மோகனும் மீனாவும் திருமணமாகிய புதிய தம்பதிகள் ஆனால் மோகனுக்கு முடித்து கொடுக்கவேண்டிய வேலைகள் நிமித்தமாக இரவு பகலென்று பாராமல் உழைத்தாக வேண்டியிருந்தது, வெளிநாட்டு நிறுவனத்தில் வேலையென்பதால் பெரும்பாலும் மோகனுக்கு இரவு நேர வேலைகள் இருப்பது வழக்கம். மோகனின் மனைவி மீனா, இளம் வயது, நல்ல நிறம், காண்போரைக் கவரும் கவர்ச்சி, பேசும் கண்கள், மிதமான உயரம், மெல்லிய உடல் வாகு, கல்லூரியில் பொறியல் படித்து முடித்தவுடன் திருமணமும் முடிந்தது.
மீனாவை பார்ப்பவர்கள் கண்களை அகற்ற சிறிது அவகாசம் தேவைப்படும். மீனாவுடன் படித்த குமரனுக்கு மீனாவை அடையாமல் விட மனதில்லை, யாரிடமும் சிக்காமல் கல்லூரியை முடித்து வந்துவிட்டாலும் குமரன் அவளை துரத்துவது தொடர்கதையாகி வந்தது, மீனாவின் புகுந்த வீட்டின் விலாசத்தை எப்படியோ அறிந்து கொண்டு தவறாமல் தொலைபேசியில் பயமுறுத்துவது வாடிக்கையாகிப் போனது, அன்றும் அப்படித்தான் அவன் தொலைபேசியில் மீனாவிடம் 'உன் புருஷன் இன்னைக்கு இரவு வேலைக்குச் சென்றுவிட்டான், சரியாக இரவு பத்துமணிக்கு உன் வீட்டு வாசலில் வந்து கதவை தட்டுவேன், நீ திறந்தாகவேண்டும் திறக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை ஏற்க்கனவே சொல்லிவிட்டேன், நினைவில் வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
இரவு மணி பத்து, இடி மின்னல் பெருமழை ஓயாமல் அடித்துக்கொண்டிருந்தது, தெருவில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தது, சொன்னபடி மீனாவின் வீட்டின் வாயிலில் வந்து நின்ற குமரன் கால்களிலிருந்த செருப்பை கழற்றிவிட்டு கதவை லேசாக தட்டுவதற்கு கதவில் கையை வைத்தவுடன் கதவு திறந்து கிடப்பதை கவனித்தான் மீனாவின் புத்திசாலித்தனத்தை நினைத்து அவனுக்கு சிரிப்பு வந்தது, கதவை திறந்து ஒரு அடி உள்ளே வைத்தவன் திடுக்கிட்டு அங்கேயே நின்றுவிட்டான், லேசாக கைகள் இரண்டும் அவனையறியாமல் நடுங்கியது.
ரத்தவெள்ளத்தில் உயிரற்ற உடலாக கிடந்தாள் மீனா, அங்கே நின்று நேரம் கடத்துவது ஆபத்து என அவன் மனம் எச்சரித்தது, தனது கை ரேகைகள் எங்காவது எதிலாவது படிந்துவிடக் கூடும் என்ற பயத்தில், திரும்பி பார்க்காமல் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாய் அந்த வீட்டைவிட்டு வெளியேறினான், யாரேனும் தன்னை கவனித்தார்களா என்று ஒருமுறை சுற்றிலும் பார்த்தபோது மழை வெள்ளம் கால்வாய்களில் ஓடிக்கொண்டிருந்தது, வீதியில் யாரும் தென்படவில்லை.
முழுமூச்சாக ஓடி தெருவிலே வந்தபோது அவனை உரசிக்கொண்டு வந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டு ரயில் நிலையத்தை வந்தடைந்து தான் செல்ல வேண்டிய ரயில் தயாராக நின்றிருக்கவில்லை என்றாலும் தயாராக நின்றிருந்த ரயிலுக்கு சீட்டு வாங்கிக்கொண்டு வண்டியில் ஏறி உட்கார்ந்த பின்னர் பத்து நிமிட நேரம் கழித்து ரயில் கிளம்பியது, ரயிலில் உட்கார்ந்திருந்த பத்து நிமிடங்களும் உள்ளத்தினுள் படபடப்பு.
ஒருவழியாக ரயில் கிளம்பிய பின்னர் தான் அந்த ரயில் ஏதோ ஊருக்குப் போவதை அவனால் உணர முடிந்தது. கண்ணிலிருந்து நீங்காத மீனாவின் அந்த கரு விழிகள் அவனை மீண்டும் மீண்டும் நினைவில் வந்து பயமுறுத்தியது. யாரோ தனக்கு முன்னர் வந்து எதற்காகவோ மீனாவை குத்தி கொன்று போட்டுவிட்டு போயிருப்பதை நினைத்தாலே தப்பித்தோம் பிழைத்தோம் என்றாகிவிட்டது குமரனுக்கு.
கடியாரத்தில் மணி பத்து அறைக்கு ஒரு மணி அடித்தவுடன் மீனா மெதுவாக எழுந்தாள், அவள் திட்டமிட்டபடியே சிகப்பு பேனாவிற்கு உபயோகிக்கும் மையை தன் மீதும் தரையிலே சிறிதும் ஊற்றி கொண்ட பின் கதவை லேசாக திறந்து வைத்துவிட்டு குமரன் அங்கு வந்து போகும் வரை அசையாமல் பிணம் போல கிடந்து, பார்ப்பவரை சிந்தனை செய்யவிடாமல் துரத்தியடிக்க அவள் போட்ட திட்டம் வெற்றிகரமாக முடிந்தது, இனி குமரன் என்ற காமுகனின் போராட்டம் நீங்கியது என்ற நிம்மதி அடைந்தாள் மீனா.
வியாழன், 24 ஜூன், 2010
புதன், 23 ஜூன், 2010
விருதுகள்
சமீபத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்ச்சியில் நடந்து முடிந்த சுப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் 'சூப்பர் சிங்கர் ஜூனியர்' என்ற பட்டத்துடன் இருபத்து ஐந்து லட்சம் மதிப்புள்ள வீடும் பரிசாக பெற்ற அல்கா என்கிற பெண்ணுக்கு இருந்த பாடல் திறைமைக்கேற்றப் பரிசு, அதையடுத்து விஜய் அவார்ட்ஸ் விழாவில் வழங்கப்பட்ட விருதுகள், செவாலியர் சிவாஜி விருது, விருதுகள் வழங்குவதால் கொடுப்பவரும் வாங்குபவர்களும் உற்சாகம் அடைகின்றனர் என்பது உண்மை என்றாலும், பார்த்து ரசித்த ரசிகர்கள் மகிழ்வுற்றதும் மறுக்க முடியாதது.
உலக செம்மொழி மாநாட்டில் கலைஞர் விருது பின்லாந்து நாட்டைச் சேர்ந்த அறிஞருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது, அல்பிரேட் நோபெல் அவர்களால் துவங்கப்பட்ட நோபெல் விருதுகள் உலக பிரபலம் வாய்ந்தவை, அமெரிக்காவின் மிக பழமையான விருதாக கருதப்படும் மெடல் அப் ஹானர் என்பது ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் விருதுகள், உலகில் பலவித சாதனைகளுக்கு பலப் பெயர்களில் விருதுகள் வழங்கப்படுகின்றது,
புக்கர் ப்ரைஸ் Booker Prize (literature), ஹுயூகோ அவார்ட் Hugo Award (Science Fictions) வேர்ல்ட் பிளேயர் அப் தி இயர் World Player of the Year (football) அகாடெமி அவார்ட் Academy Award ( foreign language film), பெஸ்ட் ரிலிஜன் இன் தி வேர்ல்ட் அவார்ட், Best Religion in the World Award (Religion) வேர்ல்ட் பெஸ்ட் ஏர்லைன் அவார்ட் World Best Airline Award, வேர்ல்ட்'ஸ் பெஸ்ட் ஏர்போர்ட் அவார்ட் World's Best Airport Award (air transport) இன்னும் எண்ணிலடங்கா விருதுகள்.
தமிழ் மொழி செம்மொழி அங்கீகாரம் அடைந்திருந்தாலும் பல தமிழர்களுக்கு தங்களது தாய் மொழி தமிழில் பேசினால் தங்களது தரம் குறைந்துவிடுவதாக எண்ணி வேறு மொழிகளில் உரையாடுவதென்பது பெருகிவரும் நிலை நிறைந்து காணப்படுகிறது, தமிழ் மொழி வளர்ச்சியை தடுக்க இத்தகைய செயல்களும் ஒரு காரணமாகி வருவது கண்கூடாக தெரிந்த நிலை. கொடியானது வளர வளர அதன் கிளைகள் தானே ஏதேனும் ஒரு பிடிப்பை பற்றிக்கொண்டு படர்ந்து வளர்ந்துவிடும் அதை போன்றே எந்த மொழியாக இருப்பினும் தானே தனது வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்வதும் இயற்க்கை, ஆனாலும் உரமிட்டு கொடி படர பந்தலிட்டு வளர்க்குபோது அதன் பலனையும் அதற்கேற்றார்போல கொடுக்கத் தவறுவதில்லை. பாரி வள்ளலைப் போல முல்லைக்கு தேர் கொடுக்கத் தேவை இல்லையென்றாலும் முல்லைக்கொடியை இடைஞ்சலெனக் கருதி வெட்டி எரியாமலிருந்தாலே போதும், தானே தனது பிடியை பிடித்துக்கொண்டு பூத்துக் குலுங்கி மணம் பரப்பும் தன்மைக்கொண்டது செம்மொழி.
பல மொழிகளை கற்றுக்கொள்ளக் கூடாது என்று சொல்பவன் முட்டாள், தன் தாய்மொழியை அறிந்தும் அறியாதது போல் மட்டம் தட்டுபவன் மூடன், மூடன் என்றால் முண்டம் மட்டுமே கொண்டு மூளையை உள்ளடக்கிய தலையை இழந்தவன் என்று பொருள். எதிகால தமிழ் உலகு மூடர்கள் நிறைந்ததா அல்லது முட்டாள்கள் நிறைந்ததா, செம்மொழி என்ற அடைமொழியை அடைகாக்க போகும் கோழிகளா அல்லது முட்டை இல்லாமலேயே அடை காக்கப் போகும் வெற்று கோழிகளா.
காண மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடியது போன்றதா, மொழியும் தாயும் ஒன்று என்பதால் மொழி தாய்மொழியானது இன்றைய நிலவரத்தில் தாய்களுக்கு கிடைக்கும் மரியாதையும் மதிப்பிற்க்கான அடையாளமாக எங்கும் நிறைந்துவரும் முதியோர் இல்லங்கள் இவற்றை பார்க்கும் போது தாய்க்கு ஏற்ப்பட்டிருக்கும் நிலை மொழிக்கும் தானா என்று எண்ண வைக்கின்றது, நரைத்த முடிகள் மறைந்த பின் நாட்டில் நிலவுமோ தாய்மொழிப் பற்று, செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈய்யப்படும் என்பது திரிந்து வயிற்றுக்கு உணவில்லாத போது ஏ.டி.எம். உடைக்கப்படும் என்றாகி, ஏன் இந்த கொலைவெறி என்று கேட்பவருக்கு தமிழ் தமிழ் என்று அரற்றிக் கொண்டிருகின்றீர்களே உங்கள் தமிழா எங்கள் வயிற்றுபசிக்கு உணவிட்டது, உங்கள் பாரதி சொன்னதைத்தான் நாங்கள் செய்தோம் என்பார்,
பாரதி கொடிய வறுமையில் கூட 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்று சொன்னாறேத் தவிர நீங்கள் செய்வதைப்போல கொலை கொள்ளை ஏ.டி.எம். உடைப்பு, மாதாக் கோவில், மாரியம்மன் கோவில் உண்டியல்களை உடைத்து திருடவில்லையே என்போமானால் ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றானே என்றார். அப்படியென்றால் வள்ளுவரையும் ஏனைய தமிழறிஞர்களையும் ஏன் விட்டு வைத்திருக்கின்றீர்கள் என்போம் நாம். ஆக திருவள்ளுவரும் பாரதியும் இளங்கோவையும் அவர்களது கொலை கொள்ளை ஜேப்படி முகமூடிதிருட்டு என்று இவற்றிற்க்குதான் மிகச் 'சரியாக' பயன்படுதுவரோ. வரும் காலங்களில் யார் தமிழை வாழ்விப்பார்? தமிழ் தானே வாழும் சக்திகொண்டதா?

செவ்வாய், 22 ஜூன், 2010
மழை படுக்கை
குன்னூரில் இருந்த கல்லூரியில் சேர்ந்த பின்பு அங்கிருந்த அவர்களுக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகையில் வசதி மிகுந்த அறையில் தங்கி இருந்தான் பிரபு, அவனது பெற்றோர் இருவரும் காலை உணவு சிங்கப்பூரில் என்றால் மதிய உணவு கெய்ரோவில், இரவு உணவு ஆஸ்திரேலியாவில் என்று வாழ்த்து வருபவர்கள். எங்கே எப்படி வாழ்ந்தாலும் மகனின் படிப்பும் வாழ்க்கையும் இந்திய கலாசாரத்தை பின்பற்றித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர்.
காலை ஒன்பது மணிக்கு கல்லூரி என்பதால் எட்டு மணிக்கு கிளம்பி நடப்பது அவனது வழக்கம், பெரும்பாலும் கல்லூரிக்குச் செல்லும் போது நடந்து செல்வதையே விரும்பினான், சுடாத வெய்யலும் திடீரென்று கொட்டும் சாரல் மழையும் பிரபுவிற்கு மிகவும் பிடித்தது, அன்றைக்கும் அப்படித்தான் இயற்க்கை வாரி இறைத்திருந்த அழகை கண் குளிர ரசித்த வண்ணம் இடையிடையே வரும் வாகனங்களுக்கு ஒதுங்கி வழிவிட்டு நடந்து கொண்டிருந்தவன்,பழங்குடியினர் ஒரு சிலரைத் தவிர வீதியில் நடந்து செல்பவர்கள் மிகவும் குறைவு, வீதியை ஒட்டி இருந்த அழகான பூஞ்செடிகளும் குரோட்டன் செடிகளும் அந்த இடத்தை நந்தவனமாக்கியது அந்த இடத்தை கடக்கும்போது லேசாக சாரல் மழை கொட்டத் துவங்கியது, குளிர்ந்த மேகம் லேசான காற்றில் மிதந்து வந்து முகத்தின் மீது உரசிச் சென்றது, சாரல் மழையில் நனைவதற்கு பிடிக்கும் என்றாலும் கல்லூரிக்குச் செல்லும் சமயத்தில் உடை நனைந்து விடக் கூடாது என்பதற்காக சற்று தூரத்தில் இருந்த சிறிய வீட்டின் முன் ஓடிச் சென்று நின்று கொண்டான் பிரபு.
சற்று தூரத்தில் தெரிந்த அழகிய பூங்காவிலிருந்த இரும்பு நாற்காலியில் யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது, மழைச் சாரல் சற்று வேகமாக அடிக்கத் துவங்கியது, அங்கு உட்கார்ந்திருந்தவர் அங்கிருந்து நகராமல் அங்கேயே மழையில் நனைந்துகொண்டு உட்கார்ந்திருப்பது பிரபுவிற்கு சற்று ஆச்சரியத்தை கொடுத்தது, மழைச்சாரலின் வேகம் அதிகரித்தவுடன் அங்கு உட்கார்ந்திருந்தவர் எழுந்து மழை நீரை வீசி விளையாடிக்கொண்டு நானைந்து நிற்ப்பது தெரிந்தது , உற்று பார்த்தபோது அது ஒரு பெண், சாரல் ஓய்ந்தவுடன் கல்லூரிக்குச் சென்றுவிட்டான்.
காலை மாலை இரு வேளைகளிலும் வீதியில் போகும் சமயத்தில் அதே இடத்தில் அந்தப் பெண் உட்கார்ந்திருப்பதை பிரபு கவனிக்கத் தவறுவதில்லை, மழைக்காலம் துவங்கியது, பிரபு காரில் கல்லூரிக்குச் செல்லத் துவங்கினான். அப்போதும் கடும் மழையில் அந்தப் பெண் அதே இடத்தில் உட்கார்ந்து அல்லது நின்றுகொண்டிருந்தாள், ஒருநாள் மாலை இருட்ட ஆரம்பித்திருந்தது, மழை ஓயவில்லை, கல்லூரியிலிருந்து கிளம்புவதற்கு தாமதமாகியது, காரில் அதே வழியாக வந்துக் கொண்டிருந்த பிரபுவின் கண்களின் அந்த பெண் கிழே வீழ்ந்து கிடப்பது தெரிந்தது.
சிறிய வீட்டிலிருந்த நடுத்தர வயது பெண்ணை காரிலிருந்தவாறே கூப்பிட்டு அந்தப் பெண் மழை நீரில் விழுந்து கிடப்பதை காண்பித்தபோது பெண் விழுந்து கிடந்த இடத்திற்கு ஓடிச் சென்று தூக்கினாள், அவளுடன் சென்ற பிரபுவும் கைத் தாங்கலாக அந்த பெண்ணை பிடித்து வந்து காரில் பின்னால் படுக்க வைத்து உதவிய பெண்ணையும் உடன் அழைத்துக் கொண்டு அருகிலிருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்தான்,
பிரபு படிக்கும் கல்லூரியில் வேறு பாடப்பிரிவில் படித்து வந்த ஜமுனாவிற்கு மழை மிகவும் பிடித்தது, அதற்காகவே அங்கு இருந்த கல்லூரியில் சேர்ந்தாள், தொடர்ந்து மழையில் நனைவதால் நுரையீரல் நிமோனியாவால் தக்கபட்டிருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் இருந்த ஜமுனாவிற்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு சகஜ நிலைக்கு கொண்டுவருவதற்கு மருத்துவர்கள் போராடிக்கொண்டிருந்தனர். இடையே ஜமுனாவிற்கு பெற்றோர் இல்லை என்பதால், ஜமுனாவின் கார்டியன் அண்ணனுக்குத் தகவல் அனுப்பட்டு ஜமுனாவின் அண்ணன் ஒருவாரம் விடுப்பில் வந்து பார்த்துவிட்டு சென்றுவிட்டான். ஜமுனா சகஜநிலைக்குத் திரும்புவதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாகியது.
இனி மழையில் நனைந்தால் உடல்நிலையை தேற்ற வாய்ப்புகளே கிடையாது என்று கூறி மாத்திரைகளை கொடுத்து வீட்டிற்கு அனுப்பினர் அழகிய பெண் ஜமுனா இருபது வயது, படிப்பில் கெட்டிக்காரி, பாடுவதிலும் வீணை வாசிப்பிலும் திறமைசாலி, ஜமுனாவை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துவிடும் கவர்ச்சி, பிரபுவிற்கு ஜமுனாவை பிடித்துப் போனதில் ஆச்சரியம் இல்லை, பணம் மிகுந்திருந்தாலும் இரக்கமும் தன்னடக்கமும் நிறைந்திருந்த பிரபுவின் கருணையுள்ளம் ஜமுனாவிற்கு மிகவும் பிடித்துப் போனது.
அந்த அழகியப் பூங்காவில் இரும்பு நாற்காலியின் அருகில் கான்க்ரீட் போட்டு மூடாத மண் படுக்கையில் நிரந்தரமாக மழையில் நனைந்தனர் இருவரும்.

திங்கள், 21 ஜூன், 2010
விபத்து
திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் கல்கத்தாவிற்கு திரும்பி செல்லவேண்டும் என்று கோபால் முன்பே கூறி இருந்தான், எல்லா சடங்குகளையும் தெனிந்திய கிராமத்தின் பழமை மாறாமல் அப்படியே செய்து முடித்துவிட்டு மாப்பிள்ளை கோப்பாலும் மணமகள் சுமதியும் முதல் முதலாக தனிக் குடித்தனம் நடத்த கிளம்பிய போது அவர்களுடன் ஒருவரும் செல்லவில்லை, என்னதான் தாலி கட்டிய கணவன் என்றாலும் முன் பின் தெரியாத யாரோ ஒருவருடன் செல்வது போன்ற உணர்வுடன் தான் சுமதி கோப்பாலுடன் பயணமானாள்.
ஒருவார பழக்கத்தில் கோப்பால் சுமதியை முன்பே பரிச்சயப்பட்டவனைப்போல மிகவும் சகஜமுடன் பழகினான், தனது முதல் காதலியைப் பற்றி விரிவாக சொன்னான், முதல் முத்தம், தான் ஸ்பரிசித்த முதல் பெண் என்று ஒன்றுவிடாமல் சொன்னான், சுமதிக்கு கேட்பதற்கு முதலில் அருவெருப்பாக இருந்தது, என்ன மனிதன் இவன், புதியவர்களிடம் இப்படியெல்லாம் கூட பேசுவார்களா, அசிங்கம் என்று தோன்றியது.
சுமதி நீ பட்டினத்திலே பிறந்து வளர்த்தவள் உனக்கும் இப்படி ஏதேனும் மறக்க முடியாத அனுபவங்கள் இருந்திருக்குமே எதையும் என்னிடம் பயப்படாமல் சொல்லு நான் மத்தவங்களப் போல பெண்களை தீக்குளித்து சத்தியம் செய்விக்கும் ஆசாமியல்ல என்றான். சுமதியின் மௌனம் கோபாலுக்கு பிடிக்கவில்லை. சுமதியின் அக்காவின் திருமணத்திற்குப் பின் அக்காவுடன் படித்த ஒரு பையனை எதேச்சையாக எங்கோ வழியில் பார்த்த போது அந்த பையன் அக்காவைப் பார்த்து சிரித்ததை பார்த்துவிட்ட அக்காவின் கணவன் அவனுக்கும் உனக்கும் ஏற்கனவே என்ன உறவு, அவனை நேரில் பார்ப்பதற்காக வரச் சொல்லி இருந்தாயா என்றெல்லாம் கேட்டு இம்சை செய்வதாக தன் அம்மாவிடம் சொல்லி அழுதது நினைவிற்கு வந்தது.
சுமதி மிகவும் எச்சரிக்கையுடன் அப்படியெல்லாம் எனக்கு ஒரு அனுபவமும் கிடையாது என்றாள். கோப்பால் சுமதியிடம் எதைப்பற்றி பேசினாலும் முடிக்கும் போது அவளது 'முன்' அனுபவத்தை பற்றி விசாரிப்பதை மட்டும் மறக்காமல் கேட்டுவிட்டுதான் பேச்சை முடிப்பான். திருமணமாகிய ஒரு வாரத்திற்குள் அவன் சுமதியிடம் கூறியிருந்த 'முன்' அனுபவங்களை கேட்டு பைத்தியமே பிடித்துவிடும் நிலைக்கு வந்துவிட்டாள் சுமதி. இவனுடன் எப்படி காலம் போகப் போகிறதோ என்று கூட தோன்றியது.
தொடர் வண்டி பயணத்தின் போதும் கூட இளம் வயது மற்றும் திருமணமாகிய ஆகாத பெண்களை பார்த்துவிட்டால் பக்கத்தில் சுமதி இருக்கும் நினைவு கூட மறந்து போயி 'ஜொள்ளு' விடுவதை பார்க்கவே சகிக்காது சுமதிக்கு. தனது அக்காவின் தாம்பத்தியத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தனது பெற்றோர் பட்ட அவஸ்தையை நினைத்தாலே சுமதிக்கு கண்களில் ரத்தம் வர ஆரம்பிக்கும் அளவிற்கு வேதனைகள். தம்பியை படிக்க வைக்கவும் தனக்கு திருமணச் செலவுகளை செய்வதற்கும் தன் பெற்றோர் பட்ட கஷ்டம் அவள் நினைவிலிருந்து விலகவில்லை, வரதட்சிணையொன்றும் வாங்காமல் நகைகள் அதிகம் எதிர்பார்க்காமல் பெரிய நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் இருக்கும் கோபால் தங்களுக்கு மாப்பிள்ளையாக கிடைத்தது பாக்கியம் என்று தன் பெற்றோரும் உறவினர்களும் அதிசயித்து கொண்டிருக்கும் நிலையில் கோப்பாலைப்பற்றிய இந்த உண்மைகளை யாரிடம் சொல்ல முடியும் என்று நினைத்து ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.
தொடர்வண்டி கல்கத்தாவை சென்று சேர இன்னும் ஒருமணிநேரம் இருந்தது, கோபால் உட்பட எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்தனர், எண்ணச்சுமைகள் அவளது இமைகளை மூடவிடாமல் தடுத்தது, மூன்று அடுக்குகளில் மேலே கோப்பாலும் கீழே சுமதியும் இடையே ஒரு நடுத்தரவயது பெண்ணும் படுத்திருந்தனர், இரவு மணி ஒன்றை கடந்துகொண்டிருந்த சமயம், 'தடால்' என்ற பேரிடி சப்தம். கண் விழித்துப் பார்த்தபோது தொடர்வண்டியின் இருக்கையிலிருந்து எங்கோ ஒரு மூலையில் அவள் கிடப்பது தெரிந்தது, ஒரே இருட்டு, சிலரின் அழுகைக்குரல்.
மருத்துவமனையில் இரண்டு கால்களிலும் கைகளிலும் பலத்த கட்டுகளுடன் படுக்கையில் கிடந்த போது அங்குமிங்கும் நடமாடிய ஒன்றிரண்டு செவிலியர்களை காண முடிந்தது, ஒருவரும் அவளருகில் வரவில்லை, கோப்பால் எங்கேயென்று யாரிடம் கேட்பது, கை கால்களை அசைக்க முடியவில்லை, எல்லோரும் வங்காளம் பேசுகிறார்கள் சிலர் ஹிந்தி பேசுகிறார்கள், அடுத்தநாள் அங்கு வந்த மருத்துவரிடம் ஆங்கிலத்தில் தனது கணவர் கோபாலின் பெயரைச் சொல்லி அவர் எங்கு இருக்கிறார் என்று விசாரித்தபோது உயிருடன் இருப்பவர்களில் யாரும் கோபால் என்ற பெயர் சொல்லவில்லை என்று கூறினார். தன் கால் கைகளை அசைக்க இயலாததைபற்றி கேட்டாள், கைகளில் பலத்த எலும்பு முறிவிற்கு கட்டு போடபட்டிருப்பதையும் கால்களிரண்டையும் அகற்றவேண்டியிருந்தது என்றும் மருத்துவர் தெரிவித்தார்.
திருமண வாழ்க்கையுடன் தன் வாழ்க்கையும் அத்தனை எளிதில் முடிவிற்கு வந்துவிடுமென்று சுமதியும் மற்றவர்களும் எதிர்பார்க்கவில்லை. பாக் டு பெவிலியன் [Back to Pavillion}.

செம்மொழி உலகத் தமிழ் மாநாடு

உலகத் தமிழ் மாநாட்டின் புதிய பொலிவு செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது, இன்னொரு புதுப் பொலிவு கலைஞரின் ஆட்ச்சியில் நடக்கும் செம்மொழி உலகத் தமிழ் மாநாடு, மாநாடு துவங்க இன்னும் ஒரு தினமே இருக்கின்ற நிலையில் தமிழின் இனிமையை சிறிதேனும் சுவைத்துப் பழகியதால் அதை பற்றி எழுதுவது தவறல்ல என்றே என் கருத்தை இங்கு பதிவு செய்ய நினைத்தேன், பலவித எதிர் வாதங்களும், குதர்க்க பேச்சுகளுக்கிடையே நடைபெறவிருக்கும் உலகசெந்தமிழ் மாநாட்டைப் பற்றி நினைக்கின்ற போழ்து எனக்கு சிறிய கதை ஒன்று நினைவிற்கு வந்தது, இந்த கதை நடக்கவிருக்கும் மாநாட்டை குறித்து மட்டுமில்லாது பொதுவாகவே சிலர் கூச்சலிடுகின்ற போது என் மனக்கண் முன் தோன்றி என்னை உள்ளூர சிரிக்க வைக்கும் ஒரு கதை, பீடிகை வேண்டாம் விஷயத்திற்கு வா என்று இதை படிக்கின்றவர் நினைப்பது எனக்குத் தெரியும்,
ஒரு சிறிய கிராமத்தில் வயது முதிர்ந்த கிழவர் இருந்தார் அவருக்கு பிள்ளைகுட்டிகள் நிறைய உண்டு, அந்த கிழவர்தான் அந்த கிராமத்திலேயே சுமாராக படித்தவர் என்பதால் பல விஷயங்களுக்கு அவரை நாடி வருபவர்கள் நிறைய உண்டு, அவர் கூற்றுப்படி செய்வது மிகவும் சரியாக நிறைவேறி விடுவதால் அக்கம்பக்கத்து கிராமங்களிலிருந்தும் ஆட்கள் பல வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டு வந்து கொண்டிருந்தனர், அந்த கிழவருக்கு வயது மிகுதியின் காரணமாக உடலில் அடிக்கடி சோர்வு ஏற்பட்டு வந்தது, இதனால் வருவோர் போவோரை உபசரிப்பதற்கு, அவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லுவதற்கு தனது வாரிசுகளில் சிலரை நியமித்து வருவோர் போவோரது பிரச்சினைகளை கேட்டறிந்து கிழவரிடம் ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி தீர்வுகளை பேசி அறிந்து பின்னர் அவரவர்களுக்கு தெரிவிப்பது தொடர்ந்தது,
இந்நிலையில் கிழவனாரின் பேத்தி ஒருத்தி பட்டினத்திற்க்குச் சென்று பாரட்லா படித்துவிட்டு வந்திருந்தாள், தனது தாத்தாவையொத்த அறிவும் ஆற்றலும் அவளுக்கு இயற்கையாகவே இருந்ததை கவனித்த கிழவர் தன்னை தேடி வரும் கூட்டத்தை தனது பேத்தியிடம் சென்று விசாரிக்கச் சொல்லி சிபாரிசு செய்துவந்தார், அதே போல கூட்டமும் நாளுக்கு நாள் பெருகி பேத்தியிடம் சென்று தங்களது பிரச்சினைகளுக்கும் மற்ற காரியங்களுக்கும் ஏற்ற தீர்வை கேட்டறிந்து வந்தனர், கிழவருக்குப் பின் வேறு யாரிடம் செல்வது என்று நினைத்திருந்த பலருக்கும் பேத்தியின் வருகை மிகவும் நிம்மதியை கொடுத்தது.

இதனிடையில் அந்த ஊரில் நாட்டாமை ஒருவர் இருந்தார் அவருக்கு கிழவரின் மீதிருந்த வெஞ்சினம், கிழவன் செத்தொழிந்துவிடுவான் என்று பொறுத்திருந்த நிலையில் பேத்தியின் வருகையும் அங்கு கூடும் மக்களின் கூட்டமும் கண்டு எப்படியாவது இந்நிலையை மாற்றியாக வேண்டும் என்கின்ற வெறி நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. பேத்திக்கு மிகவும் நல்லது செய்வது போல வெளிநாட்டிலிருந்து வசதியான படித்த மாப்பிள்ளையை தேர்வு செய்து கிழவரின் பேத்திக்கு திருமணம் செய்துவிட்டால் பேத்தி திருமணம் முடிந்தவுடன் கணவருடன் வெளிநாடு சென்று விடுவாள், கிழவரும் முதிர்ச்சியின் காரணமாக பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வது இயலாமல் மக்கள் வருகை அத்துடன் முடிந்து போகும் என்று நினைத்து அதன் படி செயல்பட்டான்,
கிழவருக்கு எதிரானவர்களின் கூட்டத்தை கூட்டி தனது திட்டத்தை கூறி அதன்படி கிழவரின் பேத்திக்கு திருமணம் முடிவானது, திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்த சமயம், வியாதியுடன் வாழ்ந்து வந்த நாட்டாமையின் மகள் திடீரென்று உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சேர்க்கபட்டாள், உயிருக்கு போராடிய நிலையில் நாட்டாமையின் மகள் இருந்தபோது ஊரெங்கும் வண்ணவிளக்குகளும் அலங்காரங்களும் நாதஸ்வர இசையும் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது, இதைக் கண்ட நாட்டாமைக்கு கோபம் கட்டுக்கடங்காமல், ஊரிலிருந்த பெரியவர்களை கூடி வரச் செய்து, தனது மகள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் ஊரில் கச்சேரி, பாட்டு, மேள தாள முழக்கம் என்று மூன்று நாள் வைபவம் நடைபெறுவதை தடை விதித்தார்.
கிழவரையும் அவரது பேத்தியையும் ஆதரித்தவர்கள் 'இதென்ன கொடுமை இவர் தானே மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடக்க காரணமானவர், தற்போது தனது மகளுக்கு திடீரென்று உடல் நிலை மோசமாகியதால் கிழவரின் பேத்திக்கு தடபுடலாக ஏதும் செய்யக் கூடாது என்று தடை விதிக்கிறாரே ' என்று கூறி எரிச்சலடைந்தனர், நாட்டாமையின் இத்தகைய நடவடிக்கை அவரது சுயநலத்தை காட்டியது. அப்போது திருமணம் நடக்கவிருந்த கிழவரின் பேத்தியின் திருமணத்தை ஒத்தி போட இயலாத வகையில் வெளி நாட்டிலிருந்து வந்த மாப்பிள்ளை வீட்டாரும் மாப்பிள்ளையும் அந்த ஊரில் வியாதிப் படுக்கையிலும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த மற்ற இருவரையும் சுட்டிக் காண்பித்து, அவர்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கு ஒரு நியாயம் நாட்டாமையின் மகளுக்கு ஒரு நியாயமா என்று கேட்டு,
ஊரில் ஒரு வீட்டில் மரணமும் துக்கமும் இருந்தாலும் அடுத்த வீட்டில் வசிக்கும் வேறு ஒருவரின் வீட்டில் நிச்சயிக்கப்பட்ட அல்லது வேறு சுப காரியங்களை நடத்தக் கூடாது என்று சொல்வது எப்படி நியாயமாகும் நடைமுறைக்கு ஏற்க்க முடியாத சுயநலம் என்று சொல்லிவிட்டு திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் திருமணத்தை முடிக்காமலேயே திரும்ப தங்களது நாட்டிற்குச் சென்றுவிட்டனர்.
நாட்டில் பல தேவைகளும் பிரச்சினைகளும் இருந்து கொண்டேதான் இருக்கும் அதற்காக நடக்கவேண்டிய காரியங்களை 'இது தேவையா, இது அவசியமற்றது, இது இந்த சமயத்தில் தேவையா, ஒத்தி போட வேண்டும் என்பன போன்ற அபிப்பிராயங்கள் எதற்காக எதைக்கொண்டு சொல்லப்படுகிறது என்று கவனித்தால் அப்பட்டமான சுயநலம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி போன்றவற்றின் வெளிப்பாடு என்பது வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது.
உலகத்தமிழ் மாநாடு சிறப்புற நடந்தேற எமது நல் வாழ்த்துக்கள்.
தேன் வந்து பாயுது காதினிலே என்று பாரதி சொன்னதுபோன்று தமிழ் தேன் வந்து காதுகளுக்கு மட்டுமில்லாது சிந்தைக்கும், மனதிற்கும், கருத்திற்கும், தமிழார்வத்திற்கும் திகட்டாத தேனாக பாயவிருக்கிறது. தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்புவதை மாநாட்டில் கலந்து கொள்ள இயலாதவர்களும் கண்டு கேட்டு மகிழ்வுருவோம்.
வாழ்க தமிழ் !! வளர்க தமிழ் !! வாழ்க கலைஞர் !! வாழ்க தமிழறிஞர்கள் !!
வியாழன், 17 ஜூன், 2010
காணாமல் போனவர்கள்
பாவம் அந்த பாட்டிக்கு யாருமே இல்லையாம், என்று அங்கு விளையாடிக்கொண்டிருந்த சில குழந்தைகள் சொல்வது விளையாடுவதை வெறித்துப் பார்த்துகொண்டிருந்த ராஜம்மாவின் காதில் கேட்டது, அந்த குழந்தைகளைப்பார்த்து ஒரு வெற்றுச் சிரிப்பை சிரித்துவிட்டு தான் தனிமையாக்கப்பட்ட சம்பவங்களைப பற்றி யோசிக்க ஆரம்பித்தார் ஐம்பத்து மூன்று வயது நிரம்பிய ராஜம்மா.
ஒரே மகள் என்ற பெருமையுடன் பிறந்தாலும் பிறந்த இடம் குப்பைத்தொட்டி என்னும்போது அதில் பெருமைபட்டுக் கொள்வதற்க்கு என்ன இருந்துவிடப் போகிறது, அதுபோலத்தான் ராஜம்மாவின் வாழ்க்கையும் வறுமையுடனும் போராட்டங்களிலும் துவங்கியது, முடிந்த வரை படித்துவிட்ட பெருமை ராஜம்மாவிற்க்கு எப்போதும் மன நிறைவை தந்தாலும் படித்த படிப்பைக்கொண்டு எதையும் சாதிக்க இயலாமல் போனது அவரது துரதிஷ்டத்தின் சான்று என்று அவர் மனம் எப்போதும் குறைபட்டுக்கொள்ளும்.
ராஜம்மாவை திருமணம் செய்தவர் பணக்காரராக இல்லாவிட்டாலும் பரம ஏழையும் கிடையாது என்பதால் வறுமை திருமணத்திற்க்குப்பின் செத்துப்போனது. தான் வாழ்ந்த வாழ்க்கையின் சான்றாக ஒரு மகளும் ஒரு மகனும் வாரிசுகள் ஏற்பட்டன, இருவரையும் நன்றாக படிக்கவைத்த பின்னர், நல்ல வேலையும் கை நிறைய சம்பளமும் கிடைத்த போது இறக்கை முளைத்த பறவைகள் கூட்டைவிட்டு பறந்து போவது போல இருவரும் ஆளுக்கொரு திசையில் சென்றுவிட அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் சந்தர்ப்பத்தைகூட பெற்றோருக்கு கொடுக்காமல், எப்போதாவது அவர்கள் நினைவிற்கு வரும் போது போன் செய்வதுடன் மகள் மகனின் உறவு விலகிப்போனது.
ராஜம்மாவின் பெற்றோர்களின் உறவுக்காரர்களில் சிலரும் ராஜம்மாவின் கணவனின் உறவினர்களும் எப்போதாவது வந்து போவதுண்டு, அப்படி வந்து போனாலும் அவசர கடன்தொகை கேட்டுதான் பெரும்பாலும் ராஜம்மாவின் வீட்டிற்கு வந்தனர், அப்படி அவர்கள் பண உதவி கேட்டு வரும்போது தங்களது கையிலிருக்கும் பணத்திலிருந்து தங்களால் முடிந்த தொகையை கொடுத்து உதவியதும் உண்டு, ஏதோ பணம் வர வேண்டியது இருப்பதாகவும் அந்த பணம் கைக்கு வந்தவுடன் ராஜம்மாவிடமிருந்து வாங்கிய கடனை உடனே திருப்பிக்கொடுத்து விடுவதாக சொல்லிவிட்டு போகும் உறவினர்கள் மறுபடியும் ராஜம்மாவின் வீட்டிற்கு வருவதே கிடையாது. இப்படி பல உறவினர்களின் தொடர்பு முற்றிலுமாக விடுபட்டுப் போனது, இன்னும் சில உறவினர்களுக்கு கடன் கேட்டவுடன் உதவி செய்ய இயலாமல் போனதால் முற்றிலுமாக போக்குவரத்து நின்று போனது.
பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உறவுகளும் உறவினர்களும் காணாமல் போவது வாடிக்கையான வினோதம்.
ராஜம்மாவின் கணவருக்கு உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றபின் சொந்த வீடும் ஓய்வூதிய தொகையும் சிறிது காலம் உதவியது, சில ஆண்டுகளில் ராஜம்மாவின் கணவனும் காலமாகிவிட கணவனின் ஓய்வூதிய தொகையும் சொந்த வீடும் ராஜம்மாவின் வாழ்வின் ஆதாரமாகியது. தற்போது ராஜம்மா என்ற பெயர் மறைந்து அனாதைக் கிழவி என்ற பெயருடன் வாழ்ந்து வரும் ராஜம்மா இறந்த பின்னர் அநாதை பிணம் என்று தன்னை மற்றவர்கள் சொல்ல போவதை எண்ணி ஆச்சரியமோ வருத்தமோ அடைவதில்லை, அதுவும் வாழ்வில் பழகிக்கொள்ள வேண்டிய ஒன்று என்ற நிலை.

செவ்வாய், 15 ஜூன், 2010
சுவாரசியம்
அந்த பங்களாவின் தோற்றத்தைப் பார்க்கும் போதே மிகப் பழமையானது என்பது தெரியும், சுரேஷுக்கு கருத்து தெரியும் வயதிலிருந்தே தங்கள் சொந்த ஊரான அல்லிக்குளத்திற்க்கு எபோதாவது பள்ளி விடுமுறைக்கு தனது தாய் கமலாவுடன் வந்தது நினைவில் இருந்தது, சிறுவனாக இருந்த போது தனது தாய் கமலாவால் சொல்லப்பட்ட அவர்களது பூர்வீகத்தைப் பற்றிய கதைகள் மிகவும் சுவாரசியமானதாக இருந்ததுண்டு.
ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளை கடந்து அந்த பங்களா இன்னும் நின்று கொண்டிருப்பதற்கு மிகவும் முக்கிய காரணம் அந்த வீட்டில் வாழ்ந்த தலை முறையினர் பங்களாவை தங்களது மிக முக்கிய சொத்தாக பாவித்து பாதுகாக்கும் நோக்கில் பராமரித்து வந்ததுதான். ஆனால் சுரேஷின் முந்தைய தலை முறையினர் பலரும் மேற் படிப்பு பணி நிமித்தமாக தங்களது குடியிருப்பை மாற்றிக் கொண்டு சென்று விட்டதால் அந்த பங்களாவை பராமரிப்பதற்க்கென்று வேலையாட்களை நியமித்தனர், விசுவாசமான வேலையாட்களின் மறைவிற்குப் பின் பங்களா தன் பொலிவை இழக்க ஆரம்பித்தது.
போதிய கட்டுமான அறிவியல் வளர்ந்திராத காலத்தின் பெருமையை அந்த பங்களா பறை சாற்றிக்கொண்டிருந்தது, சுரேஷின் தாய் சொன்ன பல தகவல்களும் சிறப்பும் இன்னும் குறையாமல் பாதுகாப்பையும் பராமரிப்பையும் எதிர்பார்த்து காத்திருப்பதாகவே சுரேஷுக்குத் தோன்றியது. சுரேஷ் அந்த பரம்பரையின் கடைசி தலைமுறையைச் சார்ந்தவன், வயது இருபத்து இரண்டு , பட்டினத்தில் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு முடிந்து கோடை விடுமுறைக்காக தன் சொந்த ஊருக்கு தாய் கமலாவால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தான்.
சுரேஷ் அங்கு வந்த போது அந்த பங்களாவை தற்போது பராமரித்துக் கொண்டிருந்த சின்னையன் அந்த பங்களாவிலேயே தங்கி இருந்தான், சுரேஷின் வருகையை முன்னரே அறிந்திருந்ததால் அவனது சாப்பாட்டையும் அவனே தயாரித்து வந்தான், அந்த பங்களாவிற்கு ஏற்கனவே சுரேஷ் பல முறை வந்திருந்தாலும் அதிலிருக்கும் ஏராளமான மிகப்பெரிய அறைகளையும் இன்னும் கிடக்கும் மிகப்பழைய பொருட்கள் ஓலைச் சுவடிகள் பல தட்டு முட்டு சாமான்கள் எல்லாவற்றையும் பார்த்ததில்லை, பல அறைகளை திறப்பதே இல்லை.
அன்று மதியம் சாப்பிட்டுவிட்டு கட்டிலில் படுத்திருந்த சுரேஷிற்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது, இதுவரையில் தான் பார்த்திராத ஒவ்வொரு அறையையும் அதில் கிடக்கும் பல புத்தகங்கள் சாமான்கள் ஒவ்வொன்றையும் பார்க்க வேண்டும், சின்னையனின் துணையுடன் சில அறைகளை பார்த்தான், இன்னும் இருக்கும் ஏராளமான அறைகளையும் அதை பற்றிய தகவல்களையும் அறியும் ஆவல் கொண்டு கைப்பேசியில் தன் தாய் கமலாவிடம் அங்குள்ள அறைகளைப்பற்றி கேட்டான், அவன் தாய் கமலா சொன்ன ஒவ்வொரு அறையைப்பற்றிய சிறிய விளக்கமும் சுரேஷிற்கு மிகவும் வியப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.
குறிப்பிட்ட ஓர் அறையைப்பற்றி சொல்லி அதை திறக்க வேண்டாம் என்று கூறியதும் சுரேஷின் மனதில் ஆவல், எதற்காக அந்த அறையை திறக்க கூடாது என்று விடாப்பிடியாக அவனது தாயை நச்சரித்தான் சுரேஷ். சின்னையனுக்கு ஒவ்வொரு அறையையும் சுத்தம் செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றிருந்ததால் அந்த குறிப்பிட்ட அறையை திறக்கும் போது சின்னையன் சுரேஷுடன் இருக்கவில்லை.
அந்த பெரிய அறையின் கதவு பழங்கால பர்மா தேக்கு மரத்தால் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது, எல்லா அறைகளின் கதவுகளும் மரச்சாமான்களும் பர்மா தேக்கு மரத்தால் மிக அழகாக செய்யப்பட்டதுதான், ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு விதமாக கலை நயத்துடன் உருவாக்கப்பட்டிருந்தது. மரத்தால் செய்யப்பட்டிருந்த ஷேல்ப்புகளில் வைக்கப்பட்டிருந்த சில புத்தகங்கள், அந்த புத்தகங்களை கையில் எடுக்காமலேயே அதன் பெயரை மட்டும் படித்துவிட்டு கூரையிலிருந்த மச்சுப் பகுதியில் வைத்திருந்த ஓலைச்சுவடிகளையும் வேறு சில புத்தகங்களையும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிறிய மர ஏணியின் மீது ஏறி ஒவ்வொன்றாக எடுத்து சில வரிகளை மட்டும் படித்துவிட்டு அங்கே வைத்துவிட்டு, சுவாரசியமாக தோன்றிய பல பக்கங்கள் செல்லரித்துப் பழுப்பேறியிருந்த சில பழைய புத்தகங்களை எடுத்துக் கொண்டு அறைக்கதவை பூட்டி சாவிக்கொத்தை அலமாரியில் வைத்துவிட்டு தனது அறைக்கு வந்து கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டு படிக்க ஆரம்பித்தான் சுரேஷ்.
மிகவும் சுவாரசியமான புத்தகம் இதுவரையில் கதைகளிலும் திரைப்படங்களில் மட்டுமே பார்த்து கேட்டு வந்த கூடுவிட்டு செல்லுதல், தன் உடலைவிட்டு ஆவியில் நடமாடுவது, கட்டிலின் மீது படுத்து அந்த புத்தகத்தில் வரிசையாக குறிப்பிடப்பட்டிருந்த செய்முறை விளக்கத்தின் படி ஒவ்வொன்றாய் செய்ய ஆரம்பித்தான் சுரேஷ், ஆச்சரியமாகவும் சுவாரசியம் மிகுந்துமிருந்த அந்நிலை தன் உடலை தானே சற்று மேலே மிதந்து கொண்டு பார்க்கும் போது சந்தோஷத்தின் எல்லைக்கு அளவே இல்லாமல் மேலே மேலே பறக்க, திடீரென்று தன் உடன் படிக்கும் நண்பன் தினேஷின் வீட்டிற்கு சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது, தினேஷ் அப்போது அவனது வீட்டில் இல்லை அவனது அம்மா தொலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள், தினேஷின் தங்கை கைபேசியில் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டு இருந்தாள், நேரம் செல்ல செல்ல ஏதோ இனம் புரியாத அச்சம் தோன்ற ஆரம்பித்தது தன் சொந்த கிராமம் அல்லிக்குளத்திற்க்கு விரைந்தான்,
அங்கே அறையில் அவனது உடல் கட்டிலில் அதன் அருகே இருந்த பழைய புத்தகம் தனது உடலுடன் தன்னை மறுபடியும் இணைக்க என்ன செய்யவேண்டும், பக்கங்களைப்புரட்ட சில பக்கங்களை காணவில்லை, ஐயோ எனது உடலில் நான் இப்போது நுழைந்தாக வேண்டுமே இல்லையென்றால் நிரந்தரமாக என்னுடலை விட்டு பிரிய வேண்டியதாகிவிடுமே, என்ன செய்வதென்றே விளங்காமல் புத்தகத்தை கண்டெடுத்த அறையின் சாவியை எடுத்து பூட்டை திறந்து மறுபடியும் மச்சுவில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களுக்கிடையில் விடுபட்டுப் போன பக்கங்கள் கிடைத்துவிட வேண்டுமே என்கிற அவசரத்தில் தேட
விடுபட்ட பக்கங்களை பூச்சிகள் தின்றிருக்குமா அல்லது தொலைந்து போயிருக்குமா அந்த பக்கங்கள் கிடைக்கவே இல்லை, அடுத்தநாள் சின்னையனின் தகவல் கேட்டு அங்கு வந்த அவன் தாய் கமலம் ஓவென்று அழும் குரல், வெளியில் சென்று தன்னுடலையும் அழும் தாயையும் பார்க்க இயலாமல் அந்த அறைக்குள்ளேயே முடங்கியது சுரேஷின் ஆன்மா.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)