முதல் வெளி நாட்டு பயண அனுபவமும் அந்த நாட்டில் நான் கண்ட பெண்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அரபு முதலாளியின் இரண்டாவது மனைவியின் விருந்தாளியாக நான் தங்க வைக்கப்பட்டேன், அந்த அரபு பெண்ணை பார்த்தபோது நான் மெய் சிலிர்த்து போனேன் அத்தனை அழகு, அவருடைய அரண்மனை போன்ற வீடுகளை பார்த்து அசந்து போனேன், அவரின் வீட்டில் இருந்த பிருமாண்ட படுக்கை அறை என்னை திகைப்படைய செய்தது, கனவிலும் சினிமாவிலும் கற்பனைகளிலும் மட்டுமே காண கூடியவைகளை நேரில் பார்த்த போது நிச்சயம் நான் அதிஷ்டசாலி என திருப்தி பட்டு கொண்டேன்.
பிருமாண்ட அறை ஒன்றில் ஒரு பெரிய பியானோ அதன் மீது இரண்டு தென்னைமரங்கள், பொன்னிறத்தில், ஒவ்வொன்றின் எடையும் குறைத்தது நூறு கிலோ, அவை இரண்டும் சுத்த தங்கம் எனபது தெரியாமல் நான் பார்த்து கொண்டிருந்த போது, பியானோவை வாசித்து காண்பித்த அரபு முதலாளியின் அழகு மகள் சொன்னாள் என்னிடம் "இவை சுத்த தங்கம், கையில் எடுத்து பாரேன்" என்று, ஒரு பிரிட்டிஷ் நாட்டு பியானோ கலைஞ்சர் அந்த அரபு பெண்ணுக்கு பியானோ வாசிக்க கற்று கொடுக்கிறார், "பாலே" நடனம் கற்று கொடுக்க ஒரு ச்விஸ் (swiss) பெண்மணி வருகிறார், இப்படி ஒரு ராஜாவின் அரண்மனையை நேரில் நான் கண்டேன் என்று சொன்னால் மிகை ஆகாது.
அவருக்கு இருக்கும் பல அரண்மனை போன்ற வீடுகளையும் என்னை கூட்டிச்சென்று காண்பித்தார் என் கணவர், அந்த அரபுகாரரின் இரண்டாவது மனைவியின் வீட்டில் இருந்த வேலைகாரர்கள் அனைவரும் அதிகம் படித்தவர்கள், சமையற்காரர்கள் உலகத்தில் உள்ள "ஏ" தரம் சான்றிதழ் பெற்றவர்கள், அரபு முதலாளியின் இரண்டாம் மனைவி மிகவும் அன்பானவர், பணக்காரர்கள் என்றாலே மிகவும் பெருமை நிறைந்தவர்களாகவும் வேலைகாரர்களிடம் மிகவும் "கரார்" ஆகவும் இருப்பார்கள், ஆனால் இவர்கள் மிகவும் மாறுபட்டவர்களாக இருந்தது என்னை மேலும் ஆச்சர்யம் அடைய செய்தது, அவர்கள் அணியும் உடைக்கேர்ப்ப கார்கள், ஒரு உடையை ஒரு தரம் மட்டுமே அணிவது, கைகடியாரங்கள் சுவிஸ் நாட்டில் செய்து விற்ப்பனைக்கு வெளியே வருவதற்கு முன் இவர்களுக்கு வந்து விடுகிறது, கார்களும் அப்படித்தான், வேலைசெய்பவர்களுக்கு எத்தனை வசதிகள் செய்து கொடுத்து இருக்கிறார்......அத்துடன் ஒவ்வொரு வருடமும் ரமலான் பண்டிகையின் போது என்று மட்டும் நில்லாது எப்போதும் சன்மானங்கள் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் அவர்கள் அணியும் நகை விலை உயர்ந்த வாசனை திரவியங்கள், விலையேறப்பெற்ற உடைகள் காலணிகள் என்று எத்தனை விதமான சன்மானங்களை அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள்.........அவர்கள் வீட்டிலும் கம்பனிகளிலும் வேலை செய்பவர்களும் அவர்களது நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும், ஏனென்றால் எல்லா அரபு முதலாளிகளும் இவர்களை போல அன்புடனும் தாராளமாகவும் இருப்பதில்லை என்பதை எனது பிற்காலத்து அரபு நாட்டு பயணங்கள் நிரூபித்தன.......
என் கணவருடன் 1983 ஆம் வருடம் டிசெம்பர் மாதம் முதன் முதலில் அரபு நாட்டுக்கு பம்பாயிலிருந்து விமானத்தில் பயணம் செய்தேன், அப்போதெல்லாம் சென்னையிலிருந்து அரபு நாடுகளுக்கு விமான வசதிகள் இல்லை, பம்பாயில் நாங்கள் குறைந்தது ஒன்றரை மாதங்கள் தங்க வேண்டியதாகிவிட்டது, ஏன் என்றால் அப்போதெல்லாம் நிறைய இளம் பெண்களை அரபு நாடுகளுக்கு கூட்டிச்சென்று, வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பலரை விபச்சார தொழில் ஈடுபடுத்தியதால் பல பெண்கள் துர்மரணம் அடைத்தனர், பலர் காணாமல் போனார்கள் என்பதால் நமது இந்திய அரசாங்கம் இருபத்து ஐந்து வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் அரபு நாடுகளுக்கு போக தடை விதித்திருந்ததால், சில
அங்கீகாரங்கள் தலை நகர் டில்லியிலிருந்து கிடைத்த பின்னர் தான் போக முடியும் என்பதால் ஒன்றரை மாதங்கள் நாங்கள் இருவரும் பாம்பேயில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது, அந்த ஒன்றரை மாத காலம் முழுவதும் பம்பாயிலும் பூனாவிலும் உள்ள நண்பர்கள் சொந்தக்காரர்கள் ரோடுகள் ஹோட்டல்கள் என எல்லா இடங்களையும் சுற்றி பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. பூனாவில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் பின்புறம் ' பிலிம் இனிச்டிடுட்' (film Institute) இருந்தது. என் கணவரின் விடுமுறை முடிந்து விட்டதால் என்ன செய்வதென தெரியாமல் இருந்தபோது அவர் வேலை செய்து வந்த அரபு நிறுவனத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்து சொன்னபோது, நிறுவனத்தின் சொந்தக்காரர் (அரபுகாரர்) தற்போது பம்பாயில் 'ஒபேராய்' சூட்டில் மனைவியுடன் தங்கியிருப்பதாக கிடைத்தது செய்தி, உடனே ஹோட்டலுக்கு என் கணவர் போன் செய்தார், ஹோடேலில் வரவேற்ப்பில் எனது கணவரின் சொந்தகார பெண் ஒருவர் வேலை செய்து வந்ததால், அரபு முதலாளியின் அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள எளிதில் முடிந்தது, அரபு முதலாளியின் உதவியாளர் அடுத்தநாள் வந்தால் முதலாளியை நேரில் பார்த்து பேச முடியும் என்று சொல்லி இருந்ததால் நாங்கள் இருவரும் அடுத்தநாள் 'ஒபேராய் சூட்டிற்கு' சென்று என் கணவரின் அரபு முதலாளியையும் அவரது மனைவியையும் நேரில் பார்த்து எங்களது பிரச்சினை பற்றி சொன்ன போது அவர் அதை பற்றி முன்பே நன்கு அறிந்திருக்க கூடும்
என்று நினைக்கிறேன், தில்லியிலிருந்து ஒப்புதல் கிடைத்த பின்னர் வந்து வேலையை தொடர்ந்து செய்யும்படி கூறியதுடன் எங்களை அன்பாகவும் உபசரித்தார், நான் 'ஒபேராய் சூட்டை' பார்த்து மகிழ்ந்தேன், அரபு முதலாளி வெறும் ஒரு கம்பெனிக்கு மட்டும் முதலாளி இல்லை அவர் அவரது நாட்டின் அமைச்சரவையில் பிரதான அமைச்சரும், அந்த வருடத்திய 'அரபு பணக்காரர்களில்' இரண்டாவதாகவும் இருந்தவர், கொஞ்சமும் ஏற்ற தாழ்வின்றி எங்களை அவர் அன்புடன் உபசரித்ததும் எங்கள் பிரச்சினையை புரிந்து கொண்டதும் இன்னும் என் நினைவை விட்டு நீங்கவே இல்லை.
மதிய உணவை முடித்து விட்டு குழந்தைகளுடன்ஆசிரமத்திற்கு கூட்டி சென்றார், அங்கிருந்த சமாதியின் மூன்று பக்கங்களிலும் காண வந்தவர்கள் சம்மணம் போட்டு சிலர் கண்களை மூடியும் சிலர் கண்களை திறந்த படியும் அமர்ந்திருந்தனர், நானும் ஒரு இடத்தில்சென்று கண்களை மூடி சம்மணம் போட்டு அமர்ந்துகொண்டேன், குறைந்தது முக்கால் மணி நேரம் அப்படி அமர்ந்திருப்பேன் என்று நினைக்கிறேன், ஏதோ ஒரு மாற்றம் வித்தியாசமான அந்த அனுபவம் இதற்க்குமுன் நான் அனுபவித்தது கிடையாது, என் கணவரின் காதருகில் சென்று இந்த ஆசிரமம் யாருடையது இந்த சமாதி இங்கு எதற்கு கட்டப்பட்டது என்று கேள்விகளால் துளைத்தெடுதேன் அவரால் பதில் சொல்ல முடியவில்லை அல்லாமல் அங்கு யாரும் பேசக்கூடாது என்பது கட்டளை.
அங்கிருந்த புத்தகங்களில் சிலவற்றை வாங்கி கொண்டேன் அங்கிருந்த ஓவியங்களில் ஒரு வயதான பெண்ணின் உருவம், அவர்களை தான் "அன்னை" என்று கூறுகிறார்கள் என்று தெரிய வந்தது, என்கணவரிடம் மறுபடியும் பல நூறு கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தேன் அவரால் பயணம் முழுவதும் பதில்கள் சொல்ல தெரியவில்லை, அவருக்கு அந்த ஆசிரமம் இறுப்பது மட்டும் தான் தெரியும் அதை பற்றிய விவரங்கள் ஒன்று கூடதெரியவில்லை, தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை, வீட்டிற்க்கு வந்த அடுத்த நாள் முதலில் அந்த ஆசிரமத்தைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆவலுடன்வாங்கி வந்த புத்தகங்களை படித்தேன், தினமும் கண்களை மூடி சில மணிகள் உட்கார்ந்தேன், என்னில் ஏற்ப்பட்ட மாற்றங்களை என் அம்மா கவனித்துவந்திருக்கிறார், என் அம்மாவிடம் அன்னையை பற்றி சொன்னேன் அப்போதுஎன் அம்மா சொன்னார்( இப்போது அவர்கள் இல்லை) உன் முகம் தங்கம் போல பிரகாசமாக தெரிகிறது உன்னிடம் சொல்ல கூடாது என்று தான் நினைத்தேன்ஆனால் நீ இவ்வளவு சொன்ன பிறகு இதை உன்னிடம் சொல்லாமல் இருக்ககூடாது என்பதனால் சொன்னேன் என்றார், என் அடுத்த வீட்டுகாராருக்கு இதுஒன்றுமே தெரியாது அவரும் என்னை கேட்டார் உங்கள் முகம் இப்போது மிகவும் பிரகாசமாக தெரிகிறது, இது நிச்சயம் எந்த முக ஒப்பனைகளினாலும் ஏற்படாது, என்ன காரணம் என்று அதிசயப்பட்டார், அவருக்கு நாங்கள் பாண்டிச்சேரிபோனது கூட தெரியாது, ஏன் என்றால் விடியலில் கிளம்பி அதே நாள் மாலை ஏழு மணிக்குள் வீடு திரும்பி விட்டோம்.
அந்த ஹோட்டல் அறையில் தோன்றிய மூதாட்டியார் நிச்சயம் "அன்னை" தான் என்பது எனக்கு புரிந்தது, என்வாழ்க்கையில் ஏற்ப்பட்ட அதிசய மாற்றங்கள் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. இன்றுவரை அதிசயஅனுபவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அன்னை என்றவுடன் எனக்கு இறந்து பேரைத்தான் [ 1999 வரை ] தெரியும் பெற்ற அன்னை இரண்டாவது அன்னை" என்கிற பானுமதியம்மாவும் சொவ்க்கார் ஜானகியம்மா ரெங்காராவ் மற்றும் சந்திரபாபு சச்சு இவர்கள் நடித்த அற்புதமான கலைஞ்சர்களால் நடித்து இல்லை இல்லை வாழ்ந்து காட்டிய சினிமா. இந்த திரைப்படம் பற்றி புதுசா விமர்சிக்க ஒண்ணும் இல்லை, என்னன்னா எல்லார்க்கும் தெரிந்த ஒன்று என்பதால். மனதை விட்டு என்றும் அழியா கலைஞ்சர்களும் அவர்கள் நடித்த நடிப்பும் நெஞ்சில் நீங்கா இடம் பெரும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது, இந்த "அன்னை" திரைப்படமும் அப்படியொரு படம் தான்.
இந்த அன்னை திரை படத்தை பார்க்க, ( நான் பிறப்பதற்கு பல வருடங்களுக்குமுன்) என் அப்பா அம்மா இருவரும் திரைக்கு வந்தவுடன் பார்க்க போக , அப்போதுதான் திருமணம் ஆகி வந்திருந்த என் பெரியம்மாவையும் அழைத்து கொண்டு போக, திரைப்படத்தை பாரத்துவிட்டு வீட்டிற்கு வந்த என் பெரியம்மா என் அப்பாவிடம் பயங்கர சண்டை போட்டாராம், அதற்க்கு காரணம் இன்று நினைத்தாலும் இந்த மாதிரி பெண்களுக்குஎங்கிருந்துதான் இத்தனை சதித்திட்டம் தீட்டும் அறிவு கிடைக்கிறதோ என்று வியக்க வைக்கிறது, என் அப்பா என் பெரியம்மாவை "அன்னை" படத்தை பார்க்க வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டு கூட்டி சென்றதாகவும் அது ஏன் என்றால் அவர்களுக்கு குழந்தை பிறக்க வைப்பு இல்லை என்று மருத்துவர் கூறி இருப்பதாகவும் இதை சுட்டி காண்பிக்கவே அந்த படத்தை பார்க்க வைத்ததாகவும் காரணம் காட்டி சண்டை போட்டு விட்டு தானிகுடித்தானம் போனாராம் பெரியம்மா. இத்தனைக்கும் பெரியம்மா என் அப்பாவின் அம்மா வழி மாமாவின் முறை பெண்தான்.
பெரியம்மாவிற்கு அப்பா இல்லை இவர்கள் வீட்டிற்க்கு மூத்தவர் இரண்டு தங்கைகளும் இரண்டு தம்பிகளும் படித்துக்கொண்டு இருந்தனர், அவர்கள்அம்மா ஆரம்ப பாட பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார், தனது தம்பி தங்கைகளை தன் வீட்டில் கூட்டி வந்து தம்பிகளுக்கு வேலை வாங்கிவைத்து தங்கைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்கிற திட்டம் மனதில் இருந்துள்ளது இதை எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்து கொண்டிருக்கையில் இந்த "அன்னை" சினிமாவை பார்க்க அழைத்து கொண்டுபோக அதை ஒரு விபரீதமான காரணமாக காண்பித்து சண்டை போட்டு தனிக்குடித்தனம் சென்ற அந்தபெண்ணின் "மாஸ்டர் மைன்ட்" திட்டத்தை என்னவென்று சொல்லுவது....
நான் இங்கு சொல்ல வந்த "அன்னை" என் தகப்பனாரின் மறைவிற்குப்பின் சிலநாட்களில் என் மன மாற்றத்திற்காக பாண்டிச்சேரியில் உள்ள அரவிந்தரின் ஆசிரமத்திற்கு என் கணவர் முதல் முறையாக அழைத்துக்கொண்டு போன போது எனக்கு அரவிந்தர் யார் எதற்காக இந்த ஆசிரமம் என்று ஒன்றும் கேட்காமலேயே ( என் கணவர் என்னை எங்கு எதற்கு அழைத்து கொண்டு போகிறார் என்பதே அறியாமல் போனதால்), அந்த ஆசிரமும் பாண்டிச்சேரியும் எனக்குபார்க்க பார்க்க மிகவும் பிடித்து போனது,
சென்னையின் ஜன சந்தடியில் சிதைந்துபோயிருந்த என் மன நிலை எப்போதுமே நினைப்பதுண்டு மனிதர்களும்வாகனங்களும் இல்லாத அழகான அமைதியான இடத்தில் வாழ வேண்டும்என்று, பாண்டிச்சேரியில் போனவுடன் ஒரு சைவ ஹோட்டெலில் அறை ஒன்றை எடுத்து என் குழந்தைகளுடன் பயண களைப்பு தீர ஓய்வு எடுத்து கொண்டோம், என் கணவர் அலுவலக வேலையாக ஒருவரை சந்திக்க சென்றுவிட்டு மத்திய சாப்பாட்டிற்கு தான் அறைக்கு திரும்பினார், என் குழந்தைகள் இருவரும் அங்கிருந்த பூனைக்குட்டிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தனர், நான் கண் அயர்ந்து விட்டேன்,
அதை கனவு என்று சொல்லவும் முடியவில்லை ஒரு அருமையான அனுபவமாக இருந்தது என்னிடம் ஒரு மூதாட்டி சொல்லுகிறார் "நீ ஒரு எல்லை கோட்டிற்குள் வந்துவிட்டாய் இனிமேல் உன்னை நீ மிகவும் தூய்மை படுத்திக்கொள்ள வேண்டும், இங்கிருந்து நீ திரும்பி போகும் போது அதுஎன்னவென்று நீ புரிந்து கொள்வாய், இனிமேல் உன் வாழ்க்கை பல அறிய மாற்றங்களை காணும் அப்போது என்னை யார் என்று நீ அறிந்து கொள்ள முயலுவாய், அறிந்து கொள்வாய்."
கண்களை விழித்து பார்த்தால் என் குழந்தைகள் இருவரும் விளையாடி கொண்டு இருகின்றனர், எனக்கு ஒன்றுமே புரியவில்லை, முகத்தை அலம்பி விட்டு கைகடியாரத்தில் பார்த்தபோது மணி மதியம் ஒன்று ........தொடரும் "
திரு நாகேஷ் அவர்களின் மறைவு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், அவருக்கு அஞ்சலி செலுத்த தாமதம் ஆனதும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள சிறிது அவகாசம் தேவைப்பட்டது. அவரது திறமைக்கு நிறைய படங்கள் இருந்தாலும் மனதில் அவரை நினைத்தவுடன் கண் முன் நிற்ப்பது முதலில் "சர்வர் சுந்தரம்" தான். உணர்ச்சிகளின் உச்சிக்கு கொண்டு செல்லும் அவரது குணசித்திர நடிப்பு, இந்த படத்தில் பல சிறப்புகள் இருந்தாலும் அவரது நடன திறமையை ஒரு பாட்டில் பார்க்க முடியும், அவருக்கு நடன வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால் மைகேல் ஜாக்சன் பிரபு தேவா இருவரையும் நிச்சயம் தோற்க்கடிதிருப்பார், அத்தனை நடன திறமை கொண்டவர்.
எனது அப்பாவின் தம்பியுடன் தென்னக ரயிலில் குமாஸ்தாவாக பணி புரிந்தவர், எனது சித்தப்பா ( தற்போது உயிருடன் இல்லை ) கர்நாடக இசையில் பயிற்ச்சி பெற்றவர், நல்ல குரல் வளம் கொண்டவர், அவர்கள் அலுவலகத்தில் அமெச்சூர் நாடகங்கள் நடத்தப்படுவது உண்டு, அவ்வாறு நடத்தப்பட்ட "சுசீலா" என்ற நாடகம் பெரிய அளவில் பேசப்பட்டது அதில் திரு நாகேஷ் அவர்கள் நடித்த வேடத்திற்கு என் சித்தப்பா பின்னணி பாடியதை எங்களிடம் சொல்லுவது உண்டு.
ஒரு முறை ஏ . வி. எம். இல் திரு எஸ் . பீ. முத்துராமன் அவர்களின் இயக்கத்தில் "நிம்மதி நிம்மதி உங்கள் சாயிஸ்" என்ற தொலைக்காட்சி தொடருக்காக திரு நாகேஷ் அவர்கள் நடித்து கொண்டிருந்தபோது பார்த்தேன், ஒரு நல்ல மனிதர், வாழ்கையின் உயர்வு தாழ்வுகளை நன்கு அறிந்த பண்பட்ட மனித நேயம் மிக்கவர்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் அதிகமான பண நஷ்டத்தில் அவதிப்பட்டு நிறைய குடித்து குடிக்கு அடிமையாகி உயிரிழந்து விடுவார் என்ற நிலையில் செய்திகள் வெளிவந்தன, தெய்வாதீனமாக அவர் உடல் நலம் தேறி சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்து பின்னர் திரு கமலஹாசன் அவர்கள் கொடுத்த பட வாய்ப்பு மூலம் மீண்டும் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து மறுபடியும் சிறந்த நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்தார்.
மற்றவர்களை மகிச்சியடைய வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் வாழ்க்கை என்றுமே சோகத்தில் தான் இருந்து வந்துள்ளது இதற்க்கு பல நடிகர்கள் உதாரணம் சொல்லலாம், திரு என்.எஸ்.கே. அவர்கள் திரு சந்திரபாபு அவர்கள் திரு சுருளி ராஜன் திரு வி. கே. ராமசாமி அவர்கள் சார்லி சாப்ளின் இன்னும் பல பேர் வரிசையில் திரு நாகேஷின் வாழ்விலும் சோகம் விட்டு வைக்க தவறவில்லை, அவரது மகன் ஆனந்தபாபு அவரும் ஒரு நல்ல நடனமாடக்கூடியவர் நடிகர் ஆனால் அவரும் நடிப்பில் புகழ் பெறாமல் போனது துரதிஷ்டவசமானது.
ஒரு நல்ல கலைஞ்சன் என்று மக்களிடையே அங்கீகாரம் கிடைத்திருந்தாலும் அவரது நடிப்பு திறமைக்கு ஒரு அவார்டும் கொடுத்து கௌரவப்படுத்தவில்லை என்பது என்னை போன்ற அவரது ரசிகர்களின் ஆதங்கமாக இருப்பது நியாயமே.
அவர் மறைந்தாலும் அவரது புகழ் மறையாது இன்னும் வரும் தலைமுறைகளும் பார்த்து ரசிக்கும் ஒரு முன்னோடி கலைஞனாக என்றென்றும் அவர் மக்கள் மனங்களில் வாழ்வார் என்பது உறுதி.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சினிமா உலகத்தில் புகழோடு வாழ்ந்து பலர் மறைந்திருந்தாலும் பெரும்பாலானோரை சினிமா உலகம் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கின்றது என்பது மறைந்திருக்கும் பெரிய உண்மை, எத்தனை பெரிய ஜாம்பவான்களையும் இருக்குமிடம் தெரியாமல் ஆக்கி விட்டது இந்த சினிமா உலகம், ஒரு காலத்தில் ஓஹோ என்று கொடி கட்டி இருந்தவர் வாழ்ந்த இடம் தெரியாமல் ஆக்கியுள்ளது இந்த சினிமா உலகம்.
ஒரு புறத்தில் பலரை மகிழ்ச்சியடைய செய்யும் இயந்திரமாக இருந்தாலும் அதன் பின்னணியில் எத்தனை பேரின் கண்ணீர் !!!!! எத்தனை பேரின் வேதனைகள் !!!!!......அது ஒரு மாய உலகம்.......சிலரை உயர தூக்கி கிழே எறிந்து விட்டிருக்கிறது சிலரை கீழிருந்து மேலே தூக்கி விட்டிருக்கிறது, விட்டில் பூச்சிகளாய் எத்தனை எத்தனை பேர் அதன் பள பளப்பில் மயங்கி விழுந்து மாண்டனர் !!!!!!!!....கதைகள் ஏராளம் உண்டு அவை சொல்லப்படாத வேதனை கதைகள் !!!!!!!!!!
இன்று எப்படியாவது "அருமையான சமையல்" என பாராட்டும் படி சமைத்துதிருப்தி படுத்திடவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் சமைத்துபரிமாறப்போனால், தட்டு நிறைய ஒரேஅடியாய் சாதம், அதன் மீது குழம்பு,ரசம்துவையல் பொரியல் என ஆக்கி வைத்த எல்லாவற்றையும் ஒன்றின் மீதுஒன்றாக போட்டு தட்டை பார்க்க முடியாத உயரத்திற்கு தூக்கி கொண்டு அழகானசாப்பாடு மேசையும் நாற்காலியும் இருக்க ஒற்றை கட்டில் போட்டிருக்கும் தனதுபடுக்கை அறைக்கு கொண்டு சென்று ஐந்து நிமிடத்தில் உண்டு முடித்து தட்டைதானே அலம்பி கவிழ்த்து விட்டு வாங்கி வைத்த இனிப்பு வகைகளில்தேவையானவற்றை கையில் அள்ளிக்கொண்டு மறுபடியும் ஒற்றை கட்டில்போட்ட படுக்கை அறைக்குள் சென்று எல்லா இனிப்பையும் தின்று தீர்த்துவிட்டுசாப்பிட்ட உணவு முழுவதுமாய் இரைப்பைக்குள் போய் சேர்வதற்கு முன்பேதொல்லை"காட்சியில் வரும் சீரியலில் ஒன்று கலந்து சில மணி நேரத்தில்குறட்டை ஒலி ..........
விடியலில் மணி நான்கிற்க்கோ மூன்றிக்கோ எழுந்து தன் செல்ல பிராணியைதினக்கடன் செய்ய அனுமதித்து பல் துலக்கி டீ போட்டு காலை மறுபடியும்செய்திகளில்" மூழ்கி குளித்து காலை உணவையும் தட்டில் வைத்து ஒற்றைகட்டில் படுக்கையறைக்கு கொண்டு சென்று உண்டு முடித்து அலுவலகம்செல்லும்போது "போகிறேன்" என்று சொல்லிவிட்டு போகும் வழக்கத்தைவைத்துகொள்ளாமல், தானே கதவை அடைத்து விட்டு ..............
இப்படியே வாரம் முழுதும் பேச ஒரு வார்த்தையும் இன்றி, வார இறுதியிலும்விடுமுறையின் போதும் ஒரு மாற்றமும் இன்றி நாட்கள் மாதங்களாகிமாதங்கள் வருடங்களாகி ........... அந்த பெண்ணின் வாழ்க்கை வீணாய் போகிறது
இரண்டுபேர் அவர்களுக்கு பெயர் கணவன் மனைவி, இருவரும் ஒரே வீட்டில்வாழ்கின்றனர் பேசுவது எனபது அரிது, அப்படியே பேசினாலும் அதன் முடிவுவாக்குவாதம்......
அந்த பாழாய் போன மனசுக்குள்ள என்ன என்ன இருக்குமோ....ம்ம் ஹு ஹும்ஷ்.....ஒண்ணுமே புரியல.....
சில பேருக்கு வாழ்கையை வாழ தெரிகிறது சில பேருக்கு மத்தவங்களையும்கஷ்டப்படுத்தி அவங்க படர கஷ்டத்த பார்க்கறதுல சந்தோஷத்த அனுபவிக்கிறஒருவித மன நோய் இருக்கு.......இவங்களுக்கு இருக்கிறது மன நோயின்னுபுரியாம கூட வாழ வந்தவுங்கள கஷ்டப்படுத்தி .........முடிவில்லாத தொடர்வேதனையாய் சிலரின் வாழ்க்கை விமோசனம் இன்றி போகிறது.........
வாழ்க்கையை ஒரு முறை தான் வாழ முடியும் என்பது அறிந்தும்அறியாததுபோல மற்றவரின் வாழ்க்கையை சிதைப்பது எந்த விதத்திலும்நியாயம் அல்லவே.......
மனநோய் தான் என்று அறுதி இட்டு மனநோய் நிபுணர் தான் சொல்ல முடியும், அல்லாதவர் எப்படி இவரை ஒரு மன நோயாளி என்று சொல்லிவிட முடியும்.....
"உன் கையால சாப்பாடு போடாதே.........நான் சாப்பிடறத பார்த்துடாத"... .....என்றுசொல்லுவதும் "உன்னை அடிச்சா கத்தற......ஊர்ல இருகறவங்க கிட்ட போய்சொல்லற.... இனிமேல் உன்ன அடிக்க போறது இல்ல ........என் கிட்ட உனக்கு இனிசெக்ஸ் கெடைக்காது ஊர் சுத்தி பார்க்க என்னோட எங்கேயும் வர அனுமதிஇல்ல......இது தான் உனக்கு தண்டனை........என்ன பண்ண போறன்னுபார்க்கலாம்."...... ..
அவன் மனைவியை தேடி வீட்டுக்கு யாரேனும் சொந்தகாரர்கள் வந்தால்அவர்கள் எதிரே ஒரு "மகா அருமையான ஜோடின்னு" சொல்லிவிட்டு போகும்அளவிற்கு நடிப்பு ........." கே.பாலச்சந்தரின் "அவர்கள்" ரஜினிகாந்தின் வேடத்தைபோல .......
பாவம் அந்த பெண் அவளது வாழ்க்கை ஒரு மனோ வியாதிக்காரனிடம் சிக்கி சின்னா பின்னம் ஆகி விட்டதா அல்லது கொடுமைக்காரனிடம் மாட்டிக்கொண்டுவாழ்க்கை அழிக்கப்படுகிறதா.........தெரியல.........கடவுள் கூட சில பலரைகாப்பாற்றுவது இல்லை .........துரதிஷ்டவசமானது.....
, " " ............ .......
நல்லதொரு ஆடவன் கணவனாய் அமைந்து விட்டால் மனைவிகளுக்குவிடிவுகாலம் தான்.
கொண்டு வந்த வரதட்சிணை பணமும் மாமனார் போட்ட நகைகளும் போதாமல், அவள் சம்பாத்தியம் கட்டிலில் விபசாரி வீட்டில் வேலைக்காரி, போதாமல்போகுமிடமெல்லாம் கிடைக்குமா லஞ்சம் என்று இரவும் பகலும் பொருள்மயக்கம், மனைவியுடன் சேர்ந்து செல்ல அவள் அப்பன் கொடுத்த வாகனத்தில்சின்ன வீட்டை" ஏற்றி கொண்டு வீதியிலே போகும் சுகம் தனி சுகம்.
அறிவு ஜீவியாய் கவிதை கட்டுரை என "பெண்ணீயம்" பேசி கைதட்டல் பலவாங்கி "வரதட்சிணை" கொடுமைக்கு எதிராய் ஊர்வலத்தில் மார்பு நிமிர்த்திஊர்கோலம் போகும் போதும் சுகமே தனி....
வாய்க்கு ருசியாய் மனைவி சமைக்க வயறு முட்ட தின்று விட்டு, "இவ சமயலநான் சாப்பிட, எனக்கு என்ன தலையெழுத்து" என "சின்ன வீட்டுக்காரி"யுடன்ஹோடேலில் கோழி பிரியாணி சாப்பிடுவர்....அதிலொரு தனி சுகம் ...
வாய் கிழிய பெண்ணீயம் பேச விரைதிடுவர் பல மேடை, கேட்போர் வாய் பிளக்கபேசிடுவர் தமிழ் பேச்சு எனது மூச்சு என்று, பெண்ணீயம் பேச்சினிலே பேசுதற்குசுவைதிடுமே, வீட்டினிலே பெண்ணீயம் "வரதட்சிணை"யாகவும்வாகன"மாகவும் இன்னும் பல உருவெடுத்து நிர்ப்பதிலும் அவர்க்கு தனி சுகமே.
"வாயொன்று பேசும், மனமொன்று நினைக்கும், செயல் வேறு நடக்கும்" இதுஒன்றே இவர்க்கு சுகம்.
உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுதல் இவர் பண்பு, இதை அறியாதோர்வாயிலே மண்ணு.... " "