
ஒரு முறை வளைகுடா நாட்டிலிருந்து சென்னை வருவதற்கு தலையை சுத்தி மூக்கை தொடுவது போல மஸ்கட்டிலிருந்து air lanka மூலம் ஸ்ரீலங்கா வந்து அங்கிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு வந்தேன் எனது இரண்டு குழந்தைகளுடன், குழந்தைகள் இருவருக்கும் அப்போது வயது 8, 4,.
மஸ்கட்டிலிருந்து ஸ்ரீலங்கா போகும் விமானத்தில் ஏறிய சில நிமிடங்களில் விமான பணிப்பெண் ஒரு tray யில் நிறைய கண்ணாடி குவளைகளை கொண்டுவந்தார், நான் பழ ரசம் என்று நினைத்து வாங்கி அருந்திவிட்டேன், திரும்பவும் பழரசம் நிரம்பிய குவளைகளை கொண்டு வந்தார் திரும்பவும் வாங்கி குடித்துவிட்டேன் இதற்க்கு காரணம் விமானத்திற்கு போக வேண்டும் என்ற பரபரப்பில் ஒன்றுமே சாப்பிடாமல் கிளம்பியது தான், குழந்தைகள் இருவரும் இரவு 11 மணிக்கு விமானம் என்பதால் விமானத்தில் ஏறியவுடன் உறங்கி விட்டனர்.

அடுத்தநாள் காலை ஸ்ரீலங்காவில் விமானம் வந்திறங்கிய போதுதான் கண்களை விழித்தேன், பிறகுதான் தெரிய வந்தது அவர்கள் விமானத்தில் கொடுத்தது white wine என்று. Air Lanka விமானத்தில் இப்படி மது வகைகளை பரிமாருவதுதான் வழக்கமாம், பின்னர் தெரிய வந்தது, நான் அதிகமும் air India அல்லது gulf air விமானத்தில் தான் பயணித்துள்ளேன், airlankaa வில் இனி பயணமே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக