே கிடையாது, படித்தால் தானே பின்னூட்டம் எழுதவும் கோபப்படவும் முடியப்போகிறது. அந்த குறிப்பிட்ட பதிவும் எனக்கு தெரியவே வாய்ப்பில்லை, அவரை மட்டுமில்லை பதிவுலகில் ஒருவரையுமே தெரியாது. எனது எழுத்துகளுக்கு பதிவுகள் நிறைவை தந்தாலே போதும் மற்றவர்களது பின்னூட்டத்தை நம்பி நாம் எழுதத் துவங்கவில்லை, அல்லது பின்னூட்டமிடும் நபரை நாம் வெறுப்பதும் இல்லை.

சிலர் வன்மத்துடனும் நய வஞ்சகத்துடனும் பதிவுலகிலும் முகமூடிகள் அணிந்து கொண்டு உலா வருகின்ற செய்தி எனக்கு தெரிய வந்ததற்கு காரணம் அந்த பதிவரின் ஒருதலை பட்சமான கேவலமான போக்கு தான். அதற்காக பதிவு எழுதுவதை நிறுத்திவிட்டு ஓடிவிடவா முடியும், இணையதளமும் கூகுளும் இவர்களுடைய பாட்டன் சொத்துக்களா என்ன, சிறுகதை போட்டி என்று விளம்பரப்படுத்தி வலை விரித்து, பின்னர் நடுநிலையற்ற முடிவுகளை வெளியிட்டுவிட்டு பதிவர்களை மோத விட்டு வேடிக்கை பார்ப்பது போன்ற வம்பிழுக்கும் வேலைகளும் நரிகளுக்கு சொந்தமானது என்பது தெரியாமல் போனது எனக்கு, அவற்றையெல்லாம் அறிந்துகொள்வதற்கு சிறிது காலம் எனக்கு தேவைப்பட்டது.

ஆனால் எந்த சலசலபிற்க்கும் அஞ்சாது இந்த பனங்காட்டு நரி என்பதை நாம் அவர்களுக்கு பாடம் கற்ப்பிக்க வேண்டும். மூக்கை வெட்டிவிட்டு முகருவதற்கு ரோஜாப்பூ கொடுக்கிறார்களாம், மன்னிக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள் அல்ல, சந்தன முல்லையைபற்றி அவதூறு எழுதியதாக கூறி அதற்க்கு அவரது கணவர் முகில் வருந்தியிருப்பதை கவனித்தேன், முகில் அவர்களே உங்களுக்கு ஏற்பட்ட நிலைமைதான் அடுத்தவருக்கும், இதை ஒருகாலமும் விடாதீர்கள், இனி இப்படிப்பட்ட அவதூறு மற்றவர்களுக்கு ஏற்படாமல் இருக்க சரியான முடிவை எடுங்கள்.

ஏனென்றால் பிசாசுகளிலேயே மிக மோசமான பிசாசு பிரம்ம ராட்சசமாம்.