அன்று மாலை வீட்டிற்கு வந்த எசமானி அடுத்தநாள் காலை நான் தயாராக இருக்கவேண்டும் என்று சொன்னார், காலையில் பத்துமணியளவில் என்னை கார் ஓட்டுனர் பழனி மறுமடியும் எசமானி வேலைபார்க்கும் வங்கிக்கு எனது பெட்டி மற்ற பொருட்களுடன் அழைத்து சென்றார், அந்த வங்கியில் வேலை பார்க்கும் அந்நாட்டுப் பெண் நாதா என்னை அவருடன் கூட்டி போகும்படி என் எசமானி சொன்னதாக என்னிடம் சொல்லி விட்டு அவரது காருக்கு எனது பெட்டி மற்றும் எனது உடமைகளை ஓட்டுனரிடம் மாற்றி வைக்கச் சொல்லி எங்கோ அவரே காரை ஓட்டிச்சென்றார்.
குறைந்தது ஒரு மணிநேர பயணம், ஆட்களே இல்லாத பாலைவனம், எங்கு திரும்பினாலும் உயர்ந்த செந்நிற மலைகள், இரண்டு மூன்று சிறிய வீடுகளே இருந்த ஒருமலையின் அடிவாரத்தில் காரைக் கொண்டு நிறுத்தினார், ஒரு வீட்டின் மாடிப்பகுதிக்கு என்னை கூட்டி சென்றார், எனது பெட்டி மற்றும் எனது உடமைகளை எடுத்துக்கொண்டு அவரை பின் தொடர்ந்தேன்,
மாடி படிகள் முழுவதும் குப்பை மேட்டின் மீது நடப்பது போல குப்பைகள் கொட்டி கிடந்தன, சிறிய வீடு, இரண்டு சிறிய படுக்கையறைகளும் ஒரு சமையலறையும் ஒரு சிறிய பொது இடமும் இருந்தது, இரண்டு கழிப்பறைகள் வெவ்வேறு இடங்களில் இருந்தது, வீட்டில் இரண்டு திருமணமாகாத பெண்கள், இருவரும் நாதாவின் கணவனின் தங்கைகள், இரண்டு திருமணமாகாத ஆண்கள் இருபத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களாக தெரிந்தனர், இருவரில் ஒருவன் நாதாவின் தம்பி இன்னொருவன் தம்பியுடன் வேலைபார்ப்பவன். இவர்களில் திருமணமாகாத பெண்கள் இருவரும் அங்கு தங்குபவர்கள் இல்லை, அடுத்த நாள் காலை அந்த வீட்டை சுத்தம் செய்வது துணியை இயந்திரத்திலிட்டு மாடியில் கொண்டு உலற வைத்து மடித்து மின்சார பெட்டியினடியில் வைத்து சுருக்கமற தேய்த்து மடித்து வைப்பது, மூன்று வேளைக்கும் உணவு சமைத்து பரிமாறி பாத்திரங்களை சுத்தபடுத்தி வைப்பது போன்ற வேலைகள் நான் செய்யவேண்டும் என்று நாதா என்னிடம் சொன்னார்,
அந்த நாட்டிற்கு போய் சேர்ந்த பின்னர் சில verification செய்து அவர்கள் அரசு கொடுக்கும் பணி செய்பவர்களுக்கான அனுமதி அட்டையை வாங்க வேண்டும், அதற்காக மறுபடியும் என்னை அடுத்தநாள் காலை அழைத்து சென்றார் நாதா, போகும் வழியில் என்னால் வீட்டு வேலைகள் செய்ய முடியாது நான் என் நாட்டிற்கு திரும்பிவிட வேண்டும் என்று நாதாவிடம் சொன்னேன். அன்று மாலை நாதாவின் வீட்டிற்கு திரும்பி கொண்டு வந்து விட பட்டு மறுபடியும் அடுத்த நாள் காலை எசமானியுடன் இந்திய தூதரகத்திற்கு அழைத்துச் செல்லபட்டேன்,
இந்திய தூதரகத்திற்கு சென்ற போது அங்கிருந்தவருடன் எசமானியுடன் வந்திருந்த அந்த ஊரகாரர் எதை எதை பற்றியோ பேசிக்கொண்டிருந்தார், பின்னர் தூதரக அதிகாரி என்னிடம் என்னவென்று கேட்பது போல தலையசைத்தார், ஆங்கிலத்தில் அவரிடம் எனது பிரச்சினைகள் என்னவென்பதை சொன்னேன், அவரது அலுவலக தொலை பேசியிலிருந்து என்னை யாருடன் வேண்டுமானாலும் பேசும்படி சொன்னார், என் வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்த போது என் மகளே திரும்பவும் எடுத்தாள், அப்போதெல்லாம் செல்போன் கிடையாது என் கணவரின் அலுவலகத்திற்கு போன் செய்து என்னை குறிப்பிட்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்படி சொன்னேன்,
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக