வெள்ளி, 6 நவம்பர், 2009

சொல்ல முடியாத கதை 3

Friday 6 November 2009

குழந்தை பாலனுக்கு ஐந்து வயது நிரம்பியது, பெற்றோர் இறந்து விட்டதனாலும், தனது சகோதரர்களுக்கு ஜானகியுடனான தொடர்பை பற்றிய ரகசியங்கள் தெரிந்து விட்டதனாலும், போறாத குறைக்கு ஜானகியின் விடாத உபத்திரவத்தாலும் ராணுவத்திலிருந்து திரும்பி வந்து விட்டான் விக்டர். மறுபடியும் ஒரு பெண் குழந்தைக்கு தாயானாள் ஜானகி, வேறு வழி இன்றி விக்டர் ஜானகியை வைத்து குடும்பம் நடத்தியாக வேண்டும் என்ற சூழ்நிலை உருவானதால் ஜானகியுடன் வாழ்ந்து வந்தான் விக்டர்.

சிங்காரத்திர்க்கும் ஜானகிக்கும் பிறந்த தாமுவையும் வசந்தாவையும் தன் சொந்த பிள்ளைகளை விட அதிக பாசத்துடன் பராமரிப்பு செய்து வந்ததால் தாமுவி
ற்க்கும் வசந்தாவிற்கும் தன் சொந்த தகப்பனை பிரிந்த கவலை என்பதே இல்லாமல் போனது. ஆனால் தான் ஒரு தவறும் செய்யாது நல்ல விதத்தில் ஜானகியுடன் குடும்பம் நடத்தி வந்த போதும் ஜானகி காரணம் ஏதுமின்றி தன்னை விட்டு குழந்தைகளுடன் விக்டரிடம் குடும்பம் நடத்தி வந்ததால் சிங்காரம் மனம் உடைந்து போனார்.

ஆனாலும் சிங்காரம் எந்த கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாகாமல் வேலை உண்டு தான் உண்டு என்று தனி மரமாக வாழ்ந்து வந்தார். மகன் தாமுவிற்க்கு பத்து வயதிருக்கும் போதிலிருந்து சிங்காரத்திடம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வசந்தாவையும் தாமுவுடன் அனுப்பி வைப்பாள் ஜானகி, தன் தகப்பனை பார்த்து விட்டு சாப்பிட்டு விட்டு வருவதும் போவதுமாக இருந்தனர் தாமுவும் வசந்தாவும்.

சிங்காரத்திற்கு சொந்த வீடும் சேர்மானமாக பணமும் இருந்தது. சிங்காரம் சாகும் வரை வேறு பெண்களை ஏறெடுத்து கூட பார்க்காமல் வாழ்ந்து, தான் இறக்கும் முன் தனக்கிருந்த பணம் வீடு முதலானவற்றை தன் மகன் தாமுவின் பெயருக்கு எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார்.

விக்டருக்கு பிறந்த பாலனும் மகள் அஞ்சலி, ஸ்ரீதேவிக்கும் தன் மூத்த சகோதரன் தாமுவும் அக்காள் வசந்தாவும் வேறு அப்பாவின் பிள்ளைகள் என்ற விவரம் கருத்து தெரியும் வரையில் விளங்காமல் அல்லது தெரியாமல் இருந்து வந்தது. விக்டருக்கு தன்னுடன் வேலை செய்து கொண்டிருந்த இளம் விதவை சுமதியுடன் தொடர்பு ஏற்பட்டது.

தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக