மற்றவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மற்றவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 செப்டம்பர், 2013

என் ஆசிரிய பெருமக்கள் !!




ஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிருஷ்ணன் பிறந்ததினம் என்பது பலருக்கு தெரிவது கூட இல்லை அவரும் ஒரு சிறந்த ஆசிரியர். ஆசிரியர்கள் அல்லது ஆசான் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பழைய காலத்தில் வாழ்ந்த பலர் இதற்க்கு முழுதகுதி படைத்தவராக இருந்தனர் என்பது யாவரும் அறிந்த உண்மை. அவ்வாறு ஆசிரிய கடலினுள் முத்துக்களாக வாழ்ந்து அதை குறித்து பிறர் அறியவேண்டும் என்ற எண்ணமின்றி வாழ்ந்து மறைந்த ஒட்டு மொத்த ஆசிரியரையும் நினைவுகூறுதல் என்பது திரு ராதாகிருஷ்ணன் அவர்களின் அறிய பண்புகளில் ஒன்று. கல்விக்கண் திறக்க உதவும் ஆசிரியரை கடவுள் என்று வணங்கிய காலங்கள் உண்டு. அவாறான காலங்கள் இருந்தது என்று நினைவுறுத்தும் வகையில், தனது மேன்மையை இன்னும் இழக்காமல் தக்க வைத்திருக்க மட்டுமே இன்று ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுவதாக உணருகிறேன். "எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டே" என்று வேதனை குரலாகவும் ஆசிரியர் தினம் இன்றைக்கு வழக்கத்தில் அல்லது புழக்கத்தில் பேசப்படுகிறது.


எனது முதல் ஆசிரியர் என் தாய் அவர்தான் எனக்கு தமிழ் எழுத படிக்க கற்று கொடுத்தார். பாலூட்டிய போதெல்லாம் தேன் தமிழால் கதைகள் பல கற்று கொடுத்தார். பிற்காலத்தில் தமிழில் செய்யுள் முதல் வினாவிடை வரை ஒப்பிப்பதற்கும் பிழையின்றி பேச எழுத கற்றுதந்தார், கணக்கு பாடத்தை விளங்கும் வகையில் பொறுமையாய் பல முறை சொல்லித்தருவார், வரலாறு புவியியல் பாடங்களை எழுதி முடிக்க இயலாத போதெல்லாம் அயராமல் எழுதிதருவார், ஆங்கிலத்திற்கு முதல் ஆசான் என் தந்தை, எழுத்து கூட்டி படிப்பதற்கும் ஏனைய ஏற்ற இறக்கங்களை அருமையாய் எடுத்து சொல்வார். அவர் எனது கை பிடித்து வீதியிலே செல்லும்போது தென்படுகின்ற ஆங்கில வாசகங்களை எல்லாம் படித்து சொல்வேன், அதை கண்டு அவருக்கு அளவில்லா மகிழ்ச்சி எழும். ஆகையால் என் முதல் ஆசான் என் பெற்றோருக்கு ஆயுள் உள்ளவரை நன்றி. அதன் பிறகு எஸ்.எஸ்.எல்.சி. என்று கூறப்படும் பழைய பள்ளியிறுதி ஆண்டில் வேணுகோபால் என்ற தமிழாசிரியர், அவர் தமிழை கையாண்ட விதம், மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கின்ற நேர்த்தி தமிழ் என் நெஞ்சினிலே நீங்கா இடம் பிடிக்க முக்கிய காரணகர்த்தா, அவரை என் சிரம் தாழ்த்தி என்றும் வணங்குகின்றேன்.


ஆசிரியர்கள் என்றாலே பிரம்பையும் கண்டிப்பின் உச்சத்தையும் உடையவர்கள் என்ற அடிப்படை எண்ணத்தை சிதைக்க செய்த என் பள்ளி தலைமை ஆசிரியர் திரு சி. சுப்பிரமணியம் அவர்களுக்கு நான் நன்றி கடன் பட்டவள். நான் எஸ்.எஸ்.எல்.சி என்கின்ற பள்ளியிறுதி ஆண்டில் படித்துகொண்டிருந்தேன், அவ்வாண்டு பள்ளியிறுதி தேர்வு எழுதுவதற்கு ரூபாய் 17 கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாணவர்களிடம் கூறப்பட்டது. ரூபாய் 17 என்பது எங்களுக்கு அப்போது பெரிய தொகை, அத்தனை கொடிய வறுமை. என் பெற்றோரிடம் தெரிவித்தேன், குறிப்பிட்ட தேதி இறுதிநாள் என்று கூறப்பட்டது, எங்களிடம் பணம் என்பது காண கிடைக்காத ஒன்றாக இருந்தது. அடுத்த நாள் காலை பள்ளியில் தினமும் நடைபெறுகின்ற காலை வணக்கத்துடன் துவங்கியது, அதன் இறுதியில் எங்கள் தலைமை ஆசிரியர் ஒலிபெருக்கியில் 5000 மாணவ மாணவியர் நிறைந்திருந்த வளாகத்தில் அறிவிப்பு ஒன்றை படித்தார் அதில் அவர் குறிப்பிட்ட செய்தி லைன்'ஸ் கிளாப் வருடம் தோறும் வசதியற்ற மாணவ மாணவியர் இருவருக்கு பரீட்சை எழுத உதவித்தொகை ரூபாய் 17 வழங்கி வருவதாகவும் இம்முறை அவ்வுதவித்தொகை தனது பள்ளிக்கு கிடைத்துள்ளது என்று கூறினார் , அதை தொடர்ந்து ஒரு மாணவனின் பெயரும் மாணவியர் பெயரில் எனது பெயரையும் வாசித்துவிட்டு முதல் முறையாக அவ்வருடம் அந்த பள்ளிக்கு இவ்வித சலுகை கிடைக்க தான் எடுத்த முயற்சிகளை பற்றி கூறினார் முயன்று கிடைத்தது என்பதால் பரீட்சையில் வெற்றி பெறுமாறு வாழ்த்தினார்.


அத்துடன் நின்றுவிடாமல் தினமும் மாலையில் ஒருமணி நேரம் (பள்ளி நேரத்திற்கு பின்னர்) ஆங்கில பாடத்தில் குறிப்பாக இரண்டாம் தாள் என்கின்ற ஆங்கில இலக்கண பாடத்தில் அதுவரையில் தொடர்ந்து குறைவாக மதிப்பெண்கள் வாங்கிய மாணவ மாணவியரை அமர்த்தி அருமையாய் ஆங்கில இலக்கணம் சொல்லி கொடுத்தார். அதுவரையில் வகுப்பில் கடைசி தரத்தில் இருந்த மாணவியர் அனைவரும் அவ்வாண்டு இறுதி தேர்வில் வெற்றி அடைய முழுதும் உதவினார். அப்படிப்பட்ட ஆசிரியர்களும் இதே பூமியில்தான் வாழ்ந்தனர் என்பதை சொல்லாமல் இருந்தால் அதுவே எனக்கு சாபமும் பாவமுமாக இருந்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு இங்கே குறிப்பிடுகிறேன்.






திங்கள், 2 செப்டம்பர், 2013

மறதி மட்டும் இல்லையென்றால் ?




வருமானம் என்பது மனிதனுக்கு அடிப்படை தேவை என்றாகிவிட்டது வருமானமின்றி மனிதனால் வாழ இயலாது, "வறு"மை நீக்கப்படுவதற்கு "மான"த்தை தக்கவைத்து கொள்வதற்கு தேவையானது "வருமானம்". அதனால் தான் இதற்க்கு பெயர் வருமானம் என்றாகியதோ? அதாவது வறுமை+மானம் = வருமானம். இதனை "வரும்படி" என்று கூறுவதும் உண்டு, அக்காலத்தில் நிலத்தை உழுது பயிரிட்டு அதைகொண்டு வாழ்க்கை நடத்தினர், பணம் என்பது இல்லாதிருந்த காலத்தில் நெல் அல்லது அரிசி போன்ற தானியங்களை அளந்து வேலையாட்களுக்கு கூலியாக கொடுப்பது வழக்கமாக இருந்தது, கிலோ, லிட்டர் என்பது பிற்காலத்தில் ஏற்ப்பட்ட அளவு முறைகள் முற்கால வழக்கப்படி ஒரு படி இரண்டு படி என்று படி கணக்கு புழக்கத்தில் இருந்தது. அதனால் அத்தகைய முறையில் தனக்கு கிடைக்கின்ற தானியத்தை வருகின்ற+படி= வரும்படி என்று கூறினர். காலத்திற்கேற்ப சொற்களின் புழக்கமும் அதற்கொப்ப இருந்தது. உழைத்து சம்பாதிக்கின்ற "வருமானம்" அல்லது "வரும்படி" உள்ள ஒருவருக்கே திருமணம் செய்ய இயலும், பிறக்கின்ற குழந்தைகளையும் மனைவியையும் பராமரிக்க வருமானம் என்பது அவசியமாகிறது. அவ்வாறு வறுமை என்னும் பிணியும் மானம் என்கின்ற தன்மானமும் ஒருவரது உழைப்பின் ஊதியத்தால் நிர்வகிக்கப்படுவதே குடும்பம். அத்தகைய வருமானத்தின் பெரும் பகுதியை தினமும் மது அருந்த செல்விட்டு அவ்வாறு வீதியில் செல்லும்போது காண்போரிடம் "தன் மான" த்தை விட்டு, தான் தனது மானத்தை இழந்து விடுவதால் மனைவி மக்களை வறுமை என்னும் பாழும் கிணற்றினுள் தள்ளப்பட்டு தன்மானமிழந்து அல்லலுறுகின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருப்பது இன்றைய மிகப்பெரிய கொடுமைகளுள் ஒன்று என்றால் அது மிகையாகாது.

கல்விக்கண் திறக்க உதவி செய்யும் பள்ளிகூடங்கள் பாழாகி புனரமைக்க ஆளின்றி பல கிராமங்களில் வீணே செயலற்று கிடக்கின்றது. படித்தவர்கள் பலர் சீரும் சிறப்புமாய் பவனி வருவதை காணும் பாமரன் தனது வாரிசுகளும் அவ்வாறே பல நிறத்து வண்டியில் அமர்ந்து கொண்டு கைபேசியில் ஆங்கிலம் பேசி கைநிறைய சம்பாதித்து (தற்போது "சம்பாதி"ப்பது என்றாகி விட்டது) மேலை நாடுகள் சென்று அங்கேயும் கை நிறைய சம்பாதித்து பகட்டாக வாழ வேண்டும் என்ற கனவில் இராப்பகலாய் கண் விழித்து வேலை பார்த்து அதிக பணம் செலுத்தினால்தான் பிள்ளை எளிதில் ஆங்கிலம் பேசும் என்ற அடங்கா அவாவில் தன் சக்திக்கு மிஞ்சிய பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து பட்டம் வாங்க அதை விட இன்னும் அதிக பணம் ("கடனோ" கிரடிட் கார்டோ) செலவழித்து படிக்க வைத்து நல்லதொரு வேலை கிடைத்த பின் (அவன் அல்லது அவள்) அவர்களுக்கேற்ற பெண்ணை அல்லது ஆணை தேடிபிடித்து திருமணம் செய்வித்து பெண் வீட்டார்  சீதனமாய் கொடுத்த காரோ மாதம் வட்டியுடன் செலுத்தி வாங்கிய காரிலோ  உட்கார்ந்து பிள்ளைகள் உலாவருகின்ற காட்சியை காணுகின்ற பெற்றவர்கள் சாகும் முன்பே சொர்கத்தை பூமியிலே காணுகின்ற சந்தோசம் அடைத்து விட்டோம் என்றிருந்த சமயத்தில் இன்னொரு கனவும் நிஜமாகும் வகையில் பிள்ளைகள் வெளிநாட்டிற்கு சென்று இன்னும் அதிக சம்பாதனை வசதிகளுடன் வாழும் வாய்ப்பு கிடைத்து விட வாழ்க்கை என்பது இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று அடுத்த பாமர கூடமொன்று அதே வழியை ஏக்கம் கொண்டு பின் தொடரும். இது ஒரு தொடர் கதை.

இரவென்றும் பகலென்றும் பாராமல் உழைத்தவர் தன் நலனில் சிறிதும் கவலையின்றி சரியான உணவு உண்ணவும் உறங்கவும் பலவருடம் மறந்து விட்ட பாமர மக்கள் கூட்டம் நீரிழிவு, இரத்த கொதிப்பு என்று நவீன மருத்துவம் கூறும் அத்தனையும் உடலை குத்தகை எடுத்து வந்து சேர்ந்து, சிலருக்கோ நரம்பு வியாதியினால் மறதி நோயும், வித வித நோயெல்லாம் படையெடுத்து ஒவ்வொரு பரிசாக இறுதி யாத்திரைக்கு அவரை வெகு விரைவில் தயாராக்கும். இந்நிலையில் அதுவரையில் யாருக்காக உழைத்தாரோ அவரைக் காண மனம் எங்கும், "அவரை கடைசியாக ஒருமுறையாவது கண்டுவிட்ட பின்னர் என்னுயிர் போனால் நிம்மதி" என்று உள்மனம் கிடந்து தவிக்கும், துடிக்கும், வெளிநாட்டில் வேலை என்றால் மாதமொருமுறை பெற்றோரை வந்து பார்த்துவிட்டு போக இயலுமா, எப்படியோ உடல் நலக்குறைவு பற்றி செய்தி அறிந்தாலும் மருமகனோ மருமகளோ "நீங்கள் சென்று பார்த்தால் மட்டும் போற உயிர் தாமதமாக போகப்போகிறதா என்ன" என்ற கேள்விகளுக்கு பதிலாக  "என்னை படிக்க வைக்க எவ்வளவு கஷ்ட பட்டார்கள் என்று உனக்கு தெரியுமா" என்று கூறிவிட எத்தனை பேருக்கு "தன்மானம்" தடுக்கிறது என்பது எனக்கு தெரியாது, அப்படி தான் பதில் சொன்னால் தங்களுடைய கஷ்ட காலங்களை பற்றி சொல்லியாக வேண்டுமே என்கின்ற குற்ற உணர்வு எத்தனை பேருக்கு உள்ளது என்பது எனக்கு தெரியாது. ஒன்று மட்டும் எனக்கு தெரியும், பெற்றோர் தங்களது எதிர்காலமே பிள்ளைகள் என்று நம்பினார்கள் அதற்காக தங்களது "வருமான"த்தையே முதலீடாக செலுத்தினார்கள். இப்போது அடுத்த தலைமுறை தற்போது  "தன்மானம்" அல்லது "வருமானம்" இரண்டில் எதை பிரதானமாக தங்கள் வாழ்க்கையில் முன்வைத்து செயல்பட போகிறது. பார்க்கலாம்.

"சம்+பாதியம்"  சம் என்றால் சம்சாரம் அல்லது சம்(திங்), சம் என்பதை ஆங்கிலத்தில் sum- money என்ற பொருளும் உண்டு, thing அல்லது think, திங் என்றால் நாம் அறிந்தபடி எல்லாவித பொருட்களை அல்லது உடைமைகளை அவ்வாறு ஆங்கிலத்தில் கூறுவார், தங்கள் சம்சாரத்திற்கு தேவையான பொருட்களை (உடைமைகளை) வாங்குவதற்கு ஈட்டுகின்ற பணம் என்ற பொருளாகிறது. இதில் "திங்க்" எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். சிலர் தங்கள் பணத்தை வைத்து அல்லது ஈட்டுவதற்கு பலவித யோசனைகளை கையாள்கின்றனர் அதனால் "திங்க்" என்பதற்கும் இங்கே அவசியம் உள்ளது. அதே "திங்க்" மூளைதிறனை செயல்படுத்தவும் செயலை தவிர்த்து உறக்கம் கொள்ளவும் "சம்" இல் "பாதி"யும் செலவழித்து, சிலர் தங்களது "ஊதி"யம் என்பதே "ஊத்தி" கொள்ள மற்றும் "ஊதி" (புகைத்து) தள்ளுவதற்கு என்றும் நம்புகின்றனர். இவற்றில் ஏதேனும் ஒன்றை பற்றிக்கொண்டு தங்கள் சுய நினைவை இழந்து மிக சிறந்த "குடிமகனாக" வாழும் வாழ்க்கை மட்டுமே நிரந்தர நிஜமாகிறது.

இதில் இருதரப்பினரும் தங்களது சுய நினைவை இழக்க நேருவதுதான் கொடுமை, அல்லும் பகலும் அயராமல் உழைத்து தன் மக்களை உயர்த்தி பார்க்க நினைத்தவரும் நோயால் மறதிக்குள் உறைந்து போனார், அவ்வாறு உயர்ந்த நிலைக்கு வந்தவர் பின்னர் தன் சுய நினைவை இழந்து கிடக்க மதுவே கதியென்று நம்புகின்றார். "மறதி" என்பது மனிதனுக்கு தேவைப்படுகின்ற சமயங்களும் உண்டு, ஒரு குறிப்பிட்ட வயதில் மறதியை குறைப்பதற்கு  மருத்துவரின் ஆலோசனை பெற்று நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டியவை மிகுந்திருந்தது. தான் அல்லது தனது பெற்றோர் நினைத்த இடத்தை வந்து அடைந்த பின்னர் அல்லது (சிலர்) அடைய இயலாமல் போன பின்னர் மறதியின் அவசியம் வந்துவிடுகிறது. இந்த "மறதி" என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்தால் மனிதன் என்னவாகி இருப்பான்? தெரியவில்லை.





புதன், 31 ஜூலை, 2013

கவனம் வைப்பது அவசியம்.

மனிதனாக பிறந்த பின்னர் பசி தாகம் தூக்கம் போன்ற முக்கியமானவற்றை உடலின் உறுப்புகள் தானே தங்கள் இயக்கத்தால் செய்து விடுகிறது, வாயின் உள் சென்ற பொருள் மீண்டும் கழிவாக வெளியேறி கடமைகளை சரி செய்கிறது. இவற்றை இயற்க்கை என்று நாம் கூறுகிறோம் இவ்வித இயற்க்கை மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்கு பறவை போன்ற உயிரினங்களுக்கும் பொதுவான நிகழ்வு. இவற்றை தாண்டி வேறு சில இயற்க்கை நிகழ்வுகளும் மனிதனுக்கு உண்டு. குழந்தையிலிருந்து பருவம் அடைந்த ஒவ்வொரு மனிதனுக்கும் புணர்வு கொள்ளும் உணர்வு உண்டு; இவ்வுணர்வு கூட மிருகம் மற்றும் பறவை போன்ற எல்லா உயிரினங்களுக்கும் உண்டு; மனித உணர்வுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக மனிதனுக்கே உரிய உணர்வாக உள்ள சிரிப்பதும் அழுவதும் ஏனைய உயிரினங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்துகிறது. குழந்தை பிறந்தவுடன் அழவில்லை என்றால் அதன் நுரையீரல் இயங்க துவங்காது, அழுகையின் மூலம் மட்டுமே தனது உணர்வுகளை வெளிப்படுத்த கூடிய வகையில் மனித குழந்தை வளர்கிறது. குழந்தைக்கு அழுகை மிகவும் அவசியமாகிறது. அதே குழந்தை மூச்சு நிற்காமல் தொடர் அழுகை வெளிப்படுத்தும் என்றால் அக்குழந்தை தனக்கு ஏற்ப்படுகின்ற உபாதைகளை வெளிப்படுத்த அவ்வழுகை பயன்படுகிறது. அவ்வாறு குழந்தை அழவில்லை என்றால் அதன் உணர்வுகளை அறிவது இயலாததாக இருக்கும்.

வயதும் பருவமும் மாறுவதற்கு ஏற்ப உணர்வுகள் மாற்றம் அடைகிறது. பலவித சூழ்நிலைகளில் சிக்கி தவிக்கும் சிறார்கள் அவ்வயதிர்கேற்ற செய்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு செயல்படுவதை இந்திய தேசத்தில் பெரும்பான்மையாக காணமுடிகிறது. விளையாட்டிலும், மற்ற சமயங்களிலும் சிரித்து மகிழ்ச்சியுடன் காணப்பட வேண்டிய வயதில் உணவிற்காக அலைந்து திரிந்து, திருட்டு பழக்கம் ஆட்கொண்டு போதை பொருள்களின் அடிமையாகி அவ்வயதிற்கே உரிய உணர்வுகளை இழந்து, மறுவாழ்வு இல்லங்களில் வளர்ந்து வெளியேறும் இளைஞர்கள் பெரும்பாலும் குற்றவாளிகளாக மாறுகின்ற சூழலுக்கு தள்ளப்படுவதை காண முடிகிறது.

குடும்பங்களில் வாழ்கின்ற சிறுவர்கள் அவ்வயதிற்குறிய குணங்களுடன் வளர்கின்றனரா என்பதும் கேள்விதான். மருந்திற்கு கூட சிரிப்பென்ற ஒன்றை  இன்றைய இல்லங்களில் காண முடிவதில்லை. இதற்க்கு பல்வேறு காரணங்கள் இருப்பது நாம் அறிந்ததுதான். பலரின் வாழ்க்கையில் சிரிப்பும் அழுகையும் மறந்து பல வருடங்கள் ஆகி இருக்கும், மனிதர்கள் பணம் சம்பாதிக்கின்ற ஒரு சிந்தனையை தவிர அல்லது அன்றாட உணவிற்கு போராடுவதை தவிர வேறு எவ்வித சிந்தனைகளும் இன்றி செயல்படுதல் சாதாரண நிகழ்வாகிவிட்டது. அவ்வாறு செயல்படுவதல் உடலில் பலவித வியாதிகளை உருவாக்குகின்ற வழியாக அமைந்துவிடுகிறது. அழுகை என்பது எப்போது ஏற்ப்படுகிறது, ஏதேனும் சோகம் அல்லது தாங்க இயலாத உபாதை தங்களது உடலில் ஏற்ப்பட்டால் மட்டுமே,

பணம் பதவி பங்களா கார் சொத்து என்று சகலத்தையும் ஏதேனும் ஒரு வழியில் அடைந்து விடுவதே வாழ்க்கையின் மிகவும் முக்கிய குறிக்கோள் என்று இடைவிடாமல் உழைத்து அல்லது அபகரித்து அல்லது யாரையேனும் ஏமாற்றி அடைந்து விட்ட பின்னர் ஒருவரது வாழ்க்கையில் சிரிப்பை ஏற்ப்படுத்த இயலுமா, குறிப்பிட்ட வயதை கடந்த பின்னர் அழுகையும் வராமல் சிரிக்கவும் இயலாமல் மனிதன் நடமாடுகின்ற விலங்கினமாக மாற்றமடைவதை காண முடிகிறதே தவிர தனது லட்சிய பாதையில் வெற்றிகரமாக வலம் வருகின்ற மாமனிதர்களாக காணமுடிவதில்லை? பிறப்பிலிருந்து இறப்பு வரையில் நினைவு தெரிந்து எத்தனை முறை மனம்விட்டு சிரித்தோம் என்பதும் எத்தனை முறை அழுதோம் என்பதும் யாரேனும் நினைத்து பார்ப்பதுண்டா?

அழுகை என்பது பலருக்கு சுயநல கருவியாக உருவாகின்ற சம்பவங்கள் நிறைய உண்டு. அடுத்தவரின் அவல நிலை கண்டு அடுத்தவரின் வேதனைக்காக நாம் துயர் அடைந்ததுண்டா? அவ்வாறு அழுததும் சிரித்ததும் எதற்க்காக என்று ஒரு சுய கணக்கெடுப்பு நமக்கு நாமே நடத்திக் கொண்டால் நாம் எப்படிபட்டவர் என்பதை நாம் அறிந்து கொள்ள இலகுவாக இருக்கும். கொடுக்கபட்டிருக்கின்ற வாழ்நாளில் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையும் நோக்கமும் நமக்கு இருந்தால் இவ்வகையான சுய கணக்கெடுப்பு உதவிகரமாக இருக்கும். எத்தனை வருடம் வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதை நாம் நம்மை பற்றி அறிந்திருந்தால் மரணம் என்பது அச்சுறுத்தலாக இருக்காது. அழுவதும் சிரிப்பதும் நம் நலனுக்காக மட்டும் என்று இதுவரையில் வாழ்ந்திருந்தால் இனிமேல் அதை கொஞ்சம் மாற்றிக்கொண்டு செயல்பட்டுதான் பார்ப்போமே; அதில் கிடைக்கும் சுகம் பற்றி அறிந்து கொள்ள உதவும் அல்லவா?

தினசரி வாழ்க்கையில் சிரிப்பதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்ப்படுவதே இல்லை என்பதால்தான் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் நகைச்சுவை விரும்பி ரசிக்கப்பட்டு எக்காலத்திலும் மக்களால் வரவேற்ப்புக்குள்ளாகி இருந்து வருகிறது. சிரிப்பது என்பதில் பலவகை இருப்பதாக கூறப்படுகிறது. ஆணவச்சிரிப்பு, ஆனந்த சிரிப்பு, ஏளன சிரிப்பு, தற்காலத்தில் உடல்நலம் கருதி பலர் ஒன்று கூடி குறிப்பிட்ட நேரம் வரை சிரிக்கின்றனர் என்று செய்திகள் உண்டு, இவ்வாறு  பல வகை சிரிப்பு சொல்லப்படுகிறது. ஆனால் அழுவதற்கு அவ்வாறு யாரும் ஒன்று கூடி தினமும் அழுவதாக செய்தி இதுவரையில் கிடையாது. கிராமப்புறங்களில் யாராவது இறந்துவிட்டால் அவருக்காக அழுவதற்கென்று காசு கொடுத்து சிலரை கூட்டி வந்து "ஒப்பாரி" வைக்க சொல்லுவார்கள் என்று கேள்வி. அங்கே கூட இறந்தவருக்காக அழுவதற்கு ஒருவரும் இல்லை என்பது தெரிகிறது. 1960களில் வெளிவந்த திரைப்படங்கள் பலவற்றை பார்க்க எனக்கு பிடிப்பது கிடையாது. யாராவது என்னை துணையாக வற்புறுத்தினால் கூட நான் அவருடன் இணைந்து செல்வதே கிடையாது. காசு கொடுத்து திரையரங்குகளில் [அக்காலத்தில் தொலைக்காட்சி கிடையாது] மூன்று மணி நேரம் அழுதுவிட்டு பின்னர் திரையரங்கை விட்டு வெளியே வருவதற்குள் தலைவலி உயிர் போகும். அதுவரையில் தொடர்ந்து இருட்டில் இருந்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியேறும் போது கூட்டத்தில் தெளிவாக நிதானமாக நடப்பதற்கே சிரமமாக இருக்கும், அப்படி ஒரு அழுகை அழுது தீர்த்தாகி இருக்கும். இது போன்று அழுத அழுகையை கணக்கில் எடுக்க வேண்டாம், ஏனெனில் திரைப்படம் என்பது புனையப்பட்ட கதைகளை கொண்டு நடித்து உருவாக்கப்பட்டது இதில் உண்மை என்பது எத்தனை விழுக்காடு இருக்கும் என்று நாம் அறியோம்.

நாம் சந்தோஷமாக சிரித்த சம்பவங்களை நிச்சயம் நினைவு கூறுதல் அவசியம் அதைவிட அவசியம் அது எப்போது எதற்காக என்பதையும் நினைவில் கொள்வது, அடிக்கடி அவ்வாறு நினைவுபடுத்தி கொள்வதால் நாம் நமது உடல்நிலை தற்போது  எவ்வாறு உள்ளது என்பதை கணக்கீடு செய்து கொள்ள இயலும். எதற்கெடுத்தாலும் சிரிக்க தோன்றுகிறது என்றால் நமது மூளையில் ரசாயன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவ்உணர்வு மூலம் நமக்கு தெரிவிக்கிறது என்பதை அறிந்து உடனே மருத்துவரை அணுகுதல் அவசியப்படுகிறது.  நமது சூழலை அதற்கேற்றவாறு மாற்றியமைக்க இது உதவும். அதே போன்றதுதான் அழுகையும், தினம் தினம் அழுகை வருகிறது என்றால் அது உடலின் ரசாயன மாற்றம் வேறுபட்டிருக்கிறது என்பதை நமக்கு அறிவிக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும். உணர்வுகளின் மாற்றத்தை வெளிப்படுத்துவது அழுகை கோபம் பசி சிரிப்பு உறக்கம் போன்ற உணர்வுகள் நமது உடல் நிலையை படம் பிடித்து காண்பிக்கும் இயற்க்கை நமக்கு அளித்திருக்கும் எளிய வழிகள். அதனால் அவற்றின் மீது கவனம் வைப்பது அவசியம்.







செவ்வாய், 18 ஜூன், 2013

எல்லோரும் கொண்டாடுவோம்

அப்பாக்கள் தினம் அம்மாக்கள் தினம் என்று முக்கிய உறவுகளுக்கான தினத்தைப் பற்றி ஏற்கனவே பதிவு எழுதி இருக்கிறேன், தாத்தாக்கள் தினம் பாட்டி தினம் என்றோ அல்லது மைத்துனி தினம் மாமனார் தினம் என்கின்ற ஒரு தினம் இதுவரையில் இல்லை என்பதிலிருந்து அம்மாவும் அப்பாவும் உறவுகளில் மிகவும் முக்கியஸ்த்தர்கள் என்பது தெரிகிறது. இப்படிப்பட்ட "தின" அனுசரிப்பு என்பது மேலை நாடுகளுக்கு அவசியமானது என்பதால் அவர்கள் அவ்வாறு ஒரு குறிப்பிட்ட தினங்களை உறவுகளுக்கென்று ஒதுக்கி கொண்டாடி வருவது என்பது சாதாரணமான விடயம். அதிலும் கூட எத்தனை பேருக்கு தங்கள் அப்பாக்களை யார் என்பது தெரிந்திருக்க முடியும் என்பதும், அவர்களது அம்மாக்கள் தற்போது எந்த அப்பாவுடன் வாழ்ந்து வருகிறார் என்பதை அறிந்திருக்கின்றனரா என்பதும் கூட கேள்விக்குரியது. அங்குள்ள வாழ்க்கை முறையில் அவ்வாறு வாழ்வது என்பது யதார்த்தம். அதனால் அவர்கள் குறிப்பிட்ட நாளை அப்பா அம்மாவிற்கென்று ஒதுக்கி அவர்களுடன் அந்நாளை கொண்டாடுவதில் வியப்பில்லை.

இந்தியாவின் சமுதாய முறைகளில் ஒரு குறிப்பிட்ட தினத்தை ஒதுக்கி பெற்றோரை மகிழ்விக்க அல்லது வாழ்த்து கூற வேண்டிய நிலை அவசியம் இல்லை, இந்தியாவிலும் நிலை மாறிக்கொண்டிருக்கிறது, முதியோர் இல்லங்களில் வாழும் பெற்றோர்களுக்கு 'கடனே' என்று மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்திவிட்டு 'கெழம் எப்போ மண்டைய போடப்போகுதோ' என்று அலுத்துக்கொள்ளும் பிள்ளைகளுக்கு நிச்சயம் பெற்றோரை கொண்டாதுவதற்கு என்று ஒரு குறிப்பிட்ட தினம் அவசியம்தான். முதிர் வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு தண்டனை கொடுக்கின்ற சட்டம் அவசியப்படுகின்ற காலம் இது. என்றிருக்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வாழ்த்து சொல்ல, ஒரு குறிப்பிட்ட தினத்திலாவது அவர்களை மகிழ்விக்க விரும்பும் நல் உள்ளங்கள் இருப்பின் முப்போகம் விளையும் பூமியும், "பெய்" என்றால் உடனே பெய்யும் மழையும் நமக்கு கிடைத்திருக்குமே.

'யார் இவர்களை பெற்றுக்கொள்ள சொன்னது' என்றும், 'இவர்கள் என்ன என்னை ஓ ஹோ என்றா வளர்த்தார்கள் நான் இவர்களை வைத்து பராமரிப்பதற்கு', என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பெற்றோரை ஏசுகின்ற பிள்ளைகளும் 'இவனை பெற்றதற்கு கல்லையோ மண்ணையோ பெற்றிருக்கலாமே' என்று வேதனை செந்நீர் விடுகின்ற பெற்றோரை அல்லவா பெரும்பாலும் காண முடிகிறது. அப்படியே நல்மனம் கொண்ட பிள்ளைகளை பெற்று வளர்த்துவிட்டாலும் திருமணம் என்கின்ற பெயரில் விலை போகும் பிள்ளைகள், மனைவியின் நிரந்தர அடிமைகளாகி கைகளுக்கும் வாய்க்கும் விலங்கு பூட்டப்பட்டு கைதிகளாய் கிடக்கின்ற குடும்பங்களில் அப்பாக்கள் தினம் அம்மாக்கள் தினம் என்று ஒன்று இருக்கின்ற செய்தி காற்று வழியாக கூட உள்ளே நுழைகின்ற வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்வியல்லவா.

பெற்றோரை கொண்டாட வேண்டும் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமல்ல, நாம் வாழுகின்ற ஒவ்வொரு நிமிடமும், கடவுளுக்கு கொடுக்கின்ற மரியாதையில் ஒரு பகுதியாவது பெற்றோருக்கு செலுத்துவதற்கு முயற்சிக்க வேண்டாமா, பெற்றோர் கண் கண்ட தெய்வங்கள் என்று வேதங்களும் நூல்களும் கூறுகிறதல்லவா. யார் யாருக்கோ, ஊர் மெச்சிக்கொள்ள உபகாரம் செய்வதை விட, விதவிதமான தான தருமங்கள் செய்வதிலும் அன்னை தந்தையை உபசரிப்பது மட்டுமே உயர்ந்த உபகாரம். 'பெற்றோர் எனக்கு என்ன செய்துவிட்டார்கள்' என்று எண்ணி அதற்க்கு பதில் செய்வது மூடத்தனம், அவர்களால் எனக்கு செய்ய இயலாமல் போனவற்றை அல்லது எனக்கு இயன்ற உபகாரத்தை லாப நட்ட கணக்கு பாராமல் அவர்களுக்கு செய்வதில் அன்றோ புண்ணியம் கிடைக்கின்றது. ஆயிரம் கோவிலுக்கு சென்று காணிக்கை கொடுத்து பூஜைகள் செய்தாலும் கிடைக்காத ஆசீர் கிடைப்பது அருகில் இருக்கும் தாய்க்கும் தந்தைக்கும் செய்யும் உபசாரத்தால் மட்டுமே.

பல நீதி நூல்கள் இவற்றை விலாவரியாக நமக்கு கொடுத்திருப்பினும் அவற்றையும் குப்பையாக எண்ணுகின்ற மனிதன்  நிம்மதியுடன் சகல பாக்கியங்களுடன் தனது வாழ்நாளின் இறுதி வரையில் வாழ்வது அரிது. எத்தனை சாதித்தாலும் அவரது வாழ்க்கை வீழ்ச்சியுறுவது நிச்சயம்.

வியாழன், 30 மே, 2013

இரவல்

சொந்தக்காரர் ஒருவரின் திருமணத்திற்கு செல்வதற்காக அடுத்த வீட்டுக்கார பெண்ணிடம் ஆறு பவுன் இரட்டைவட சங்கிலியை வாங்கி கழுத்தில் அணிந்து சென்ற ஒரு அம்மா, அன்றிரவு திருமண வீட்டில் தங்கி விட்டு மறுதினம் வீடு திரும்பிய பின்னரும் இரட்டைவடம் சங்கிலியை அதன் சொந்தக்காரரிடம் திருப்பிக் கொடுக்கவில்லை, எப்படி கேட்பது என்று தயங்கிய அடுத்த வீட்டு அம்மா அதை மெதுவாக தனது கணவனிடம் தெரிவிக்க கணவனுக்கு வந்ததே கோபம், தன்னை கேட்காமல் கொடுத்ததால் அந்த பிரச்சினை பற்றி தன்னிடம் எதையும் சொல்லவேண்டாம் என்றார். ஒருவழியாக நான்காவது நாள் நகையை கேட்க அடுத்த வீட்டுக்கு சென்றால் கதவு பூட்டி கிடந்தது ஆச்சரியமாக இருந்தது. காரணம் எங்கு செல்வதென்றாலும் தன்னிடம் தெரிவிக்காமல் அடுத்தவீட்டு அம்மா செல்வதில்லை என்பதால். எங்கே சென்றுவிட முடியும் அந்த ஊரும் வீடும் அவர்களது பூர்வீகம் தானே என்ற தைரியத்தில் நகை கொடுத்தவர் காத்திருந்தார். நாட்கள் மாதங்களாகியும் வீட்டை திறப்பதற்கு யாரும் வரவில்லை.

நகையை வாங்கி சென்ற அம்மா சென்னையில் வசித்துக்கொண்டிருந்த தனது மூத்த மகளிடத்திற்கு வந்து தங்கிவிட்டார். மூத்த மகளை திருமணம் செய்து இருப்பது அவருடைய இரண்டாவது தம்பி என்பதால் அங்கு வந்து தங்கிய இரண்டாவது வாரத்தில் தான் அடுத்த வீட்டுகார அம்மாவிடம் நகையை வாங்கிகொண்டு திருமணத்திற்கு சென்று அங்கேயே இரவு தங்கி விட்டு மறுநாள் வீடு திரும்பிய பிறகுதான் இரட்டைவட சங்கிலி தனது கழுத்தில் காணவில்லை என்று தான் அறிந்ததாக தனது தம்பியிடமும் மகளிடமும் தெரிவிக்கிறார். கணவனை சிறுவயதிலேயே பறி கொடுத்துவிட்டு தனியாக நின்று குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்த தனது மூத்த சகோதரிக்கு உபகாரம் செய்ய நினைத்த அவரது தாயும் தம்பியும் எவ்வித சீரும் இல்லாமலேயே அவரது ஒரே மகளை திருமணம் செய்தத்துடன் இரண்டாவதாக வளர்ந்திருந்த மகனையும் தனது தொழிலுக்கு உதவியாக தன்னுடனேயே வைத்து கொண்டிருப்பதுடன் தற்போது அடுத்த வீட்டுக்காரரின் நகை பிரச்சினையை எடுத்து வந்திருக்கும் தமக்கை மீது கோபம் கொப்பளித்தது தம்பிக்கு.

உண்மையாகவே சங்கிலி தொலைந்து விட்டதா அல்லது ஏதாவது ஏடாகோடம் [கோல்மால்] செய்துவிட்டு பொய் சொல்கிறாளா என்பது பற்றி விவரம் அறிந்த எவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. வேறு வழி தெரியாத தம்பி ஊர் சென்று ஆறு பவுன் இரட்டைவட சங்கிலி வாங்கி அடுத்த வீட்டுகார அம்மாவிடம் கொடுத்துவிட்டு வருவதற்காக சென்றபோது அவர்கள் வீடு போர்களம் போல கிடப்பதை கண்டு சற்றே தயங்கி, அவர்களை அழைத்தபோது வீட்டுகார அம்மாவின் கணவர் வெளியே வந்தார், அவரிடம் தவறுதலுக்கு மன்னிக்க சொல்லி, உத்திரவாதத்திற்கு ஊர் பெரியவர்களை அழைத்து சங்கிலியை திரும்ப கொடுத்தார். அதற்குள் அந்த வீட்டுகார அம்மா அதாவது தங்க சங்கிலியின் சொந்தக்காரர் கணவனுக்கு தெரியாமல் தான் சங்கிலி கொடுத்ததால் வீட்டில் ஏற்ப்பட்ட சண்டையில் தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.

அடுத்தவீட்டுக்காரரிடம் தங்க சங்கிலி இரவல் வாங்கி அணிந்துகொண்டு திருமணத்திற்கு போனால்தான் தன்னை அங்கு வந்திருக்கும் மற்றவர்கள் மதிப்பார்கள் என்று நினைத்த பெண் என்ன ஆனார், மகள் வீட்டில் இருந்த அவர் ஒருநாள் மொட்டை மாடியில் வடம் உலர்த்த சென்றவர் தவறி விழுந்து இரண்டு கால்களும் மண்டையும் உடைந்தது. உயிர் போகவில்லை பலமான அடி பல ஆயிரம் செலவு செய்தும் திரும்பவும் இயல்புநிலைக்கு திரும்பாத உடல்நிலையுடன் பலகால போராட்டம்.


வெள்ளி, 18 ஜனவரி, 2013

இந்திய பிரச்சினை

வணக்கம் 

பல மாதங்களுக்குப்பின்னர் இன்றைக்கு இங்கே வர தோன்றியதற்கு காரணம் ஏதும் இல்லை, எதையாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்ப்படுவதே இல்லாமல் போனதன் காரணம் அறிந்து கொள்வதற்கு கடல் அளவு விஷயங்கள் காத்திருக்க எதையாவது எழுதி அதற்க்கு கருத்துக்களை எதிர்பார்த்து வரவேற்ப்பு கிடைத்தால் நிம்மதி அடைவதோடு நிற்காமல் என்றாவது, வாழ்நாளில் ஒரு முறையாவது ஒரு புத்தகமாவது அச்சிட்டு வெளியிட வேண்டும் என்கின்ற ஆவல் எழ அந்த புத்தகம் சிலருடைய கையிலாவது சென்று சேர்ந்திட வேண்டும் என்கின்ற கனவோடு மிகவும் வருந்தி எழுதி ஒன்றோ இரண்டோ அதிகம் போனால் பத்து புத்தகங்களை நாமே நமது நண்பர்களுக்கு இலவசமாக வழங்கி (ஒரு புத்தகம் கூட விற்காமல்) அவர்கள் அவற்றை படித்துவிட்டு சொல்லப்போகும் கருத்துகளுக்கு காத்து கிடக்கும் தவிப்பும் எதிர்பார்ப்பும் எழுதுகோல் பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்ப்படுவது இயல்புதான்.

அந்த நப்பாசையெல்லாம் நமக்கு வேண்டாம், "பழம் புளிக்கிறது" என்று நரியைப்போல் ஒதுங்கிவிடுவதும் இயல்புதான். இவற்றிற்கு மேலே ஒருபடி சென்று, சில நயவஞ்சக கூட்டத்தின் ஒட்டுமொத்த வடிவமாக யார் எழுதுவார் என்று காத்திருந்து அதை அப்படியே தான் எழுதியதை போல "திருடி"ச்செல்லும் "மானம் கெட்ட" அயோக்கியர்களின் சூறையாடலை சமாளிக்க இயலாமல் ஒதுங்கி சென்றுவிடுவதும் இங்கே இயல்புதான். இவற்றை எல்லாம் மொத்தமாக ஒதுக்கி விட்டு அல்லது மறந்துவிட்டு எதையாவது எழுதி கொண்டே இருப்பதும் இயல்புதான்.

எழுதுவதற்கு நாட்டில் என்ன செய்தியா இல்லை, ஒவ்வொரு நாளும் செய்திகள் ஊடகங்களையும் செய்தி தாள்களை நிரப்பி விடுகிறதே. நல்ல செய்தியை லாட்டரி சீட்டு எண்ணை தேடி கண்டுபிடிப்பதை போல கண்டுபிடிக்க வேண்டியதாக உள்ளது. இன்றைய தினத்தில் செய்திகளில் முதலிடத்தை பிடித்துக்கொள்வது பெரும்பாலும் "கெட்ட" செய்திகளாக இருப்பதில் இருந்தே எதை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. எது எப்படி போனால் நமக்கு என்ன என்று நாட்டில் பலர் உண்டு, 'யார் எக்கேடு கேட்டால் உனக்கென்ன, நாம உழைச்சாத்தான் கஞ்சி' என்று இருப்பவர்கள் எண்ணிக்கையில் அதிகம்.

ஒரு கூட்டம் சேர்த்துக்கொண்டு 'ஒழிக' என்று கோஷங்களை எழுப்பி அதிக பட்ச்சமாக தேசிய கோடி அல்லது கட்சி கோடி அல்லது சம்பந்தப்பட்டவரின் உருவம் என்று சொல்லி பொம்மை செய்து அதை செருப்பால் அடித்து தீவைத்து நாசப்படுத்தும்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு இன்னும் கொஞ்சம் அதிகமாக ஒருநாள் திருமணமண்டபத்தில் வைத்துவிட்டு வெளியேற்றுவது வரை தங்களது எதிர்ப்பை காண்பித்து அதை சில ஊடகங்கள் தங்கள் செய்திகளில் காண்பித்து அவர்களுக்கும் 'வேலை' கொடுத்து இவ்வாறாக இந்தியாவில் பிரச்சினைகளும் அதை எதிர்ப்பவர்களும் சாதாரண செய்திகளாகி, எந்த பிரச்சினைகளும் எவ்வித தீர்வையும் காணாமலேயே கோப்புகளுக்குள் பூச்சிகளுக்கு உணவாகும், காலம் கடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் முடிவற்றதாய் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும், கிடப்பில் கிடக்கும் எத்தனையோ பிரச்சினைகளுடன் புதியதும் பழமையாகி விடும் இவைதான் இந்திய பிரச்சினை.

என்னை இவற்றில் எவற்றுடனும் இணைத்துக் கொள்ள விருப்பம் இன்றி எழுதுவதை மட்டும் 'காதலிப்பதால்' மீண்டும் எழுத வந்துவிட்டேன்.


புதன், 14 டிசம்பர், 2011

சின்னக்குயில் சித்ரா


பழைய திரைப்பட பாடல்களை இரவின் நிசப்த்ததில் கேட்கின்ற சுகம் அலாதியானது. அதிலும் மொட்டை மாடியில் பவுர்ணமி நிலவில் பனிவிழும் இரவில் கேட்க்கும்போது அதன் சுகம் இனிமையானது, பீ. சுசீலாவின் இனியகுரல் நாடி நரம்புகளுக்குள் புகுந்து ஏற்ப்படுத்துகின்ற உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. பீ.லீலா, ஏ.எம்.ராஜா, ஜிக்கி பீ.சுசீலா போன்றவர்களின் அழகிய குரல்களுக்குப்பின்னர் சித்ராவின் குயிலோசை சிந்தையை ஈர்த்து வந்தது, வாழ்க்கையில் குறிப்பிட்ட முன்னேற்றம் மற்றும் உச்சங்களை அடைந்தவர்களுக்கு வேறு ஏதேனும் குறைகள் இருக்கும் அல்லது ஏற்ப்படும் என்பது நம்பிக்கை. மேற்கூறிய அத்தனை பாடகர்களும் தங்களது தொழிலிலும் பிரபலத்திலும் எல்லாவித நிறைவுகளையும் பெற்று வாழ்க்கையை நிறைவு செய்தனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் சித்ராவின் பாடல்களை தேடிக்கொண்டிருந்தபோது அதிர்ச்சியளித்த செய்தி எனது தேடலில் தொய்வை ஏற்ப்படுத்தியது, அதற்க்கு காரணம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி [இன்றுடன் சரியாக 8 மாதம் நிறைவடைந்துள்ளது] ஷார்ஜாவில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு தனது எட்டு வயது மகள் நந்தனாவையும் உடன் அழைத்து சென்ற பாடகி சித்ராவிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது, அவர் குளிக்க சென்ற சமயம் அவரது குழந்தை நந்தனா அருகிலிருந்த நீச்சல் குளத்தில் விழுந்து இறந்துகிடந்தாள் என்பது செய்தி.

இந்த
செய்தியை கேட்டவுடன் அவர் என்ன நிலையை அடைந்திருப்பார் என்பதை நினைத்துப்பார்க்கவே வேதனையாக உள்ளது. ஏறக்குறைய ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் சித்ராவின் ஒரே குழந்தை அகால மரணத்தை தழுவியது சாதாரண வேதனையாக இருந்திருக்காது. துபாயைவிட்டு இறந்த குழந்தையுடன் திரும்புவோம் என்று அவர் நினைத்திருக்க முடியாது, எப்போதும் குழந்தையைப்போல சிரித்த முகத்துடன் காணப்படும் சித்ராவிற்கு இப்படியொரு சோதனையா என்று என் மனம் மிகவும் வேதனையடைந்தது. விஜெய் தொலைக்காட்ச்சியில் அதே வயதொத்த குழந்தைகளுடன் அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது தனது குழந்தையின் நினைவு ஏற்பட்டு இன்னும் மனவேதனை அதிகம் ஆகாமலிருக்க வேண்டுமே என்று நான் கவலைப்படுவதுண்டு. இனியொரு குழந்தையை ஈன்றெடுக்கும் நிலையில் அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இழந்த குழந்தையைப் பற்றிய வேதனையை மறப்பதற்கு இறைவன் துணையிருக்கவேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். விருதுகள் அதிகம் வாங்கிய ஒரே தெனிந்திய பாடகி சித்ராதான், அவரது இனிய குரலுக்கு கோடிகணக்கில் ரசிகர்கள் கூட்டம் உண்டு, எல்லோரையும் தனது இனிய குரலின் மூலம் மகிழ்வித்து வருகின்ற இவரது வேதனைக்கு ஈடுசெய்யவோ ஆறுதல் கூறவோ இயலாது.


..............ooooooooooo..............

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

வார்த்தை

வார்த்தைகள் எப்படி தோன்றியது, மனிதன் தோன்றுவதற்கு முன் தோன்றியவற்றுள் வார்த்தைகளும் ஒன்று என கூறப்படுகிறது. வார்த்தைகள் இல்லா உலகம் எவ்வாறு இருந்திருக்கும் அமைதியாகவா, ஓங்கார ஓசை மட்டுமே நிறைந்ததாகவா, ஆதி மனிதர்கள் எவ்வாறு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பார்கள். இவற்றையெல்லாம் இன்றைய ஆராய்சிகள் மூலம் நாம் அறிந்தாலும் இன்றைய உலகில் காணப்படும் மொழிகளுள் பல மொழிகள் கால போக்கில் மாறி அல்லது மாற்றி புழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன, சில வார்த்தைகள் வழக்கத்திற்கு மாறானவைகளாக கருதப்படுவது நம்மை சற்று சிந்திக்கவும் செய்கிறது. ஆங்கிலமொழியினை எடுத்துக்கொண்டால் பிரிட்டிஷ்காரர்கள் புழங்குகின்ற ஆங்கில சொற்க்களுக்கும் அமெரிக்கர்கள் புழங்குகின்ற ஆங்கில சொற்க்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுவதை நாம் அறிவோம்.

இதற்க்கு காரணங்கள் பல இருப்பினும் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுவது எளிய முறையில் வார்த்தைகளுக்குரிய சத்தத்தை வைத்து அவற்றை உச்சரிக்கின்ற வகையிலேயே எழுதுவது அமெரிக்கர்களின் ஆங்கிலம். ப்ரிடிஷ்காரர்களின் ஆங்கிலம் என்பது மிகவும் முதன்மையானதும் பழமை வாய்ந்ததுமாக இருப்பதால் அந்த ஆங்கில சொற்களுக்கு தனி தன்மைகள் நிறைய உண்டு. பிரிட்டிஷ்காரர்கள் உபயோகிக்கும் ஆங்கில வார்த்தைகள் பலவற்றில் உச்சரிப்பிற்க்கும் எழுத்திற்கும் பல மாற்றங்களை நம்மால் காண முடியும். இலக்கியமாக கருதப்படும் ஷேக்ஸ்பியரின் ஆங்கில வார்த்தைகள் முற்றிலும் வேறாக இருக்கும் இதனாலேயே அவற்றை ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம் என்று வழங்கப்படுகிறது. கிரேக்கு இலத்தீன் மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் வேதாகமத்தை [பைபிள்] மொழிபெயர்ப்பு செய்தபோது அதற்க்கு கையாளப்பட்ட ஆங்கிலச் சொற்கள் முற்றிலும் வித்தியாசமாக இருந்தன, இதற்க்கு காரணம் சாதாரணமாக புழக்கத்தில் இருந்த ஆங்கில வார்த்தைகளையே வேதாகம வார்த்தைகளாக்கும் பட்ச்சத்தில் அதன் முக்கியத்துவம் சாதரணாம கருதப்படக் கூடாது என்பதே.

தமிழ் மொழிக்கான வரலாறுகள் மிக அதிகம். பழங்காலத்தில் உபயோகிக்கப்பட்ட தமிழ் வார்த்தைகளும் எழுத்துக்களும் இன்றைய புழக்கத்தில் இல்லை என்பது தமிழ் மொழியின் வரலாற்றின் மிகவும் வருத்ததிற்குரிய செய்தி. இந்தியாவின் ஆட்சி மொழி தற்போது ஹிந்தியாக இருந்தாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு மொழிகள் பேசவும் எழுதவும் உபயோகிக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் ஆட்சி செய்து பல ஆண்டுகள் தங்கியிருந்த காரணத்தால் இந்திய மொழிகளில் பல அயல்நாட்டு வார்த்தைகளும் கலந்து அவை இன்றும் உபயோகிக்கப்பட்டு வருகின்றது. சென்னையின் பேச்சு மொழியில் பல வேற்று மொழி சொற்கள் கலந்து அவை இன்றுவரை புழக்கத்தில் இருந்து வருகிறது.

சென்னை துறைமுகம் மிகவும் பழமை வாய்ந்தது பழங்காலத்தில் சென்னை முக்கிய வியாபாரஸ்தலமாக விளங்கியது பல நாட்டைச் சேர்ந்தவர்களின் புகலிடமாக விளங்கியது. இதனால் பல மொழி சொற்கள் தமிழின் இடையே பேச்சு மொழியாக நுழைந்தது. அவ்வாறு நுழைந்த வேற்றுமொழிச் சொற்க்களை அதன் அர்த்தம் அறியாமலேயே பயன்படுத்தியதன் விளைவாக அவற்றின் உச்சரிப்பும் தவறாக உச்சரிக்கப்பட்டது. இவ்வாறு 'சென்னைத் தமிழ்' என்று இன்றைக்கு கேலி செய்யப்படும் பேச்சுத் தமிழ் உருவானது. வேற்று மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் வியாபார நோக்கிற்காக பெருமளவில் சென்னையில் குடி புகுந்ததன் விளைவு அவர்கள் தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கின்ற விதமும் வித்தியாசமானதாகிப் போனது. 'சென்னைத் தமிழ்' பலவிதங்களில் வித்தியாசப்படக் காரணம் சென்னை என்பது ஆதிகாலம் தொட்டே வியாபாரஸ்த்தலமும் பல வெளிநாட்டவர்களின் வருகையும் அவர்கள் பயன்படுத்திய தமிழ் உச்சரிப்பும் மிக முக்கிய காரணம்.

அர்த்தம் தெரியாமலேயே புழக்கத்தில் இன்றுவரையில் பேசப்படும் 'சென்னைத் தமிழ்' வார்த்தைகள் இவ்வாறு உண்டானவைதான்.

கசமாலம், கேப்மாரி, தூம, கலீஜ், கழிசாட, கம்மினாட்டி, கண்ட்ராவி, நாதாறு, லோலாயி, நாதாரி, நாஷ்டா, வஸ்தாதி, லவடிகபால், வண்ட வண்டையா, வவுறு, கயிலாத்து, இஸ்த்துகினு, கப்பு, கவுச்சி, கக்கூஸ், கக்கிசு, சாக்கடை, சாக்காட, எக்கா, தபா, ராவிக்கு, ரவூண்டு, கயித, இட்டாந்த, ரோதன, டாவு, டபாய்காத, லங்கடா, கைமாத்து, கச்சிட்ட, எரமாரம் கெட்டது, கலாப்பன, முச்சூடும், கபோதி, டமாரம், சிம்ட்டா, லொட்டு லொசுக்கு, தாம்பு கவுறு, செத்தை, பின்னாடி, முன்னாடி, மின்னாடி, ஓடியாந்து, கீத்து கொட்டா, சீண்டாத, கடாசு, சீவு, துண்ணு, சீக்காளி, ஜளிப்பு, வாராவதி, டப்பாங்குத்து, ஸ்கோலு, பாத்ரூம்பு, மேஜர், மஞ்சாசோறு, மாஞ்சா, மாமூல், சொச்சம், கொல்லிக்கி, பேணுடுச்சி, டிச்சி, கப்சா, மஜா, மாலு, லொள்ளு, அண்ணாத்த, அயித்த, தோட்டி, லச்சி, லம்ப்பா, லடாய், பன்னாட, பிசாத்து, ஏடாகோடம், பவுசு, மவுசு, நெசம், நெசமாலம், பூடு, கீது, ரவுண்டு கட்ற, மைனரு, கம்முன்னு, டவுசரு, இன்னாண்ட, அன்னாண்ட, உன்னாண்ட, என்னாண்ட, சொதப்பல், லேசா, ரொம்ப, கொஞ்சூண்டு, பச்சத்தண்ணி, தமாத்தூண்டு, காபந்து, மல்லாந்துகினு, வூட்டாண்ட, கவுத்துட்டான், மெதப்பு, மப்பு, பினாத்தல், சுதார்ச்சிகின, எகிறிப்புடும், காத்தால, தித்திப்பு, முட்டாய், கைக்குட்ட, நிக்கர், நெஜார், நிஜார், கில்லிதாண்டு, கிண்ணம், டவரா, லோட்டா, குண்டான், அண்டான், தவலை, போண்ச்சட்டி, டம்ளரு, ஸ்பூனு, யேனம், கரண்டி, நொண்டி, சாக்கு, ஜாட்டி, லாந்தர், ஜட்டி, நிஜம், கானா, பேஜார், டொப்பி, தொப்பி, ரவிக்க, வெசாய கெய்ம, வங்காயம், கரீப்பல, பாஞ்சு, ரொட்டி, வூடு, கொட்டாய், உசிரு, மசுரு, கஞ்ஜி, சளி, ஜொரம், ஜுரம், டுபுக்கு, டுபாக்கூர், பளார், டமால், புட்டி, பீட, டப்பா, டின்னு, பத்த, டோபி, டப்பி, கம்மி, ஜொள்ளு, பிகில், பளுவு, இஸ்துகினு, டக்கர், மாம்ஸ், கெலிச்சேன், கிராப்புத்தல, கேட்டுவாசல், இஸ்த்ரி, பாத்து, கோயி, டப்பாசு, பொத்தல், பெராக்கு, டவுறு, நோவு, எச்ச, வேர்வ, தண்ணி, போர்வ, ராத்திரி, கவுறு, டிமிக்கி, டமாசு, கொரட்டை, போங்கு, வாத்தியார், கசாப்புகட, ஜிம்பாத, சக்கர, பீ, மூஞ்சி, பத்தாது, குஜால், சால்ஜாப்பு, பங்க், உடான்சு, கவுந்துடுச்சி, ஏட்டா போட்டி, எடுபுடி, கொட்டாங்கச்சி, தொடப்பம், பிஞ்சுடும், பொம்மினாட்டி, பொம்பள, ஆம்படையான், ஆம்பள, தின்னு, கோந்து, ஒருவாட்டி, மைய, யம்,

கஞ்சன், ஜோல்னா, வஸ்த்ரம், பசங்க, ஜல்லி, தனியா, பிஸ்த்தா, லங்க்கோட்டா, ஜோட்டால அடி, பொம்மை, புளுகு, பையா, பிசினி, மைதா, விவஸ்த்த, அவஸ்த்த, சேதாரம், ஜக்கு, பீடா, பூந்தி, பாதாம், ஜோரா, சதுர்த்தி, சஞ்சலம், ஜலசஞ்சாரம், ஊஞ்சல், ஜன்மாஷ்டமி, குருஷேத்ரம், உஷ்ணம், குல்லா, திப்பு, கஞ்சா, குஞ்சலம், ஜம்பம், அலட்டல், மைதானம், விக்கல், நாக்கு, மூக்கு, மாமா, கரம், கரம் மசாலா, மசாலா, பினாமி, சுனாமி, சங்கிலி, மிட்டாய், ரசகுல்லா, ஜால்ரா, ஜாதகம், ஜல்தி, தபசு, இழுவ, பக்கா, தண்டால், பஜார், சூத்ரா, சாஸ்த்ரா, ஸ்த்ரி, ஸ்நானம், ஜனனம், ஜனம், ஜாஸ்த்தி, ஜாதி, உஷார், உபவாசம், ஸாது, விசில், தோச, பாராட்டா, பொரோட்டா, தோஷம், ஜலதோஷம், சூன்யம், பில்லிசூன்யம், கிஸ்த்தி, பிரஜை, பிரஜா, கெஞ்சி, லஞ்சம், பைசா, பிசாசு, சைத்தான், ஜிவ்வுன்னு, ஜவ்வு, ஜீரா, ப்ரேமம், பக்கிரி, பக்க, பக்கி, ஜடம், ஸ்த்தானம், ப்ரீத்தி, பிரவீன், பிரேமா, சங்கதி, துள்சி, கிராம்பு, சோம்பு, லேகியம், வெந்தியம், சக்கை, சீரகம், விசேஷம், விஷம், ஷேமம், தமாசு, தமாஷ், விஷமம், விஷயம், கஷாயம், ஜோடி, கைலி, பூஜா, பூஜை, நமஸ்த்தே, நமஸ்காரம், தர்பார், இஷ்டம், கஷ்டம், நஷ்ட்டம், தாலி, மங்கள் சூத்ரா, கிண்டல்,

வாபஸ், கேஸ், மொசேக்கு, லவ்ஸ், ஆட்டோ, லாரி, பஸ்சு, சைகிள், பைக், ரோடு, போலீசு, தொரை, பார்ட்டி, பாரா, தார், டபுள்ஸ், பஞ்சர், சைபர், நகர், தெரு, காலனி, ரோந்து, பேட்டை, டவுன் பஸ்ஸு, பிரேஸ்லெட், ஹெல்மெட், சோப்பு, சென்ட்டு, காலி, காலிப்பய, ஜாகெட், பாடி, ப்ரா, சாக்ஸ், மப்ளர், சொட்டர், பிளாட்டு, ப்ளேடு, பல்பு, டென்டு, சூப், கலர், கரன்ட், லாக், பிளைட்டு, செயினு, டிரங்கு, நெக்லேசு, டாலர், டிப்சு, பீடி, சிகரெட்டு, கேரம், டவுட்டு, பங்களா, காமெடி, ஜோக்கு, கலாட்டா, ரம்மி, மம்மி, ஜிம்மி, லூசு, ஜேப்படி, ஜோபி, ஆஸ்பத்திரி, நர்சம்மா, டாக்டரம்மா, ஆயாம்மா, டிப்பன், டவல், காலரா, காலிப்ளவர், ஸ்டூல், ஸ்டூல்சைடு, ரயிலுவண்டி, கூலி, போர்டர், டிப்பன் பாக்ஸ், காப்பி, ஜூட், லக், கஞ்சுக்கே லாட்டரி, லத்தி சார்ஜ், ஜெயிலு, முட்ட கோஸு, பிராடு, ஸ்லிப்பர், சப்பல், பர்சு, பாக்கெட், பனியன், ரவுடி, ஜாலி, பில்டர் காபி, சாத்தான், ஆப்பிள், ஆரஞ்சு, ரிக்க்ஷா

சாம்பார், பூஷணி, தர்பீஸ், சர்பத், சாத்துக்குடி, திராட்ச்சி, கிஸ்மிஸ், ஜானவாசம், குஷி, பிசினாரி, ஜடை, ஜாடை, சக்கரை, பிருந்தா, ஜில்லுன்னு, ஜாலம், ஜலம், மேஜை, பூஜ்யம், சங்கீதம், ஆலாப், ப்ரியா, ஸ்ருதி, லையா, வேஷ்டி, பரீட்சை, குஸ்த்தி, கஜானா, சந்தோஷம், வாத்தி, பேதி, ஜந்து, ஜன்னல், ஜகா, சந்து, செருப்பு, கம்மல், ஜிம்மிக்கி, லோலாக்கு, டோலாக்கு, வங்கி, தோடு, சீப்பு, குல்குந்து, சல்வார், சூடி, சூடிதார், துப்பட்டா, சாப், கசாப்பு, சாயபு, ஷால், ஜப்தி, கொரடா, கோரம், அகோரம், தவ்வா, கடாய், ஜல்லிக்கரண்டி, தண்டோரா, தண்டம், காத்தாடி, கெழடு, ஒசத்தி, ஜகா, எரா, துட்டு, கடிகாரம், சாயா, மணி, பைத்தியம், நகை நட்டு, ஜெயிச்சேன், கடுதாசி, தோத்துட்டேன், வெவரம், வாண்டு, சதுரவட்ட, ஜீரணம், பிக்கல், புடுங்கல், பாயா, பாயாசம், ஜம்முன்னு, கேவலம், மாப்பு, பாஷை, கத்து, சாப்பாடு, பேத்தல், பஜனை, கோஷ்டி, லட்சம், அதிஷ்டம், லக்க்ஷணம், ஷணம், பொக்கிஷம், ஜமா, வேசி, தாசி, லோலன், புருஷன், ஜிகினா, சவால், அபிலாஷ், பாபு, சொர்ணம், சோனா, பௌர்ணமி, கல்யாண், மந்த்ரா, ஸ்டூ, குருமா, ஹேமா, ஹோமம், ஜாடி, பந்த், ஜல்லடை, ஜெய், விஜயம், சபா, சங்கம், ஜமக்காளம்,

மொகரகட்ட, செரங்கு, சல்லி, பூரா, மருத, குருத, இங்கிட்டு, அங்கிட்டு, எங்கிட்டு, ராவடி, வர்க்கி, ராட்டி, செராய், ஆச்சி, ஆத்தா, மைனி, ரவைல, வெஞ்சனம், வெள்ளென, அவுக, அவிங்க, இவிங்க, குசும்பு, ரவுசு, சாமான், ஜாமான், சேட்டை, அந்தால, பொண்டாட்டி, கிட்ட, கிட்டக்க, தூரக்க, கொட்டாவி, கண்ணாலம், ரூவா நோட்டு, அம்புட்டு, இம்புட்டு, பொறவு, இத்துனூண்டு, இத்தாம்பெரிசு, காலம்பர, எந்திரி, மிஞ்சி, மெட்டி, கொலுசு, பூட்டு, சாவி, கொக்கி, ரிப்பன், பின்னு, பவுடரு, பட்டன், ஊக்கு, நாதியத்த,

இன்னும் ஏராளமான வார்த்தைகள் தமிழா அல்லது வேற்று மொழியா என்று பிரித்து அறியா வண்ணம் புழக்கத்தில் கலந்து விட்டது. தமிழ் வார்த்தைகள் உருக்குலைந்து அந்நிய மொழி போன்ற உச்சரிப்பை பெற்று உபயோகிக்கப்படுவதே 'சென்னை தமிழ்'.

**********************

திங்கள், 26 செப்டம்பர், 2011

சொல்வதெல்லாம் உண்மை

குறையாத வெப்பம் வெயலின் சூடு தணியாத வானிலை, குளிர்சாதன பெட்டியினால் உண்டாகும் குளிர்ந்த அறையினுள் முடங்கி கொண்ட போதும் மனதினுள் நினைவலைகள் ஏற்படுத்திய வெப்ப காற்று உடலை மீண்டும் வியர்க்கச் செய்தது..............

அந்தச் சிறுவனுக்கு வயது பத்து, பசிக்கு உணவும் உறங்குவதற்கு வீடும் இல்லாத சிறுவன், அவனுக்குத் தெரிந்தது பசி எடுத்தால் காண்போரிடம் கை நீட்டுவது கிடைக்கும் காசில் ஏதேனும் வாங்கி தின்பது. உறக்கம் வந்தால் எங்கேயாவது படுத்துறங்குவது. அன்றைக்கு அவனது பசிக்கு தீனி ஏதும் கிடைக்கவில்லை. தான் எப்போதும் வாங்கும் கடைக்குச் சென்று தின்பதற்கு ஏதேனும் கொடு காசு கிடைத்தவுடன் கொடுத்துவிடுவேன் என்ற பாவனையில் தேநீர் ஆற்றிக்கொண்டிருந்த கடை முதலாளியை பார்த்தபடி நின்றிருந்தான். தேநீர் கடைக்காரன் 'போடா பிச்சை எடுத்து காசு கொண்டா, இப்போ இங்கிருந்து போடா' என்று கோபத்துடன் சிறுவனை திட்டினான், சிறுவனுக்கு வயிற்றுப் பசியில் கடைக்காரனது கோபக் குரல் கேட்கவில்லை, தேநீர் கடைக்காரன் தான் ஆற்றிக்கொண்டிருந்த சூடான தேநீரை அந்த சிறுவனின் முகத்தில் வீசினான், வாய்விட்டு கத்துவதற்க்குக் கூட உடலில் தெம்பில்லாமல் அந்த சிறுவன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

பெருத்த ஒலியுடன் தேநீர் கடையில் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த சிறுவன் கண்ட காட்சி தேநீர் கடை முழுவதும் தீ, தேநீர் கடைக்காரனின் உடல் முழுவதும் தீ.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒருவழியாக படிப்பை முடித்து ஏழ்மைக்கு முற்றுபுள்ளி வைக்கும் நேரம் வந்தாகி விட்டது என்ற மன நிம்மதி, அன்றைய தபாலில் வந்திருந்த நேர்முக தேர்விற்கான கடிதங்களை படித்துவிட்டு மனதில் ஓடிய எண்ணச் சுமைகளை ஒருகணம் மறந்து, வயிற்றில் குடல்கள் உணவிற்காக கத்தும் சத்தம் காதை அடைக்க, குடத்திலிருந்த குடிநீரை பருகுவதற்கு குடத்தை திறந்த போது வண்டல் நீர் இருந்தது, அவளது தாய் வீட்டு வேலை செய்துவிட்டு வந்தால்தான் குடிநீர் முகர்ந்து வரவேண்டும். பாவம் தன் தாய், தனது பசியை பொறுத்துக் கொண்டு வேலை பார்க்கும் வீடுகளில் கிடைக்கும் உணவை தன் மகளுக்கு சேமித்து வைத்து எடுத்துவருவதற்குள் மணி மதியம் இரண்டை தாண்டிவிடும். குடத்தை எடுத்துக் கொண்டு குடிசையின் அருகிலிருந்த கிணற்றில் குடிநீர் எடுத்துவர சென்ற போது அந்த கிணற்றின் சொந்தக்கார அம்மாவின் வீட்டை கடந்து செல்ல, வீட்டினுள்ளிருந்த கிணற்றின் சொந்தக்கார அம்மாவிற்கு என்ன தோன்றியதோ வேகமாக வீட்டிலிருந்து வெளியே வந்து குடத்துடன் நீர் எடுக்க வந்த அந்த பெண்ணின் எதிரிலேயே வேகமாக கிணற்றில் போடபட்டிருந்த கயிற்றையும் வாளியையும் எடுத்துச்சென்று தனது வீட்டினுள் வைத்து விட்டாள்.

குடிநீர் எடுக்கச் சென்ற இளம் பெண்ணிற்கு அதற்கான காரணம் விளங்கவில்லை. காலி குடத்துடன் தன் குடிசைக்குத் திரும்பியவள் தன் தாய் களைப்புடன் வீட்டினுள் இருப்பதை கண்டு ஒன்றும் பேசாமல் காலி குடத்தை வாசலிலேயே வைத்துவிட்டு குடிசையினுள் சென்று அன்றைய தபாலில் தனக்கு வந்திருந்த நேர்முகத் தேர்வுகளுக்கான கடிதங்களைப்பற்றி தனது தாயிடம் கூறி தங்களது வறுமை ஒழியப்போகின்ற குதுகலத்தை பகிர்ந்து கொண்டாள், குடிநீர் எடுத்து வராததன் காரணத்தையும் தன் தாயிடம் சொல்கிறாள். அந்த ஏழைத் தாய் குடிநீர் எடுத்து வருவதற்காக அதே கிணற்றை நோக்கி செல்கிறாள், தங்களது தேவைக்கான நீரை கிணற்றிலிருந்து எடுத்துக்கொள்வதற்க்கு கைமாற்றாக அந்த ஏழை தாய் அவர்கள் வீட்டு வேலைகள் பலவற்றை இலவசமாக செய்வதுண்டு. அந்த ஏழைத் தாய் செய்த இலவச உதவிகளைப் போல அவளது மகள் இலவச உதவிகளை தங்களுக்கு செய்து தருவதில்லை என்பதே அந்த 'கிணற்று'அம்மாளின் கோபம்.

சம்பவம் நடந்த அடுத்தநாள் இரண்டு ரவுடிகளும் அவர்களது குழுக்களும் அங்கு எதிர்பாராமல் திடீரென்று மோதிக் கொண்டது, அவ்வாறு மோதிக்கொண்ட போது ஒருவரையொருவர் கூறிய ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதை அறியாமல் வேடிக்கை பார்க்க வீட்டை விட்டு வெளியே வந்த அந்த 'கிணற்று'அம்மாவின் கைகளில் யாரோ ஒருவன் எறிந்த ஆயுதம் வேகமாக விழுந்ததில் வலதுகை பழுதடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அந்த 'கிணற்று'அம்மாவுக்கு பின்னர் பாதி கையை முற்றிலுமாக அகற்றும் நிலை ஏற்பட்டது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அந்த பையனுக்கு சுமார் பதினெட்டு வயதிருக்கும் அந்த பெண்ணிற்கு இருபது வயதிருக்கும், இருவரும் அடுத்த வீட்டில் வசிப்பவர்கள், இருவரும் வெவ்வேறு பள்ளியில் படித்து வந்தனர். பையனின் வீட்டில் பணவசதி அதிகம் இருந்ததால் அதிகம் பணம் கட்டி ஆங்கிலப்பளியில் படிக்க வைத்தனர். பையனுக்கு படிப்பைத் தவிர மற்ற எல்லாம் எளிதில் கைவந்த கலையாக இருந்தது, ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு முறை படித்து வந்ததினால் பதினெட்டு வயது முடியும் வரை பள்ளியிறுதி வகுப்பை அடைய இயலவில்லை. இரவில் படிக்கிறேன் என்று கூறிவிட்டு அடுத்த வீடுகளின் தென்னை மரங்களில் காய்த்திருக்கும் தேங்காய், இளநீர் போன்றவற்றை வெட்டி எடுத்து வந்து வெட்டித் தின்பது வழக்கம். தெருவில் குலைக்கும் நாய்களை அடித்துக் கொன்று பாழடைந்த கிணறுகளிலும் வாய்க்கால்களில் எறிவது போன்ற பல அக்கிரம செயல்களுக்கு சொந்தக்காரன்.

அடுத்த வீட்டு இருபது வயது பெண்ணை நோட்டமிடுவது தனது தாயின் தங்கை மகளை, தங்கையுடன் உடலுறவுகொள்வது போன்ற அகிரமங்கள் செய்வதில் வல்லவன், அதைவிட கொடுமை அவன் வீட்டில் இருந்த கன்று குட்டிகளுடன் உடலுறவு கொள்வது. இவனது இந்த வீர தீர சாகசங்கள் அந்த பகுதியில் பிரசித்தம். அடுத்த வீட்டு பெண்ணோ இவனை பார்ப்பது கூட கிடையாது, அந்த பெண் தன்னை கவனிப்பதே கிடையாது என்ற கோபம் அவனது நெஞ்சில் அதிக நாட்களாய் உறுத்தி வந்தது, ஏனெனில் ஏனைய பெண்கள் அவன் அணிந்து வரும் உடைகளையும் ஆடம்பரத்தையும் கவனிக்காமல் இருப்பதில்லை, சில பெண்கள் அவனிடம் இருக்கும் பண புழக்கத்திற்காக போலியான நட்ப்பும் வைத்திருந்தனர். அவனது கோபத்தின் உச்சமாக அடுத்த வீட்டு பெண்ணின் வெள்ளைச் சுவற்றின் மீது அப்பகுதியில் வசித்த வேறு ஒரு பையனுடன் கள்ள தொடர்பு உள்ளது என்று இல்லாதவற்றை எழுதி அசிங்கப்படுத்தினான். தன்னுடன் பிறந்த தம்பிகளைக் கூட விட்டு வைக்கவில்லை அவர்களை எழுத்தில் அடங்காத விதங்களில் கொடுமைபடுத்துவது போன்ற பல அரி காரியங்களை நடப்பித்து வந்தான், அந்த பையனின் அத்து மீறல்களையெல்லாம் அந்த பையனின் தாயார் கண்டுகொள்வதில்லை மாறாக தாயாரிடம் பையனைப் பற்றி குற்றம் சாட்டுபவரை 'உண்டு இல்லை' என்று வசைபாடுவாள். பையனின் தகப்பனாரிடம் யாரேனும் அவனைப்பற்றி புகார் செய்தால் தகப்பனார் தனது மகனை கண்டிப்பதற்கு விட்டுகொடுக்கமாட்டாள். மாறாக மகன் செய்த தவறுகளை கண்டிக்கும்போது தகப்பனிடம் சண்டையிடுவாள். இவ்வாறாக அந்த பையனின் அட்டுழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருந்தது. அந்தப்பையன் புதிய இரண்டு சக்கரவாகனம் ஒன்று வாங்கினான்.

முழு வேகத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணிப்பது அவனுக்கு அலாதி சுகம் ஆனால் இரண்டு சக்கர வாகனத்தை வாங்கிய அடுத்தநாள் பெருத்த விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கபட்டான். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபோது அவனது வலதுகை உபயோகிக்கும் நிலையை இழந்திருந்தது.

.............................................................................

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

எங்கே மனிதன்

எனக்கும் என் நண்பனுக்கும் ஒரு சிறு போட்டி, எங்கெல்லாம் மக்கள் வசீகரிக்கப்படுவார்கள் என்பது பற்றி, மூன்று பேர் ஒருவர் ஒரு மூட்டை அரிசி, இன்னொருவர் இலவசமாக திரைப்படம் திரையிடும் கருவிகள், மூன்றாமவர் இலவச அருள் வாக்குகள் கூறி இலவசமாக வியாதிகளை சுகப்படுத்துபவர். மூவரும் வெவ்வேறு கிராமங்களுக்கு ஒவ்வொரு நாள் சென்று எடுத்துச்சென்றவற்றை இலவசமாக கொடுப்பதாக அறிவித்தோம், அதை கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இலவசத்தை பெற்றுச் சென்றனர், அடுத்தமுறை அதே பொருட்களை மிகவும் குறைவான விலையில் கொடுப்பதாகக்கூறினோம், கூட்டம் முதல் முறையைவிட பாதியாக குறைந்தது, அடுத்த முறை சில காரணங்களைக் கூறி உதவித்தொகை அல்லது பொருளுதவி கேட்டுசென்றோம். ஒருவர் கூட கொடுப்பதற்கு முன்வரவில்லை.

இதில் ஒரு விஷயம் நன்கு விளங்கியது, இலவசமாக கிடைக்கும் என்றால் ஏழைகள் மட்டுமில்லாமல் சற்று வசதியுள்ளவர்கள் கூட இலவசப் பொருட்களை பெற்றுச் சென்றனர், உதவி என்று கேட்டு சென்ற போது வசதி படைத்தவர்கள்கூட உதவி செய்வதற்கு முன்வரவில்லை. மக்களின் ஒட்டு மொத்த உணர்வும் இலவசமாக கிடைப்பதை பெறுவதில் எந்தவித தயக்கமும் இன்றி பெற்றுக்கொள்ளச் செய்கிறது, அதே போன்ற உதவியை திருப்பி செய்வதற்கு சுயநலம் இடம் கொடுப்பதில்லை. இன்னொரு சோதனையில் மூவரும் ஜன நடமாட்டம் மிகுந்த கடைவீதியில் கூடி நின்று ஏதோ நடக்கக் கூடாத அசம்பாவிதம் நடந்துவிட்டது போன்ற பரபரப்பை ஏற்ப்படுத்திய போது மக்கள் அந்த சம்பவம் என்ன என்று அறிந்து கொள்வதற்கு வேகமாக கூட்டம் கூடினர்.

ஆடு மாடு யானைகள் போன்ற விலங்கினங்கள் ஒன்று நடந்து போகின்ற பாதையிலேயே மொத்த கூட்டமும் பின்பற்றுவதைப்போல மனிதர்கள் ஒருவர் செய்வதைப்போல அல்லது ஒருவர் போகின்ற போக்கிலேயே மற்றவர்களும் செல்வது கூட பல சமயங்களில் காணப்படுகின்ற செயலாக உள்ளது. சிறுவயதில் படித்த குல்லா வியாபாரியும் குரங்குகளும் என்ற கதை நினைவிற்கு வருகிறது. எங்காவது பணமோ நகையோ வேறு பொருட்களோ கிடைத்துவிட்டால் அதை கையில் எடுத்த பின்னர் 'பாவம் யாருடையதோ, இதை தொலைத்துவிட்டு வருத்தத்தில் என்ன செய்கின்றாரோ' என்று எத்தனை பேரால் நினைக்க முடிகிறது. யாரோ ஒருவரின் உடமையாக இருந்தாலும் தனது கைக்கு வந்து சேர்ந்ததில் மகிழ்வுறும் மனிதர்களை நம்மால் பார்க்க முடிகிறது, கிடைத்த பணத்தையோ நகையையோ மற்ற உடமைகளையோ எடுத்துச் சென்று காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென்று எங்கோ ஒரு சிலர் செய்வதால்தான் அவரை ஊடகங்களில் செய்திகளில் வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றனர், அத்தனை அபூர்வமான செயல்.

பல பொருட்கள் காவல் துறையிடம் ஒப்படைக்கபட்டும் கூட அப்பொருளை இழந்தவரின் கைகளுக்கு சென்று சேருகிறதா என்பதும் சந்தேகம்தான். அடுத்தவருடைய உடமைகள் எதுவாக இருப்பினும் அதை இலவசமாக எடுத்துக் கொள்வதில் மனித மனம் திருப்தியடைவது ஏன், அதே சமயம் தன்னுடைய உடமைகளை இழக்கின்ற சமயத்தில் அல்லது தொலைத்துவிடுகின்ற சமயத்தில் நாம் படுகின்ற துன்பத்திற்கு அளவே இருப்பதில்லை என்பதை நாம் சிந்திக்க மறுப்பது ஏன். இத்தகைய சுயநலம் மனிதர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகிறதா அல்லது அதிகபட்சமாக காணப்படுகிறதா என்பதை நாம் யாவரும் நன்கு அறிவோம், அடுத்தவரின் உடமைகளுக்கு ஆசைப்படாத மனிதர்கள் மிகவும் குறைவா, அல்லது அதிகமா, அதில் நாம் எந்த ரகத்தை சேர்ந்தவர்கள்?

கோவிலின் வாசலில் கழற்றிவிட்டுச் செல்லும் புதிய காலணிகளைக் கூட விடுவதில்லை, அப்படியொரு காலணி திருடித்தான் அணிந்துகொள்ள வேண்டுமென்றால் அதைவிட வெறும் காலிலேயே நடந்து செல்வது மேன்மை என்பதை அறிந்திருக்கவில்லையா, 'எனக்கு வேலை கிடைக்கவில்லை, போதிய வருமானமில்லை, பட்டினி பசி' என்று கூறுகின்ற போது அடுத்தவரின் உடைமைகளின் மீது கவர்ச்சி உண்டாவது தவிர்க்க இயலாததா, அதைவிட இறந்து போதல் உத்தமம் அல்லவா. சொகுசு வாழ்க்கை பழகி போச்சு என்பதால் உடலை விற்கும் வியாபாரம் செய்தாவது அந்த வாழ்க்கையின் வசதிகளை தொடர, அப்படி சொகுசுகளில் வாழ்ந்த உடலில் பெயர் சொல்ல இயலாத வியாதிகள் வந்து மடிவதைவிட அதற்க்கு முன்பே மடிவது மேன்மையல்லவா.

மனிதன் என்றால் என்ன, பகட்டும் வசதிகளும் சுக போகங்களும் நிரம்பியதா, அப்படி இல்லாத மனிதன் பாவப்பட்ட ஜன்மமா, எதையும் எவ்வாறேனும் அடைந்து விடுவது மட்டுமே வாழ்க்கையின் வெற்றியா, வெற்றி தோல்விகள் என்பது பணம் மற்றும் புகழை எவ்வாறேனும் அடைந்து விடுவதில் உள்ளதா. அவ்வாறு அடைய இயலாதவர்கள் மனிதர்கள் இல்லையா, பூமியில் பிறப்பதே சுகமாக
வாழ்க்கையை வாழ்ந்துவிடுவதற்க்காக மட்டும்தானா.


சனி, 2 அக்டோபர், 2010

கேள்விக்கு என்ன பதில்

1. அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பு மக்களிடையே விரோத போக்கை அதிகரிக்காமல் ஜனநாயக ரீதியில் மிகவும் நேர்மையானதாகவே இருந்தது

1. மிகவும் சரி

2. மிகவும் தவறு

3. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருப்பதால் தாக்கம் அதிகரிக்கவில்லை

4. சட்டம் ஒழுங்கு சரியான முறையில் அமலில் இருந்ததால் குழப்பங்கள்
ஏற்ப்படுவதை தவிர்க்க முடிந்தது


2. இன்றைய இளைஞர்கள் மதத்தின் மீதும் அவற்றை சார்ந்த கலவரங்களிலும் ஈடுபடுவதில் ஆர்வத்துடன் இல்லை

1. மிகவும் சரி

2. மிகவும் தவறு

3
. சரியான சமயத்தில் கலவரங்களில் கலந்து கொள்வார்கள்

4. கலவரங்கள் வாழ்க்கைக்கு அவசியமற்றது என்பதால்



3. காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுவதில்

1. எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது இதற்க்கு காரணம்

2
.
இந்தியாவை மற்ற நாடுகளுடன் இணைக்க விருப்பமில்லை

3
. வேறு நாடுகளின் வீரர்கள் வெற்றி பெறுவதை பார்க்க பிடிக்கவில்லை

4
. ஆளும் கட்சிக்கு மேலைநாடுகளில் நல்ல பெயர் கிடைப்பது பிடிக்கவில்லை


4. எந்திரன் திரைப்படம் முதல் நாள் பார்ப்பது


1. என் வாழ்க்கையின் குறிக்கோள்

2. ரஜினிகாந்திற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்

3. ஷங்கர் மற்றும் ரகுமானுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்

4. யாருக்காகவும் அல்ல திரைப்படம் முதல் நாள் பார்ப்பது எனக்கு பிடிக்கும்




செவ்வாய், 28 செப்டம்பர், 2010

நான்

ஒரு வழியாக நிச்சயதார்த்த ஏற்ப்பாடுகள் வேகமாக நடந்துகொண்டிருந்த சமயம், ஜவுளி நகைகள் என்று வாங்கும் படலம் துவங்கியபோது ஜவுளிக்கடையில் திருமணத்திற்கும் சேர்த்து புடவைகள் வேட்டிகள் ரிசப்ஷனுக்கு ஒரு தனியாக கோட்டும் சூட்டும் என்று வாங்கிக்கொண்டிருந்த போது மணமகள் சொன்னாள் முதலில் எனக்கு பிடித்த நிறத்தில் புடவைகள் வாங்கி விடுகிறேன் அதற்கேற்றார் போல உங்களுக்கு பான்ட் ஷர்ட் எடுக்கலாம், புடவைகளை எடுத்து முடிப்பதற்குள் இரவு கடைகளை அடைக்கும் சமயமாகிவிடவே மீண்டும் அடுத்த நாள் தொடர்ந்தது, மணமகள் தனது புடவைகளை தனக்குப் பிடித்தவாறு தேடித்தேடி எடுத்ததுடன் விடாமல் மாப்பிள்ளைக்கும் சேர்த்து தானே தேர்ந்தேடுகிகவேண்டும் என்று அடம் பிடித்தபோது மாப்பிள்ளைக்கு தனது வேலை மிச்சமாகியத்தில் நிறைவுதான் ஆனால் உடன் வந்திருந்த மாப்பிள்ளையுடைய தங்கைகளும் வேறு உறவினர்களும் மணமகளின் பிடிவாத குணத்தை விரும்பவில்லை. நகைகளை வாங்கும்போதும் தனக்கு பிடித்த டிசைன்களை தேடித்தேடி வாங்கியதுடன் மாப்பிள்ளைக்கு அணிவிக்க வாங்கிய மோதிரம் உட்பட மணமகளின் ரசனைக்கேற்ப வாங்கப்பட்டது.

வீடு கட்ட முடிவெடுத்து அதற்கான வரைபடம் தயாரிப்பதிலிருந்து கிரக பிரவேசத்திற்கான பத்திரிகையை டிசைன் செய்வதுவரை தன் விருப்பத்தின்படியே செய்து வைத்தாள். குழந்தைகள் பிறந்த போது அவர்களுக்கு பெயர் சூட்டுவது முதல் பள்ளி கல்லூரி என்று எல்லாவற்றிலேயும் தனது முடிவையே செய்து முடித்தாள், காப்புநிதியை தெரிவுசெய்து வயதான காலத்திற்கு சேமிப்பும் அவள் தெரிவு செய்தபடியே செய்தும் விட்டாள். காலம் முழுதும் எதிலும் எல்லாவற்றிலும் தனது முடிவே இறுதி முடிவாக இருத்தல்வேண்டுமென அவள் செய்து வந்தாள்,

அவள் கணக்குப்படி நீண்டநாள் வழ விடாமல் காலம் தன் விருப்பம் செய்தபோது மரணம் அவள் விருப்பமின்றி வந்துவிட வேறு வழியின்றி அயர்ந்துவிட்டாள்.

புதன், 8 செப்டம்பர், 2010

நடிகர் முரளி - அஞ்சலி


தினமும் உலகின் மக்கள் தொகையில் ஐம்பது சதவிகிதத்திற்கும் மேலானோர் விபத்துக்களில் திடீர் மரணமடைகிறார்கள், ஐம்பது சதவிகிதத்திற்கும் மேல் பலர் உறக்கத்திலேயே காரணமே இல்லாமல் மரணமடைகிறார்கள், பிறப்பை விட இறப்பு அதிகமா, இறப்பை விட பிறப்பு அதிகமா என்று பார்த்தால்

ஒரு வருட பிறப்பு
128.9 மில்லியன்
ஒரு வருட இறப்பு
53.4 "
தினசரி
பிறப்பு 353,015
தினசரி இறப்பு 146,357
ஒருமணி நேரத்தில்
பிறப்பு 14,709
ஒருமணி நேரத்தில் இறப்பு 6098
ஒரு நிமிடத்திற்கு பிறப்பு 245
ஒரு நிமிடத்திற்கு இறப்பு 102
ஒரு நொடிக்கு பிறப்பு 4
ஏறக்குறைய ஒரு நொடிக்கு 2 பேர் மரணமடைகின்றனர்

என்கின்ற தகவல் நமக்கு கிடைக்கின்றது, சராசரி மனிதனின் ஆயுட்காலம் 66 வருடங்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது, இப்படி உலகில் சராசரியாக எத்தனையோ பேர் அகால மரணமடைந்தாலும் திடீர் மரணமடைந்தாலும் அவர்களை நமக்கு பரிச்சயமில்லாமல் இருப்பதால் நாம் அவற்றை பற்றி சிந்திப்பதோ கவலைபடுவதோ கிடையாது.

இந்தியாவில் திரைப்படமும்
திரையுலக நடிகர் நடிகைகளை வாழ்வின் மிக முக்கிய அங்கமாக கருதும் ரசிகர்கள் நிறைந்து காணப்படுவதால் குறிப்பிட்டவர்கள் மரணமடையும்போது அவரது ரசிகர்கள் கவலையடைவதையும் தவிர்க்க இயலாது. அதிலும் இளம் வயதிலேயே எதிர்பாராத வகையில் மரணமடைந்துவிட்டால் தன் வீட்டில் ஒருவரை இழந்தது போல மனம் வேதனையடைவதை தவிர்க்க இயலாது என்பதற்கு உதாரணம், புதன் காலை திடீர் மரணமடைந்ததாக செய்தியில் கேட்ட நடிகர் முரளியின் மரணம்.

சில நாட்களுக்கு முன்னர் விஜய் தொலைக்காட்ச்சியில் 'காப்பி வித் அனு' என்கின்ற நிகழ்ச்சியில் 'பாணா காத்தாடி' திரைப்படத்தில் நடித்திருக்கும் அவரது மகனுடன் முதன் முதலாக சின்னத்திரையில் பார்த்த போது முதல் திரைப்படத்தில் பார்த்த அதே முரளியைத்தான் பார்க்க முடிந்தது, அதன் பிறகு சமீபத்தில் நடிகை லெட்சுமியுடன் 'கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியிலும் மீண்டும் அப்பாவும் மகனும் பேசியது கடைசியாகிவிடும் என்று யாரும் நினைத்திருக்க முடியாது. மிகவும் நல்ல மனிதர் என்பதை ஒருமுறை அவரும் அவரது மனைவியும் சொந்த வீடு வாங்குவதற்காக எங்கள் வீட்டின் அடுத்த வீட்டை பார்க்க வந்திருந்தனர், அப்போது அவரை பார்க்க வீதியில் செல்பவர்கள் நின்று அவரை வேடிக்கை பார்த்தனர், பந்தா இல்லாத மிகவும் எளிமையான நல்ல மனிதர் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

நல்லவர்களுக்கு மரணம் கூட இப்படித்தான் வந்துவிடும் போல் உள்ளது, மரணத்தில் கூட அமைதியுடனேயே மரணமடைவது எல்லோர்க்கும் கிடைக்காது, அவர் மிகவும் நல்லவராக வாழ்ந்ததினால் மரண அவஸ்த்தை அடையாமலேயே இறந்துவிட்டாரோ என்றும் நினைக்க வைக்கிறது. ஆனால் அவரது குடும்பத்தினருக்கு அவரை திடீரென்று இழந்தது மரண அவஸ்த்தைதான், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வணங்குவோம்.














சனி, 4 செப்டம்பர், 2010

கொள்ளையடிக்கும் மருத்துவ ஸ்தாபனங்கள்

தேசப் பிதா என்றழைக்கப்படுகின்ற மகாத்மா காந்தியை நாம் மறக்கவே கூடாதுதான், ஆனால் இன்றைய உலகில் கடவுளையே கேலிசித்திரம் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், பிள்ளைகள் தங்களைப் பெற்ற பிதாக்களை மறந்துவிடுவது சகஜமாகிப் போய் பணம் பணம் என்றே மனம் இரவும் பகலும் ஓய்வு ஒழிச்சலின்றி அலைந்துக் கொண்டிருக்கின்ற கால கட்டத்தில் தேசப்பிதாவை எங்கே நினைவு வைத்துக் கொள்ள இயலும் என்பதை முன் கூட்டியே யோசித்த நமது முன்னோர்கள் பணப்பையை நெஞ்சில் சுமக்க முடிவு செய்து இதயமே இல்லாமல் போனாலும் சட்டைப்பை இல்லாமல் மனிதர்கள் வாழப்போவதில்லை என்பதை அறிந்து, அதனுள் வைத்து பாதுகாக்கும் பணத்திலாவது தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் உருவத்தை அச்சடித்து வைத்தனர் போலும்.

ரூபாய் நோட்டுக்களிலும் நாணயங்களிலும் நாணயமே இல்லாதவர்களையும் நாகரீகத்தில் தி
றிக்கொண்டிருப்பவர்களின் சட்டைபைகளின் உள்ளேயும் எப்போதும் காந்தி சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்தால் நாம் உயிர் மூச்சைப் போல மதிக்கின்ற பணத்தின் மூலம் அவர் நம்மை பார்த்து கேலியாக சிரிப்பதை போலத்தான் நினைக்கத் தோன்றுகிறது. இடம்விட்டு இடம் மாறிக்கொண்டே இருக்கும் பணம், இரும்புப் பெட்டியினுள் கட்டுக்கட்டாய் 'வெள்ளை', 'கரு'ப்பில் அடைத்து வைக்கபட்டிருக்கும் ரூபாய் நோட்டுக்களிலும் அமெரிக்க டாலர்களில் காணும் பல முகங்கள், இவ்வாறு பணத்தின் மீது அச்சடிக்கபட்டிருக்கும் இவர்களைப் பற்றி யாரேனும் ஒரு சிலநிமிடமோ நொடியோ நினைப்பதுண்டா, கிடையவே கிடையாது. கையில் கிடைக்கும் பணம் யார் யாரிடம் எதற்காக கைமாருகிறதோ அதனுடன் சேர்ந்து அந்த அச்சடிக்கப்பட்ட படங்களும் கைமாருகிறதே,

பாவம் அவர் புகழ் இப்படியும் கேவலப்படுத்தபடுகிறதே, மேன்மைபடுத்துவதற்காகவே ரூபாய்களில் பெரியோரின் படம் அச்சடிக்கும் வழக்கம் ஏற்படுத்தபட்டிருக்கவேண்டும் ஆனால் அவற்றை உபயோகிப்பவர்களின் கைகளில் சிக்கி பலவித நாசமோசங்களுக்காவும் மோசக்காரர்களின் கைகளுக்கு இவர் படம் பணத்தின் உருவில் தரம் தாழ்ந்த செயல்களுக்கும் தரக்குறைவான காரியங்களுக்கும்உபயோகிக்கப்படுகிறதே, இதனால் இவர்கள் ஆன்மாக்கள் நிச்சயம் பெருமை படவாய்ப்பே இல்லை. மருத்துவர்களை தெய்வமாக எண்ணிய காலம் மாறி மருத்துவ ஸ்தாபனங்களில் பகல் கொள்ளை நடக்கிறதே, யாராவது ஏமாந்தால்போதும் என்று உடல்நலம் காண செல்பவரை பலியாடுகளாக்கும் மருத்துவக் கொள்ளைகள் நாடெங்கிலும் நடந்து வருகிறதே, வருமானவரி செலுத்தாத திருட்டுப்பணம் மருத்துவ உலகில் பலரின் உயிர் கொல்லியாக இருந்து வருகிறதே, அதில் உள்ள காந்தியின் புகைப்படம் எப்படி மேன்மையடைந்ததாக கருத முடியும்.

தொடரும்..

புதன், 7 ஜூலை, 2010

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

நமக்கு யார் மீதாவது அதிக காதல் ஏற்பட்டு அதை அவரிடம் சொல்ல முடியாத தவிப்பா, அல்லது காதலித்தப் பெண்ணை மறக்க இயலாமல் மன குழப்பமா, எதற்கெடுத்தாலும் யாரிடமாவது சண்டையிட வேண்டும் என்று தோன்றுகிறதா, இப்படி நாம் நம்மை கட்டுப்படுத்த நினைக்கும் விஷயங்களில் நம்மை நம்மால் நாம் நினைப்பது போல் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லையா, ஒரு குறுக்குவழி இருக்கிறது, அவசரப்படாமல் பொறுமையாக கவனமாக நிதானமாக இதை படித்து பாருங்கள், நீங்கள் கைக்கொள்ள வேண்டிய வழியை என்னால் சொல்ல முடியும்.

முதலில் காதலைப்பற்றி பார்ப்போம், அதிகமான இளைஞர்களின் சோகக்கதையாக இந்நிலை மாறிவிடுவதால் அவர்கள் முன்னேற்றத்தில் மிகப் பெரிய சோதனையாகி நிற்கிறது இந்த பாழாய்ப் போனக் காதல், ஏற்க்கனவே காதலித்தப் பெண்ணை மறக்க எளிய வழி, அந்தப் பெண்ணுடன் பழகியக் காலங்களில் பிடிக்காத செய்கைகள் குணங்கள் பழக்க வழக்கங்கள் ஏதேனும் நிச்சயம் இருக்கும், அந்த செய்கையை, குணத்தை, பழக்கத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டும் , எப்போதெல்லாம் காதலின் வலியால் துவண்டு போகின்றோமோ அப்போதெல்லாம் நமது கருத்தையும் நினைவையும் குறிப்பிட்ட பிடிக்காத அவளது செய்கைக்கு கொண்டுச் செல்லவேண்டும், முதலில் இது சிரமமாகத் தோன்றும், தனிமையில் நாம் இருக்கும் சந்தர்ப்பங்களிலும் அந்த பிடிக்காததைப் பற்றிப் நமக்கு நாமே பேசிக்கொள்ளவேண்டும்,

நாளடைவில் தொல்லை கொடுக்கும் நினைவைச் சொல்லி 'மறந்து போ மனதே' என்று சொல்லிக்கொள்ளவேண்டும், சிறிது சிறிதாக நம்மை விட்டு மறக்க விரும்பும் நினைவுகள் விலக ஆரம்பிக்கும், சில மாதங்களில் அதுவரையில் தொல்லை கொடுத்த காதல் கொஞ்சம் கொஞ்சமாக வில
குவதை நம்மால் உணர முடியும்.

இந்த முறையில்தான் மற்ற கெட்ட அல்லது விடுபட நினைக்கும் காரியங்களிலிருந்து விடுபடவும் நம்மை நாமே பயிற்ச்சியளிக்க வேண்டும், துவக்கத்தில் சிரமாகத் தோன்றினாலும் சற்று பழகியப்பின்னர் எளிதாகத்தோன்றும், இதை ஸெல்ப் ஹிப்னாடிசம் என்று சொல்வார்கள், யார் மீதாவது கோபம் வரும்போது கண்ணை மூடிக்கொண்டு ஒன்று இரண்டு என்று அல்லது வேறே எதையாவது திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே பத்து நிமிடம் இருந்தால் கோபத்தின் வெளிப்பாடு காணாமல் போய்விடும் என்று சொல்வதும் இந்த முறையில் தான். கோபப்படும்போது நம்முடலில் சுரக்கும் ஹார்மோன்களில் சில தேவைக்கு அதிகமாகவும் சில தேவைக்கு குறைவாகவும் சுரப்பதனால் உடலின் இயல்பு
நிலையிலிருந்து மாறுபட்டு கோளாறுகள் ஏற்ப்படுகிறது.

நம்மனதை நம்மால் ஆள முடிய வேண்டும் அல்லது அது நம்மை அதன் வழிக்கு கொண்டுச் செல்லும் இயல்புடையது. மனம் போன போக்கில் மனிதன் போவது தேவையற்ற விபரீதங்களை தனக்கும் பிறர்க்கும் ஏற்ப்படுத்தும் சக்தி கொண்டவை. சாப்பாடு விஷயத்தில்
சிலரால் கட்டுபாடாக இருக்க இயலாது, சுய கட்டுப்பாட்டை விட்டுவிடும் போது விளைவுகள் மோசமாகி நீரிழிவு போன்ற வியாதிகளில் உடல் நாசமாவதை நாம் அறிவோம், எல்லாவற்றிற்கும் மன கட்டுப்பாடு மிக அவசியம், எல்லாவித கட்டுப்படுகளையுமே நம்மால் பழகிக்கொள்ள முடியும், பாரதி சொன்னது போல் 'வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா' என்றார், பாப்பாவாக இருக்கும் பருவத்தில் துவங்கும் பழக்க வழக்கங்கள் சிறப்பானதாக இருந்துவிட்டால் வாழ்க்கை சொர்கமாகி விடும் என்பதுதான் இதன் தாத்பரியம் என்றும் அர்த்தப்படுத்தலாம்.

புதன், 24 பிப்ரவரி, 2010

கதைகதையாம் காரணமாம்

நாய்களின் அழுகையைப் பற்றிய ஒரு கட்டுக்கதை சொல்லப்படுவது உண்டு. நாய்கள் அழுவதை ஊளையிடுகிறது என்று சொல்லுகிறார்கள், நாய்கள் அழுதால் யாராவது இறந்துவிடுவார்கள் என்று நம்புகின்றனர், அதுமட்டுமில்லாது கெட்ட ஆவிகளைப் பார்த்து நாய்கள் ஊளையிடுகின்றன என்றும் நம்புகின்றனர். பல ஆராய்ச்சிகள், அவைகளின் செயல்களுக்கான காரணங்களை பற்றிய பல புத்தகங்கள் உள்ளன, அவற்றில் நாய்கள் எப்போது எதற்காக அழும் என்பதைப்பற்றி விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது,

வீடுகளில்
வளர்க்கும் நாய்கள் அழுகின்ற போது அவைகள் பெரும்பாலும் கட்டி வைதிருப்பதனாலேயோ அல்லது அடைத்து வைத்திருப்பதனாலேயோ அழுது தனக்கு அதிலிருந்து விடுபட்டு வெளியே வருவதற்கு அவற்றின் உணர்வை பிறர் அறிந்து உதவுவதற்காக அவைகள் அழுகின்றன. நாய்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த இயற்கையில் அவைகளுக்கு கொடுக்கபட்டிருக்கும் செய்கைகளில் அழுவதும் ஒன்று. தெரு நாய்கள் அழுதாலும் அதற்க்குக் காரணம் அவை தனது தேவை ஏதோ ஒன்று பூர்த்தி பெறாமல் இருப்பதனாலோ, உபாதைகளிலானோ அழுகை மூலம் அவற்றை வெளிபடுத்துகிறது. ஆனால் பலர் நாய் அழுதால் தீமைக்கு அறிகுறி என்றும், பேய் மற்றும் அசுத்த ஆவிகளின் நடமாட்டத்தை உணர்த்துவதற்கு அழுவதாக புனைவு கதைகளை தலைமுறை தலைமுறையாக சொல்லிவருவது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அவர்களின் அறியாமையை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது.



சுவற்றில் காணப்படும் பல்லி சத்தமிட்டால் வீட்டிற்கு நல்லது அல்லது நினைக்கும் காரியம் நடக்கும் என்று நம்புகின்றனர், பல்லியை கெவுளி என்று குறிப்பிடுகின்றனர், 'கெவுளி வாக்கு பலிக்கும்' என்ற மற்றொரு நகைச்சுவையான நம்பிக்கையும் காலம் காலமாக இருந்து வருகிறது, சுவற்றிலிருக்கும் பல்லியை கடவுளின் அவதாரமாகவே நினைப்பவர்களும் ஏராளம் உண்டு, சுவற்றிலிருக்கும் பல்லிக்கு நாம் நினைக்கின்ற காரியம் நடக்குமா நடக்காத என்று முன்கூட்டியே அறிந்திருக்கும் வாய்ப்பு எங்கிருந்து கிடைக்கும் என்பதைப்பற்றி யாரும் யோசிப்பதே கிடையாது, காரணத்தை அறிந்து கொள்ள விரும்பாதவர்கள் காரியத்தை மட்டும் சிந்திக்காமல் நம்புவதை மூடத்தனம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்லுவது. பல்லி சாஸ்த்திரம் என்பது பல்லி ஒருவரின் உடலின் எந்த பாகத்தில் விழுகிறது என்பதைப்பற்றிய கணிப்பு என்று நம்பப்படுகிறது, காலம் காலமாக இருந்துவரும் ஒரு நம்பிக்கை, இது ஆதரமில்லாததாக இருந்தாலும் மக்கள் இதையும் நம்புகின்றனர்.

நான் வெளிநாட்டில் என் கணவருடன் இருந்த சமயத்தில் என் கணவருக்குத் தெரிந்த தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரின் குடும்பத்தினர் எங்களுடன் சிலகாலம் தங்கி இருந்தனர், அவருடைய மனைவி அதிகம் படிக்காதவர், அவர் சமையல் செய்யும் போது என்னிடம் சொல்வது, அவர்கள் ஊரில் சமையல் சுவையாக சமைப்பதற்கு பாம்பை கைகள் இரண்டிலும் வருடி அல்லது தொட்டிருக்கவேண்டும் என்பார், உயிரோடு இருக்கும் பாம்பை இரண்டு கைகளினாலும் தடவினால் தான் சமைக்கும் உணவு வகைகள் மிகவும் ருசியாக சமைக்கமுடியும் என்பார். அவர்கள் ஊரில் எல்லோருமே அதை நம்புவதாகவும் சொல்லுவார். எனக்கு அவரின் நம்பிக்கையை நினைத்து சிரிப்பு வரும், அவர்களுடைய நம்பிக்கையின்படி சமையல்காரர்கள் எல்லோருமே ஏற்கனவே பாம்பாட்டிகளாக இருந்திருக்கவேண்டும் என்று தோன்றும், அதை நினைத்து எனக்கு சிரிப்பு வராமல் வேறு என்ன வரும்.
குழவி வீட்டில் கூடு கட்டினால் அந்த மண்ணை உடைத்துவிடக் கூடாது என்றொரு நம்பிக்கை, வீட்டின் சன்னல்களிலும் வாயிற் நிலைகளிலும் குழவிகள் ஈரமண்ணில் கூடு கட்டும், அதை உடைத்தால் குழந்தை பிறக்காது என்பது எப்படி சாத்தியமாகும் என்பது புரியவில்லை, எந்த உயிரினத்தையும் அழிப்பது கூடாது என்பதற்காக கூட்டின் உள்ளே குழவியின் முட்டைகளோ புழுக்களோ இருக்கும் போது அந்த கூட்டை சிதைப்பது சரியானது இல்லைதான், அந்த கூடுகள் வெறுமனே பூச்சிகளே இல்லாமல் இருக்கும்போது அதை உடைத்தெரிவதினால் குழந்தை பிறப்பது எப்படி தவறிப் போகும் என்பது விளங்காத ஒன்றாகவே உள்ளது.
மனிதர்கள் புறப்பட்டு வெளியே போகும்போது குறுக்கே பூனை ஓடினால் வீட்டிற்க்குத் திரும்பிச் சென்று சிறிது தண்ணீர் குடித்துவிட்டு மறுபடியும் வெளியே செல்லுகிறார்கள், வெளியே போகும் போது குறுக்கே பூனை போனால் போகின்ற இடத்திலே காரியம் நன்மையில் முடியாது என்பது பலரது நம்பிக்கை, கறுப்புப் பூனையை வளர்த்தால் காத்து கருப்பு வீட்டில் அண்டாது என்போர் பலர்.
ஆனால் இவை அனைத்திலுமே மூட நம்பிக்கைகள் உள்ளது என்பதை அறிந்த பின்னும் பழையவற்றிலிருந்து மீள முடியாமல் பழக்க வழக்கங்களை விட முடியாமல் பழமையில் வாழ்ந்துகொண்டு நடை உடையில் மட்டும் மேனாட்டு கலாசாரத்தை பின்பற்றி வாழ்ந்து வருபவர்கள் இன்றைய காலகட்டத்தில் எங்கும் உள்ளனர்.

நரி முகத்தை பார்த்துவிட்டு சென்றால் காரியம் விருத்தியடையும் அல்லது வெற்றி கிடைக்கும் என்றும் நம்பி வருகின்றனர், நரி காடுகளில் வாழும் மிருகம், இதை பார்த்துவிட்டு போனால் ஜெயம் கிடைக்கும் என்றால், தற்காலத்தில் நரி போன்ற மனிதர்களைத்தான் பார்த்துவிட்டு போக முடியும் காட்டிலுள்ள விலங்கை எங்கிருந்து பார்ப்பது, யாருக்காவது போன காரியம் வெற்றியடைத்தால், நரி முகத்தில் முழித்தாயோ என்ற பழமொழி சொல்லபடுகிறது. இன்னும் ஏராளமான வினோதமான அடிப்படையற்ற நம்பிக்கைகள் நமது நாட்டில் இன்னும் நம்பப்படுகிறது என்பது கேட்பதற்கு சற்று வருத்தமாகவும் உள்ளது.

ஆனால் இந்த மிருகங்களும் பூச்சிகளும் மனிதனைக் கண்டுதான் ஓடி ஒளிந்து வாழ்ந்துவருகிறது என்பது மட்டுமே நிஜம்.