இரவு பத்து மணிக்கு மேல் பேருந்து கிளம்பும் என்று சொல்லப்பட்டது, இரவு பயணிகள் உறங்கும்போது உபயோகிகின்ற ஐந்து வாட்ஸ் விளக்கு போடப்பட்டிருந்தது, பயணிகள் ஒருவரின் முகத்தையும் காண இயலவில்லை, பேருந்து கிளம்புவதற்கு சில நிமிடங்களே இருந்ததால் அவசரமாக அதில் அமர்ந்துகொண்டு இருக்கையில் நமக்கு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருப்பவர் யார் என்பதை பார்கைகூட முடியவில்லை, இரவு பயணம் என்பதால் எல்லோரும் இருக்கையிலேயே உறங்கிய நிலையில் இருந்தனர், எனக்கு பேருந்து பயணம் முற்றிலும் புதிது, அதிலும் பேருந்தில் ஊர் பிரயாணம் நான் அறிந்திராத ஒன்று. உறக்கத்தை வருந்தி அழைத்தாலும் வருவதாக இல்லை. அங்கேயே குடியிருக்கும் கொசுக்களுக்கு உணவாக ரத்த தானம் கொடுக்கவேண்டிய கட்டாயமிருந்தது. குளிர் சாதனம் பொருத்தப்பட்டிருப்பதாக நம்மிடம் சொல்லி அதிக பணம் வசூல் செய்து விடுவதால் இயற்க்கை தருகின்ற காற்றை உள்ளே நுழைய விடாமல் சன்னல்கள் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன. உள்ளே சுவாசிக்கின்ற காற்றைத்தவிர வேறு காற்று புகுவதற்கு வழி இருக்குமோ என்னவோ தெரியவில்லை.
பேருந்து வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது திடீரென்று பயணிகளில் ஒருவர் 'வண்டிய நிருந்துங்க' என்று சத்தம் போடுகிறார், உறங்கியவர்களில் சிலர் விழித்துக்கொண்டனர், நடத்துனர் வந்தார் 'யாரப்பா அது'... என்று கேட்டுக்கொண்டு 'என் அப்பாவுக்கு நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாரு பையிலிருந்த புட்டியிலிருந்து தண்ணீர் கொடுத்தேன் ஆனால் அவர் மயங்கி விழுந்துவிட்டார்' என்றார். பேருந்து நிறுத்தப்பட்டது, நிறுத்தப்பட்ட இடம் எங்கு என்பது தெரியவில்லை. கடைகளோ ஆள் நடமாட்டமோ அங்கு காணவில்லை. இன்னும் ஒரு மணி நேரம் போனால் ஒரு ஊர் வரும் ஆனால் அங்கு மருத்துவமனைகள் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை என்றார் கூட்டத்தில் ஒருவர். வேறு வழியின்றி பேருந்து பயணம் மீண்டும் தொடர்ந்தது. ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் ஒரு நகரமோ அல்லது மருத்துவமனையோ வரவில்லை என்பதால் பயணம் மீண்டும் தொடர்ந்தபோது ஒரு குறிப்பிட்ட இடத்தை பேருந்து கடந்து கொண்டிருக்க 'இங்கே நிறுத்தினால் தாங்கள் அங்கேயே இறங்கி கொள்வதாக உடல் நலமில்லாதவருடன் வந்தவர் கூற அவ்வாறே பேருந்து நிறுத்தப்பட்டது பேருந்திலிருந்து அவர்கள் அங்கே இறங்கிக்கொண்டனர்.
காலை பொழுது விடிந்து மணி ஆறானது, வெளியில் வெளிச்சம், பேருந்தின் கடைசி நிறுத்தம், இருக்கைகைகளில் சில இருக்கைகள் ஆளில்லாமல் இருந்தது, அதுவரையில் நிம்மதியாக உறங்கிக்கொண்டு வந்த ஒருவர் 'அய்யய்யோ இங்க வச்சிருந்த என் பைய காணோமே' என்று கூவத்தொடங்கினார். அனைவரும் அவரை பார்த்தனர், நடத்துனர் வந்தார், 'என்னப்பா என்ன ஆச்சு' என்றார். 'இங்கேதான் என் பைய வச்சிருந்தேன் பையில என் மகள் கல்யாணத்திற்கு என் வீட்டு பத்திரத்த அடகு வச்சு கடன் வாங்கிய ரொக்கப்பணம் ரெண்டு லட்சம் வச்சிருந்தேன். பையை காணலையே' என்றார் பரிதாபமாக. பக்கத்துல உட்கார்ந்து இருந்தவங்களையும் காணோமே அவங்க என்கிட்டே கடைசி நிருத்தத்துலதான் இறங்க போறோம்ன்னு சொன்னாங்க......' என்றார் பரிதாபமாக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக