முதல் முதலில் சற்றும் எதிர்பாராத நிலையில் கிடைத்த வெளிநாட்டு பயணமும் வேலையும் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தவில்லை மாறாக பலவித பயத்தைத்தான் ஏற்படுத்தியிருந்தது, இதற்க்கு முதல் காரணம் வெளிநாட்டிற்கு சென்ற பலருக்கு ஏற்பட்டிருந்த பயங்கரமான சம்பவங்களை நினைவுபடுத்தியது. இதனால் விமானத்தில் முதலில் பயணம் செய்வது பற்றிய மகிழ்ச்சி கூட மறந்து போனது.
விமானம் அந்த ஊரை சென்று தரை இறங்கியது காலை பத்து மணிக்கு, என் கணவர் சொல்லியனுப்பியது போலவும் மற்ற பயணிகள் என்ன செய்கிறார்களோ அதையே நானும் செய்து விமான நிலைய வாயிலில் வந்து நின்றபோது மற்ற பயணிகள் வெளியேறிகொண்டிருக்க நான் மட்டும் தனியே நின்று அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தேன் ஏனென்றால் என்னை அழைத்துக்கொண்டு போக போவது யார் என்பது எனக்கு முன்கூட்டி சொல்லப்படவில்லை.
அப்போது எனக்கு வயது முப்பத்தாறு, ஐம்பது வயது மதிக்கத்தக்க இந்தியர் ஒருவர் என்னிடம்வந்து அவரது கையிலிருந்த எனது புகைப்படத்தின் நகலை காட்டி காரில் எற்றிகொண்டார். அவர் தென்னிந்தியர் இல்லை என்பது அவர் சொல்லி நான் அறிந்து கொண்டேன் அதனால் ஆங்கிலத்தில் சில கேள்விகள் என்னிடம் கேட்டு விட்டு அமைதியாக காரில் ஏறக்குறைய அரைமணிநேர பயணத்திற்கு பிறகு நிறைய மாளிகைகள் நிறைந்திருந்த பகுதியில் ஒரு வீட்டின் முன்னால் கொண்டு நிறுத்திவிட்டு சென்றுவிட்டார்.
இரும்பு கேட்டு திறந்திருக்கவில்லை சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தேன் அவர் செல்லும் வழியில் போன் பூத்திலிருந்து அந்த வீட்டிற்கு வெளியே நான் நிற்பதை தெரிவிப்பதாக சொல்லி சென்றதால் சில நிமிடங்களில் வீட்டின் உள்ளிருந்து இரண்டு பெண்கள் வெளியே வந்து கதவை திறந்து என்னை உள்ளே அழைத்து சென்றனர்.
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக