திங்கள், 2 நவம்பர், 2009

சொல்ல முடியாத கதை 1

கொத்தனார் சிங்காரத்திற்கு முப்பது வயது, சிவந்த நிறம் நெடிய உயரம், திருமணமான முதல் வருடத்திலேயே அவரது மனைவி ஜானகி சிங்காரத்தின் மறு உருவமாக ஒரு பிள்ளையை பெற்றெடுத்து விட்டாள், மனைவி ஜானகியும் நல்ல சிவப்பு நிறம் நீண்ட தலை முடி முகலட்சம் என்று ஒரு குறையும் இல்லாதிருந்தாள்.

மகன் தாமு என்கிற தாமோதரன் பிறந்த ஒருவருடத்திற்க்குப் பின் இரண்டு கறவை மாடுகள் வாங்கி கொடுத்தார் சிங்காரம், தன் மனைவி வீட்டிலிருந்தபடியே பால் வியாபாரம் செய்து கொள்ளவும் குழந்தை தாமுவுக்கும் குடிக்க பால் கிடைக்கும் என்ற யோசனையில்.

தாமுவிற்கு மூன்று வயதிருக்கும் போது இரண்டாவது பெண் குழந்தைக்கு தாயானாள் ஜானகி,
பெண் குழந்தைக்கு வசந்தா என்று பெயர் சூட்டப்பட்டது , மிக அழகிய பெண்ணாக இருந்தாள் வசந்தா.

டாக்டர் ஷீலா அந்த பகுதியில் பிரபலமானவர், அவரது வீட்டிற்கு தினமும் பசும் பால் கொடுக்கும்படி கேட்டிருந்தனர், தினமும் ஷீலாம்மாவின் வீட்டிற்குச் சென்று பசும் பால் கொடுப்பது வழக்கமாகியது ஜானகிக்கு.

ஷீலாம்மாவிற்கு நான்கு பிள்ளைகள் நான்கு பேரில் மூத்தமகனுக்கு மட்டும் திருமணம் ஆகி அடுத்த தெருவிலேயே மகனும் மருமகளும் வசித்து வந்தனர். கடைசி மகன் விக்டரின் பார்வை ஜானகியின் இளமையும் அழகையும் கவனிக்கத் தவறவில்லை, விக்டர் தன் வீட்டின் அடுத்த வீட்டில் வசித்துவந்த தீபாவை காதலித்து வருவது எல்லோரும் அறிந்த விஷயமாக இருந்து வந்தது.

ஜானகி பால் கொடுக்கும் சாக்கில் வீட்டு வேலைகள் செய்யவும் தேவைப்பட்டால்
தான் வருவதாக ஷீலாம்மாவிடம் தெரிவித்தாள், மேல்வேலைகள் செய்ய ஜானகி ஷீலாம்மாவின் வீட்டினுள் போக ஆரம்பித்தாள், விக்டரின் இளமையும் அழகும் ஜானகியை கவர்ந்து விட எப்படியாவது விக்டரை அடைய ஆசைபட்டாள், ஜானகி தன் மீது பார்வை கணைகளை வீசுவதை தெரிந்துகொண்ட விக்டரும் ஜானகியுடன் உறவு வைத்துக் கொள்ள நேரிட்டது.

இதை அறிந்த தீபா விக்டரை மறக்க முடிவு செய்தாள், தன் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு வேறு ஊருக்கு போய் விட்டாள். தீபா விக்டரின் உறவு முறிந்து போனது
ஜானகிக்கு மிகவும் வசதியாகி விட்டது, தீபா என்கிற தன் விரோதியால் இனி தனக்கு ஏதும் பிரச்சினை இல்லை என்கிற முடிவில் விக்டருடன் திருமணம் செய்தவளைப் போல உடலுறவுகொள்ள ஆரம்பித்து கருவுற்றாள் ஜானகி.

தொடரும்.......


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக