

நாய்க்கு நாலுகால் இருக்கலாம் ஆனா அதனால லோக்கல் கால் எஸ்.டி.டி. கால், மிஸ்ட் கால் பண்ணமுடியாது.
கங்கை ஆத்துல காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம், ஆனால் ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?
திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலும் அவரால் ஒரு குரலில்தான் பேச முடியும்.
என்னதான் தலை சுத்தினாலும் முதுகை பார்க்க முடியாது.
மீன் பிடிக்கிறவனை மீனவன் என்று சொல்லலாம், நாய் பிடிக்கிறவனை நாயன் என்று சொல்ல முடியுமா?
என்னதான் குண்டாக இருந்தாலும் அவரை தூக்கி துப்பாக்கிகுள்ள போட முடியாது.
தேள் கொட்டினா வலிக்கும் முடி கொட்டினா வலிக்குமா?
ஸ்கூல் டெஸ்டுல பிட் அடிக்கலாம் காலேஜி டெஸ்டுல பிட்டு அடிக்கலாம் blood டெஸ்டுல பிட் அடிக்க முடியுமா?
பொங்கலுக்கு கவர்மென்ட்ல லீவு கொடுப்பாங்க ஆனா இட்லி தோசை கொடுப்பாங்களா?கோலமாவில் கோலம் போடலாம், கடலைமாவில் கடலை போடா முடியுமா?
லைபுல ஒண்ணுமே இல்லன்னா போரடிக்கும், தலைல ஒண்ணுமே இல்லன்னா க்ளார் அடிக்கும்.
ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிட பணமிருந்தாலும் பாஸ்புட் கடையில் நின்னுக்கிட்டுதான் சாப்பிடணும்.
இஞ்சினியர் காலேஜில படிச்சா இஞ்சினியர் ஆகலாம். பிரசிடென்சி காலேஜில படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம்வரும் ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது.
வாழைமரம் தார் போடும் ஆனா அதை வச்சு ரோடு போடா முடியுமா?
ஹான்ட் வாஷ் என்றால் கை கழுவுவது பேஸ் வாஷ் என்றால் முகம் கழுவுவது பிரைன் வாஷ் என்றால் ப்ரைனை கழுவுவதா?டீ கப்ல டீ இருக்கும், வேர்ல்ட் கப்ல வேர்ல்ட் இருக்குமா?
பால்கோவா பாலிலிருந்து பண்ணலாம். ஆனா ரசகுல்லா ரசத்திலிருந்து பண்ணமுடியாது.
பல்வலி வந்தா பல்ல புடுங்கலாம், தலைவலியோ கால்வலியோ வந்தா தலையோ காலையோ புடுங்க முடியுமா?
சண்டே அன்னிக்கு சண்டைப்போட முடியும் ஆனா மண்டே அன்னிக்கு மண்டையப் போடா முடியுமா?
மனக்குதிரை ஒரு மார்கண்டேயன்எத்தனை ஆண்டு கடந்தாலும்அதன் ஓட்டத்திலும் ஏற்றத்திலும்மாற்றம் என்பதே இல்லைகட்டுக்கடங்கா மனக்குதிரைஒரு காட்டுக்குதிரை அதன்மீதேறி பயணம் சென்றால்புரட்டித்தள்ளி கீழே வீழ்த்திஎல்லுடைத்து நோய்வருத்தும்பண்பறியா முரட்டுக் குதிரைகடிவாளம் அதன் மூக்கிலிட்டுகாலில் இரும்படித்து பட்டினியாய்காவலில் போட்டுவைத்தேன்நாள்தோறும் என்வயப்படமுயன்றும் வந்தேன்பசியின் கொடுமை தாங்காகுதிரை என்வசம் படியலாயிற்றுகொள்ளும் நீரும் பசும்புல்லும்அள்ளிக் கொடுத்தே உறவைவளர்த்தேன் மீண்டும் அதன்மீதேறி வெள்ளோட்டம் போனேன்குதிரையின் கடிவாளம் என்கையில்சற்றும் தளராமல் விரட்டிச்சென்றேன்குதிரை மீண்டும் முருகேறிப்போனதுவழிதடம் மாற்றி என்னைபுரட்டித்தள்ளி காயப்படுத்தித்தன்னை தேற்றிகொண்டதுஇன்றுனக்கு புல்லும் நீரும்கிடையாதென்றேன் ஏளனமாய்என்னை பார்த்துக் கனைத்தது குதிரைஇரண்டு நாள் புல்லும் நீரும்அதன் கண்ணில் காட்டவில்லைமூன்றாம் நாள் நீரும் புல்லும்எடுத்துச் சென்றேன் குதிரைஎன்னைபார்த்து மீண்டும் கனைத்ததுஅதன் அர்த்தம் எனக்குஅப்போது புரியவில்லை ஆனாலும்குதிரை நீரும் புல்லும்தொடவேயில்லை அதன்மருத்துவரை அழைத்துவந்தேன்இரண்டுநாளாய் குதிரை தீனி தின்னவேயில்லை என்றேன்மருத்துவரும் குதிரையைசோதித்தார் பின்னர் குதிரைக்குத்தேவை தீனியல்ல தோழிஎன்றார்தோழிக்கு நான் எங்குபோவேன் என்றேன் மருத்துவரோஇல்லையென்றால் ஒரு ஊசிபோதும் என்றார் போடுங்கள்ஊசிஎன்றேன் மாதம் ஒருஊசிவீதம் சில மாதம்போடச்சொன்னார்சில மாதம் ஊசிப்போட்டேன்குதிரைக்கு 'தோழி' ஆசைவிட்டொழிந்து போனதுஎந்தோழன் ஒரு நாள் வந்துகுதிரைமீதேறி பார்க்ககுதிரையும் ஏற்றிக்கொள்ளவேகமாய் சீறிப்பாய்ந்த குதிரைமீதிருந்து வீழ்ந்தான் தோழன்குதிரையின் முன்னங்கால்தோழனின் படாத இடத்தில்பட்டு வலியால் அவன்துடித்துப்போனான்பழிக்குப்பழி வாங்கி குதிரைபாங்காய் ஓடித்திரிந்தது
ஹுசேனின் ஆபாச ஓவியத்தைப்பற்றிய விவாதமென்பது சற்று பழைய கதை என்றாலும் மருத்துவர் ருத்ரன் அவர்கள் பதிவை படித்தபின் அதைப் பற்றிய எனது அபிப்பிராயத்தையும் எழுத நினைத்தேன்,
அபிப்பிராயம் என்பதனால் சற்று நீண்டதாக இருந்துவிடபோகிறது என்ற ஊகத்தில் எனது பதிவிலேயே எழுத எண்ணினேன், ஓவியர் ஹுசேன் அவர்களுக்கு தற்போது தொண்ணூற்று நான்கு வயது என்பதால் மூத்த குடிமகன் என்ற மரியாதையும், சிறந்த இந்திய ஓவியர் என்பதால் மதிப்பும் எப்போதுமே அவர் மீது உண்டு,
ஆனால் சர்ச்சைக்குள்ளான போது அவருக்கு வயது எண்பத்து ஒன்று, 1970களில் வரையப்பட்ட சில ஓவியங்களைப் பற்றிய சர்ச்சைகளை அப்போது கண்டுகொள்ள ஒருவர் கூட இல்லாமல் போனதும், 6, டிசெம்பர் 1992ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடித்த பின்னர் 1996ஆம் ஆண்டு தான் ஹுசேனின் ஓவியத்தின் மீதான குற்றங்களை அவமதிப்பு வழக்குகளைப் பதிவு செய்கிறார்கள் மட்டுமில்லாது அவரது சில ஓவியங்கள் கடும் சர்ச்சைக்குள்ளாக்கப்படுகிறது, 1970களில் இல்லாத, ஏற்படாத புதிய சர்ச்சையை ஏறக்குறைய இருபத்து ஆறு ஆண்டுகள் கழித்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்ப்படுத்தி ஒற்றுமையை சிதைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதா? ஹுசேன் தனக்கு பிடிக்காதவர்களை ஆடையில்லாமல் ஆபாசமாக வரைந்து தனது கோபத்தை வெளிபடுத்திக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது, அதற்க்கு உதாரணமாக ஹிட்லரைக் கூட அவர் நிர்வாணமாக ஓவியம் வரைந்தார் என்றும் கூறப்படுகிறது,
பொதுவாக ஓவியங்களை வரைவதில் சில ஓவியர்கள் 'நிஜங்களை' சித்தரிக்க அப்படி வரைவதாக கேள்விப்பட்டதுண்டு, இன்னொரு வகையில் பார்த்தால், கடவுளுக்கு உடை உடுத்தும் வழக்கம் இருந்திருக்க முடியுமா என்பது கேள்வியே. கோவிலில் உள்ள சிற்ப்பங்களும் பல செய்யுள்களிலும் கூட இந்த 'ஆபாசம்' நிறைந்துதான் கிடக்கிறது.
ஓவியர் ஹுசேன் நிர்வாணமாக சித்தரித்தது பலரது மனதை புண்படுத்தியது என்றால், பாபர் மசூதியை இடித்து பழிக்குப்பழி வாங்கினார்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா? பாபர் மசூதியை இடித்ததினால் யாருடைய மனதும் புண்படவில்லையா? ஹுசேனை தண்டிக்க வேண்டுமென்றால் மசூதியை இடித்தவர்களை என்ன செய்ய வேண்டும்?
M.F ஹுசேனுக்கு இந்த ஆண்டு கத்தார் அரசு அந்நாட்டின் குடியுரிமை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உசேன் அவர்களின் வயதுக்கும் அவரது ஈடு இணையற்ற ஓவியத்திறமைக்கும் அருமையான விலைமதிப்பற்ற ஓவியங்களுக்கும் நான் என்றும் சிரம் தாழ்த்துகிறேன்.
விடிந்தால் திருமணம், இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை, கட்டிய புடவையோடு வீட்டைவிட்டு போய்விடுவது ஒன்றுதான் வழி, திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் ஆங்காங்கே சத்திரத்தில் படுத்து தூங்க ஆரம்பித்துவிட்டனர், மெதுவாக ஓசையின்றி எழுந்து ஒருவர் மீதும் மோதிவிடாமல் கதவை திறந்துகொண்டு வெளியேறி, இருட்டில் செல்போனிலிருந்து போன்செய்து சோமுவை அங்கு வரச்சொல்லி போன் செய்தபோது போன் பதில் சொல்லபடாமல் துண்டிக்கப்பட்டது, தைரியமாக வெளியே வந்தது பிரச்சினையில் முடிந்துவிடுமே, யாராவது தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டால் மணப்பெண்ணை காணவில்லை என்று சொல்லி கூட்டத்தைக் கூட்டி விவரம் காட்டுத்தீயாய் பரவி ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் தேட ஆரம்பித்து விடுவார்கள், சோமுவின் நண்பன் கோதண்டனுக்கு போன் செய்தபோது சிறிது நேரத்திற்குப்பின் கோதண்டம் தூக்கத்திலிருந்து எழுந்து போனில் பேசினான், சோமுவிற்கு போன் செய்த போது பதில் பேசப்படாமல் துண்டிக்கப்பட்டதை சொல்லி எப்படியாவது சோமுவை பார்த்து தனது நிலையை எடுத்து சொல்லி உடனே அழைத்துவர சொன்னாள் கோமதி. சோமுவின் வீட்டிற்கும் கோதண்டத்தின் வீட்டிற்கும் அதிக தூரம் என்பதால் இரவில் தனியே எப்படி போவது என்று யோசித்துவிட்டு, சோமுவின் வீட்டிற்குச் சற்று தொலைவிலிருந்த கணேஷுக்கு போன் செய்கிறான் கோதண்டம், கணேஷிடம் விவரத்தைச் சொல்லி சோமுவை உடனே அழைத்துவரவேண்டும் என்று சொல்லுகிறான்.சோமுவின் வீட்டை சென்றடைந்த கணேஷ் அவனது வீட்டின் கதவை தட்டிக்கொண்டே இருக்க சிறிது நேரத்திற்குப் பின் கதவை திறக்கிறான் சோமு, சோமுவிடம் கோமதி உடனே கிளம்பி வரச் சொன்னதை சொல்லி கிளம்பச் சொல்கிறான், சோமு பேய்யறைந்தவன் போல் பேசாமல் உட்கார்ந்திருந்தான், நேரம் சென்று கொண்டே இருக்க சோமு கிளம்புவதாக தெரியவில்லை, கணேஷ் மீண்டும் மீண்டும் சோமுவை கிளம்பச்சொல்லி வற்புறுத்துகிறான். அதற்குள் திருமண வீட்டில் கோமதி நினைத்ததைபோலவே திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் இங்குமங்கும் ஓடுவதை தூரத்தில் ஒளிந்துகொண்டு பார்த்துகொண்டிருந்தாள் கோமதி. மூடியிருந்த ஒரு கடையின் ஓரத்தில் தன்னை யாரும் பார்த்துவிடக்கூடாது என்று மிக கவனமாக முழுவதுமாக ஒளிந்துக் கொண்டாள், அவள் கையிலிருந்த செல்போனிற்கு ஒருவரும் தொடர்புகொள்ளாதது கோமதிக்கு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது. சோமு கோமதியின் அழைப்பை ஏற்று கிளம்பாததின் காரணம் அறியாமல் கணேஷ் தனது வீட்டிற்குத் திரும்பி சென்றுவிட்டான். முகூர்த்த நேரம் தாண்டிவிட்டது, சோமுவும் வரவில்லை வேறு வழியின்றி திருமணமண்டபத்திற்கு திரும்பி சென்றாள் கோமதி, அங்கு திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களில் பெரும்பாலானோரைக் காணவில்லை, ஒருசிலர் மட்டுமே இருந்தனர் இருந்த ஒருசிலரும் கோமதியை கவனித்ததாகவே தெரியவில்லை, கோமதிக்கு ஆச்சரியம், ஏதோ நடந்திருக்கிறது என்ற சந்தேகம் ஏற்பட்டது, திருமணப்பெண்ணை அலங்கரிக்கும் அறையில் கோமதியின் தங்கை மட்டும் தனியே உட்கார்ந்திருந்தாள், அவளருகே சென்று உட்கார்ந்த கோமதி 'என்ன நடந்தது, வந்திருந்தவர்களை காணோம், அம்மா அப்பா எங்கே,' என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்கத்துவங்கினாள்.
'முகூர்த்த நேரம் நெருங்கியபோது மாப்பிள்ளையை அறையில் காணவில்லை என்ற தகவல் கேட்டு எல்லோரும் மூலைக்கு ஒருவராய் போனார்கள், மாப்பிள்ளை காதலித்த பெண்ணுடன் போய்விட்டதாக அவரது நண்பர்கள் சொன்னார்களாம்' என்றாள் கோமதியின் தங்கை. கோமதி தன் மனதுக்குள் 'மாப்பிள்ளை கொடுத்து வைத்தவன்'. என்று நினைத்துக் கொண்டாள்.
மறுபடியும் சோமுவிற்கு போன் செய்தபோது பதிலில்லாமல் துண்டிக்கப்பட்டது என்பதால் அவனது நண்பன் கோதண்டத்திடம் சோமுவிற்கு என்னவாயிற்று போனை எடுத்துப் பேசாமல் இருக்க காரணம் என்னவென்று கேட்கிறாள், அதற்க்கு கோதண்டம், 'சோமுவின் தங்கை கடிதம் எழுதி வைத்துவிட்டு வேறு ஒருவருடன் நேற்று இரவு போய்விட்டாள் என்றும் அதனால் சோமு உட்பட அவனது அம்மா அப்பா அக்காள் எல்லோரும் மிகவும் அவமானத்தில், வருத்தத்தில் இருப்பதாக' சொன்னான். சோமுவின் தங்கையும் தனக்கு பார்த்திருந்த மாப்பிளையும் ஒன்றாக சென்றிருக்கக் கூடும் என்று தோன்றியது கோமதிக்கு.
நாய்களின் அழுகையைப் பற்றிய ஒரு கட்டுக்கதை சொல்லப்படுவது உண்டு. நாய்கள் அழுவதை ஊளையிடுகிறது என்று சொல்லுகிறார்கள், நாய்கள் அழுதால் யாராவது இறந்துவிடுவார்கள் என்று நம்புகின்றனர், அதுமட்டுமில்லாது கெட்ட ஆவிகளைப் பார்த்து நாய்கள் ஊளையிடுகின்றன என்றும் நம்புகின்றனர். பல ஆராய்ச்சிகள்,
அவைகளின் செயல்களுக்கான காரணங்களை பற்றிய பல புத்தகங்கள் உள்ளன, அவற்றில் நாய்கள் எப்போது எதற்காக அழும் என்பதைப்பற்றி விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது,
வீடுகளில் வளர்க்கும் நாய்கள் அழுகின்ற போது அவைகள் பெரும்பாலும் கட்டி வைதிருப்பதனாலேயோ அல்லது அடைத்து வைத்திருப்பதனாலேயோ அழுது தனக்கு அதிலிருந்து விடுபட்டு வெளியே வருவதற்கு அவற்றின் உணர்வை பிறர் அறிந்து உதவுவதற்காக அவைகள் அழுகின்றன. நாய்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த இயற்கையில் அவைகளுக்கு கொடுக்கபட்டிருக்கும் செய்கைகளில் அழுவதும் ஒன்று. தெரு நாய்கள் அழுதாலும் அதற்க்குக் காரணம் அவை தனது தேவை ஏதோ ஒன்று பூர்த்தி பெறாமல் இருப்பதனாலோ, உபாதைகளிலானோ அழுகை மூலம் அவற்றை வெளிபடுத்துகிறது. ஆனால் பலர் நாய் அழுதால் தீமைக்கு அறிகுறி என்றும், பேய் மற்றும் அசுத்த ஆவிகளின் நடமாட்டத்தை உணர்த்துவதற்கு அழுவதாக புனைவு கதைகளை தலைமுறை தலைமுறையாக சொல்லிவருவது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அவர்களின் அறியாமையை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது. 
சுவற்றில் காணப்படும் பல்லி சத்தமிட்டால் வீட்டிற்கு நல்லது அல்லது நினைக்கும் காரியம் நடக்கும் என்று நம்புகின்றனர், பல்லியை கெவுளி என்று குறிப்பிடுகின்றனர், 'கெவுளி வாக்கு பலிக்கும்' என்ற மற்றொரு நகைச்சுவையான நம்பிக்கையும் காலம் காலமாக இருந்து வருகிறது, சுவற்றிலிருக்கும் பல்லியை கடவுளின் அவதாரமாகவே நினைப்பவர்களும் ஏராளம் உண்டு, சுவற்றிலிருக்கும் பல்லிக்கு நாம் நினைக்கின்ற காரியம் நடக்குமா நடக்காத என்று முன்கூட்டியே அறிந்திருக்கும் வாய்ப்பு எங்கிருந்து கிடைக்கும் என்பதைப்பற்றி யாரும் யோசிப்பதே கிடையாது, காரணத்தை அறிந்து கொள்ள விரும்பாதவர்கள் காரியத்தை மட்டும் சிந்திக்காமல் நம்புவதை மூடத்தனம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்லுவது. பல்லி சாஸ்த்திரம் என்பது பல்லி ஒருவரின் உடலின் எந்த பாகத்தில் விழுகிறது என்பதைப்பற்றிய கணிப்பு என்று நம்பப்படுகிறது, காலம் காலமாக இருந்துவரும் ஒரு நம்பிக்கை, இது ஆதரமில்லாததாக இருந்தாலும் மக்கள் இதையும் நம்புகின்றனர்.
நான் வெளிநாட்டில் என் கணவருடன் இருந்த சமயத்தில் என் கணவருக்குத் தெரிந்த தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரின் குடும்பத்தினர் எங்களுடன் சிலகாலம் தங்கி இருந்தனர், அவருடைய மனைவி அதிகம் படிக்காதவர், அவர் சமையல் செய்யும் போது என்னிடம் சொல்வது, அவர்கள் ஊரில் சமையல் சுவையாக சமைப்பதற்கு பாம்பை கைகள் இரண்டிலும் வருடி அல்லது தொட்டிருக்கவேண்டும் என்பார், உயிரோடு இருக்கும் பாம்பை இரண்டு கைகளினாலும் தடவினால் தான் சமைக்கும் உணவு வகைகள் மிகவும் ருசியாக சமைக்கமுடியும் என்பார். அவர்கள் ஊரில் எல்லோருமே அதை நம்புவதாகவும் சொல்லுவார். எனக்கு அவரின் நம்பிக்கையை நினைத்து சிரிப்பு வரும், அவர்களுடைய நம்பிக்கையின்படி சமையல்காரர்கள் எல்லோருமே ஏற்கனவே பாம்பாட்டிகளாக இருந்திருக்கவேண்டும் என்று தோன்றும், அதை நினைத்து எனக்கு சிரிப்பு வராமல் வேறு என்ன வரும்.
குழவி வீட்டில் கூடு கட்டினால் அந்த மண்ணை உடைத்துவிடக் கூடாது என்றொரு நம்பிக்கை, வீட்டின் சன்னல்களிலும் வாயிற் நிலைகளிலும் குழவிகள் ஈரமண்ணில் கூடு கட்டும், அதை உடைத்தால் குழந்தை பிறக்காது என்பது எப்படி சாத்தியமாகும் என்பது புரியவில்லை, எந்த உயிரினத்தையும் அழிப்பது கூடாது என்பதற்காக கூட்டின் உள்ளே குழவியின் முட்டைகளோ புழுக்களோ இருக்கும் போது அந்த கூட்டை சிதைப்பது சரியானது இல்லைதான், அந்த கூடுகள் வெறுமனே பூச்சிகளே இல்லாமல் இருக்கும்போது அதை உடைத்தெரிவதினால் குழந்தை பிறப்பது எப்படி தவறிப் போகும் என்பது விளங்காத ஒன்றாகவே உள்ளது.
மனிதர்கள் புறப்பட்டு வெளியே போகும்போது குறுக்கே பூனை ஓடினால் வீட்டிற்க்குத் திரும்பிச் சென்று சிறிது தண்ணீர் குடித்துவிட்டு மறுபடியும் வெளியே செல்லுகிறார்கள், வெளியே போகும் போது குறுக்கே பூனை போனால் போகின்ற இடத்திலே காரியம் நன்மையில் முடியாது என்பது பலரது நம்பிக்கை, கறுப்புப் பூனையை வளர்த்தால் காத்து கருப்பு வீட்டில் அண்டாது என்போர் பலர். ஆனால் இவை அனைத்திலுமே மூட நம்பிக்கைகள் உள்ளது என்பதை அறிந்த பின்னும் பழையவற்றிலிருந்து மீள முடியாமல் பழக்க வழக்கங்களை விட முடியாமல் பழமையில் வாழ்ந்துகொண்டு நடை உடையில் மட்டும் மேனாட்டு கலாசாரத்தை பின்பற்றி வாழ்ந்து வருபவர்கள் இன்றைய காலகட்டத்தில் எங்கும் உள்ளனர்.
நரி முகத்தை பார்த்துவிட்டு சென்றால் காரியம் விருத்தியடையும் அல்லது வெற்றி கிடைக்கும் என்றும் நம்பி வருகின்றனர், நரி காடுகளில் வாழும் மிருகம், இதை பார்த்துவிட்டு போனால் ஜெயம் கிடைக்கும் என்றால், தற்காலத்தில் நரி போன்ற மனிதர்களைத்தான் பார்த்துவிட்டு போக முடியும் காட்டிலுள்ள விலங்கை எங்கிருந்து பார்ப்பது, யாருக்காவது போன காரியம்
வெற்றியடைத்தால், நரி முகத்தில் முழித்தாயோ என்ற பழமொழி சொல்லபடுகிறது. இன்னும் ஏராளமான வினோதமான அடிப்படையற்ற நம்பிக்கைகள் நமது நாட்டில் இன்னும் நம்பப்படுகிறது என்பது கேட்பதற்கு சற்று வருத்தமாகவும் உள்ளது.ஆனால் இந்த மிருகங்களும் பூச்சிகளும் மனிதனைக் கண்டுதான் ஓடி ஒளிந்து வாழ்ந்துவருகிறது என்பது மட்டுமே நிஜம்.