
சார்ட்ல்டன் ஹெஸ்டன் என்பவர் சினிமாவில் ஒரு சகாப்தத்தை உருவாக்கிய சிறந்த நடிகர், காலம் சென்ற ஹாலிவுட் நடிகர் பற்றி எனக்கு திடீரென்று எழுத விருப்பம் தோன்றியது, நான் முதன் முதலாக பார்த்த ஆங்கிலதிரைபடம் இரண்டு, 'Ten Commandments', 'Ben Hur', இரண்டையுமே மவுன்ட் ரோட்டில் அப்போது ஆனந்த் தியேட்டர் என்ற திரையரங்கம் ஒன்று இருந்தது, அதற்க்கு என் பெரியப்பா [என் அப்பாவின் அண்ணன்] அழைத்து சென்றார்.
எனக்கு அப்போது பதிமூன்று வயதிருக்கும் என்று நினைக்கிறேன். பசுமரத்தாணியாக மனதிலும் நினைவிலும் பதிந்த காட்சிகளும் நடிப்பும் ஒப்பனையும் எனக்கு இன்றும் நினைவிலிருந்து நீங்காமலேயே இருக்கிறது.
இரண்டு திரைப்படங்களுமே பிரமாண்டமானது, பைபிள் கதையை கருவாக கொண்டு வெளிவந்த நாவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அற்புத திரைப்படங்கள்.
திருமணத்திற்கு முன் என் அப்பாவும் என் பெரியப்பாவும் ஒன்றாக சேர்ந்து நண்பர்களுடன், அப்போதெல்லாம் மதராசில் ராக்சி, காசினோ இரண்டில் திரைக்கு வரும் திரைப்படங்கள் ஒன்றையும் விட்டு வைப்பதில்லையாம், காசினோவில் அதிக பட்ச ஆங்கில திரைப்படங்களை பார்ப்பது அவர்கள் வழக்கம்,
1923ஆம் ஆண்டு ஊமைபடமாக, கருப்பு வெள்ளை படமாக திரைக்கு வந்த இந்த திரைப்படம் அதே இயக்குனரும் அதே நடிகரும் 1956ஆம் ஆண்டு மீண்டும் பேசும் கலர் திரைப்படமாக தயாரித்து வெளியிட்டனர், இரண்டு திரைப்படங்களிலும் சார்ல்டன் ஹெஸ்டன் தான் கதாநாயகன், அந்த இரு திரைப்படங்களில் அவர் ஏற்படுத்திய ரெகார்டை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

சார்ல்டன் ஹெஸ்டன் முதலில் இளமையின் தோற்றம் அப்போது எகிப்திய இளவரசன் வேடம், அதற்கேற்ற நடிப்பு, பின்னர் முதுமை அப்போது யூதகுல வேடம் வேறு வித நடிப்பு, மிகவும் இயல்பானதாகவும் பொருந்தினதாகவும் இருந்ததை மறக்க முடியவில்லை. இவரது அசாத்திய நடிப்புத் திறமைக்கு மிக முக்கிய காரணம் திரையில் நடிப்பதற்கு முன்பே நாடக உலகத்தில் ஏராளமான நாடகங்களில் நடித்து நடிப்பின் நுணுக்கங்களை நன்கு அறிந்திருந்தார். இன்றும் திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டுவதாக உள்ள இந்த திரைப்படங்கள், Ben Hur வாங்கி குவித்த ஆஸ்கார் விருதுகள் பதினொன்று. Ten Commandments வசூலித்த தொகை ரெகார்ட் பிரேக்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக