பத்து மாதச் சிறை வாழ்க்கை
பழகியதால் சிறு குழந்தை
ஓயாமல் அழுகிறதோ
வெளிச்சம் காண
சிறையிருப்பின் சுகம் கண்ட
சிசுவைப்போல வேறெதுவும்
அழுவதில்லை பிறக்கும் போது
பிறேப்பென்ற வேலை
இப்போ முடிந்து போச்சே
அடுத்து என்ன
நடக்க போகுதென்று
பயம்தானோ சிசுவிற்கு
கண்ணீரில்லா அழுகை
பிறந்தவுடன் அழுதால்
குழந்தைக்கு நலமென்று
சிலர் சொன்னார்
அழாதக் குழந்தைக்கு
ஊசிப்போல் சுரீரென்று
கிள்ளும் தந்தார்
சிசுவிற்க்கோ
மாறாக்கோபம்
கிள்ளிவிட்டு அழவைத்து
எல்லோரும் இனிப்புத்தின்று
சிரித்து வைத்தார்
பகலெலாம் கண்ணை
கூசுகின்ற சூரியனும்
இரவினிலே மின்சாரச்சூரியனும்
தெருவெல்லாம் கைத்தடியின்
மேல் சூரியனை நட்டு வைத்து
கண்மூடித் தூங்கச் செல்லும்
அறை தோறும் பல்வேறு
நிறங்களிலே மின்சார கைவிளக்கு
போதுமிந்த ஒளிவிளக்கு
வெறுத்துப் போச்சு
பகலெல்லாம் சூரியனின்
அட்டகாசம் இரவினிலோ
மின்சார பரிகாசம்
போதுமிந்த ஒளிவிளக்கு
வெறுத்துப்போனான்
கைப்பிள்ளை
தாய் தந்த பால்சோறும்
பருப்புணவும் உண்ண
மறுத்தான் கைப்பிள்ளை
கருவறையில் கண்ட சுகம்
மறவாப் பிள்ளையவன்
பிடிவாதம் தொடர்ந்திட்டான்
ஒருகையில் கிண்ணச்சோறும்
மறுகை அவனை
இடுப்பில் தாங்கிச்
சோறூட்ட சுமந்தே
திரிந்தாள் பெற்ற அன்னை
இருட்டைக்காட்டி
பூச்சாண்டி பாரு அங்கே
என்று சொல்லி சோற்றுக்
கவளம் வாயுள் திணித்தாள்
கைபிள்ளை நடக்கலானான்
சோறுண்ண மறுத்த அவனை
பூச்சாண்டிக் கதைகள் சொல்லி
கவளச் சோற்றை
வாயுள் அடைப்பாள்
அடம் பிடிக்கும் சிறுவனுக்கு
பூச்சாண்டிக் கதை சொன்னால்
மெய் மறந்து அவன் உண்டான்
கிண்ணச் சோற்றை
அதையறிந்த அவன் தாய்
நாள்தோறும் தொடரலானாள்
பூச்சாண்டிக்கதையதனை
சிறுவனவன் பூச்சாண்டி
யார் என்றான்
இருட்டைக் காட்டி
பூச்சாண்டி திருடனவன்
இருட்டில்தான் இருப்பானென்றாள்
இருட்டை கண்ட சிறுவன்
சொன்னான் நானும்
ஓரு பூச்சாண்டி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக