வெள்ளி, 8 மே, 2009
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா
என்னிடம் பல வருடங்களுக்கு முன் முருகேசன் என்ற மாணவன் டியூஷன் படித்து வந்தான். அவனுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை, ஆனால் அவனது அம்மாவிற்கு மகனை எப்படியாவது, நாலு வீட்டுல வேலை செய்தாவது படிக்க வைத்து விட ஆசை, படித்து மனப்பாடம் செய்து விட்டு பிறகு பார்க்காமல் எழுதி காண்பிக்க சொன்னால், மிகவும் நேர்த்தியாக எழுதி காண்பிப்பான், " எப்படிடா இவ்வளவு நல்ல படிச்சு எழுதி இருக்கே " என்று கேட்பேன், அவனுடன் படிப்பவன் சொல்லுவான் " அவன் என்னை பார்த்து காப்பி அடிச்சுட்டான் " என்று.
பல ஆண்டுகளுக்குப்பின் அவனை ஒருநாள் எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது, குடும்பஸ்தன் ஆகி இருந்தான், " எப்படி இருக்கே முருகேசா, எங்க வேலை பார்க்கறே " என்றேன்.
" பத்திரிகைக்கு கதை கட்டுரை எழுதி கொடுத்துகிட்டு இருக்கேன் " என்றான், " எப்படியோ நல்லா இருந்தா சரி " என்றேன். " நீ எழுதியது ஏதாவது இருந்தா கொடு படித்து பார்க்கலாம் " என்று சொன்னேன், அவன் கை பையிலிருந்த இரண்டு மூன்று பத்திரிகைகளை கொடுத்து விட்டு " படிச்சுட்டு வேறே எங்கேயோ இதே போல படிச்சு இருக்கோமேன்னு நினைக்காதீங்க " என்றான், " ஏன் அப்படி சொல்ற " என்றேன் நான்.
" உங்களுக்குத்தான் என்னை சின்ன பையனிலிருந்தே தெரியுமே, என்னால பாடத்தை படிச்சு நினைவு வைச்சு எழுத முடியாமல் அடுத்த பையன் எழுதறத பார்த்து தானே எழுதுவேன், இப்பவும் அப்படிதான், யார் யாரோ எழுதறத எல்லாம் கொஞ்சம் எடிட்டிங் செய்து நான் எழுதியதாக பாவ்லா பண்ணிக்கிட்டிருக்கேன், வேறு வழி தெரியல " என்றான் உற்சாகமின்றி.
நான் முருகேசனிடம் சொல்ல நினைத்தேன், ' கதை கட்டுரை திருடுவதோடு நிறுத்திக்கொள், காலபோக்கில் கட்டு கட்டாய் ரூபாய் நோட்டு திருடனாகி, நிரந்தரமான கிரிமினல் ஆகிவிடாதே ' என்று.
கதை கட்டுரை திருடுவது மட்டும் குற்றம் ( crime) இல்லையா என்ன ? திருடுவது எதாக இருந்தாலும் திருட்டு திருட்டுதானே ??? குற்றம் குற்றம் தானே ??? இதெல்லாம் ஒரு பொழப்பு.........கை கால் நல்லாதானே இருக்கு கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தறது இல்லன்னா பிச்சை எடுக்கறது........ அதுவும் இல்லன்னா நாண்டுகிட்டு செத்து தொலையறது ............ மத்தவங்களோட கற்ப்பனையை திருடி பணம்சம்பாதிக்கறதும் ஒரு பொழப்பா.....
சிக்குன்குன்யா.......பன்றி காய்ச்சல்
இரண்டு வருடங்களுக்கு முன்பு சிக்குன்குன்யா என்று ஒரு காய்ச்சல் திடீரென்று செய்திகளில் ' ஹீரோ ' வாக இருந்தது. சிக்குன்குன்யாவை பற்றி பேசாதவர் இருந்திருக்க முடியாது அந்த அளவிற்கு அதன் உக்கிரம் தாண்டவமாடியது.
இப்போது " swine flue " என்ற பன்றிக்காயச்சல்.
மேற்சொன்ன இரண்டுக்கும் ஒரு வித்தியாசம், சிக்குன்குன்யா என்பது கொசு கடியினால் ஏற்ப்பட்டது என்றது செய்திகள். பன்றி காய்ச்சலோ ஒருவித வைரசினால் பரவுவதாக சொல்லப்படுகிறது.
பன்றி காய்ச்சல் பன்றிகளின் மூலம் பரவுவது கிடையாது என்பது உறுதி என கூறப்படுகிறது.
பறவை காய்ச்சல் பரவிய போது பறவைகளை கொன்று குவித்தது போல, இந்த முறை பன்றிகளை கொன்று குவிக்க கூடும்.
தென் இந்திய உணவு வகைகளில் எதையுமே குறைந்த பட்சம் பத்திலிருந்து பதினைந்து நிமிடமாவது வேக வைப்பது என்பது தான் சமையல் முறையே. இதனால் காய்களில் இருக்கும் விட்டமின்கள் ஆவியாகி விடுவதாக கூறும் அறிவியலை நாம் படித்து கொண்டு தான் இருக்கிறோம், ஆனால் எத்தனை சதவிகிதம் பேர் அரை வேக்காட்டில் காய்களை சமைத்து சாப்பிடுகின்றனர் ?
மாமிச வகைகள் என்றால் நிச்சயம் நன்றாக வேக வைத்தால் மட்டுமே மென்று சாப்பிட வசதி, மட்டும்மில்லாது, நன்றாக வேக வைப்பது நமது பழக்கமும் கூட. இதனால் 99.9% கிருமிகள் அழிக்கப்பட்டு விடுவது உண்மை. இதனால் பலவித நோய்களில் இருந்து நாம் தப்பித்து கொள்கிறோம் என்பதும் உண்மை.
நன்றாக வேகவைத்து ( பன்றியை ) சாப்பிட்டால் பன்றி காய்ச்சல் வரவே வாய்ப்பு இல்லையாம்.
பன்றி சாப்பிடாதவர்களுக்கு வேக வைப்பதில் பிரச்சினை இல்லை என்றாலும், தொற்றிலிருந்து காப்பாற்றி கொள்வது எப்படி என்பதை கட்டாயம் தெரிந்து கொள்வது அவசியம்.
நமது ஊரில் உள்ள ஒரு கெட்ட பழக்கம், உணவு சாப்பிடுவது கையால், பல காரியங்களுக்கு பயன் படுத்திய கையை சோப்பு போட்டு நன்றாக கழுவி விட்டு சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருப்பதே இல்லை, அதிலும் ஹோடேலில் சாப்பிடுவதென்றால் பலருக்கும் கையை சுத்தம் செய்யும் பழக்கமே இருப்பது இல்லை. இதில் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடே இருப்பதில்லை என்று சொல்லலாம்.
காலணிகள் அணிந்து நடக்கும் பழக்கம் என்பது நாகரீகம் என நினைத்தாவது காலணிகள் அணிந்து நடப்பது ஒரு விதத்தில் சுகாதாரமானதே. ஆனால், வீட்டுக்குள்ளும் அதே காலணியை பயன் படுத்துவதை என்னவென்று சொல்லுவது ? வீட்டிற்கு வரும் சில விருந்தாளிகள் அல்லது தெரிந்தவர்கள் காலணிகளை வீட்டிற்கு வெளியே விட்டுவிட்டு வரும் பழக்கம் இல்லாதவர்கள் வீட்டிற்குள் வரும் போது அருவருப்பு ஏற்ப்படுவதுடன் , அவர்களிடம் எப்படி இதைப்பற்றி சொல்வது என்ற குழப்பம் வேறு. இதை தான் தர்மசங்கடம் என்பார்கள்.
காலணியை அணிந்து நடப்பதால் கால் மிக சுத்தமாக இருக்கிறது என்று நாம் நினைத்து கொண்டாலும், வீட்டிற்கு வந்த பின் கால்களை சோப்பு போட்டு நன்றாக சுத்தம் செய்த பின்னர் படுக்கையின் மீது கால்களை வைப்பது, [ சிலர் சிறிய குழந்தைகளை காலின் மீது உட்கார வைத்து கொண்டு விளையாடுவார்கள் ], போன்றவற்றை செய்வதினால் நீங்கள் உங்கள் கால் மூலம் சுமந்து செல்லும் கிருமிகளை வீட்டிலும் பரப்பாமல், முக்கியமாக சிறிய குழந்தைகளுக்கு, ஓரளவு தொற்று வியாதிகளில் இருந்து காப்பாற்றி கொள்ள முடியும்.
சிகுன்குன்யா கொசுவானாலும், பன்றிக்க்காயச்சலை உருவாக்கும் வைரசாக இருந்தாலும், அதன் வரலாற்றை பார்த்தால், ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் மக்களை தாக்கி, கொன்று இருப்பது தெரிய வருகிறது. ஆனால் ஏனோ இவற்றிக்குஇன்னும் மருந்து கண்டு பிடிக்க படாமல் இருப்பது, துரதிஷ்டவசமானது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளும் சமூக விரோதிகள், சில படித்த விஷமிகள், அதாவது பயோ- டெக்னாலஜி கல்வியை தீவிரமாக படித்தவர்கள் , இது போன்ற மக்களை கொல்லும், கொசுக்களை, வைரஸ்களை உருவாக்கி அவற்றை குறிப்பிட்ட ஊர்களில் பரவ விடுவதன் மூலம், ஒரு வெடி குண்டை போட்டால் எத்தனை பேர் செத்து மடிவார்களோ அதில் ஒரு பகுதியையாவது அழிக்க முடியும் என்ற குறிக்கோளில் தங்களது ஆற்றலை தவறாக பயன் படுத்தி, நாச வேலையை ஏன் செய்ய கூடாது என்பது எனது யூகம்.
இப்படிப்பட்டவர்களை கண்டு பிடிப்பது ஒருவித சவால்தான், என்றாலும் இப்படியும் ஏன் இருக்க கூடாது என்ற கோணத்தில் கண்டுபிடித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்றே தோன்றுகிறது.
எந்தவித காய்ச்சலுக்கு மருந்து இன்னும் கண்டு பிடிக்கவில்லையோ, அத்தகைய தொற்று நோய்களை திடீர் திடீரென்று பரப்பி பலரை சூறையாடுவதை நிச்சயம் தவிர்க்க முடியும் என்பது எனது நம்பிக்கை.

செவ்வாய், 5 மே, 2009
புகழ்
அந்தரத்தில் தொங்கும் கயிற்றேணி;
மேலேறிய பின்
வானத்திலுள்ள நட்சத்திரங்களின்
நுனியில் கட்டப்பட்டிருக்கும் ஒரு
பொன் கயிற்றின் தோற்றம்
கீழே தெரிவதெல்லாம்
அதல பாதாளம்
கயிற்றிலே தொங்கி கொண்டிருக்கவும்
இயலாமல், கீழே வரவும் விரும்பாமல்
முடிந்தவரை தொங்கி கொண்டே இருப்போமே
என்று நினைக்கும்போது
இத்தனை நேரம் தொங்கியது
மாய கயிற்று ஏணி தானா
மனம் கிடந்தது தவிக்கும்
இல்லை இல்லை நான் பிடித்திருந்தது
நிச்சயம் பொன் கயிறு தான்
அது கனவே இல்லை என
நம்பவைக்கும் மாய கயிற்றேணி.
மேலேறிய பின்
வானத்திலுள்ள நட்சத்திரங்களின்
நுனியில் கட்டப்பட்டிருக்கும் ஒரு
பொன் கயிற்றின் தோற்றம்
கீழே தெரிவதெல்லாம்
அதல பாதாளம்
கயிற்றிலே தொங்கி கொண்டிருக்கவும்
இயலாமல், கீழே வரவும் விரும்பாமல்
முடிந்தவரை தொங்கி கொண்டே இருப்போமே
என்று நினைக்கும்போது
இத்தனை நேரம் தொங்கியது
மாய கயிற்று ஏணி தானா
மனம் கிடந்தது தவிக்கும்
இல்லை இல்லை நான் பிடித்திருந்தது
நிச்சயம் பொன் கயிறு தான்
அது கனவே இல்லை என
நம்பவைக்கும் மாய கயிற்றேணி.
ஈவ் டீசிங்.........ராகிங் கொடுமை
நான் கல்லூரியில் படிக்கும்போது 'ஈவ் டீசிங்' என்ற வார்த்தை பிரயோகம் வழக்கில் கிடையாது, யாராவது கிண்டல் பண்ணா வீட்டில் வந்து சொன்னால் போதும் உடன் பிறப்புக்களோ அல்லது நமது ஹீரோ....... அதான் அப்பா.....அவருடன் இரண்டு நாள் போனால் போதும், பிறகு கிண்டல் செய்வதெல்லாம் சரியாகிவிடும்.
எதை எதையோ வெளி நாட்டில் இருந்து கற்று கொள்கிறார்களே அதில் இந்த ஈவ் டீசிங்கும் ஒன்று போல் இருக்கிறது.
ஒரு பெண் தன்னை திரும்பி பார்க்க வேண்டும், அவளது கவனத்தை ஈர்க்க ஏதேனும் செய்து திசை திருப்ப வேண்டும் என்பது தான் இந்த 'ஈவ் டீசிங்' செய்வதற்கான காரணம்.
ஆனால் இன்றைக்கு பார்த்தோமானால் யார் யாரையோ யார் யாரோ 'ஈவ் டீசிங்' செய்கிறார்கள். அர்த்தமற்ற பொழுது போக்காகவும் இந்த 'ஈவ் டீசிங்' பயன் படுத்தப்படுகிறது.
ஒரு வயதானவரை பார்த்தால் ' என்ன பெருசு ' என்பது, தன் அம்மா வயதில் இருக்கும் ஒரு பெண்ணை பார்த்து அனாவசியமான 'ஜோக்குகள்' அடிப்பது. இதையெல்லாம் என்ன[ டீசிங் ] என்று அழைப்பது என்று தெரியவில்லை.
இதுதான் இப்படி என்றால், செய்திகளை கேள்விப்படும்போது, ஒரு மாணவனின் கண் பார்வையே பறி போனது என்பது கொடூரம், இதை ராகிங் என்று சொல்வதை விட, சக மாணவனை கொடூரமாக நடத்தி, கொலைக்கு சற்றே குறைவான, ஒரு குற்றம் செய்யப்பட்டுள்ளது.
பல கல்லூரிகளிலும், ஹாஸ்டல்களிலும் நடக்கும் ஒரு மறைவான குற்றமாகவே இருந்து வருகிறது , பல கல்லூரிகளில் அவர்களது பெயர் கெட்டுவிட கூடாது என்பதற்காக இப்படிப்பட்ட செய்திகளை ஒரு புதை குழியில் போட்டு சமாதியும் கட்டி விடுகின்றனர். பண பலமும் எதிர்க்கும் திறனும் இல்லாமல் பலராலும் இப்படிப்பட்ட கொடூரங்களை வெளி உலகிற்கு சொல்ல முடியாமல் போய்விடுவதும் நிஜம்.
இந்த கொடூரங்களின் பின்னணி பற்றி ஆராய்ந்தால் திடுக்கிடும் தகவல்களும் வெளியாகும், பல காரணங்களுக்காக சம்பந்தப்பட்டவர்களை பழி வாங்குதலும் இந்த ராகிங் என்ற பெயரால் நடந்து வருவதும் நிஜம்.
இப்படி ராகிங் செய்து படித்து பட்டம் பெற்று வெளிவரும் மாணவன் நிச்சயம் ஒரு தேச துரோகியாகவோ சட்டத்திற்கு புறம்பான வேலைகள் செய்வதிலும் கை தேர்ந்தவராக உருவாகவும், தீய செயல்களை செய்து பழகும் ஒரு ட்ரைனிங் சென்டெர் போல கல்லூரி ஒரு களமாக அமையும் என்பதில் சந்தேகமே கிடையாது.
இப்படிப்பட்ட கொடூரங்களை செய்யும் மாணவனோ மாணவியோ பிடிபடும் போது சரியான கொன்சில்லிங் கொடுத்து அவர் அப்படி பட்ட மன நிலையில் இருந்து முற்றிலுமாக வெளியே வந்து விட்டாரா என்ற மருத்துவ சோதனைக்குட்படுத்திய பின்னரே மறுபடியும் கல்லூரிக்குள் படிக்க அனுமதி அளிக்க வேண்டும்.
பண பலம் அல்லது சமுதாயத்தில் மிகவும் முக்கிய பதவிகளில் இருக்கும் பெற்றோருக்காக சம்பந்த பட்ட மாணவன்/மாணவியை ஒரு விதமான நடவடிக்கையும் எடுக்காமல் மறுபடியும் படிக்க அனுமதித்தால், அவர்களால் நிச்சயம் அவர்கள் செய்த தவறு திருத்தபடாமலே போய் ஒரு குற்றவாளியை உருவாக்கும் நிலைமைதான் ஏற்ப்படும்.
குற்றவாளிகள் உருவாக்க படுகிறார்கள், குற்றவாளிகள் பிறப்பதில்லை - அல்லவா ?
கல்லூரிகளும் குற்றவாளிகளை உருவாக்கும் களமாக மாற வேண்டாம் என்பதே என் விருப்பம்.
யார் மீதுள்ள கோபத்தை எங்கே காட்டுவது......

வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் நடந்த ரயில் இடிப்பு சம்பவம் பற்றி எழுத வேண்டும் என்று எனக்குள் ஏதோ ஒரு எண்ண உந்துதல் ஏற்ப்பட்டதால் எழுதுகிறேன்:
அதிகாலையில் நடந்த சம்பவம் என்பதால் உயிர் இழப்பு குறைவாக இருந்து விட்டது, ஒரு மாநிலத்தில் ஆள்பவர் மீது வெறுப்பு ஏற்ப்பட்டால் பேருந்துகளையும் மற்ற வாகனங்களையும் உடைத்து நொறுக்கி தங்களது வெறுப்பை தெரியப்படுத்துவதும், மத்திய அரசின் மீது வெறுப்பு ஏற்ப்பட்டால் ( என்ன செய்வது என்பதை பற்றி யோசித்து ), இப்படி தண்டவாளங்களை தகர்ப்பது ரயில்களில் வெடிகுண்டு வைப்பது போன்ற சம்பவங்களை நடத்துவது, இம்முறை நடந்த இந்த ரயில் மோதல் சம்பவம் சற்று வித்தியாசமாக நடத்தப்பட்டு உள்ளதா? புரியவில்லை !!!!!
வெறுப்பையும் எதிர்ப்பையும் காண்பிக்க வேறு வழி இல்லை என்பதால் தான் இத்தகைய கொடூர முயற்ச்சிகளில் இறங்குகிறார்களோ என்று யோசிக்க வைக்கிறது இந்த சம்பவம்.
ஒரு ரயிலை தகர்த்து அல்லது பொது சொத்துக்களை சூரையாடுவதால் ஏதேனும் பிரயோஜனம் இருப்பின் அவ்வாறு செய்பவர்களை பாராட்டியே தீர வேண்டும், அவர்களது வீர தீர செயலுக்காக. !!!!!
ஒன்றுமே வித்தியாசமாக நடக்க போவது இல்லை என்பது தெரிந்திருந்தும் இந்த விதமாக செயல்படுபவரின் மீது நிச்சயம் பொது மக்களளுக்கு வெறுப்பும் எரிச்சலும் தான் ஏற்படும், போதா குறைக்கு அநியாயமாக அப்பாவி உயிர்களின் இழப்பு மட்டுமே மிஞ்சும். இதில் யாருக்கு என்ன திருப்பதி ஏற்ப்பட போகிறதோ, விளங்கவில்லை !!!!
கொலை வெறி கொண்டவர்க்கு இதெல்லாம் எங்கே யோசிக்க முடியும், அப்படி யோசித்து செயல்படுபவராயின் இப்பாதக செயல்களில் ஈடுபடுவதற்கே அஞ்சுவார்களே.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)