இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

தலைமுறை இடைவெளி



ஒருகாலத்தில் திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம் என்று சொன்னார்கள், பிறகு கொஞ்சம் சுயநலத்துடன் இரு குடும்பங்களின் இணைப்பு என்றார்கள். இதற்க்கு கால மாற்றம் காரணமா அல்லது மனிதர்களின்  சுயநலம், பெருமை, பிடிவாதம் போன்ற அரக்க சிந்தனைகள் வேரூன்றி விட்டதன் விளைவா. குழந்தைகள் பெற்றோர் மூலம் பிறந்து விட்டதால் மட்டுமே பெற்றோருக்கு உரியவர்கள் கிடையாது என்கின்ற புதிய தத்துவம் இன்றைக்கு பரவலாக சொல்லப்படுகிறது. அடிக்கடி எனக்கு ஒரு சந்தேகம் ஏற்ப்படுகிறது, மனிதர்கள் மீண்டும் ஆதிகால மனிதனாக பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறார்களா அல்லது சமுதாயத்தில் இனி வரப்போகின்ற புரட்சிகளுக்கு வித்திட்டு உரம் சேர்க்கப்படுகிறதா என்று, ஏனென்றால் எந்த சமுதாயத்தில் கட்டுபாடுகள் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் புரட்சியாளர்கள் உருவாக்கப்படுகின்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை. மீருதல்களினால் அத்தகைய சமுதாயம் ஒருபுறம் வீணாகிகொண்டிருக்கின்ற தகவல்களும் உண்டு.

திருமணம் என்பதை அல்லது ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்க்கை நடத்த பல்வேறு தடைகள் வெவ்வேறு உரு கொண்டு தாக்குதலை ஏற்ப்படுத்துகின்ற நிலையில், அந்த தாக்குதல்களை எதிர்க்கும் மனிதகூட்டம் [எதிர்ப்பவர்கள்] உருவாக்கப்படுகிறது என்பதும் மனதில் கொள்ள வேண்டிய உண்மை. அவ்வாறு ஆங்காங்கே உருவாகின்ற மனிதர்கள் ஒன்று கூடி திருப்பி எதிர்ப்பு குரல் கொடுக்க முன்வரக் கூடும், அதற்க்கு எத்தனை ஆண்டு காலம் வேண்டும் என்பது அந்தந்த சமுதாய சிந்தனையாளர்களின் எண்ணிக்கையும் விவேகமும் தீர்மானிக்கிறது. வீட்டில் காவலுக்கு வளர்க்கின்ற நாயை கயிற்றால் கட்டி ஆட்களின் போக்குவரத்தை காண இயலாதவாறு கூண்டில் அடைத்து வைத்து தேவைப்படுகின்ற சமயங்களில் மட்டும் கூண்டிலிருந்து வெளியே விட்டால் அந்த நாய் சந்தேகப்படுகின்ற நபர்களை வேட்டையாடுவதும் கூண்டிலிருந்து வெளியேறியவுடன் சுற்றுபுறத்தில் ஓடியாடி தன் சந்தோஷத்தை போக்கிகொள்வதைப்போல கட்டுப்பாடுகள் என்கின்ற கூண்டில் அடைக்கப்படுகின்ற மனிதர்களும் தங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை தவறான முறையில் உபயோகிக்க  முற்படுகிறார்கள் .

பெற்றோரின் கட்டுப்பாடுகளில் உறைந்து போகும் ஆண்களும் பெண்களும் வீட்டை விட்டு வெளியே போகின்ற இடங்களில் வாழ்க்கையை சீரழிக்கும் வழி வகைகளில் சிக்கி விடுவதே பெரும்பாலும் காணமுடிகிறது. மறைத்து வைக்கின்ற எப்பொருள் மீதும் மோகம் அதிகரிக்கும் என்பதை நாம் அறியமாட்டோமா. ஜாதி, மதம், அந்தஸ்த்து, பெற்றோர், உறவினர்கள் என்ற அத்தனை மீதும் வெறுப்பு ஏற்ப்படுவதற்க்கு அடிப்படை காரணம் அவர்களால் போடப்படுகின்ற கட்டளைகளும், கட்டுப்பாடுகளும் மட்டுமே. கட்டுப்பாடுகள் விதிக்கின்றவர் எவராக இருப்பினும் அதற்க்கு கட்டுப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளவரின் வெறுப்பை, எதிர்ப்பை அதிகரிக்கும் என்பது யாவரும் அறிந்தது.

கட்டுப்பாடுகளில் பல வகைகள் உண்டு, பெரும்பாலான பெற்றோர்கள் கூறும் காரணம் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்கள் குழந்தைகளிடம் கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர் என்பர்.  ஆனால் தங்கள் விதிக்கின்ற கட்டுப்பாடுகளை தங்களது பிள்ளைகள் எப்படி, எங்கே மீறுகின்றனர் என்பதை அவர்களால் அறிந்து கொள்ள இயலாது. அவ்வாறு அறிந்து கொண்ட பின்னர் அதைப்பற்றி பிள்ளைகளுடன் எவ்வாறு விவாதிக்கின்றனர் என்பது கேள்வி. ஏனென்றால் தங்களுக்கு பெற்ற பிள்ளைகளிடம் விசாரிக்கும் உரிமை உண்டு என்பதை மனதில் கொண்டு உரிமையுடன் பெற்றோர்கள் விவாதம் செய்வதை குழந்தைகள் எவ்வாறு புரிந்து கொள்கின்றனர் என்பது மிகவும் முக்கியம். தங்களது எதிர்காலத்தை பற்றி முடிவெடுக்கும் உரிமையை பெற்றோர்கள் துஷ்ப்ரயோகம் செய்வதாக பிள்ளைகளும்; அவ்வுரிமை தங்களுடையது என்பதுமாக பெற்றோர்களும் உறவுகள் இன்றைக்கு மிகப்பெரிய சவாலாக மாறிக்கொண்டு வருகிறது.

இவ்வாறான சவால்களுக்கு காரணமாக முன் வைக்கப்படுகின்ற ஜாதி மதம் அந்தஸ்த்து படிப்பு பொருளாதாரம் என்று இடத்திற்கேற்றார்போல இவற்றின் அடிப்படை மாறுபடுகிறது. இத்தகைய சூழல் பெருகி வருகின்றதால் காதல் நிராகரிக்கப்படுவது போன்ற மாயையான தோற்றம் தெரிகிறது. காதலுக்கு எதிரிகள் எவரும் இல்லை என்று சொல்வது உண்மையாக இருப்பினும் அதற்க்கான காரணங்கள் பெற்றோரும் பிள்ளைகளும் என்பது புலப்படுகிறது; காதல் எதிரி இல்லை என்றால் பெற்றோரும் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்பது உண்மை என்றாகும் அல்லவா. இதில் எங்கே குழப்பம் உண்டாகிறது என்பதை ஆராய்ந்தால் உண்மை விளங்கும். கட்டுப்பாடுகள் என்கின்ற பெயரில் பிள்ளைகளின் மீது பெற்றோர்கள் விதிக்கின்ற ஒவ்வொன்றும் விஸ்வரூபமெடுத்து பெற்றோர்கள் மீது அளவு கடந்த வெறுப்பை ஏற்ப்படுத்துகிறது. குழந்தை பருவம் தொடங்கி வயதுவந்த பிள்ளைகளாகும் வரையில் இவை சேமிக்கப்படுகிறது.

திருமணம் வரையில் வெளிபடுத்தாமல் அல்லது காட்டிக்கொள்ளாமல் சர்வ ஜாக்கிரதையாக, ரகசியங்களை வைத்துகொள்வது உண்டு. பலர் காதல், சம்பாத்தியம் என்று ஏற்ப்படுகின்ற சமயத்தில் அதுவரையில் சேமித்த வெறுப்பை வெளிப்படுத்துகின்றனர். இதை சற்றும் எதிர்பாராத சில பெற்றோர் மற்றும் உறவினர் திகைப்பின் உச்சிக்கே சென்றுவிடுகின்ற நிலைமை உண்டாகிறது. இதற்க்கு சிலர் "தலைமுறை இடைவெளி"  GENERATION GAP என்று கூறுகின்றனர். இப்படி பெயர் வைத்தபோதே முந்தய தலைமுறையினரின் கட்டுப்பாடுகளை இளைய தலைமுறையினர் கடைபிடிக்க விரும்புவதில்லை என்பது விளங்குகிறது. சமுதாயத்தில் ஒவ்வொரு காலத்திலும் நடைமுறைகள் மாறுகின்ற போதெல்லாம் இப்படிப்பட்ட நிகழ்வுகள் பெருகும்.







வியாழன், 1 ஆகஸ்ட், 2013

"தண்ணி" படுத்தும்பாடு !!

காவேரி நீர் பங்கீடு பிரச்சினை, முல்லை பெரியார் நீர் தேக்கம் பற்றிய பிரச்சினை போன்ற நீர் பிரச்சினைகள் மாநிலத்திற்கு மாநிலம் சிலரை விரோதியாக பாவிக்கின்ற மனநிலையை உருவாக்கி வந்துள்ளது. அம்மாநிலங்களில் மழை பெய்து நீர் தேக்கங்களில் நிரம்பிய பின்னர் அணைகளை திறந்து விடுவதை அவர்களால் ஏன் நிறுத்த இயலவில்லை, அளவிற்கு அதிகமான மழை நீர் தேக்கி வைத்தால் தேக்கம் உடைந்து அருகில் இருக்கும் ஊர் அழிவை சந்திக்கும் என்பதால் தேக்கத்தில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அவ்வாறு அணை நிரம்பிய பின்னர் திறந்து விடுகின்ற உபரி நீர் தமிழகத்திற்குள் வருகின்ற அதே சமயத்தில் தமிழகத்திலும் நல்ல மழை பெய்து பெருக்கெடுக்கும் நீர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பயிர் நிலங்களை மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வீடு மற்றும் உடமைகளை இழந்து உயிர் சேதமும் ஏற்ப்படும். அவ்வாறு சேதம் ஏற்ப்படுவதை தவிர்க்க உபரி நீரை திறக்க கூடாது என்று சேதம் ஏற்ப்படுகின்ற மாநிலம் கோரிக்கை மற்றும் வழக்கு தொடருமானால் கர்னாடக மாநிலமும் கேரளா மற்றும் ஆந்திர மாநிலமும் என்ன செய்யும்?

தேவையற்ற அல்லது தேக்கி  வைக்க இயலாத நிலையில் திறந்து விடப்படுகின்ற அதிகபட்ச நீர் வரத்து தமிழகத்திற்கு தற்போது போதுமான மழை இல்லை என்பதாலும் நீர் தேவை அதிகரித்து உபரி நீரை வாங்கிக்கொள்ளும் அவசியம் இருக்கிறது. தமிழகத்திற்கு போதுமான அளவு நீர் தேக்கங்களும் மழை நீரை சேமிக்க குளம், எரி, போன்ற நீர் சேமிப்பு பகுதிகள் அதிகரித்து மழை நீர் சேமிப்பு செய்தால் போதுமான அளவிற்கு நீர் நிலைகளில் ஊற்றுகள் வருடம் முழுவதற்கும் போதுமான குடிநீர் மற்றும் பாசன தேவைகள் சமாளிக்க முடியும். ஏரி குளம் போன்ற நீர் தேங்கும் பகுதிகள் தற்காலத்தில் மூடப்பட்டு அதன் மீது கட்டிடங்கள் அதிகரித்து வருவதால் நீர் ஊற்று இல்லாமல் அடி நீர் மட்டம் மிகவும் கீழே சென்றுவிட்டது பல இடங்களில் இல்லாமலும் போகிறது.

பெரும்பாலும் தமிழகத்தில் பெய்கின்ற மழை நீர் முழுவதும் வேகமாக ஓடிச்சென்று கடலில் கலந்து விடுகிறது. குறைவாக மழை பெய்தாலும் பெய்கின்ற மழை நீர் நிலத்தின் மேற்பரப்பை மட்டும் நனைத்துவிட்டு ஓடிவிடுவதால் ஈரப்பதம் அற்ற நிலமாக இருப்பதால் மரங்கள் செடி கொடிகள் வளரவும் ஆழ் குழாய் கிணறுகளில் நீர் மட்டம் இல்லாமல் குடிநீர் பஞ்சம் ஏற்ப்படுகிறது. ஏரிகளிலும் குளங்களிலும் நிற்க வேண்டிய மழை நீர் மக்கள் வசிக்கின்ற பெரும் சாலைகளிலும் தொடர்வண்டி பாதைகளிலும் தேங்கி நின்று போக்குவரத்து பாதிப்பை ஏற்ப்படுத்துவது என்பது இந்தியாவில் எந்த அளவிற்கு தேச பரிபாலனம் சிறப்புடன் செயல்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. நகரத்தில் வசிக்கும் பலர் மழையை விரும்புவதே இல்லை. மழைக்கு பின்னர் சாலைகள் குண்டும் குழியுமாய் மனித உயிர்களை பறிக்கின்ற நீர் தேக்கங்களாக மாறிவிடுவதுதான் இதற்க்கு காரணம்.

நகரை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் சீர் செய்யப்படாத சாலைகள் மழை சிறிது பெய்தால் கூட நரகமாகி விடுவதால் மழையை வெறுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடி வருகிறது. ஒருபுறம் மழை இல்லாமல் நீர் பற்றாக்குறை மக்களுக்கு வேதனையை அளித்து வருகிறது என்றால் மறுபுறம் மழை பெய்தால் சாலைகளில் ஏற்ப்படுகின்ற நீர் தேக்கமும் அதனால் ஏற்ப்படுகின்ற விபத்துக்களும் போக்குவரத்து பாதிப்பும் இதைவிட இன்னும் மோசமான பாதிப்பு கழிவுநீரும் குடிநீரும் ஒன்று கலந்து மக்களை பாடுபடுத்தும், தேங்கி நிற்கின்ற மழை நீரில் கொசுக்கள் உற்பத்தி பெருகி புதிய நோய்களை உருவாக்கும்; கொசுக்களை அழிக்க எதோ புகை என்ற பெயரில் என்றைகாவது ஒருநாள் ஒரு பகுதியில் அடிக்கப்படும்.

இவ்வாறு மழை பெய்வதால் ஏற்ப்படுகின்ற பிரச்சினை பெரும் பிரச்சினை ஒருபுறம் என்றால் மறுபுறம் மழையின்மையால் குடிநீர் கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டும், அப்படியே காசு கொடுத்து வாங்கினால் கூட அந்த குடிநீர் எந்த அளவிற்கு சுகாதாரமானது என்பதற்கு உத்திரவாதம் ஒன்றும் கிடையாது. விவசாயிகளின் வேதனைகள். மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் பொதுமக்களின் பாடுகளை வார்த்தைகளில் சொல்லி மாளாது. இதனால்தானோ என்னவோ நம்ம ஊர் குழந்தைகள் "ரெயின் ரெயின் கோ அவே, கம் அகென் கிரான்மாஸ் வாஷிங் டே" என்று மனப்பாடம் செய்ய பழக்குவிக்கிரார்களோ? "தண்ணி" என்பது தமிழகத்தை எல்லா வகையிலும் பாடு படுத்துவதை யாரும் மறுக்க இயலாது.


வெள்ளி, 12 ஜூலை, 2013

கொஞ்சநாள் வாழ்ந்தாலும் .....

தவறு செய்பவர் யாராக இருந்தாலும் சட்டப்படி தகுந்த தண்டனை அளிக்க இந்திய சட்டங்கள் போதுமான அளவு இருக்கின்ற போதும் அவற்றிலிருந்து தப்பிக்கும் வழிவகைகளும் ஏராளம் இருப்பதுதான் நமது நாட்டில் குற்றவாளிகள் பெருகுவதற்கு மிக முக்கிய காரணம். சட்டம் பற்றி படித்து பட்டம் வாங்கினாலும் குற்றத்திலிருந்து தப்பிகின்ற சட்டங்களைப்பற்றி படித்து அதில் சிறப்புடன் செயல்படுகின்ற வழக்குகள் ஏராளம். குற்றங்களுக்கு தண்டனை அளிப்பதற்கு முன்னர் நடத்தப்படுகின்ற விசாரணை முடிவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் கால அளவும் குற்றவாளிகளுக்கு பலவிதங்களில் தப்பிக்கவும் பயன்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்படுகின்ற வரையில் குற்றம் செய்யாதவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நிச்சயம் மரண அவஸ்த்தை.

தண்டனையுடன் கூடிய அபராதம் என்பது பொருளாதார நெருக்கடியில் வாழுகின்ற ஒருவருக்கு நிச்சயம் வேதனை. பொருளாதாரம் நிரம்பியவர்களுக்கு அதுவே மிகப்பெரிய வரப்பிரசாதம், பணத்தை வைத்து எதையும் செய்ய இயலும் என்கின்ற நிலை இன்றைக்கு குற்ற செயல்களில் ஈடுபடுகின்ற பலருக்கு பெருந்துணையாக செயல்படுகிறது. வழிப்பறி, தங்க சங்கிலி பறிப்பு, ரூபாய் நோட்டுகள் அச்சிடுபவர்கள், கொள்ளை அடிப்பவர்கள் எந்த வயதுடையவர்கள் என்றாலும் தண்டனை என்பது இலகுவாக இல்லாமல் கடினமாகவும் தப்பிக்க இயலாததாகவும் இருக்கவேண்டும். குற்றவாளிகள் மாணவர் என்ற பட்சத்தில் தண்டனை தளர்த்தப்படுவது மேலும் குற்றவாளிகளை உருவாக்கும் செயல்.

சமீபகாலமாக இளைஞர்கள் அதிக குற்றங்களை செய்வதால் குற்றங்களின் எண்ணிக்கை பெருகுவதை காணமுடிகிறது. தண்டனை என்பது குறைக்கப்படுவதுடன் தப்பிக்கும் முறைகள் எளிதாக்கப்படுவதும்தான் திருடு மற்றும் கொள்ளை அதிகரிப்பிற்கு காரணம். பிடிபடுகின்ற நபர்களை பொதுமக்கள் அறியும் வண்ணம் ஊடகங்களில் காண்பித்து அதன் பிறகு அதிகபட்ச தண்டனை கொடுத்தால் அதன் மூலம் ஏற்ப்படுகின்ற அவமானத்தை தாங்கி கொள்ள இயலாமல் புதிய குற்றவாளிகள் பெருகும் நிலை ஓரளவிற்கு குறையலாம். வாழவேண்டிய வயசு, காலமும் இன்னும் நிறைய இருக்கிறது என்பதை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது  குற்றங்கள் பெருகுவதற்கு எளிய வழியாக உள்ளது. மும்பை போன்ற நகரங்களில் கழுத்தில் தங்கம் அணிந்து வெளியில் நடமாடுகின்ற முறை ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பே முற்றிலுமாக கைவிடப்பட்டது.

மும்பை மற்றுமின்றி வடஇந்திய நகரங்களில் தங்க ஆபரணம் அணிந்துகொள்வதை வழக்கத்திலிருந்து நிறுத்தியதற்கு அடிப்படையான காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் திருடர்களின் ஆபத்தையும் கருத்தில் கொண்டே அவ்வாறு நடைமுறையில் இருந்து வருகிறது. வட இந்திய திருடர்களின் பார்வை தற்போது தமிழகத்தை முற்றுகையிட்டுள்ளது, உள்ளூர் திருடர்கள், வெளியூர் திருடர்கள் எல்லோரும் தமிழகத்தை குறி வைத்திருப்பது  துர்பாக்கியம். லஞ்சம் வாங்கிய பணத்தில் சேமித்த தங்க ஆபரணங்களும் ரொக்கமும் பறிபோனால் போலீசில் புகார் கொடுக்க யோசிப்பவர்கள் உண்டு. நேர்மையாக உழைத்து சேமித்த பணத்தில் சிறுக சிறுக சேமித்த தங்க ஆபரணம் மற்றும் ரொக்கம் பறிபோனால் எந்த அளவிற்கு பாதிக்கபடுவார்கள் என்பதை சொல்லி அறிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை.

குடித்து கும்மாளம் அடிப்பதற்கு அடுத்தவரின் உடமைகளை கொள்ளையடித்து செல்லும் இளைஞர்கள் அதிக நாட்கள் நிம்மதியாக வாழ்ந்தனரா என்பதை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். பொதுவான கருத்து: கொள்ளையடித்தவர் அதை வைத்து அதிக நாள் நிம்மதியுடன் வாழ இயலாது என்பது. ஒருமுறை திருடி அல்லது கொள்ளையடித்து அதை வைத்து சுகித்துவிட்டால் அப்பழக்கம் தொடரும் வாய்ப்பும் வந்துவிடுகிறது. பணம் எப்போதும் போதும் என்கின்ற மனநிலையை கொடுப்பதே இல்லை. அதிலும் உழைக்காமல் கிடைக்கின்ற பணத்தை செலவு செய்கின்ற வழிகளும் மிகவும் தரம் அற்றதாகவே இருக்கின்ற காரணத்தால் அதை கொண்டு வாழும் மனிதரின் தரமும் அவ்வாறே இருக்கும். அதன் முடிவு மட்டும் எப்படி தரமுடையதாக இருக்க முடியும். இன்றைய இளைஞர்களின் மனோபாவம் "கொஞ்சநாள் வாழ்ந்தாலும் சந்தோஷமா{குடியும் பெண்ணும்} இருந்து விட்டு சாகணும்" என்கின்ற மிகவும் "உயர்ந்த லட்சியம்" கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அதற்கேற்ற வாழ்க்கை வாழ்வதற்கு கொலை கொள்ளை எதுவும் செய்யலாம் என்ற நம்பிக்கையூட்டும் திரைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடபட்டுகொண்டு வருகிறது .......திரைப்படங்களை பார்த்துதான் கற்றுக்கொள்ள வேண்டுமா என்று கேட்காதீர்கள், முதல் பாதியில் எல்லாவித தீய செயலிலும் ஈடுபடும் ஒருவர் கடைசி சில காட்சிகளில் முற்றிலும் முரணான தீர்வுடன் முற்றுபெறும் திரைப்படங்கள் போதிக்கின்ற நல்ல செய்தியை எடுத்துக்கொண்டவர் காண்பவர்களில் எத்தனை பேராக இருக்கபோகிறது.





வெள்ளி, 5 ஜூலை, 2013

சமுதாய முன்னேற்றம்

இரண்டும் கெட்ட நிலை:

 இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுறையில் இயங்கும் நிலை. தற்போது இந்திய நாட்டின் பொருளாதாரம், நாகரீகம் போன்ற மிக முக்கியமான துறைகள் இரண்டும் கெட்ட நிலையில்  உள்ளது, சமுதாயத்தில் முன்னேற்றம் என்ற பெயரில் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் விளைவு வருடாவருடம் மாணவர்களின் தேர்ச்சி அதிகரித்து கொண்டிருப்பினும் அதன் ஒட்டு மொத்த அடிப்படை நோக்கம் பொருளாதார மேம்பாட்டை மட்டுமே சார்ந்திருக்கிறது. நாகரீகம், சமுதாய முன்னேற்றம் என்பது பொருளாதாரத்தை உயர்த்தி கொள்வது   மட்டுமே என்ற உறுதியுடன், உணர்வுடன் கல்வி கற்க ஆர்வம் காட்டும் மக்கள் கொண்ட சமுதாயமாக இன்றைய நிலை காணப்படுகிறது. கல்வி கற்ப்பது சமுதாயத்தில் எந்த மாற்றங்களை ஏற்ப்படுத்தி இருக்கிறது என்று கணக்கெடுப்பு செய்யினும் நடை, உடை, பொருளாதார மாற்றங்கள் என்று மட்டுமே காண முடிகிறது.

சமுதாய சீர்திருத்தம் என்பது கல்வி கற்றதால் ஏற்பட்டதா என்றால் இல்லை என்பதே விடை. சுகாதாரம், பொது இடங்கள் மற்றும் கழிவறைகளை பயன்படுத்தும் முறைகள், தனி மனித ஒழுக்கம் கல்வியறிவினால் மேம்பாடு அடைந்துவிட்டதா என்றால் இல்லை. கல்வி என்பது இந்தியாவை பொருத்தமட்டில் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் கருவி என்பது யாவரும் ஏற்றுக்கொண்ட ஒன்றாக மட்டும் உள்ளது. ஆதிகாலத்தில் ஏற்ப்படுத்தபட்ட சாதி குறிப்பிட்ட தொழில் சார்ந்ததாக உண்டாக்கப்பட்ட  வரலாற்றை கல்வி நமக்கு விளக்கி கூறினாலும், படித்தவர்கள் தங்களது சுய லாபத்திற்காக, வேறு பலர் சுய கவுரவத்திற்காக ஏற்றத்தாழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களிடையே வீணான கலவரங்களை உண்டாக்கி தேவையற்ற கிளர்ச்சி செய்வதன் மூலம் மக்களை திசை திருப்புகின்றனர். படித்தவர், கல்வியறிவை உடையவர் செய்கின்ற செயல்கள் இவை என்றால் கல்வி கற்பதன் பொருள் என்ன? படித்து பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டும் கல்வியை உபயோகப்படுத்தி கொள்ளும் சமுதாயம் முன்னேறிய அல்லது முன்னேறுகின்ற சமுதாயமாக எப்படி இருக்க முடியும்?

இப்படிப்பட்ட சமுதாயம் நாகரீகம் அடைந்ததாக கருத முடியுமா? ஒருபுறம் கல்வி என்றால் என்னவென்று அறியாத பாமர மக்கள், மற்றொருபுறம் படித்து பட்டம் வாங்கிய பாமர கூட்டம். இவர்களை உள்ளடக்கிய நாடு இரண்டும் கெட்டான்கள் நிறைந்த நாடு. இங்கு சுரண்டல், கொலைகாரர், கொள்ளையர், சாதி மத வெறியர்கள் நிறைந்து கிடக்கும் பூமியில் செழிப்பு, சமாதானம், அமைதி, முன்னேற்றம் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடுவது முட்டாள்தனம். இப்போதைய இந்தியாவில் மலிவாக எங்கும் எதிலும் காண முடிவது அக்கிரமம், அயோக்கியத்தனம். யாரையும் எதையும் நம்பி ஏமாந்துவிடாமல் பாதுகாத்து கொள்வதற்கு என்று தனி திறமையை வளர்த்து கொள்ள வேண்டிய நிர்பந்ததில் வாழுகின்ற சூழல். முற்காலத்தில் ஒரு வழக்கச்சொல் இருந்தது "அவன்(ர்) (ள்) படிச்சவர்; நாலும் அறிந்த நல்லவர்" என்பது. ஆனால் அந்த வழக்கச்சொல் தற்காலத்தில் "நாலும் அறிந்த அயோக்கியன்" என்று முற்றிலும் தலைகீழான மாற்றமடைந்து நாட்டை முன்னேற்றம், நாகரீகம் என்ற பாதையில் வீர நடை போட செய்து வருகிறது.


புதன், 19 ஜூன், 2013

ரத்தம் உரிஞ்சும் அட்டைகள்

பொதுவாக ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு, விளம்பரம் செய்யப்படுகின்ற பொருட்கள் தரமற்றவை என்று, பல தரம் மிக்க பொருட்கள் விளம்பரம் இல்லாமல் வீணாவதும் உண்டு. இதற்க்கு காரணம் விளம்பரம் செய்கின்றவர்கள் வியாபார நோக்கத்தில் மட்டுமே செய்கின்றனர். தர கட்டுப்பாடு என்பது பெயரளவில் இருப்பதும் எவ்விதத்திலும் மக்களுக்கு உபயோகம் இருந்ததாக இதுவரையில் தெரியவில்லை. உணவு பொருட்கள் முதல் ஏனைய வீட்டு உபயோக பொருட்கள், மின் இயந்திரங்கள் என்று எல்லாவற்றிலும் அவற்றின் தரம் என்ன என்பது கேள்வி. தரமற்ற பொருள் குறைவான விலையில் கிடைக்கும் என்று நினைத்தால் அது சீனாவில் உருவாக்கப்பட்டவை என்பது வெளிப்படையான உண்மை. அதற்கடுத்த நிலையில் ஆனால் எப்போதும் நிரந்தர முதலிடத்தில் இருக்கும் தரமற்ற பொருட்களை உருவாக்கி விற்பனை செய்வதில் முதலிடம் டெல்லி மற்றும் மும்பையில் உருவாக்கப்படும் பொருட்கள்.

மும்பையில் கிடைக்கும் பல பொருட்களில் Made in USA என்று இருக்கும். 'அட பரவாயில்லையே அமெரிக்காவில் செய்யப்பட்ட பொருள் இந்தியாவிலேயே கிடைக்கின்றதே' என்று ஏமாந்து வாங்கி செல்லும் விடயம் அறியாத புதியவர்கள் நிறைய உண்டு. அதைவிட அதிரடியான செய்தி மும்பையில் திருடிய பொருட்களை விற்க  தனியாக ஒரு அங்காடி தெரு உண்டு. இதெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் சாத்தியம் என்று நினைப்பவர்களுக்கு இன்னுமொரு செய்தி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் 'நம்ம ஊர் கில்லாடிகள்' ஒன்றிணைந்து செல்லுமிடமெல்லாம் சிறப்பு செய்வதை துபாய், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளிலும் 'திருட்டு அங்காடி தெரு'க்களை உருவாக்கியுள்ளதை சொல்லி பெருமை அடைவதற்கு பதிவுலகம் கூட சரியான இடம் என்று தோன்றுகிறது.

சென்னையில் பழைய மூர் மார்கெட் என்று ஒன்று இருந்தது அங்கே திருட்டு பொருட்கள் மட்டுமல்லாது வறுமையில் வேறு வழியின்றி யாருக்கும் தெரியாமல் அவசரத்திற்கு விற்று விட்ட பலவித பொருட்களை விற்ப்பனைக்கு வைத்திருப்பதை பார்க்க முடிந்தது. இப்போது அந்த மூர் மார்கெட் சுத்தமாக இல்லாமல் போனது அங்கே தற்போது தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்டு காட்சிகள் முற்றிலுமாக மாறி விட்டது. அதிக பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் பொருட்கள் அத்தனையும் வாங்கிய விலைக்கு நிகரானதா என்பது அவற்றை உபயோகிக்கும் காலத்தில் மட்டுமே தெரிந்து கொள்ளமுடிகிறது. போலிகள் எங்கும் எதிலும் நிறைந்து  அதற்கிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக தரம் மிக்கவை தென்படுவதை காணுகின்ற வாய்ப்பு மட்டுமே பெருகிவருகிறது.

அதிக பிரயாசப்பட்டு குறைவான ஆதாயம் கிடைத்தால் போதும் என்று திருப்தியடைந்த காலம் மாறி; ஒரு கைபேசியை விலை கொடுத்து வாங்கியாக வேண்டும் என்பதற்காக தான் பெற்ற குழந்தையை ரூபாய் 1,500 க்கு விற்கும் பெண்கள் தமிழகத்தில் உள்ள செய்தியை காணுகின்றபோது இன்றைக்கு மக்களுக்கு பொருட்களின் மீதான மோகம் எந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறது என்பது புரிகிறது. இதில் விளம்பரத்தை நம்பி எத்தனை பொருட்கள் வாங்கப்படுகிறது என்பது பற்றிய கணக்கெடுப்பு விவரம் அறிய முடியவில்லை. மேலை நாடுகளைப்போல நமது நாட்டிலும் உணவு மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் மீதான தரக் கட்டுப்பாடுகள் நிர்ணயம் செய்த பின்னர் அவற்றை வாங்கும் தனிமனிதன் அவற்றைப்பற்றி அறியும் வழி செய்தல் மிகவும் அவசியம் என்று நான் நினைக்கின்றேன்.

தரமற்ற பொருட்களை விற்கும் அல்லது தயாரிக்கும் நிறுவனங்களை அரசு முடக்க வேண்டும். விளம்பரங்களுக்கு கூட தரம் மிக்க பொருட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மது அருந்தும் கீழ் தட்டு மக்கள் விளம்பரங்களில் காண்பிக்கப்படும் எச்சரிக்கைகளை அறிந்திருப்பார்களா என்பது சந்தேகம். உடல் நலத்தை பாதிக்கும் மது வகைகளை விற்ப்பனைக்கு அனுமதிப்பதை முழுவதுமாக கட்டுபடுத்துவது மட்டுமே திருடு, சங்கிலி பறிப்பது, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் குறைக்க வழி வகுக்கும். குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்கள் அதிகரித்து அதனால் ஏற்ப்படும் சாலை விபத்துகள் ஏராளம். தினமும சாலை விபத்துக்களில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனிதனை விட மனிதனால் உருவாக்கப்படுகின்ற ஏனைய பொருட்களின் மதிப்பு அதிகரித்து வருவது என்பது தாம் உட்கார்ந்திருக்கும் மரத்தின் கிளையை நாமே வெட்டிகொண்டிருப்பது போன்றது என்பதை அறியாமல் செய்கிறோமா தெரிந்தே செய்கிறோமா என்பது விளங்கவில்லை.





செவ்வாய், 18 ஜூன், 2013

எல்லோரும் கொண்டாடுவோம்

அப்பாக்கள் தினம் அம்மாக்கள் தினம் என்று முக்கிய உறவுகளுக்கான தினத்தைப் பற்றி ஏற்கனவே பதிவு எழுதி இருக்கிறேன், தாத்தாக்கள் தினம் பாட்டி தினம் என்றோ அல்லது மைத்துனி தினம் மாமனார் தினம் என்கின்ற ஒரு தினம் இதுவரையில் இல்லை என்பதிலிருந்து அம்மாவும் அப்பாவும் உறவுகளில் மிகவும் முக்கியஸ்த்தர்கள் என்பது தெரிகிறது. இப்படிப்பட்ட "தின" அனுசரிப்பு என்பது மேலை நாடுகளுக்கு அவசியமானது என்பதால் அவர்கள் அவ்வாறு ஒரு குறிப்பிட்ட தினங்களை உறவுகளுக்கென்று ஒதுக்கி கொண்டாடி வருவது என்பது சாதாரணமான விடயம். அதிலும் கூட எத்தனை பேருக்கு தங்கள் அப்பாக்களை யார் என்பது தெரிந்திருக்க முடியும் என்பதும், அவர்களது அம்மாக்கள் தற்போது எந்த அப்பாவுடன் வாழ்ந்து வருகிறார் என்பதை அறிந்திருக்கின்றனரா என்பதும் கூட கேள்விக்குரியது. அங்குள்ள வாழ்க்கை முறையில் அவ்வாறு வாழ்வது என்பது யதார்த்தம். அதனால் அவர்கள் குறிப்பிட்ட நாளை அப்பா அம்மாவிற்கென்று ஒதுக்கி அவர்களுடன் அந்நாளை கொண்டாடுவதில் வியப்பில்லை.

இந்தியாவின் சமுதாய முறைகளில் ஒரு குறிப்பிட்ட தினத்தை ஒதுக்கி பெற்றோரை மகிழ்விக்க அல்லது வாழ்த்து கூற வேண்டிய நிலை அவசியம் இல்லை, இந்தியாவிலும் நிலை மாறிக்கொண்டிருக்கிறது, முதியோர் இல்லங்களில் வாழும் பெற்றோர்களுக்கு 'கடனே' என்று மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்திவிட்டு 'கெழம் எப்போ மண்டைய போடப்போகுதோ' என்று அலுத்துக்கொள்ளும் பிள்ளைகளுக்கு நிச்சயம் பெற்றோரை கொண்டாதுவதற்கு என்று ஒரு குறிப்பிட்ட தினம் அவசியம்தான். முதிர் வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு தண்டனை கொடுக்கின்ற சட்டம் அவசியப்படுகின்ற காலம் இது. என்றிருக்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வாழ்த்து சொல்ல, ஒரு குறிப்பிட்ட தினத்திலாவது அவர்களை மகிழ்விக்க விரும்பும் நல் உள்ளங்கள் இருப்பின் முப்போகம் விளையும் பூமியும், "பெய்" என்றால் உடனே பெய்யும் மழையும் நமக்கு கிடைத்திருக்குமே.

'யார் இவர்களை பெற்றுக்கொள்ள சொன்னது' என்றும், 'இவர்கள் என்ன என்னை ஓ ஹோ என்றா வளர்த்தார்கள் நான் இவர்களை வைத்து பராமரிப்பதற்கு', என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பெற்றோரை ஏசுகின்ற பிள்ளைகளும் 'இவனை பெற்றதற்கு கல்லையோ மண்ணையோ பெற்றிருக்கலாமே' என்று வேதனை செந்நீர் விடுகின்ற பெற்றோரை அல்லவா பெரும்பாலும் காண முடிகிறது. அப்படியே நல்மனம் கொண்ட பிள்ளைகளை பெற்று வளர்த்துவிட்டாலும் திருமணம் என்கின்ற பெயரில் விலை போகும் பிள்ளைகள், மனைவியின் நிரந்தர அடிமைகளாகி கைகளுக்கும் வாய்க்கும் விலங்கு பூட்டப்பட்டு கைதிகளாய் கிடக்கின்ற குடும்பங்களில் அப்பாக்கள் தினம் அம்மாக்கள் தினம் என்று ஒன்று இருக்கின்ற செய்தி காற்று வழியாக கூட உள்ளே நுழைகின்ற வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்வியல்லவா.

பெற்றோரை கொண்டாட வேண்டும் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமல்ல, நாம் வாழுகின்ற ஒவ்வொரு நிமிடமும், கடவுளுக்கு கொடுக்கின்ற மரியாதையில் ஒரு பகுதியாவது பெற்றோருக்கு செலுத்துவதற்கு முயற்சிக்க வேண்டாமா, பெற்றோர் கண் கண்ட தெய்வங்கள் என்று வேதங்களும் நூல்களும் கூறுகிறதல்லவா. யார் யாருக்கோ, ஊர் மெச்சிக்கொள்ள உபகாரம் செய்வதை விட, விதவிதமான தான தருமங்கள் செய்வதிலும் அன்னை தந்தையை உபசரிப்பது மட்டுமே உயர்ந்த உபகாரம். 'பெற்றோர் எனக்கு என்ன செய்துவிட்டார்கள்' என்று எண்ணி அதற்க்கு பதில் செய்வது மூடத்தனம், அவர்களால் எனக்கு செய்ய இயலாமல் போனவற்றை அல்லது எனக்கு இயன்ற உபகாரத்தை லாப நட்ட கணக்கு பாராமல் அவர்களுக்கு செய்வதில் அன்றோ புண்ணியம் கிடைக்கின்றது. ஆயிரம் கோவிலுக்கு சென்று காணிக்கை கொடுத்து பூஜைகள் செய்தாலும் கிடைக்காத ஆசீர் கிடைப்பது அருகில் இருக்கும் தாய்க்கும் தந்தைக்கும் செய்யும் உபசாரத்தால் மட்டுமே.

பல நீதி நூல்கள் இவற்றை விலாவரியாக நமக்கு கொடுத்திருப்பினும் அவற்றையும் குப்பையாக எண்ணுகின்ற மனிதன்  நிம்மதியுடன் சகல பாக்கியங்களுடன் தனது வாழ்நாளின் இறுதி வரையில் வாழ்வது அரிது. எத்தனை சாதித்தாலும் அவரது வாழ்க்கை வீழ்ச்சியுறுவது நிச்சயம்.

செவ்வாய், 21 மே, 2013

விளையாட்டு வினையானால் ....



ஒரு பழமொழி உண்டு " விளையாட்டு வினையாகும்", பல சந்தர்ப்பங்களில் பல பேர் விளையாட்டாக துவங்கிய பல விஷயங்கள் வினையாக (பெரும் பிரச்சினையாக) மாறியது உண்டு. "இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை, விளையாட்டாகத்தான் செய்தேன்" என்று சொல்லி வருத்தப்படுபவர்கள் நாளடைவில் அதுவே பழக்கமாகி, பழக்கத்தை விடுவதற்கு இயலாமல் திருட்டுத்தனமாக சில பல காரியங்களை செய்து அவற்றில் சிலவற்றில் மாட்டிக்கொண்டது, தப்பித்தால் போதும் என்றாகி, எதோ ஒரு வழியில் தப்பித்து, மீண்டும் பழக்கதோஷத்தில் சிக்கிக் கொண்டு ..........

இப்படி பலரது வாழ்க்கை திண்டாட்டத்தில் சிக்கி விடுகிறது. விளையாட்டாக துவங்கும் பலவித பழக்கம் நாளடைவில் அடிமையாக்கி விடும் அபாயம் ஏற்ப்படும் என்பதை துவக்கத்திலேயே அறிந்து அதை விட்டு விலகாமல் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அதுவே வினையாகி நமது வாழ்க்கை சீரழியும்.

தவறு செய்பவர்களுக்கு சூழ்நிலை, நண்பர்கள், பணம் மற்றும் பொருளாசை என்று பல காரணங்கள் இருந்தாலும் தான் செல்லும் பாதை தவறானது என்பதை அறிந்தும் தொடர்ந்து செய்து அதற்கான பலன் அல்லது முடிவு வந்து சேருவதை தவிர்க்க இயலாது போகிறது. சூதாட்டம் என்பதை உருவாக்க காரணம் விளையாட்டின் மீது ஏற்ப்படும் மோகமா அல்லது எதையும் பணமாக மாற்றும் கிரிமினல் புத்தியா என்பதை யாவரும் அறிந்திருந்தும், சட்டப்படி குற்றம் என்பது தெரிந்து, அதில் சிக்கி வெளியேறும் வழி தெரியாமல் அல்லது உணராமல் அதிலேயே அழிந்து விடுபவர்கள் ஏராளம். எந்த பழக்கம் மனிதனை நிதாதனத்துடனும் கவுரவத்துடனும் நடத்தி செல்லுகிறதோ அதை மனிதன் விரும்பி ஏற்றுக்கொண்டு வாழ விழைவதில்லை. மனிதனின் மனம் ஒரு குரங்கு என்று சொல்வதற்கு இதுதான் அடிப்படை காரணம் என்று நான் நினைக்கிறேன்.

சிறந்த அல்லது நல்ல பழக்கத்தை விளையாட்டாக கூட செய்வதற்கு மனிதர்கள் மனம் நாட்டம் கொள்வது இல்லை. "நன்மையானது" என்பதை அடையும் வழி மிகவும் குறுகியதாகவும் இடர் நிறைந்ததாகவும் உள்ளதும்  தீமை அல்லது சூது என்பது எங்கும் எதிலும் நிறைந்து எளிதாக அடைந்துவிடகூடிய வசீகரம் வாய்ந்ததாக உள்ளது என்பதால் அதை அடைவதில் ஆர்வம் காட்டும் மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம், நன்மையை தேர்வு செய்ய யோசிக்கும் இன்றைய உலகில் தீமை அல்லது வினை என்பது எங்கும் எதிலும் நிறைந்து கிடப்பதில் ஆச்சர்யம் இல்லை. எதற்காக நீதி, நன்மை வேண்டும், அதை வைத்துக் கொண்டு "நாக்கு வழிப்பதா", அல்லது "வயிற்றில் ஈரதுணியை போட்டு கொண்டு படுத்து கிடப்பதா" என்று நக்கல் நையாண்டி செய்பவர்கள் எண்ணிக்கை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து செல்வதை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

ஊடகங்கள் பெருகியதால் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சிக்கல் இவற்றை இன்னும் தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது, "வேண்டாம்" என்று கண்ணையும் காதையும் மூடிக்கொண்டாலும் வீட்டின் உள்ளே தொலைகாட்சிபெட்டியில் செய்திகள் மூலமாக நம்மை தேடி வந்துவிடுகிறது. "மானம் போன பின் வாழ்ந்து என்ன பயன்" என்று எண்ணிய காலம் மாறி "காசேதான் கடவுள்"  மூச்செல்லாம் பணமாக மாறிவிடக் கூடாதா என்று ஏங்கும் பெருமூச்சு எல்லாம் ஒன்று சேர்ந்து வானில் கூடுகின்ற கொஞ்சம் மழை மேகத்தை கூட துரத்தி சென்று வேறு நாடுகளில் பேய் மழை, சூராவளியாக உருமாறி அவ்வூரில் உள்ள வினை அல்லது சூதுக்கு ஊரை துவம்சம் செய்துவிடுகிறது. [மாமியாரிடம் கோபித்துக்கொண்டு கணவனை வெளுத்து வாங்கும் மனைவிகளைப்போல].

வரதட்சிணை கொடுமை, சாதிக்கொடுமை, கற்பழிப்பு, லஞ்சம், அதிகார துஷ் பிரயோகம், தீவிரவாதம் இன்னும் பல ஒன்று சேர்ந்து செய்திகளை உருவாக்கி அதில் இன்னொன்று தற்போது சூதாட்டம். பூமி தாங்குமா தெரியல.




செவ்வாய், 14 மே, 2013

பதில் இல்லாத பல கேள்விகள்

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஜன நெரிசல் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதில் மும்பை நகரில் மட்டும் 18 கோடிக்கும் அதிகமாக மக்களை அடக்கி வைத்திருக்கிறது, நகரின் முக்கிய இடங்களில் கழிவறைகள் பழமையானதாக இருப்பினும் ஓரளவிற்கு சுகாதாரத்துடன் நிர்வகிக்கப்படுகிறது. சென்னையில் பொது கழிப்பிடங்கள் மிகவும் குறைவு என்றாலும் அவை உபயோகிக்கும் நிலையில் இல்லாமல் கிடப்பதை காண முடியும். உபயோகிப்பவர்களின் அலட்சிய போக்கு சுகாதாரமற்ற நிலையை அதிகரிக்கிறது. சுகாதாரம் என்பதை கட்டாயமாக்கினாலே ஒழிய இந்தியாவில் சுகாதாரம் என்பது கேள்விக்குரியதாக மாறி வருகிறது. ஒருவர் மற்றவர் மீது பழி சுமத்தி கொண்டு,  காரணங்களை சொல்லிக்கொண்டு இருப்பதால் சுகாதாரம் கிடைத்து விடப்போவதில்லை. பல இடங்களில் கால்வாய்கள் குப்பை கூளங்களால் அடைத்துக் கொண்டு கழிவு நீர் தேங்கி கொசுக்களுக்கு மறு வாழ்வு வழங்கி வருவதை காண முடிகிறது. குப்பைகளை குறிப்பிட்ட இடத்தில் சேகரிக்கின்ற புதிய சேவை அறிமுகபடுத்தப்பட்டிருந்தாலும் இன்னும் பலர் குப்பைகளை கண்ட பொது இடங்களில் தூக்கி எரிந்துசெல்லும் பழக்கத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அரசினர் கல்லூரிகள் அரசினர் பள்ளிகூடங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. சுகாதாரமற்ற சூழல் நகரின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் நிலைமை மாற்றி அமைக்க அரசு கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. குடிசை மாற்று வாரியத்தின் கட்டிடங்களை ஒட்டிய பகுதிகள் சுகாதாரமற்ற கால்வாய் அமைப்புகள் கொண்டதாக உள்ளது. நகரத்தின் பல இடங்களில் இன்னும் குடிசைகள் அகற்றப்படாமல் சுகாதாரமற்ற நிலை தொடர்கிறது. குடிசைகளில் வாழ்கின்ற மக்கள் அருகில் இருக்கின்ற வீதிகளையும் மைதானங்களையும் கழிப்பிடமாக உபயோகித்து, சுற்றுபுறத்தை துர்நாற்றம் மிகுந்த இடங்களாக மாற்றி வருகின்றனர்.

நடைபாதைகளை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் கடைகள், மற்றும் நடைபாதைகள் சிலரின் குடியிருப்புகளாகவும் உபயோகப்படுத்தபடுவதன் காரணமாக நடைபாதைகளில் நடந்து செல்வதற்கு இயலாமல் நகரின் பல வீதிகள் நெரிசல் நிறைந்து உள்ளது. வாகனங்களின் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பாதசாரிகளுக்கு நடப்பதற்கான பாதைகள் நகரின் முக்கிய சாலைகளில் பராமரிப்பற்று உபயோகிக்கும் நிலையில் இல்லாமல் உள்ளது. சிறிதளவு மழை பெய்தால் கூட மழை நீர் தேங்கி சாலைகள் குழிகளாக வாகனம் ஓட்டுபவர்களை திணற வைக்கிறது. இவற்றால் அவ்வீதிகளில் பயணம் செய்பவர்களுக்கு பலவித உடல் கேடுகளும் விபத்துக்களும் ஏற்ப்படுகிறது. ஒவ்வொரு பராமரிப்பிர்காக ஒதுக்கப்படும் நிதி சரியான முறையில் கையாளப்படாமல் பலரின் கைகளில் சிக்கி நின்று விடுவதே இதற்க்கு காரணம். நூறாண்டுகள் கடந்தாலும் பிரச்சினைகள் சரி செய்யப்படுமா என்பது பதில் இல்லாத பல கேள்விகளுள் ஒன்றாகி கிடக்கிறது.



சனி, 23 மார்ச், 2013

ஆதாயம் தேடும் சமதர்மம்

இந்திய மக்கள் எப்போதுமே கட்டுப்பாடுகளுக்குள் வாழ்ந்து பழகிப்போனவர்கள்,பழக்க வழக்கம் என்பதில் ஊறிப்போனவர்கள். வெள்ளைக்காரன் மூலம் படிப்பறிவு நுழைந்த பின்னர், படித்து முடித்தால் பணிக்கு செல்ல முடியும் என்ற பொருளாதார மேம்பாட்டை மட்டுமே கருத்தில் இறுக பிடித்து கொண்டு அன்றைய 'படித்தவர்கள்' பெரும்பாலும் உயர் சாதிக்கார வர்க்கமாக இருந்த காரணத்தால் உயர்பதவிகளை வெள்ளைக்காரனுக்கு அடுத்ததாக 'உயர்' ரகம் கைப்பற்றிக் கொண்டது. இந்தியர்கள் என்றாலே தோலின் நிறம் கருப்புதான். மாநிறம் என்றும் ஒன்றுண்டு. வெள்ளைக்காரனைப் போன்ற தோலின் நிறம் இந்தியர்களுக்கு கிடைத்தது வெள்ளைக்கார மேலதிகாரிகளின் "தயவு" என்பதை அக்காலத்தில் வாழ்ந்த பெரியோர் சொல்லி கேட்டதுண்டு. "கடவுளின் நகரம்" என்று கூறப்படும் நாட்டில் கூட அங்கு முதன் முதலில் வந்திறங்கிய வெள்ளைக்காரர்கள் யூதர்கள் போர்சுகீசியர்கள் என்று வெளிநாட்டவர்கள் மதத்தை இறக்குமதி செய்தது போன்றே நிறத்தையும் அழகையும் கொடுத்துவிட்டு சென்றார்கள்.

"ஏட்டு சுரைக்காய்" படிப்பு என்பது இந்திய வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்ப்படுத்தி விட்டதாக கூற இயலாமல், படிப்பதொன்றும் செய்வது வேறே ஒன்றிற்காகவும் என்று "படித்த"வர்கள் பெருகி வருவது வழக்காகி போனது, முன்னேற்றம் என்பது படித்தவர் அதிகமாகி கொண்டே இருப்பதா?. பொருளாதார முன்னேற்றம் என்பது எதனால் சீரழிகிறது? கருப்புப்பணம், லஞ்சம், அளவிற்கு அதிகமாக சொத்து குவிப்பது நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்காதா?, சுயநலம் என்பது எதனால் ஏற்ப்படுகிறது?, சுயநலவாதிகள் யார்?, நாட்டின் நலன் மிகவும் முக்கியம் என்று கருதுவதில் எதற்க்காக அரசியல் கட்சிகள் முரண்பட்ட கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும்?. நாளடைவில் எண்ணிக்கைக்கு அடங்காத அரசியல் கட்சிகள் உருவாகி கொண்டிருப்பது எதை பிரதிபலிக்கிறது. சுதந்திரத்தையா? படித்தவர்கள் செய்யும் மோசடிகள் அதிகரிப்பதற்கு காரணம் என்ன? மோசடிகளில் பலியானோர் எதற்காக பலியாக வேண்டும்?

குடிப்பழக்கம் உடலை கெடுக்கும் புகைப்பழக்கம் உயிரை பறிக்கும் என்று எச்சரிக்கை செய்து கொண்டு மறுபக்கத்தில் அப்பொருள்களை விற்ப்பதால் கிடைக்கின்ற லாபத்தை கொண்டு எதை மேம்படுத்த திட்டம் வகுக்கப்படுகிறது? மயானங்களை மேம்படுத்துவதற்கா?ஆதாயம் என்பதை மட்டுமே மையமாக கொண்டு செயல்படுத்தப்படுகின்ற எந்த காரியமும் முன்னேற்றத்தை ஏற்ப்படுத்தி விடாது. ஆதாயம் எதிர்பார்த்து முதலீடு செய்வதற்குப் பெயர் முதலாளித்துவம். சுதந்திர, ஜனநாயக நாட்டில் அரசாங்கம் என்பது மக்களுக்காக செயல்படுவது, அதில் மக்களிடமிருந்து ஆதாயத்தை எதிர்பார்த்து முதலீடு செய்வதில் கிடைக்கும் பணத்தை கொண்டு வேறு மேம்பாட்டு திட்டத்திற்கு முதலீடு செய்வது நியாயமானது ஆனால் தனி மனித சிந்தனையை மறுத்து போக வைக்கும் குடியும் புகையும், நாட்டில் முன்னேற்றத்தை வளர்ப்பது எப்படி. உடல் உழைப்பிற்கேற்ற உணவும் சுற்றுப்புற சூழலும் இன்றி மனித உடல் கேடு வருத்தும் வாழ்க்கை முறை எப்படி முன்னேற்றத்தை கொடுக்க இயலும். பெற்றோர் பார்த்து தேர்ந்தெடுத்து கொடுத்த ஐந்து நபர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்ள பழகிப்போன சமுதாய வழக்கங்களைபோல நாட்டு தலைவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்த கிடைக்கின்ற ஓட்டெடுப்பில் தனது மதம் தனது ஜாதி என்று தேர்வு செய்தால் சிறந்த நிர்வாகிகளை நாடு பெற இயலுமா.

எந்த துறையை தேர்ந்தெடுத்து படித்தால் வருமானத்தை பெருமளவு பெற முடியும், எந்த பெண் அதிகப்படியான சொத்துக்கு சொந்தக்காரி அல்லது அதிகப்படியான வருமானம் உள்ள துறையில் பணிபுரிகிறார் என்பதை வைத்து  திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்படும் சமுதாய கட்டமைப்பில், ஆதாயம் நிறைந்த வாழ்க்கையை இலக்காக வைத்து நகர்கின்ற சமுதாயத்தில் "சுதந்திரம்" என்பது எப்படியெல்லாம் கைகொடுக்கிறது அல்லது கையாளப்படுகிறது என்பதை லஞ்சம், அரசியல் துஷ்பிரயோகம், பதவி மோகம், புதிய அரசியல் கட்சிகளின் வரவு, கருப்புபணம், கொலை கொள்ளை, என்று இதன் வட்டம் மிகவும் பெரிதாகி கொண்டு செல்கிறது. சமதர்மம் என்பதெல்லாம் பேச்சில் மட்டுமேயன்றி செயலிழந்து ஒடுக்கப்பட்டு பல நூறு ஆண்டுகள் சென்றுவிட்டது. வெள்ளையர்களை வெளியேற்றிவிட்டால் சுதந்திர இந்தியாவில் சமதர்மம் நிலைத்துவிடும் என்று கனவுகண்டவர்கள் இன்று இல்லை. அவர்கள் இருந்திருந்தால் சுதந்திரம் கிடைப்பதற்கு ஒருநாளும் நினைத்திருக்க மாட்டார்.

விமோச்சனம் என்பது இனி இங்கில்லை வேறு எங்காவது உண்டா என தேடிப்பார்த்து புகலிடமாக்கி கொண்டால் ஒருசமயம் எதிர்கால தலைமுறைகளாவது சமதர்மத்தினை அனுபவிக்க கூடும்.


புதன், 20 மார்ச், 2013

கல்லடி படும் மரம்

பள்ளிக்கூடம் போகும் வழியில் ஒரு வீட்டில் மாமரம் மதிலை ஒட்டியவாறு வளர்ந்திருந்தது. காய்க்கும் காலம் தொடங்கிவிட்டால் பூவும் பிஞ்சுமாக மரம் நிறைந்திருக்கும் காலையில் அப்பக்கம் போகுற போக்கில் சில பொடிசுகள் கற்களை எடுத்து அடித்துவிட்டு போகும் விழுந்தால் எடுக்கலாம் என்று விட்டெரியும் கற்களில் சிலசமயம் ஒரு சில பிஞ்சுகள் மரத்திலிருந்து விழும் பூவுடன் நிற்கும் மரத்தின் மீது கல்லெறியும் சிறுவர்களுக்கு அவற்றில் நாளைய மாங்காய்களை கொண்ட பூக்களும் சேர்ந்தே கீழே விழுந்து வீணாவது பற்றிய கவலை தெரியாது. மரங்களுக்கென்ன வாயா இருக்கிறது இருந்தால் கல்லெறியும் பொடிசுகளை மீண்டும் அதே கல்லை திருப்பி அடித்திருக்குமே. மண்டை உடைந்து ரத்த வெள்ளம் ஏற்ப்படாது என்றாலும் தவறு செய்கின்ற போது  ஆசிரியர் வேறொரு மாணவனை விட்டு ஓங்கி ஒரு குட்டு வைக்க சொல்வது போல இருந்திருக்கும். அடிக்கின்ற அடிகளை மவுனமாக வாங்கி கொண்டு இந்த மூடர்களுக்கு காய்களையும் நிழலையும் பழங்களையும் கொடுப்பது மரங்கள் அல்லவா. இயற்கையே இவ்வாறு சுயநலம் பாராமல் தனது பணிகளை தவறாது செய்து நமக்கு எதிரே வாழும் உதாரணமாக இருப்பதை கூட சிந்தித்தரியாத மாக்கள் நிறைந்த உலகம் இது.

நிஜ வாழ்விலும் மனிதர்கள் பல்வேறு முகங்களை கொண்டவர்களாக இருந்து கொண்டு சொல் என்னும் கற்க்களால் அடுத்தவரின் மனதை சிந்தையை கிழித்து திருப்தி அடைகின்றனர். தி.மு.க. இப்போது அந்நிலையில்தான் இருக்கிறது. "முன்னே போனால் முட்டும் பின்னால் போனால் உதைக்கும்" என்ற கதையில் இன்றைய தமிழீழ பிரச்சினையில் சிக்கிக்கொண்டு தி. மு.காவும் காங்கிரசும் பலரின் நகைச்சுவைக்கு இலக்காகி உள்ளது. காங்கிரசுடன் கூட்டணியிலிருந்து தி. மு. க  விலகவில்லை என்றால் "இவனெல்லாம் தமிழினத்தலைவர் " என்று சொல்லி ஊரை ஏமாற்றுகின்றான்" என்று எப்போதும் போல வசை பாட மிகவும் வசதியாக இருந்திருக்கும் காங்கிரசிலிருந்து விலகிய பின்னும் நையாண்டி தர்பார் தொடந்து கொண்டுதான் இருக்கிறது. நையாண்டி செய்பவர்கள் அதை தவிர வேறு செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதை நன்கு உணர்ந்தவர்கள். அதே இடத்தில் "அம்மா" அவர்கள் இருந்திருந்தால் கதையே வேறாக இருக்கும். 

நையாண்டி தர்பார் அம்மாவிடம் நடக்காது என்பதை அறிந்த கூட்டம் ஒன்று ஒட்டுமொத்த குத்தகை எடுத்து கொண்டு 'ஊருக்கு எளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி" என்று தி.மு.காவை கலைஞரை அதன் உறுப்பினர்களை நையாண்டி செய்து திருப்தி அடைகின்றனர். ஈழத்தமிழர்களின் நலனை மட்டுமே வலியுறுத்தி அவர்களது எதிர்காலம் சீரடைய வழி அமைத்து கொடுக்க அரும்பாடுபடுபவர்கள் எத்தனை பேர் என்று "எண்ணி"த்தான் பார்க்க வேண்டும். பசுந்தோல் போர்த்திய ஓநாய்களை அடையாளம் கண்டுகொள்வது சிரமம் ஒன்றும் இல்லை. நையாண்டி செய்பவர்களின் அரசியல் என்பது கால்கள் இல்லாதவன் மிதிவண்டி ஓட்ட ஆசைப்படுவது போலத்தான், பிறரை கேலி செய்வது கூட அவர்களின் வன்மத்தை வெளிக்கொணரும் ஒரு வழியாகத்தான் (அரசியலில்) பயன்படுத்தப்படுகிறது. "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு" என்பது போல ஆகாதவர் எதை செய்தாலும் அதில் குற்றம் குறை கண்டு பிடிப்பதை மட்டுமே சில கட்சிகள் ஓயாமல் செய்து வருகிறது. நொந்து கிடக்கும் ஈழத்தமிழர்களின் வாழ்வு மீண்டும் சீரடையும் என்றால் இந்த சிரிப்பை நையாண்டியை ஏனைய புரட்டு வஞ்சகம் மிக்க நடவடிக்கைகளை, மற்றும் குறை கூறுவதைப் பற்றி கவலைப்பட தேவை இல்லை.

கல்லடி படும் மரம் அதற்க்கு பழி தீர்க்க தெரியாது. நிழலையும் காய் கனிகளையும் கொடுத்துக் தவறாது தன் பணி செய்து கொண்டிருக்கும்.



சனி, 23 பிப்ரவரி, 2013

கடவுள் ஏன் கல்லானான் ....மனம் கல்லாய் போன மனிதர்களாலே

நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் கோஷங்களை எழுப்பும் எதிர் கட்சியின் கோரிக்கைகளை ஆளும் கட்சி எப்படி சமாளித்து வருகிறது என்பதை தினமும் அந்த காட்சிகளை தொலைகாட்சியில் தவறாமல் பார்த்து கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரிந்ததுதான். மத்தியில் ஆட்சி செய்கின்ற அரசை எப்படியெல்லாம் முடக்குவது என்கின்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கும் எதிர்கட்சியின் கொள்கையை பற்றி சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் கட்ச்சிக்கென்று உள்ள அடிப்படை கொள்கையில் இருந்து விலகாமல் ஆட்சி செய்வதற்கு தடை விதித்துவருகின்ற மதவாத எதிர் கட்சிகளின் ஒட்டு மொத்த கொள்கை என்ன, குறிப்பிட்ட ஒரு மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே இந்திய தேசம் சொந்தம் என்பதா, ஆனால் அவ்வாறு இல்லை என்று சொல்லி கொண்டு ஆட்சியிலிருக்கும் காங்கிரசை ஆட்சி நடத்த விடாமல் இடையுறு செய்து கொண்டு பிரதமரை பதவி விலக சொல்லி வற்புறுத்தும் நோக்கம் என்ன, இந்திய தேசம் மதவாத அமைப்புகளை அங்கீகரிக்கிறதா, அப்படியானால் எந்த மதத்தை சார்ந்தவர்  ஆட்சியில் அமர செய்து ஆட்சி நடத்தும் நோக்கம் அவர்களுக்கு இருக்கிறது என்பதை அவர்கள் கோஷங்களும் எதிர்ப்புகளும் நமக்கு எடுத்து காட்டவில்லையா.

மத்தியில் ஆட்சியிலிருக்கும் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் நிறைவேறாத நிலையில் ஊழல் புகார்களை முன்னிறுத்தி குற்றவாளிகளை கண்டு பிடித்த எதிர்க்கட்சி, தங்களது கட்சியிலேயே ஊழல் இருப்பதை காண தவறியது, பின்னர் சுதாரித்துக் கொண்டு ஊழலற்ற உறுப்பினர்களை கொண்டது தங்கள் கட்சி என்ற நல்ல பெயரை எப்படியாவது தக்க வைத்து கொள்ள பெரும்பாடுபட்டு சிலரை கட்சியிலிருந்து வேறு வழியின்றி நீக்கியது மட்டுமே மிச்சம். தேர்தலில் எதை சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்பது என்பது பெரும் சாவாலாக இருக்கின்ற நிலையில், நடுவன் அரசை மிரட்டி, நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கி, பிடிவாதம் பிடித்து, அப்சலுக்கு ஒரு வழியாக தூக்கு தண்டனை நிறைவேற்றி விட்டது. எப்படியாவது தங்களது கொள்கையை நிறைவேற்றி வருகின்ற மதவாத கட்சிகள் நாட்டில் அமைதி நிலவுவதை ஒருபோதும் பொருத்து கொள்வது இல்லை.

நாட்டை போர்களமாக்கும் ஒரே நோக்கம் கொண்ட மதவாத கட்சிக்கு நடுவன் அரசு ஒருபோதும் அடிபணியக் கூடாது. மதசார்பற்ற கொள்கைக்கு இடையுறாக போராடும் கயவர்களை புகலிடமாக கொண்டதாக பாராளுமன்றம் மாறிவிட்டால் மக்கள் நிலைமை என்னவாகும், 'சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த' கதைதான். பழிக்குப் பழி என்ற நிலை ஏற்பட்டால் அதில் துயர் அடைபவர்கள் அப்பாவி பொதுமக்கள், மதவாதத்தை தூண்டி விடும் "நல்ல" மனிதர்கள் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்குக்க சம்பந்தமே இல்லாத யாரோ பலி கடாவாக்கப்படும் அநியாயம் நிறுத்த இயலாத தொடர்கதையாகிவிடும். 

புதன், 20 பிப்ரவரி, 2013

நிரந்தர கேள்வி மட்டும்

நாங்கள் குடும்பத்துடன் வளைகுடா நாடு ஒன்றில் சில ஆண்டுகள் வசித்து வந்தோம், என் கணவரின் உடன் பணி புரிந்து வந்த சிங்களவர் சிலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது, அப்போது ராஜீவ் காந்தி அவர்கள் கொலை செய்யப்படவில்லை, புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்படவில்லை, அப்படிப்பட்ட காலத்தில் அங்கிருந்த சிங்களர்களுக்கு தமிழர்களாகிய எங்களை சற்றும் பிடிக்காமல் பல முறை பல வஞ்சகமான சதித்திட்டங்களை தீட்டி பணியிலிருந்து துரத்த முயன்று தோல்வியடைந்தனர். அப்போது எங்களுக்கு அவர்களின் வன்மத்திர்க்கும் வஞ்சக செயல்களுக்கும் காரணம் தெரிந்திருக்கவில்லை. இலங்கையில் எப்போதும் சண்டை நடக்கிறது என்பதும் அதனால் பலர் உயிர், மற்றும் உடமைகளை இழந்து அகதிகளாக இந்தியா திரும்புகின்றனர் என்பதை செய்திதாள்களில் படித்திருக்கிறேன். அதன் தீவிரம் என்ன என்பது தெரிந்துகொள்ள தற்போதைய இணையதள வசதிகள் ஊடகங்கள் போன்ற பல்வேறு வசதிகள் அப்போது இல்லை. அக்காலத்தில் பர்மாவிலிருந்து வந்த அகதிகளைப்பற்றிய செய்திகள் சிலவற்றை எங்கள் பெற்றோர் பேசுவதை நான் கவனித்து கேட்டதுண்டு. அதைப்போன்று இலங்கை அகதிகளும் அங்கு வசிக்க இயலாமல் திரும்பியவர்கள் என்ற அளவில் செய்தியை அறிந்து கொள்ள முடிந்திருந்தது.

சிங்களர்களின் மிருக குணத்தை பற்றி வளைகுடாவில் பணி செய்து கொண்டிருந்த சமயம் நேரில் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கை தமிழர்களால் மட்டுமே சிங்களவர்களை எதிர்கொள்ள முடிந்த சில சம்பவங்களையும் நான் பார்த்ததுண்டு. ஏனெனில் இலங்கையில் சிங்களவர்களுடன் ஒருமித்து வாழ்ந்த காரணத்தால் அவர்களை எப்படி சமாளிப்பது என்பது முன்கூட்டியே இலங்கை தமிழர்கள் அறிந்திருந்தது தான் காரணம் என்பது எனக்கு இப்போதுதான் புரிகிறது. நாங்கள் தமிழகத்திலிருந்து வளைகுடாவிற்கு சென்றவர்கள்தான் என்றாலும் எங்களுக்கு எதிராக பயங்கர சதி திட்டம் உருவாக்கி அதை மிகவும் சரியான நேரத்தில் நம் மீது பிரயோகிப்பதை நாங்கள் கண் கூடாக கண்டு அனுபவித்திருக்கின்றோம். வளைகுடா நாடுகளில் சட்டம் மிகவும் கடுமையானது என்பதால் நாம் மிகவும் கவனத்துடன் வாழ்க்கை நடத்தவேண்டியுள்ளது, அதையே சிங்களவர்கள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்வதற்கு இடம் கொடுக்காமல் வாழ்க்கையை கத்தி மீது வெறும் காலில் நடப்பதை போன்று நடத்த வேண்டி இருந்த சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.

அப்படிப்பட்ட கொடுமைக்காரர்கள் சிங்களவ மிருகங்கள் என்பதை மறுபடியும் நினைவு கூற வைத்தது பாலச்சந்திரன் என்கின்ற சிறுவனின் கொடூர மரண செய்தி. புலிகளின் இயக்கத்தை தடை செய்ததின் காரணமாகவும் தமிழகத்தில் அதிகபட்ச மக்களுக்கு இலங்கைப்போர் சம்பவங்களைப் பற்றிய விவரங்கள் அறியப்படாமல் இருப்பதால் அதை குறித்த தீவிர போராட்டங்களும் எதிர்ப்புகளும் மிகவும் தாமதமாக உள்ளதுடன் சிங்களவர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய தீர்ப்பு கிடைக்காமல் இந்தியாவிற்கு ராஜபக்சே வருவதற்கு வாய்ப்புகளும் கொடுக்கப்படுகிறது. ராஜீவ் காந்தியின் கொலையை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளுகின்ற சிங்கள அரசு அதையே பெரும் சாக்குபோக்காக வைத்து இந்திய அரசுடன் நட்பு பாராட்டுவது போன்ற கண்துடைப்பு செய்து கொண்டிருக்கிறது ஆனால் உலக மனித நேய நீதிக்கு முன்னால் இன்னும் சரியான தீர்ப்பு கொடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லை என்கின்ற காரணம் மட்டுமே முன் வைக்கப்படுமானால் நீதி என்பதை எப்படி நிறுத்தி வைக்க முடியும் என்பது கேள்வியாக உள்ளது.

இலங்கை தேசம் சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற கொள்கையை உடைய சிங்கள அரசு அதன் குடியுரிமை பெற்ற தமிழர்களுக்கு சம உரிமை கொடாமல் சர்வாதிகாரம் செய்து வருவதை உலக நாடுகள் இன்னும் கண்டுகொள்ளாமல் மவுனமாக இருப்பது ஏன். இலங்கையில் போர் நடந்த போதும், நடுநிலை வகிக்கும் அமெரிக்கா அதை பற்றி ஐ நாவில் முன்வைத்து நடவடிக்கை எடுக்க தவறியது ஏன். இன்றுவரை இலங்கை தமிழர்கள் இடம்பெயர்ந்து பலநாடுகளில் தஞ்சம் அடைந்து விட்டதால் சிங்கள வெறியர்களுக்கு சொந்தமாகி கொண்டிருக்கும் இலங்கை பிரச்சினை பதிலில்லாத நிரந்தர கேள்வி மட்டும்தானா.


வெள்ளி, 18 ஜனவரி, 2013

இந்திய பிரச்சினை

வணக்கம் 

பல மாதங்களுக்குப்பின்னர் இன்றைக்கு இங்கே வர தோன்றியதற்கு காரணம் ஏதும் இல்லை, எதையாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்ப்படுவதே இல்லாமல் போனதன் காரணம் அறிந்து கொள்வதற்கு கடல் அளவு விஷயங்கள் காத்திருக்க எதையாவது எழுதி அதற்க்கு கருத்துக்களை எதிர்பார்த்து வரவேற்ப்பு கிடைத்தால் நிம்மதி அடைவதோடு நிற்காமல் என்றாவது, வாழ்நாளில் ஒரு முறையாவது ஒரு புத்தகமாவது அச்சிட்டு வெளியிட வேண்டும் என்கின்ற ஆவல் எழ அந்த புத்தகம் சிலருடைய கையிலாவது சென்று சேர்ந்திட வேண்டும் என்கின்ற கனவோடு மிகவும் வருந்தி எழுதி ஒன்றோ இரண்டோ அதிகம் போனால் பத்து புத்தகங்களை நாமே நமது நண்பர்களுக்கு இலவசமாக வழங்கி (ஒரு புத்தகம் கூட விற்காமல்) அவர்கள் அவற்றை படித்துவிட்டு சொல்லப்போகும் கருத்துகளுக்கு காத்து கிடக்கும் தவிப்பும் எதிர்பார்ப்பும் எழுதுகோல் பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்ப்படுவது இயல்புதான்.

அந்த நப்பாசையெல்லாம் நமக்கு வேண்டாம், "பழம் புளிக்கிறது" என்று நரியைப்போல் ஒதுங்கிவிடுவதும் இயல்புதான். இவற்றிற்கு மேலே ஒருபடி சென்று, சில நயவஞ்சக கூட்டத்தின் ஒட்டுமொத்த வடிவமாக யார் எழுதுவார் என்று காத்திருந்து அதை அப்படியே தான் எழுதியதை போல "திருடி"ச்செல்லும் "மானம் கெட்ட" அயோக்கியர்களின் சூறையாடலை சமாளிக்க இயலாமல் ஒதுங்கி சென்றுவிடுவதும் இங்கே இயல்புதான். இவற்றை எல்லாம் மொத்தமாக ஒதுக்கி விட்டு அல்லது மறந்துவிட்டு எதையாவது எழுதி கொண்டே இருப்பதும் இயல்புதான்.

எழுதுவதற்கு நாட்டில் என்ன செய்தியா இல்லை, ஒவ்வொரு நாளும் செய்திகள் ஊடகங்களையும் செய்தி தாள்களை நிரப்பி விடுகிறதே. நல்ல செய்தியை லாட்டரி சீட்டு எண்ணை தேடி கண்டுபிடிப்பதை போல கண்டுபிடிக்க வேண்டியதாக உள்ளது. இன்றைய தினத்தில் செய்திகளில் முதலிடத்தை பிடித்துக்கொள்வது பெரும்பாலும் "கெட்ட" செய்திகளாக இருப்பதில் இருந்தே எதை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. எது எப்படி போனால் நமக்கு என்ன என்று நாட்டில் பலர் உண்டு, 'யார் எக்கேடு கேட்டால் உனக்கென்ன, நாம உழைச்சாத்தான் கஞ்சி' என்று இருப்பவர்கள் எண்ணிக்கையில் அதிகம்.

ஒரு கூட்டம் சேர்த்துக்கொண்டு 'ஒழிக' என்று கோஷங்களை எழுப்பி அதிக பட்ச்சமாக தேசிய கோடி அல்லது கட்சி கோடி அல்லது சம்பந்தப்பட்டவரின் உருவம் என்று சொல்லி பொம்மை செய்து அதை செருப்பால் அடித்து தீவைத்து நாசப்படுத்தும்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு இன்னும் கொஞ்சம் அதிகமாக ஒருநாள் திருமணமண்டபத்தில் வைத்துவிட்டு வெளியேற்றுவது வரை தங்களது எதிர்ப்பை காண்பித்து அதை சில ஊடகங்கள் தங்கள் செய்திகளில் காண்பித்து அவர்களுக்கும் 'வேலை' கொடுத்து இவ்வாறாக இந்தியாவில் பிரச்சினைகளும் அதை எதிர்ப்பவர்களும் சாதாரண செய்திகளாகி, எந்த பிரச்சினைகளும் எவ்வித தீர்வையும் காணாமலேயே கோப்புகளுக்குள் பூச்சிகளுக்கு உணவாகும், காலம் கடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் முடிவற்றதாய் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும், கிடப்பில் கிடக்கும் எத்தனையோ பிரச்சினைகளுடன் புதியதும் பழமையாகி விடும் இவைதான் இந்திய பிரச்சினை.

என்னை இவற்றில் எவற்றுடனும் இணைத்துக் கொள்ள விருப்பம் இன்றி எழுதுவதை மட்டும் 'காதலிப்பதால்' மீண்டும் எழுத வந்துவிட்டேன்.


புதன், 15 பிப்ரவரி, 2012

கடமைகள் உரிமைகள்

குழந்தைகள் இல்லாத வீடு கலகலப்பில்லாமல் இருக்கும் என்பர், குறிப்பிட்ட வயதிற்கு மேல் குழந்தை பிறப்பின்றி இருக்கும் தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லையே என்ற கவலை ஒருபுறமிருக்க காண்போரெல்லாம் துக்கம் விசாரிப்பது போன்ற தோரணையில் விசாரிப்பதும் பார்ப்பதும் கொடுமை. குழந்தைகளை பெற்ற பின்னர் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அரும்பாடுபட்டு வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கு திருமணம் நடந்த பிறகு பிள்ளைகளால் பெற்றவர்கள் படுகின்ற அவச்த்தைகளும் மன உளைச்சல்களையும் விரல்விட்டு எண்ணிவிட இயலாது, பெற்றவர்கள் பிள்ளைகளால் சுகம் காணவேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை என்றாலும் துன்பமாவது இல்லாமல் இருந்தாலே போதும் என்கின்ற நிலை உருவாகி, இவர்கள் பிறந்த போதும் வளருகின்ற போதும் தாம் அடைந்த இன்ப துன்பத்தையெல்லாம் மிஞ்சி விடுகின்ற அளவிற்கு 'இவர்களை எதற்க்காக பெற்றெடுத்தோம்' என்று வேதனைக் கண்நீரை வரவழைக்கும் பிள்ளைச்செல்வங்கள், 'போதும் போதும் இந்த வாழ்க்கை' என்று மரணத்தை துணைக்கழைக்கும் பெற்றோர்களை காணுகின்ற போது 'என்ன உலகமிது' என்று வெறுக்க வைக்கிறது.

'திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்துவிடுவது மேல்' என்று தோன்றும் அளவிற்கு திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள், அதற்க்கு பின்னர் குழந்தைகளினால் பிரச்சினைகள், ஒரு குழந்தையை பெற்றவர்க்கு தங்கள் முதுமையில் அக்குழந்தை தன்னை விட்டுவிட்டு சென்றுவிடக் கூடாது என்ற தவிப்பு. ஒன்றிற்கு மேல் பிள்ளைகள் இருப்பவர்களுக்கு பெற்றோரை பங்கு போடும் நிலை, அந்த காலத்தில் பெற்ற பிள்ளைகள் தங்கள் பெற்றோரை கவனித்துக்கொள்வதென்பது கடமையாக இருந்தது, பெற்றோரின் பேச்சுக்கு கீழ்ப்படியவேண்டும் என்றோ அல்லது, வயதான பெற்றோரை பராமரிப்பது கடமை என்று கூறினாலோ இக்காலத்து பிள்ளைகள் கூறும் புதுமொழி 'உங்களால் பெற்றெடுக்கப்பட்டதால் உங்களுக்கு சொந்தமானவர்கள் கிடையாது, எங்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள் நோக்கங்கள் என்பது உண்டு அதன்படி நாங்கள் செய்வோம், பெற்றோரே ஆனாலும் அவர்கள் கூறுகின்ற எல்லாவற்றையும் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை' என்று உரிமையைப் பற்றி பேசுகிறார்கள்.

'உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டால், கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன' என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவிற்கு வருகிறது. உரிமைகளுக்காக போராட்டங்கள் செய்பவர்களும் பெற்றோர்களிடம் வாதிடும் பிள்ளைச்செல்வங்களும் தங்களது கடமையை முழுவதும் மறந்துவிட்டு போராடுவது அவர்களின் மடமையை காண்பிக்கிறது. இப்படிப்பட்ட வளர்ச்சியை உள்ளடக்கி எந்த சமுதாயமும் முதலில் முன்னேற்ற பாதையை பற்றிய கனவை தீயிலிட்டு பொசுக்கிவிட வேண்டும். வீட்டில் பட்டினியாக கிடக்கும் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் வயிறு நிறைய மூன்று வேளை உணவு கொடுக்க இயலாதவர்கள் உண்ணா விரத போராட்டம், கருப்புக்கொடி பிடித்து போராட்டம் என்று சமூகத்தை காப்பாற்ற கவலையடைவது உரிமைக்கு குரல் கொடுத்தலாகுமா.

பெற்றோரை நேர்வழி நடத்த இயலாத பிள்ளைகளால் சமுதாயத்தின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க முன்வர இயலுமா, அவ்வாறு முன் வந்தால் அதன் பெயர் உரிமை போராட்டமா, வேடிக்கையான மானிதர்கள், கடமைகளை மறந்தவர் உரிமையைப் பற்றி பெருமை பாராட்டும் தகுதியை இழந்துவிடுகின்றனர். 'ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது' என்பது இதற்க்கு நன்றாகவே பொருந்தும். பெற்றோரை மதித்து நடக்கத் தெரியாதவர்கள் எப்படி ஒரு நல்ல மகனாக இருக்க முடியாதோ, பெற்ற பிள்ளைகளையும் மனைவி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாதவர்களும் தங்களது கடமைகளை தட்டி கழிப்பவர்கள் இப்படிப்பட்டவர்கள் உரிமை பற்றி நினைப்பதற்க்கோ பேசுவதற்கோ தகுதி அற்றவர்கள்.

..

செவ்வாய், 3 ஜனவரி, 2012

யார் குற்றம்

ஒரு பெண் மீது ஆணோ ஒரு ஆண் மீது பெண்ணோ அன்பு கூறுவதற்குப் பெயர் காதல். ஆனால் தான் அன்பு கூறுகின்ற ஆணோ பெண்ணோ திருமண வாழ்விலும் எல்லாவித சுகதுக்கத்திலும் அதே அன்பாய் அல்லது காதலுடன் வாழ்ந்து வாழ்க்கை என்னும் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள இயலுமா என்பதை அறிந்துகொள்வதற்கு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும்போது மட்டுமே முழுவதுமாக அறிந்துகொள்வதற்கு முடியும் என்பதை காதலிக்கும்போது அறிந்துகொள்வது இயலாத காரியம் என்பதாலேயே காதலித்து திருமணத்தில் முடிகின்ற திருமண வாழ்க்கைகள் பல சமயங்களில் பெரும் தோல்வியை சந்திக்கிறது. திருமணம் என்பது இருமனங்கள் சம்பந்தப்பட்டது என்பதை அறிந்திருந்தாலும் கூட மனதிற்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பதற்கு முக்கியத்துவமின்றி வரன்களை பல்வேறு காரணங்களுக்காக திருமணத்தில் இணைத்துவிடுவதும் பின்னர் திருமணத்தில் இணைய போகின்ற இருவருக்கும் பிடித்திருந்தாலும் வேறு காரணங்களுக்காக திருமணபந்தத்தில் இணைவதற்கு எதிர்ப்பதும் அதற்க்கு காரணமாக சமுதாயத்தில் சொல்லப்படும் எண்ணிமுடியாத விதிகளும் இந்திய கலாச்சாரத்தில் பெரும்பான்மையான மனிதர்களின் சோககதைகளின் பின்புலமாக, அன்றாடம் சந்திக்கின்ற பலரின் சொந்தகதைகள்.

திருமணம் என்பதை ஆண் பெண் இருவருக்கும் குறிப்பிட்ட வயதில் எப்படியாவது முடித்து விடவேண்டும் என்கின்ற பெற்றோரின் ஆதங்கம் ஒருபுறமும் அவ்வாறு குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் நடைபெறாமல் போனால் சமுதாயத்திற்கும் உறவினர் நண்பர்களுக்கும் கேள்விக்குறியாக அப்பெண்ணோ ஆணோ ஆளாக்கப்படுவதும், அவ்வாறு ஆளாகாமல் பார்த்துக்கொள்வதையே மிகப்பெரிய காரணமாக முன்வைத்து அவசர கதியில் திருமணம் என்கின்ற ஆயுள்தண்டனையை பெண்களுக்கும் பையன்களுக்கும் ஏற்ப்படுத்திவைக்கின்ற பெற்றோரும் சுற்றமும் நட்ப்பும் பின்னர் அவர்களது வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல துயரங்களை சரி செய்வதற்கு வழி அறியாமல் விலகிச்செல்வதும் வாடிக்கையாகிவிட்ட வேதனைகள்.

இவ்வாறு அவசர கதியில் இயங்காமல் நன்றாக யோசித்து மனப்பொருத்தம் ஜாதகப்பொருத்தம் அந்தஸ்த்து என்று வரிசையாக பல பொருத்தங்களை கவனித்து ஊரே வியக்கும் வண்ணம் திருமணம் தடபுடலாக நடந்து பிள்ளைகள் ஒன்றோ இரண்டோ பெற்றுக்கொண்ட பின்னர் சாவகாசமாக கணவனைப்பற்றி மனைவியும் மனைவியைப்பற்றி கணவனும் அறிந்துகொள்ளும் பல்வேறு செய்திகளும் அதனால் ஏற்ப்படுகின்ற விளைவுகளை தாங்க இயலாமல் விவாகத்தை ரத்து செய்வதும் சமுதாயத்தில் தற்போது சாதாரணமான விஷயங்களாகிவிட்டது. மேல்மட்டமானாலும் கீழ்மட்டமானாலும் பெண்களானாலும் ஆண்களானாலும் மனமும் எண்ணங்களும் சிந்தனைகளும் செயலும் ஒன்றுதான். பல சமயங்களில் மனவேற்றுமையோ வேறு வேற்றுமையோ காரணமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட ஆணின் மனதும் பெண்ணின் மனதும் வெறுப்பின் ஆதிக்கத்தினால் அதுவரையில் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த காதலும் கண்ணியமும் காணாமல் போக, மனம் வெறுமையாய் வெறுப்புற்று கிடக்க, அந்த சமயம் பார்த்து வேறு ஒரு நபரின் துணை அமையும்போது அங்கே அவ்விருவருக்கும் ஏற்ப்படுகின்ற உறவுக்குப் பெயர் 'கள்ளக்காதல்' என்று கூறப்படுவது வேடிக்கை.

கள்ளக்காதல் என்று கூறுவதற்குக் அக்காதலில் ஈடுபடுகின்ற இருவருக்கும் சட்டப்படி வேறு மனைவியோ கணவனோ இருப்பது என்பது காரணமாக கூறப்படுகிறது. சமுதாயத்தில் பெண்களுக்கு ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு வகையான எழுதப்படாத பல சட்டங்களை சமுதாயம் வைத்து இருக்கிறது, ஆனால் அதே சமுதாயத்தில் திருமணமான ஆண் தனது சுகத்திற்க்காக விபசாரியை நாடுவதற்கும், மது அருந்துவதற்கும் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வதற்கோ தடை விதித்து எவ்வித எழுதப்படாத சட்டதிட்டங்களையும் விதிப்பதில்லை. இதனால் விபசாரம் என்பதும் மது அருந்துவதும் பெரும்பாலும் ஆண்களுக்குரியதாக காலம் காலமாக சமுதாயம் தருகின்ற எழுதப்படாத சுதந்திரம். கள்ளக்காதலின் அடிப்படையே சமுதாயத்தில் பெண்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் பலவித கட்டுப்பாடுகளின் தீவிரத்தை நமக்கு காட்டுகிறது.

கலாச்சாரம் என்பதைப்பற்றிய அக்கறை உள்ளவர்கள் அதன் சீரழிவை பற்றி அக்கறைபடுபவர்கள் பெண்கள் உடுத்துகின்ற உடை, பெண்களின் நடத்தை மீது மட்டுமே குறிப்பாக குறைகூறுவது எந்த விதத்தில் நியாயம் என்பது விளங்கவில்லை. கலாச்சாரத்தை காக்கின்ற பொறுப்பு பெண்கள் மட்டுமே காரணமா என்பது பதிலில்லாத கேள்வி. சமுதாயத்தில் பெரும் பொறுப்பை பெண்கள் மீது சுமத்திவிட்டு கலாச்சார சீரழிவிற்கு பெண்கள் மட்டுமே காரணம் என்பது போன்ற எழுதப்படாத விதியை சுமத்துகிற சமுதாயம் கள்ளக்காதலை உருவாக்கிய பொறுப்பு மிகுந்த நற்ப்பணியை இலவசமாக பெண்களுக்கு வழங்கிவருகிறது.

....................................ooooooooooo.....................

செவ்வாய், 27 டிசம்பர், 2011

பெண்களை பிடித்திருக்கும் சனி

இந்திய தேசத்தில் பெண்களை தெய்வம் என்று வணங்குகின்றனர், தாய்க்கென்று ஒரு தனி இடம் இந்திய தேசத்தில் இருப்பதால் 'தாய்நாடு', 'தாய்மொழி' என்று தாயின் ஸ்தானத்தை கொடுக்கின்றனர், இவ்வாறெல்லாம் போற்றப்படும் பெண்ணினத்தை இந்திய சமுதாயத்தில் மிக கேவலமான முறைகளில் குற்றம் சுமத்தப்படுவதும் மிகவும் சகஜமான ஒன்று. காலம் எத்தனைதான் மாறினாலும் அறிவியல் வளர்ச்சியும் கல்வியும் அதிகரித்தாலும் பெண்களின் மீது சுமத்தப்படுகின்ற கேவலமான நிந்தைகள் மட்டும் சமுதாயத்தில் மாறுவதாகவே தெரியவில்லை. நமது நாட்டில் மாற்றங்கள் அதிகம் ஏற்ப்பட்டுவிட்டதாக நினைப்பது வெறும் பிரம்மையே. ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமம் என்று கூறுவது வெறும் பேச்சளவில் மட்டுமே. ஆண்களுடன் பெண்கள் அதிகம் பழகினால் அப்பெண்ணை நடத்தை கெட்டவள் என்று கூறுவதும் வீண் பழிகள் சுமத்துவதும் இந்திய கலாசாரத்தின் மிகவும் முக்கிய பணி.

பெண்ணின் நடத்தையின் மீது சந்தேகபடுவதும் அதை பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ளாமலேயே அச்செய்தியை திரித்து பன்மடங்காக்கி விமரிசனம் செய்வதும் மிக சாதாரணமாக சமுதாயத்தில் காணப்படும் அவலம். தங்கள் வீடுகளில் இருக்கும் தாய், சகோதரி, அத்தை, சித்தி, மாமி என்ற பெண்களைப்பற்றிய விவரங்களை மற்றவர்களும் அவ்வாறே திரித்து பன்மடங்காக்கி வீதிகளில் விமரிசனம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தால் போதும் அவ்வாறான வதந்திகளை பரப்பும் நபர்கள் முற்றிலுமாக காணாமல் போவார்கள். ஆனால் நிலைமை முற்றிலும் தலைகீழாக உள்ளது, வேறு பெண்களைப் பற்றிய வதந்திகளை காதுகொடுத்து கேட்பதற்கும் அதை இன்னும் சில பல மாற்றங்களுடன் கேட்பவர் உள்ளத்தின் ஆவலை தூண்டுகின்ற வகையில் ஜோடித்து எல்லோரிடமும் விமரிசனம் செய்வதில் இந்திய சமுதாயத்திற்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியாத அளவிற்கு கற்பனையை தங்கள் விருப்பத்திற்க்கேற்றபடி கயிறு திரிக்க வல்லவர்கள்.

எதிலெல்லாம் தங்களது திறமையை காட்ட வேண்டுமோ அவைகளில் காட்டுவதற்கு வழி அறியாத 'கண்ணிருந்தும் குருடர்களும், காதிருந்தும் செவிடர்களுமாக' வாழ்ந்து கொண்டிருக்கும் செத்த பிணங்கள். அறிவியலும் கல்வியும் வளர்ச்சியடைந்தாலும் சமுதாயத்தில் சீர்திருத்தங்கள் ஏற்ப்படாத வரையில் விஞ்ஞானம் வளர்ச்சியடைவதில் யாருக்கும் நன்மை இருக்கப்போவதில்லை. சமுதாயத்தில் சீர்திருத்தங்கள் அடைந்த நாடுகளில் மட்டுமே அறிவியல் மற்றும் கல்வி வளர்ச்சியின் முழுமையை காணமுடிகிறது. அவ்வாறு இரண்டிலும் வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமே வல்லரசுகள் என்ற மேன்மையை அடைய முடியும். இந்தியாவை வல்லரசாக்க நினைப்பவர்கள் முதலில் சமுதாயத்தில் கடைநிலையில் வாழுகின்ற பெண்ணைகூட மதிக்கின்ற தனது தாயைப்போல, தங்கையை போல ஏற்றுக்கொள்ளும் மனம் எப்போது வளர்ச்சியடைகிறதோ அன்றைக்குத்தான் சமுதாயம் முழு முன்னேற்றத்தை கிரகித்துக்கொள்ளுகின்ற தரத்தை பெறமுடியும்.

பேருந்தில் தன்னுடன் பயணிக்கின்ற சக பயணியை உரசிக்கொண்டு சுகம் காண துடிக்கும் ஓநாய்களும், அடுத்தவன் சம்பாதித்து சேமித்து வைத்திருக்கும் பணம், நகைகளை கொள்ளையடித்து சந்தோஷமாக தனது வாழ்நாளை அனுபவிக்க ஆசைப்படுகின்ற பிணம் தின்னி கழுகுகளும், எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்க்கையை தரம்கெட்ட விதத்தில் வாழ்ந்துவிட நினைக்கும் மாக்கள் நிறைந்த சமுதாயத்தினால் நாட்டிற்கும் கேடு சமுதாயத்திற்கும் கேடு. கேடு நிறைந்த சமுதாயத்தை உள்ளடக்கிய நாடு ஒருகாலமும் வளர்ச்சியை அடையும் வாய்ப்பே இல்லை. அடிப்படை கல்வியும் அடிப்படை தகுதிகளும் கொண்ட சமுதாயம் மட்டுமே விஞ்ஞான மற்றும் கல்வி வளர்ச்சியில் முழு பங்காற்றும் தரத்தை உடையது. அவ்வாறு இல்லாத 'ஆட்டு மந்தை' சமுதாயம் வல்லரசாகவோ முன்னேற்றப்பாதையை தொடுவதற்க்கோ கூட லாயக்கு அற்றது.


....................................................@@@............................................

செவ்வாய், 6 டிசம்பர், 2011

விழித்திரு !!!

கூடங்குளம் அணுமின் நிலையம், அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டம், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, முல்லை பெரியார் அணை பற்றிய சர்ச்சை என நாட்டில் பல பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக கிளப்பப்பட்டு எதற்கு முதலிடம் எதற்கு இரண்டாம் மூன்றாம் இடம் கொடுப்பது என்று அறிந்துகொள்ள இயலாத அளவிற்கு இன்னும் பல பிரச்சினைகளும் ஒன்றை ஒன்று முந்திகொள்கிறது. இரண்டு வருடத்திற்கு முன்பு அச்சுதானந்தன் அரசு கேரளாவில் ஆட்ச்சியில் இருந்த போது முல்லை பெரியார் அணை மிகவும் பழமை வாய்ந்தது என்பதால் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் அணையில் ஏற்ப்படும் அசம்பாவிதங்களால் பாதிப்பு அடையும் என்கின்ற காரணத்தை கூறி புதிய அணை கட்டப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து வந்தது.

பல நிபுணர் குழுக்களின் ஆய்வு அறிக்கைகள் மூலம் அணை நல்ல நிலையில் இருப்பதை மத்திய அரசிற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் அளிக்கப்பட்டபின்னர் புதிய அணை கட்டும் அவசியம் இல்லை என்றும் முல்லை பெரியார் அணையை தகர்க்கும் அவசியம் இல்லை என்றும் தீர்ப்பு வழங்கிய பின்னர், கேரள குழுக்கள் வேறு சதித்திட்டம் தீட்ட சிறிது அவகாசம் எடுத்துக் கொண்ட பின்னர் தற்போது பூகம்பம் ஏற்ப்படும் அபாயம் அப்பகுதியில் உள்ளதாகவும் அவ்வாறு பூகம்பம் ஏற்ப்பட்டால் அணை உடைந்து சுற்றியுள்ள கிராமங்கள் அழியும் என்ற வதந்தியை திரைபடமாக்கி பொதுமக்களிடம் விநியோகித்து அதன் மூலம் மக்களை பீதியில் ஆழ்த்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட சதி செய்து வருகிறது.

இதேபோன்ற பீதியை இதே கேரள குழுக்கள் கூடன்குள அணுமின் நிலைய விவகாரத்திலும் வேறு நபர்களின் மூலம் பொதுமக்களிடம் பரப்பி தமிழகத்தின் முன்னேற்றத்தை நாசப்படுத்தும் நோக்கில் சதி வேலைகளில் ஈடுபடுகிறதோ என்கின்ற சந்தேகம் எழுகிறது. கேரள சதி குழுக்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு வேறு நாடுகளின் பண உதவிகளை பெற்று இவ்வாறு சதி திட்டங்களை செயல்படுத்துகிறதா அல்லது கேரள சதி குழுக்களே இவ்வாறு தன்னிச்சையாக செயல்படுகிறதா என்பது சந்தேகத்தை அளிப்பதாக உள்ளது.

உள்நாட்டு கலவரங்களை ஏற்ப்படுத்தி நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்க சதி நடக்கிறதா என்கின்ற ஐயம் ஏற்ப்படுகிறது. கேரளாவில் எதற்கெடுத்தாலும் கடையடைப்பு போராட்டம் என்ற நிலை இருந்து வருவது போல தமிழகத்தையும் சீர் குலைக்கும் சதிசெயலுக்கு முல்லைபெரியாறு அணையும் கூடங்குளம் அணு மின் நிலையமும் தற்போது இலக்காகி உள்ளது. அமைதியை சீர்குலைக்க இவ்வாறு தூண்டப்படும் சதி திட்டங்களை பொதுமக்கள் ஒருபோதும் ஏற்க்க கூடாது. அவற்றிக்கு துணை போகவும் சம்மதிக்க அல்லது இடம் கொடுக்க கூடாது. விழிப்புடனும் அறிவாற்றலுடனும் இல்லாவிடில் நாடு போர்க்களமாகும், யாருக்காக எதற்க்காக நாம் போராடுகிறோம் என்கின்ற விவரங்களை மேலோட்டமாக தெரிந்து கொண்டு செயல்பட கூடாது. விழிப்புடன் இல்லாவிட்டால் அமைதிக்கு பங்கம் விளையும் சதிகாரர்களின் வெற்றிக்கு நாம் துணை போவதாக ஆகிவிடும். அமைதியை குலைக்கும் சதி திட்டங்களுக்கு செவி சாய்க்க கூடாது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்வது அவசியம்.



.................oooOooo.............

புதன், 23 நவம்பர், 2011

கருங்காலிகள், துரோகிகள்

அணுமின் நிலையத்தை எதிர்க்கும் கூட்டம் பல காரணங்களை காட்டி அணுஉலையை செயல்படுத்த விடாமல் தடுத்துவருகிறது, எதிர்ப்பாளர்களின் கூட்டத்தில் சிலர் தங்களது அறிவியல், விஞ்ஞான புலைமையினால் தங்களுக்கு அதன் தாக்கம் என்ன என்பது அரசைவிட அதிகமாகவே தெரியும் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். இவற்றிற்கு இடையே காங்கிரஸ் கட்சி நடுவன் அரசில் உள்ளதால் அணுமின் உலையை திறந்து மின்சார உற்பத்தியை துவங்க வேண்டும் என்று அக்கட்சியினர் கோரிக்கை வைக்கின்றனர். இவை ஒன்றிலுமே இடம் பெறாத அல்லது இவர்களின் கூற்று எத்தனை நியாயமானது அல்லது அநியாயமானது என்பதை அறியாமலேயே எதிர்ப்பாளர்களின் கூட்டத்தை ஆதரித்து வருகின்ற கூட்டமும் இவர்களுடன் சேர்ந்துகொண்டுள்ளது.

அணு உலை இயங்கத்துவங்கினால் பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் என்றறிந்த தங்களை அறிவியலில் சாணக்கியன் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு நடுவன் அரசின் மீதுள்ள வன்மைத்தையெல்லாம் ஒன்று திரட்டி பிரதமமந்திரியையும் சோனியா மற்றும் ராகுல், சிதம்பரம் ஆகியோரை கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் தங்களது கோரிக்கைகளை முன் வைக்கலாமே, இவர்களது கோரிக்கைகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி, உண்மையிலேயே நியாயமானதாகவும் பொதுமக்களின் நலன் மட்டுமே தங்களது நோக்கமாக இருந்தால் பிரதமரையும் அவரது தலைமையின் கீழ் செயல்படுகின்றவர்களையும் கேவலமான முறையில் விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன.

எத்தனை விஞ்ஞானிகள் தங்களது முழு அர்ப்பணிப்பை தங்களது தாய் நாட்டிற்காக முழு உள்ளத்தோடு அர்ப்பணிக்கின்றனர். கேள்விகள் கேட்பவர்கள் எல்லாருமே அதி புத்திசாலிகள் என்று தங்களை காண்பித்துக் கொள்வது என்பதொன்றும் புதிய வித்தையல்ல. இவர்கள் கேட்கும் கேள்விகளை வைத்து இவர்கள் வித்தகர்கள் என்று எண்ணிகொள்வோரும் நாட்டில் உண்டு. அப்படி சிலருக்கு வேண்டுமானால் இவர்கள் அறிவியலில் புலியாகவும் சிங்கமாகவும் தெரியலாம். பொதுவாக இவர்களது கோபக்கனல் எரிமலைபோல் வெடித்து வார்த்தைகள் என்கின்ற நெருப்புகளை வெளியேற்றும் போது அந்த நெருப்பில் கலந்துள்ள கனிமங்கள் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியம் தேவையில்லை. அணுஉலை விவகாரத்தை மட்டுமல்ல வேறு எது கிடைத்தாலும் மத்தியிலுள்ள அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்ப இவர்கள் எப்போதும் தயார் நிலையில் தான் இருந்துகொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுடன் சேர்ந்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் தீயசக்திகளும் ஒன்று திரண்டு கைகோர்த்து கொண்டு அப்பாவி பொதுமக்களையும் சேர்த்துக்கொள்கின்றனர். தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்தோ
சீனாவிலிருந்தோ இந்தியாவிற்குள் வரவேண்டிய அவசியம் இல்லை நாட்டினுள்ளேயே இருந்துகொண்டு ஆளும் கட்சியின் அசைவுகளையெல்லாம் தவறாக சித்தரித்து பிரசாரம் செய்யும் இவர்கள்தான் முதல் தீவிரவாதிகள் என்பதை அதிக நாட்கள் மறைக்க இயலாது. இவர்களது ஆத்திரமெல்லாம் இவர்கள் மத்திய அரசிற்கு முன் வைக்கும் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதை அப்படியே அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு இவர்களது கோரிக்கைகள் அனைத்தையுமே மத்திய அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தவேண்டுமென்றால், மத்தியில் செயல்படுவது அரசாங்கம் இல்லை, அதற்க்கு தஞ்சாவூர் பொம்மைகள் என்று பெயர் சூட்டலாம்.

தீவிரவாதிகள் என்று சொன்னால் அது அதிகபட்ச்ச
துரோகியென்று அர்த்தம் இருக்காது, கருங்காலிகள், துரோகிகள் போன்ற பெயர்கள் தான் இவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.


..................oooOooo.............

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

போராட்டம்

நக்சலைட்டுகளுக்கு பெயர் போன ஆந்திரபிரதேசத்தில் தனி தெலுங்கானாவிற்கு நடத்தப்படும் போராட்டங்கள் நியாயமானதா என்பது கேள்வி என்றால் போராட்டக்காரர்களை பொருத்தமட்டில் மட்டுமே நியாயமாக இருக்கும். இன்று நாட்டில் நடக்கும் பல போராட்டங்களும் இந்த வகையை சேர்ந்தது. பேருந்துகளை தீவைத்து எரித்து நாசம் செய்வதில் போராட்டக்காரர்கள் தீவிரம் காட்டிவருவதைப் பார்த்தால் தனி தெலுங்கானாவை மட்டுமே கோருவதாக தெரியவில்லை. சென்னையில் நடந்த ரயில் விபத்து போன்றே போராட்டங்களுக்கு வேறு காரணங்களும் இருக்ககூடும் என்ற சந்தேகம் ஏற்ப்படுகிறது.

வேறு காரணம் என்றால் வேற்றுகிரஹவாசிகளை அழித்துவிடும் நோக்கமாகவா இருக்கப்போகிறது, நடுவன் அரசை கவிழ்க்கும் சதிகளில் இதுவும் ஒன்றோ என தோன்றுகிறது. மன்மோகன் அரசுக்கு அல்லது காங்கிரஸ் ஆட்சிக்கு தொல்லை கொடுப்பதே போராட்டங்களின் நோக்கமாக இருக்க கூடாதா, போராட்டங்களை சுட்டி காட்டி எதிர்கட்சிகள் 'நாட்டில் மன்மோஹன்சிங் தலைமையிலான அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை' என்ற குற்ற சாட்டை கூறி வருவதை பார்த்தால் மன்மோஹன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்ச்சியை பதவியை விட்டு இறக்குவதற்கான பல உத்திகளில் இதுவும் ஒன்று என்றே எண்ணத் தோன்றுகிறது. ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என்று சத்தமிடும் பலர் 2G ஸ்பெக்ட்ரம் ஊழலை காரணம் காட்டி போதாக் குறைக்கு இன்னும் பலரையும் அந்த வழக்கிற்காக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென வதந்திகளை கிளப்பி வருகின்றனர்.

மீண்டும் எந்த கட்சி ஆட்சியை கைப்பற்ற இயலுமோ அல்லது முயன்றுகொண்டிருக்கிறதோ அந்த கட்சிதானே இவ்வாறான செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்க முடியும். ஒன்றிரண்டு மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கின்ற கட்சிக்கு தங்கள் இன்னும் அதிகமான மாநிலங்களில் ஆட்சி செய்யவேண்டும் என்ற (பேரா)ஆசை இருக்காதா என்ன, அதிகபட்ச மாநிலங்களில் தற்போது ஆட்சி செய்து வருகின்ற காங்கிரஸ் கட்ச்சிக்கு நாட்டை ஆளுகின்ற தரம் இருக்க கூடாதா. ஒன்றிரண்டு மாநிலத்தை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் கட்சியின் ஆசை எதுவாக இருந்தாலும் அவர்கள் ஆட்சி நடத்துகின்ற மாநிலங்களில் எத்தனை முதலமைச்சர்களின் ஆட்சி பொறுப்பு மிக்கதாகவும் ஊழல் அற்றதாகவும் உள்ளது என்பதை நினைவில் கொள்ள அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

ஆட்சி பொறுப்பில் இருக்கின்ற கட்சியின் மீது குறைகளை கண்டுபிடித்து அவற்றை ஒன்றுக்கு பத்தாக மாற்றி புரளி கிளப்புவதும் ஆட்சியிலிருக்கும் கட்ச்சியை ஆட்ச்சியை விட்டு எப்படியெல்லாம் வெளியேற்ற முடியுமென்று திட்டங்கள் வகுப்பதற்கே நேரம் போதாக்குறையாக இருக்கும்போது தங்களது குறைகளை அவர்களால் எண்ணி பார்க்க நேரம் போதாது. இன்றைய சூழலில் ஏதாவது இனாம் கிடைத்தால் ஒட்டு போட தயாராக இருக்கின்ற மக்களுக்கு ஊழலைப்பற்றியோ கட்ச்சியின் கொள்கைகள் பற்றியோ அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதில்லை. அதனால் தேர்தலில் யார் வெற்றி பெற வாய்புகள் அதிகம் என்ற கருத்து கணிப்பிற்கும் அவசியம் இருக்கப்போவதில்லை. எந்த கட்ச்சிகாரர் அதிக இனாம் கொடுக்க முன்வருகிராரோ, அல்லது தேர்தல் பிரசாரத்தில் யார் அதிக விலையிலான பொருட்களை வாரி கொடுப்பதாக சொல்கின்றார்களோ அவர்களுக்கு ஒட்டு போடும் நிலை இன்றைய வாக்காளர்களின் நிலை.

இதனால் ஊழல் அற்ற அரசு ஆட்சியை கைப்பற்றினால் என்ன ஊழல் நிறைந்த அரசு ஆட்சியை கைப்பற்றினால் என்ன, யார் வேண்டுமானாலும் எந்த தொகுதியில் நின்றாலும் ஜெயித்துவிடலாம் அது அவர் கொடுக்கப் போகின்ற தேர்தல் அறிக்கையில் உள்ள இனாமை பொறுத்தது. ஆந்திராவில் பேருந்து எரிப்பு கடையடைப்பு தடியடி என்று மக்களின் இயல்பு வாழ்க்கையை முடங்க வைப்பவர்களின் ஆவேசம் பொதுமக்களுக்குத்தான் அன்றாட பிரச்சினை.நோயாளிகளும் அன்றாடம் காய்ச்சிகளும் இயங்க இயலாமல் போராட்டக்காரர்கள் மக்களை அவதிக்குள்ளாக்குவது வருந்தத்திற்குரியது. மன்மோகன்சிங் தலைமையை பதவியிலிருந்து இறக்கி விட்டு அடுத்த தலைமை பதவியேற்கும் போது நாட்டிலிருந்து ஊழல் மொத்தமாக கழுவப்பட்டு நாடு சுத்திகரிப்பு செய்யப்படப் போகிறதா, அல்லது நாடு இப்போது இருப்பதைவிட உலகமே பார்த்து வாயில் விரல் வைக்கும் அளவிற்கு நிலைமை மாறப்போகிறதா.

அவ்வளவு ஏன், பெட்ரோல் டீசல் விலை, தங்கம், வெள்ளி விலை, வீடு மனை விலை, அன்றாட உணவுப் பொருட்களின் விலை போன்ற விலையேற்றத்தை 20 அல்லது 25 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைக்கு திருப்பிவிடப் போகிறதா, அல்லது சுவிஸ் வங்கியில் முடங்கி கிடக்கின்ற கோடிக்கணக்கான கருப்புப்பணம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு அவை பொதுமக்களின் தேவைகளுக்காக செலவிடப்படப் போகிறதா, கசாப்பை தூக்கிலிடப்போகிறதா, ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப் போகிறதா. 'மோடி' வித்தை காட்டி வருகின்ற ஒரு மாநிலத்தை கையில் வைத்துகொண்டு 'இது நேர்மை நாணயம் மிகுந்த ஆட்சி முறை' என்று எத்தனை காலத்திற்கு வித்தை காட்ட இயலும். மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பதவியை விட்டு இறங்கினால் நாடு என்னென்ன நன்மைகள் பெறப்போகிறது என்பதை அதை எதிப்பவர்களால் பட்டியலிட முடியுமா. பட்டியல் இட்டாலும் அவை ஊழலற்ற அதீத திறன் படைத்ததாக இருக்கும் என்று உர்ஜிதம் செய்ய இயலுமா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

மொழி

இந்தியாவில் பேசப்படும் மொழிகளிலேயே ஹிந்தியும் தமிழும் சர்ச்சைகளுக்கு உட்பட்டது, வட மாநிலங்களில் ஒவ்வொரு மாநில மொழி வெவ்வேறாக இருப்பினும் ஹிந்தி இரண்டாவது மொழியாக பயிற்றுவிக்கப்படுவதால் பேசவும் எழுதவும் படிக்கவும் பலருக்கு சுலபமாக உள்ளது, பெரும்பாலான வட மாநில பள்ளிகளில் ஆங்கிலம் என்பது அரிச்சுவடி அளவில் கூட இல்லாமல் இருப்பது தமிழர்களை கிள்ளுவது போன்ற செய்தி. மாநில அளவில் கேரளா, ஆந்திரா கர்நாடகாவிலும் ஹிந்தி பலராலும் பேசப்படுகிறது, தமிழகத்திற்கும் ஹிந்தி மொழிக்கும் சம்பந்தமே இல்லை. ஹிந்தியை மொத்தமாக வேற்று மொழி போன்று மட்டுமே நம்மால் கவனிக்க முடிகிறது, இதற்க்கு காரணம் பள்ளிகளில் ஹிந்தி மொழி என்பது அறவே இல்லை, அதற்க்கு பதிலாக ஆங்கிலம் முழுவதுமாக உபயோகிக்கப்படுகிறது. வட மாநில மக்கள் தங்களது மாநிலத்து மொழி பேசுபவரை தரக்குறைவாக எண்ணுவதே கிடையாது. ஆனால் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தமிழ் பேசுகின்ற தமிழர்களை தரக்குறைவாக எண்ணுவது சாதரணமாகிப் போனது என்பதால் அரைகுறை ஆங்கிலத்திலாவது பேசுவதென்பது வழக்கமாகிவிட்டது,



இந்தியாவிலேயே ஆங்கிலத்தை தங்களது தாய் மொழிக்கு அடுத்ததாக அதிகமாக படிக்கின்ற பேசுகின்ற மாநிலம் தமிழகமாகத்தான் இருக்க முடியும். தற்காலத்தில் வெளிநாடுகளில் பணி செய்வதற்கும் பன்னாட்டு நிறுவனங்களில் பணி செய்வதற்கும் ஆங்கிலம் அத்தியாவசியம் என்கின்ற நிலை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பெற்றோர் தங்களது பிள்ளைகளை ஆங்கிலம் தரமாக பேச எழுத பயிற்றுவிக்கும் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தினாலும் பரவாயில்லை என்கின்ற எண்ணத்தில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். அவ்வாறு ஆங்கில மொழி பிரதானமான மொழியாக எண்ணப்படுவதால், பலரது வீடுகளில் தங்களது தாய் மொழியில் பேசுவதை அறவே விட்டுவிட்டு ஆங்கிலத்திலேயே முழுவதுமாக உரையாடுகின்றனர். ஆங்கில மொழி பேசுபவர்களெல்லாம் அதிகம் படித்தவர் அல்லது உயர்ந்தவர்கள் என்பது போன்றும் தமிழ் பேசுபவர்களெல்லாம் படிப்பறிவில்லாதவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் என்பது போன்ற பாவனை நிலவி வருகிறது.



'நாங்கள் தமிழர்கள்', 'தமிழுக்கு முதன்மையான இடத்தை கொடுங்கள்' என்று யாராவது அழுத்தமான குரல் கொடுத்தால், ஆங்கிலமும் ஹிந்தியும் மட்டுமே தங்களது அந்தஸ்த்தை உயர்த்திய 'நன்றி கடன் பட்ட நெஞ்சங்கள்' எல்லாம் ஒன்று திரண்டு 'தமிழை மட்டுமே படித்து பேசிக்கொண்டு தமிழுக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் எங்களுக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது' என்று ஓவென்று ஓலமும் ஒப்பாரியும் வைக்கும் கூட்டம் ஒன்று உண்டு, 'என்னோட பையன் ஸ்டேட்ஸ்ல வேல பாக்கறான்', 'என்னோட அண்ணா மன்னி ஸ்டேட்ஸ்ல இருக்கா' என்று அலட்டிக்கொள்ளும் பேர்வழிகள் நிறைய பேர் தமிழகத்தில் உண்டு. கச்சேரி பண்ணாலும் ஸ்டேட்சுக்கு (USA) போய் பண்ணாத்தான் பெருமை, நடனம் பண்ணாலும் ஸ்டேட்சுக்கு(USA) போய் பண்ணிட்டு வந்தாதான் 'அவாளுக்கு' பெருமை. அப்படி ஒரு கும்பல் இந்த தமிழகத்தின் ஒட்டு மொத்த பெருமைக்கும் தங்களது ஜாதி மட்டுமே காரணம் என்று பெருமை பட்டுக்கொள்வதோடு நில்லாமல், ஆங்கிலேயனுக்கே ஆங்கிலம் கற்று கொடுக்கும் திறமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்கின்ற ஆணவமும் கொண்டவர்கள்.



தப்பி தவறி தமிழை பற்றி மட்டும் உயர்த்தி பேசிவிட அவர்கள் மனம் ஒரு போதும் இடம் கொடுக்காது ஆனால் தங்களை தமிழர்கள் என்று இடத்திற்கு ஏற்றார் போல காண்பித்துக்கொள்ளும் நடிப்பாற்றலுக்கும் பஞ்சமிருக்காது. இவர்கள் பேசும் தமிழுக்கென்றே ஒரு புதிய அகராதி தேவைப்படும். தமிழர்களே இப்படி என்றால், பகுதி ஆங்கிலேயனும் பகுதி இந்தியனுமாக இந்தியாவில் வாழுகின்ற ஒரு கூட்டமுண்டு. இவர்கள் பேசும் தமிழை புரிந்து கொள்ள தனி அறிவு தேவை, இவர்கள் மூதாதையார்கள் முதல் இன்றுவரையில் உள்ள அனைவருமே தமிழகத்திலும் இந்தியாவிலுள்ள மாநிலங்களில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இந்திய மாநில மொழிகளை இவர்கள் பேசுகின்ற விதமே அலாதி, இவர்களுக்கு இந்தியர்கள் என்றால் 'ஆப்பக்கடை', 'ஆயா' என்ற அந்தஸ்த்தை மட்டுமே கொடுக்க முடிந்த மனதுள்ளவர்கள். இந்தியாவினுள் பிறந்து வளரும் ஆங்கிலேயர்கள் என்கின்ற நினைப்பு இவர்களுக்கு.



இவர்களில் பலரும் ஆங்கிலேயர்களின் நாகரீகத்தை கடைபிடிக்கின்ற காரணத்தால் இந்தியாவை விட்டு ஆஸ்திரேலியா, ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்து விட வேண்டும் என்கின்ற ஒரே லட்சியமும் கனவையும் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக கொண்டுள்ளவர்கள், இவர்களுக்கு தமிழ் பேசுபவர்கள் 'அடிமைகள்' என்கின்ற நினைப்பு, ஆங்கிலம் படித்த தமிழர்களை மதிக்கின்றனரா என்றால் சமயத்திற்க்கேற்றார் போல, இவர்களுக்கு எந்த மாநில மொழியையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கிடையாது, இதனால் இவர்கள் பேசுகின்ற மாநில மொழிகள் இவர்களது பற்களுக்கு இடையிலும் இவர்களது நாவிலும் மாட்டிக்கொண்டு வெளியேறுவதற்கு மிகவும் வருந்துவதை நம்மால் காணமுடியும். பல சமயங்களில் இவர்கள் தாங்கள் இந்தியாவில் உள்ள மாநிலத்தில் பிறந்து வாழ்கின்றோம் என்கின்ற நினைவு அற்றவர்களாய் மாநில மொழிகளையும் மாநிலத்தவர்களையும் கிண்டல் கேலி செய்வதை பார்க்கும் போது அங்கே தமிழுணர்வு நமது ரத்தத்தை சூடாக்காமல் இருப்பதில்லை.



'தமிழகத்திற்கு குடியேறி ஏறக்குறைய 45 ஆண்டுகள் கழிந்து விட்டது ஆனாலும் எனக்கு தமிழ் பேசவும் எழுதவும் படிக்கவும் தெரியாது' என்று கூறுகின்ற வேற்று மாநிலத்து மக்களை நான் சந்தித்ததுண்டு, அதிலும் தெனிந்திய மக்களை பெருமளவில் சந்தித்ததுண்டு, அவ்வாறு சாத்தியமே இல்லை என்ற போதும் தமிழகத்தின் அத்தனை நலன்களையும் அனுபவித்துக் கொண்டு தமிழ் மொழியை மட்டும் கற்றுக் கொள்வதற்கு விருப்பமின்றி பல ஆண்டுகளாக ஒரே மாநிலத்திலே வாழுகின்ற மனப்பான்மையை என்னவென்று சொல்வது, இவர்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரிகளா அல்லது 'நாங்கள் இந்திய பிரஜைகள் என்பதால் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் வாழுகின்ற தகுதி படைத்தவர்கள் அதனால் அம்மாநிலத்தின் மொழியை நாங்கள் கற்று கொண்டுதான் ஆக வேண்டுவதில்லை' என்று கூறுகின்ற உள்நாட்டு தீவிரவாதிகளா. இவ்வாறு ஒரு பெரிய கூட்டம் தமிழகத்தில் உண்டு.



தென் தமிழக மக்களில் பெரும்பாலோருக்கு சென்னை என்றால் சென்னையில் பேசப்படுகின்ற மொழிதான் முதலில் கேலி பொருளாகும், சென்னையில் பிறந்து சென்னைவாசிகளாக இருப்பவர்கள் என்றாலே தாழ்வான அபிப்பிராயம், ஆனால் பிழைப்பைத் தேடி வருகின்ற இடம் சென்னையும் அதனை சுற்றி உள்ள இடங்களும் தான். நாளுக்கு நாள் சென்னையில் பெருகி வருகின்ற கூட்டம் சென்னையின் வீடு நிலம் வாடகை என்று எல்லாவற்றையும் உயர்த்திக் கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் கூட்டம் வெளியே நடமாடுவதற்கு பெரும் சிரமத்தை, போக்குவரத்து நெரிசலை ஏற்ப்படுத்துவதால் சென்னை வீதிகளில் நடப்பதற்கு மன உளைச்சல் ஏற்ப்படுத்துகிறது. இதனால் சென்னையின் புறநகர்களில் வீடு மனைகள் பெருகி வந்தாலும் அதன் விலை விண்ணைத் தொடுகிறது.



[எப்படியோ ஒரு நிலத்தை வாங்கி வீடு கட்டி குடி புகுந்தால், கொலை கொள்ளை என்று தினம்தோறும் புற நகர்களில் பெருகிவருகின்ற சம்பவங்கள் நிலை குலையச் செய்கிறது, போக்குவரத்து வசதிகள், சாலை வசதிகள் ஏதும் இன்றி படுகின்ற கஷ்டங்கள் ஒருபுறம், மழை காலத்தில் படகு சவாரி செய்ய வைக்கும் வேதனைகள் இன்னொருபுறம் என சென்னை அதிக மக்களால் அவதியுறுகிறது].