செவ்வாய், 3 நவம்பர், 2009

சொல்ல முடியாத கதை 4

Wednesday 4 November 2009

தொடர்பு ஏற்பட்ட ஒரு சில வருடங்களில் விக்டர் பல நாட்கள் சுமதியின் வீட்டிலேயே தங்கி விடுவதால் ஜானகிக்கு விக்டரின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட துவங்கியது. இதன் உண்மையை தெரிந்து கொள்ள தன் மகன் பாலனையும் மகள் அஞ்சலியையும் விக்டர் வேலை முடிந்து வெளியே வரும் சமயங்களில் எங்கே போகிறான் என்று வேவு பார்க்க அனுப்பினாள் ஜானகி.

அப்போது பாலன் பள்ளி கூடத்திற்கு ஒழுங்காக போகாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்த பதினேழு வயது நிரம்பியவன், அஞ்சலி பனிரெண்டு வயது நிரம்பியவளாக இருந்தனர். வீட்டிற்கு விக்டர் வரும் போது குடித்து விட்டு வர ஆரம்பித்தான், அந்த சமயங்களில் ஜானகி விக்டரை எங்கே தங்கி விட்டு வருகிறான் என்று கேட்டு சண்டை போட ஆரம்பித்தாள்.

பல நாட்கள் சண்டை அடிதடி என்று குடும்பம் மோசமான சூழ்நிலையிலிருந்து வந்தது. தகப்பன் தன் தாய் ஜானகியை வெறுத்து விட்டு வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவதையும் குடும்பத்தில் சண்டை அடிதடி என்று பிரச்சினைகள் ஏற்பட்டு வந்ததால் விக்டரை வெறுத்தனர் பிள்ளைகள் மூவரும்.

ஆனால் எல்லா உண்மைகளையும் அறிந்த தாமுவும் வசந்தாவும் விக்டரிடம் மிகவும் அன்பாகவே இருந்து வந்தனர். தாமுவிற்க்கும் வசந்தாவிற்கும் திருமணம் முடிந்தது, இருவருக்கும் அவர்களின் தகப்பன் சிங்காரத்தின் ஜாதி முறைப்படி திருமணம் நடத்தி வைத்தனர் ஜானகியும் விக்டரும்.

மகள் அஞ்சலிக்கு ஜானகியின் உண்மை கதை சிறிது சிறிதாக தெரிய ஆரம்பித்தது, ஆனாலும் தன் தகப்பனுக்கு துரோகியாக மாறினாள் அஞ்சலி, காரணம் தன் தகப்பன் விக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் சுமதியுடனும் குடும்பம் நடத்துவது
தெரிந்துவிட்டதால்.

தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக