விருதுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருதுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 ஜூன், 2010

விருதுகள்

சமீபத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்ச்சியில் நடந்து முடிந்த சுப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் 'சூப்பர் சிங்கர் ஜூனியர்' என்ற பட்டத்துடன் இருபத்து ஐந்து லட்சம் மதிப்புள்ள வீடும் பரிசாக பெற்ற அல்கா என்கிற பெண்ணுக்கு இருந்த பாடல் திறைமைக்கேற்றப் பரிசு, அதையடுத்து விஜய் அவார்ட்ஸ் விழாவில் வழங்கப்பட்ட விருதுகள், செவாலியர் சிவாஜி விருது, விருதுகள் வழங்குவதால் கொடுப்பவரும் வாங்குபவர்களும் உற்சாகம் அடைகின்றனர் என்பது உண்மை என்றாலும், பார்த்து ரசித்த ரசிகர்கள் மகிழ்வுற்றதும் மறுக்க முடியாதது.

உலக செம்மொழி மாநாட்டில் கலைஞர் விருது பின்லாந்து நாட்டைச் சேர்ந்த அறிஞருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது, அல்பிரேட் நோபெல் அவர்களால் துவங்கப்பட்ட நோபெல் விருதுகள் உலக பிரபலம் வாய்ந்தவை, அமெரிக்காவின் மிக பழமையான விருதாக கருதப்படும் மெடல் அப் ஹானர் என்பது ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் விருதுகள், உலகில் பலவித சாதனைகளுக்கு பலப் பெயர்களில் விருதுகள் வழங்கப்படுகின்றது,

புக்கர் ப்ரைஸ் Booker Prize (literature), ஹுயூகோ அவார்ட் Hugo Award (Science Fictions) வேர்ல்ட் பிளேயர் அப் தி இயர் World Player of the Year (football) அகாடெமி அவார்ட் Academy Award ( foreign language film), பெஸ்ட் ரிலிஜன் இன் தி வேர்ல்ட் அவார்ட், Best Religion in the World Award (Religion) வேர்ல்ட் பெஸ்ட் ஏர்லைன் அவார்ட் World Best Airline Award, வேர்ல்ட்'ஸ் பெஸ்ட் ஏர்போர்ட் அவார்ட் World's Best Airport Award (air transport) இன்னும் எண்ணிலடங்கா விருதுகள்.

தமிழ் மொழி செம்மொழி அங்கீகாரம் அடைந்திருந்தாலும் பல தமிழர்களுக்கு தங்களது தாய் மொழி தமிழில் பேசினால் தங்களது தரம் குறைந்துவிடுவதாக எண்ணி வேறு மொழிகளில் உரையாடுவதென்பது பெருகிவரும் நிலை நிறைந்து காணப்படுகிறது, தமிழ் மொழி வளர்ச்சியை தடுக்க இத்தகைய செயல்களும் ஒரு காரணமாகி வருவது கண்கூடாக தெரிந்த நிலை. கொடியானது வளர வளர அதன் கிளைகள் தானே ஏதேனும் ஒரு பிடிப்பை பற்றிக்கொண்டு படர்ந்து வளர்ந்துவிடும் அதை போன்றே எந்த மொழியாக இருப்பினும் தானே தனது வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்வதும் இயற்க்கை, ஆனாலும் உரமிட்டு கொடி படர பந்தலிட்டு வளர்க்குபோது அதன் பலனையும் அதற்கேற்றார்போல கொடுக்கத் தவறுவதில்லை. பாரி வள்ளலைப் போல முல்லைக்கு தேர் கொடுக்கத் தேவை இல்லையென்றாலும் முல்லைக்கொடியை இடைஞ்சலெனக் கருதி வெட்டி எரியாமலிருந்தாலே போதும், தானே தனது பிடியை பிடித்துக்கொண்டு பூத்துக் குலுங்கி மணம் பரப்பும் தன்மைக்கொண்டது செம்மொழி.

பல மொழிகளை கற்றுக்கொள்ளக் கூடாது என்று சொல்பவன் முட்டாள், தன் தாய்மொழியை அறிந்தும் அறியாதது போல் மட்டம் தட்டுபவன் மூடன், மூடன் என்றால் முண்டம் மட்டுமே கொண்டு மூளையை உள்ளடக்கிய தலையை இழந்தவன் என்று பொருள். எதிகால தமிழ் உலகு மூடர்கள் நிறைந்ததா அல்லது முட்டாள்கள் நிறைந்ததா, செம்மொழி என்ற அடைமொழியை அடைகாக்க போகும் கோழிகளா அல்லது முட்டை இல்லாமலேயே அடை காக்கப் போகும் வெற்று கோழிகளா.

காண மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடியது போன்றதா, மொழியும் தாயும் ஒன்று என்பதால் மொழி தாய்மொழியானது இன்றைய நிலவரத்தில் தாய்களுக்கு கிடைக்கும் மரியாதையும் மதிப்பிற்க்கான அடையாளமாக எங்கும் நிறைந்துவரும் முதியோர் இல்லங்கள் இவற்றை பார்க்கும் போது தாய்க்கு ஏற்ப்பட்டிருக்கும் நிலை மொழிக்கும் தானா என்று எண்ண வைக்கின்றது, நரைத்த முடிகள் மறைந்த பின் நாட்டில் நிலவுமோ தாய்மொழிப் பற்று, செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈய்யப்படும் என்பது திரிந்து வயிற்றுக்கு உணவில்லாத போது ஏ.டி.எம். உடைக்கப்படும் என்றாகி, ஏன் இந்த கொலைவெறி என்று கேட்பவருக்கு தமிழ் தமிழ் என்று அரற்றிக் கொண்டிருகின்றீர்களே உங்கள் தமிழா எங்கள் வயிற்றுபசிக்கு உணவிட்டது, உங்கள் பாரதி சொன்னதைத்தான் நாங்கள் செய்தோம் என்பார்,

பாரதி கொடிய வறுமையில் கூட 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்று சொன்னாறேத் தவிர நீங்கள் செய்வதைப்போல கொலை கொள்ளை ஏ.டி.எம். உடைப்பு, மாதாக் கோவில், மாரியம்மன் கோவில் உண்டியல்களை உடைத்து திருடவில்லையே என்போமானால் ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றானே என்றார். அப்படியென்றால் வள்ளுவரையும் ஏனைய தமிழறிஞர்களையும் ஏன் விட்டு வைத்திருக்கின்றீர்கள் என்போம் நாம். ஆக திருவள்ளுவரும் பாரதியும் இளங்கோவையும் அவர்களது கொலை கொள்ளை ஜேப்படி முகமூடிதிருட்டு என்று இவற்றிற்க்குதான் மிகச் 'சரியாக' பயன்படுதுவரோ. வரும் காலங்களில் யார் தமிழை வாழ்விப்பார்? தமிழ் தானே வாழும் சக்திகொண்டதா?

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

கிறிஸ்துமஸ்

Merry Christmas Comments and Graphics for MySpace, Tagged, Facebook



நவம்பர்
மாதம் வந்துவிட்டாலே கிறிஸ்துமஸை பற்றிய குதுகலம் நிறையத் துவங்கிவிடும், அப்போது மேரிக்கு பதினான்கு வயதிருக்கும் எதையும் உணரத் தெரியாத வயசு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மனதை சந்தோஷப்படுத்துவதில் இருக்கும் அளவிற்கு வீட்டில்அதற்க்கான அடையாளங்கள் நிறைந்திருக்காது, மேரி ஒரு ஏழைப் பெண், ஏழைகளுக்கு ஏது பண்டிகை.

ஏழ்மைநிலையில்
வாடிக்கொண்டிருக்கும் இளம் தளிர் அவள், அவளுக்குத் பண்டிகை கொண்டாட்டத்தின் அர்த்தம் என்னவென்பது ஒன்றும் அறிந்திராதவள், பனி கொட்டும் இரவுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதால் நல்ல குளிரில் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து குளித்து புதிய உடை இருப்பவர்கள் உடுத்திக் கொண்டு ஆலயத்திற்கு போவது வழக்கம், மேரியின் கிறிஸ்துமஸ் எப்போதுமே ஒரே மாதிரித்தான் கொண்டாடப்பட்டு வந்துள்ளது, அதிகாலை மூன்றரை மணிக்கு இருட்டில் குடும்பத்தோடு ஆலயத்திற்குச் சென்று அங்கு குழுமியுள்ள கூட்டத்தின் புதிய உடைகளை வெறித்து பார்த்துவிட்டு வீடு திரும்புவது.

மேரியின்
வீடு அமைதியின் இருப்பிடம், சிலரது வாழ்க்கையில் குடிகார அப்பாவினால் குடும்பத்தில் அமைதியே இராது, ஆனால் மேரியின் வீடு அமைதியின் மொத்த இருப்பிடம். உடுத்த புதிய உடை இல்லையென்ற குறை கூட பெரிதாக தெரியாமல் போய்விடும். அன்பினால் ஒருவரையொருவர் ஆக்கிரமித்த குடும்பம்.

மேரியின்
அம்மா செய்து வைத்திருக்கும் கிறிஸ்துமஸ் பலகாரங்களை அண்டை வீடுகளில் உள்ளவர்களுக்கு கொடுக்கச் சொல்லி அனுப்பி வைப்பாள், அப்படி அனுப்பும் வீடுகளில் அவளது சொந்தக்காரர்களின் வீடுகளுக்கும் செல்வதுண்டு, மேரியின் அப்பாவின் இரு சகோதரர்களின் வீடுகளுக்கு பலகாரம் கொண்டு சென்று அவர்களது வீட்டின் வாசலை நெருங்கும் போதே வீட்டினுள் நடக்கும் சண்டையின் சப்தம் வீதியில் தெளிவாக கேட்கும், மேரிக்கு அந்த வீட்டிற்குள் போகலாமா வேண்டாமா, பலகாரத்தை திரும்பி எடுத்துக் கொண்டு போனால் அம்மா திட்டுவார்களே என்று எண்ணிக்கொண்டிருக்கும் போது சண்டை போட்டுக் கொள்பவரில் வீட்டை விட்டு வெளியேறுபவர் எப்போதுமே மேரியின் பெரியப்பாவும் சித்தப்பாவுமாகத்தான் இருக்கும், சில சமயங்களில் பெரியம்மா பெட்டியுடன் கிளம்பி கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறுவதும் பார்க்க முடியும்.

மேரிக்கு இவற்றின் அர்த்தம் புரிந்துகொள்ள இயலாத வயசு, சண்டை நடக்கும் இரண்டு வீடுகளிலும் புதிய ஆடைகள், வீட்டு அலங்காரம், சமையல்காரனை வைத்து பலகாரம் தயாரித்தல் என்று கிறிஸ்துமஸ் களை கட்டி இருந்தாலும் இவர்கள் ஏன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது கேள்வி குறியாகவே இருப்பதுண்டு.

அப்போது
மேரிக்கு இருபத்து இரண்டு வயதிருக்கும் கிறிஸ்துமஸ் நெருங்கி கொண்டிருந்த சமயம், என்னுடன் பேசிக்கொண்டிருந்த மேரி இந்த கேள்வியை என்னிடம் கேட்டாள், எல்லாமிருந்தும் இவர்கள் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டு சந்தோஷமில்லாமல் இருக்க காரணம் என்னவாக இருக்க முடியும் என்பது எனக்கு இன்றுவரையில் விளங்காத கேள்வியாகவே இருந்து வந்துள்ளது, என் அப்பாவைப் போலவே என் சித்தப்பாவும் பெரியப்பாவும் குடிகாரர்களோ சூதாட்டக்காரர்களோ கிடையாது, மனைவியை அதிகம் நேசிப்பவர்கள் அப்படி இருந்ததும் ஏன் இந்த ஓயாத சண்டை என்றாள்.

கிறிஸ்துமஸ்
என்பதன் பொருள் என்னவென்று தெரிந்து கொள்வதை விட கிறிஸ்து என்கிற கடவுள் மனிதனாக பிறந்ததின் காரணத்தை இவர்கள் அறிந்தும் அதை பூரணமாய் தங்கள் மனதினுள்ளும் தன் வாழ்க்கையிலும் ஏற்றுக்கொள்ளாமல் இந்த உலகத்திற்குரிய பலவித ஆசைகளால் இழுப்புண்டு சண்டை சச்சரவுகளை உண்டாக்கும் காரியாங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி ஒருவரையொருவர் காயப்படுத்தி கொண்டு அறியாமையிலேயே வாழ்ந்துவருகிறார்கள், எல்லாம் இருந்ததும் சமாதானம் சந்தோசம் போன்றவற்றை இழந்து தங்களை வருத்திக் கொள்ளுகிறார்கள்.

எப்படி
என்றால் கிறிஸ்துவின் பிறப்பு என்பது உலகத்தில் வாழும் மனிதர்கள் ஒருவரையொருவர் சுத்த மனதோடு நேசிக்க வேண்டும் என்கிற அடிப்படையான கட்டளையை மறந்து தினம் தினம் ஒன்றுமில்லாத உலகப் பொருளுக்காக ஒருவரையொருவர் காயப்படுத்தி கொள்கிறார்கள் என்றேன் நான்.

மேரிக்கு
நான் சொன்னது முழுவதுமாக புரிந்து கொள்ள முடிந்ததா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள அவளுக்குத் திருமணமாகி குடும்ப வாழ்க்கையினுள் காலடி எடுத்து வைத்த பின்னர் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் காத்திருக்கிறேன். இயேசு கிறிஸ்த்துவே நமக்கு கிடைத்த மிகப்பெரிய விலைமதிப்பற்ற விருது. விலை மதிப்பற்ற வைரமும் ஆடை அணிகலன்களும் அதற்க்கு நிகர் இல்லை என்பதே கிறிஸ்துமஸ்.

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபெல் பரிசா.....






நோபெல், ஆஸ்கார், பாரத் ரத்னா, இன்னும் பல பெயர்களில் வழங்கப்பட்டு வருகின்ற விருதுகள் ஒரு மனிதனின் அறிய செயலுக்கு கொடுக்கப்படும் அங்கிகாரம் என்பது நாம் அறிந்தது, விருதுகளை பெற்றுக்கொண்டவர்களை விட அந்த விருது கொடுக்கப்பட்டதற்கான காரணம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நோபெல் அமைதிக்கான விருதை பாரக் ஒபாமாவிற்கு நோபெல் குழு பரிந்துரைத்திருப்பது, ஒபாமாவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு கொடுக்கப்பட்ட அல்லது அவரது திட்டங்களுக்குக்கு கொடுக்கப்பட்டது என்று நினைக்கத் தோன்றுகிறது, ஒரு மனிதன் [ஒபமா] செய்யபோகிறார் என்று எதிர்பார்த்துகொண்டிருக்கும் சில நடவடிக்கைகளுக்காக நோபெல் விருது முன்கூட்டியே வழங்கபட்டிருப்பது உலகில் இதுவே முதல் முறை.




இதுவரையில்
ஒபாமா அமைதிக்கான தீவிர பணிகளையோ நடவடிக்கைகளையோ செய்ததாக எனக்கு தெரியவில்லை.[ ஒருசமயம் நான் அப்படிப்பட்ட செய்திகளை படிக்க அல்லது தெரிந்து கொள்ளவில்லையோ என்று சந்தேகமாக உள்ளது ], பாலஸ்தீன இஸ்ரவேல் நாடுகளுக்கிடையில் தற்போதைய போர் நிறுத்தமும் அமைதியும் ஒபாமாவின் முயற்சி என்று எடுத்துக் கொள்ளலாமா? !!! என்னை பொருத்தமட்டில் அராபாத் இல்லாமல் இருப்பதே பாலஸ்த்தீன-இஸ்ரவேல் அமைதிக்கு காரணம் என்று, ( நம்பத் ) தோன்றுகிறது.

இராக்கில்
அமைதிபடைகள் ஏற்கனவே அதன் பணிகளில் அமர்த்தப்பட்ட நிலையில், ராணுவ மற்றும் போர், இராக்கின் சீரமைப்பு பணிகளுக்கு அமெரிக்காவின் பணம் தண்ணீர் போல செலவழிக்கபட்டுக் கொண்டிருப்பதை அமெரிக்க மக்கள் எதிர்த்து வந்த சமயத்தில் ஒபாமா அமெரிக்க மக்களின் எதிர்ப்பு குரலுக்கு ஏற்ற விதத்தில் தேர்தலுக்கு முன்னதான அவரது மேடை பேச்சுகள் அமைந்த விதம் அவர்களுக்கு ஆறுதலை அளித்ததால் ஒபாமாவின் வெற்றி உறுதியாகியது.

ஒபாமாவின் வெளியுறவு கொள்கைகளுக்கு கொடுக்கப்பட்டது இந்த நோபெல் பரிசு ஆனால் சிறந்த வெளியுறவு கொள்கைகளுக்காக நோபெல் பரிசு இதுவரையில் வழங்கப்படாததால், அமைதிக்கான நோபெல் பரிசு என்று கொடுத்து விட முடிவு செய்துள்ளனர் போலும். !!!



இதுவரையில்
ஒபாமா அமைதிக்காக என்ன செய்தார் என்பது தெரியவில்லை, அவருக்கு நோபெல் விருதை அமைதிக்காக வழங்கும் அளவிற்கு அவரது தொண்டுகள் இருந்ததா, இப்படிப்பட்ட கேள்விகள் ஒரு சாமானியனுக்கே தோன்றும் நிலையில் நோபெல் விருதிற்கு பரிந்துரை செய்யும் குழுவிற்கு இதுபற்றி ஒன்றும் தெரியாதிருக்குமா.

நோபெல்
விருது வழங்கும் குழுவினர் ஒபாமாவின் அமைந்திக்கான தொண்டுகளையோ (எதிர்கால) திட்டங்களையோ அவற்றை செயல் படுத்துவதற்கான முயற்ச்சிகளில் அவர் ஈடுபட வேண்டும் என்பதற்காக முன்னதாகவே நோபெல் விருதை கொடுத்து அவருக்கு கெடு விதித்துள்ளதா என்பது குழப்பமாக உள்ளது. இம்முறை அமைதிக்கான நோபெல் விருதை வழங்கும் அளவிற்கு தகுதி படைத்தவரை கண்டுபிடிக்க இயலவில்லையோ. (ஒபாமாவைத் தவிர) !!!

இதுவரை நோபெல் அமைதிக்கான விருதை பெற்றவர்களின் பட்டியலை பார்ப்போமாகில் மேலே கூறப்பட்ட கேள்விகளின் உண்மை தெரியவரும் என நம்புகிறேன். இப்போதைக்கு அமெரிக்காவின் நிலை பொருளாதாரத்தை எப்படி உயர்த்துவது, வேலை இழப்பவர்களின், இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு என்ன செய்ய முடியும் பாதாளத்தில் இருக்கும் பொருளாதாரத்தை சீராக்குவது எப்படி என்று யோசித்து அவற்றை செயல்படுத்துவதே பெரும் பாடாய் இருக்கும் நிலையில், ஒபாமாவின் மன அமைதிக்கு நோபெல் விருதை கொடுத்து சந்தோஷப்படுத்த வேண்டியதாகி உள்ளது என்று நினைத்துக் கொள்ளவேண்டும். !!!!




அழும் குழந்தைக்கு பொம்மை கொடுப்பது போல ஒபாமாவிற்கு நோபெல் பரிசு.!!!

நோபெலோ நோபெல்!!!!!!