இந்த அறிய வகை மரத்தின் முக்கிய சிறப்பு சுமார் 4.5 ஆயிரம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி தன்னுள்ளே சேமித்து வைத்து, வறண்ட காலங்களில் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் தண்ணீர் விநியோகிக்கும் தண்ணீர் தடாகமாக திகழும் வினோத குணமுடையது.

சுடான் நாட்டில் சுமார் 30,000 மரங்களிலிருந்து தண்ணீரை எடுத்து பல நூற்றாண்டுகள் குடி நீராகவும் மற்றும் எல்லாவித தேவைகளுக்கும் உபயோகப்படுத்தி வந்துள்ளனர் என்பது வியக்கத்தக்க செய்தி. இந்த மரங்களின் மூலம் கிடைக்கும் தண்ணீரை நம்பி ஆப்பிரிக்காவின் பல பகுதி மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இம்மரத்தை 'உயிருள்ள அணை ' என்று சொல்வதும் உண்டு.
காட்டில் வாழும் யானைகளும் நீர் நிலைகளில் தண்ணீர் வற்றிய பின் இம்மரத்தின் தன்மை அறிந்து இம்மரத்தின் மேல் துளையிட்டு நீரை உறிஞ்சி குடித்து உயிர் வாழும் என்றும் கூறப்படுகிறது.

இந்த மரத்தின் மேல் பட்டைகளிலிருந்து கயிறுகள் கார்க் என்று சொல்லப்படும் மூடிகள் பாய்மரங்கள் முதலானவை செய்ய பயன் படுகிறது,
இந்த மரம் தலை கீழாய் வளர்வது போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது. இதற்க்கு காரணம் இதன் வேர்கள் மரத்தின் மேல் பகுதியில் காணப்படுவது மேலும் வியப்பூட்டுவதாய் அமைந்துள்ளது.

மரத்தின் கீழ் புறத்தில் வாசல்களை போன்ற வடிவத்தில் வழிகள் உருவாகி மரத்தின் உட்புறம் குகை போன்ற வடிவத்திலும் காணப்படுகிறது இதனால் ஒரு அழகிய மர வீடு போன்ற உருவ அமைப்பை இயற்கையாகவே இம்மரங்கள் ஏற்ப்படுத்துவதால் இதில் காட்டு விலங்குகள் மனிதர்கள் வீட்டில் தங்குவதைப் போல தங்கி வாழ முடிகிறது.
இதன் தோல் பகுதி கார்க் போன்ற தன்மையுடையதாக இருப்பதால் மழை தீ என்று பாதிப்புக்கள் அதிகம் ஏற்ப்பட வாய்ப்புகள் குறைவு, ஆனால் இடி மின்னல் தாக்கி சில மரங்கள் கருகி விடுவதும் உண்டு.
அழிந்து வரும் காடுகளில் இது போன்ற அறிய வகை தாவரமும் ஒன்று என்பது வருத்தத்தை அளிப்பதாக உள்ளது, இவ்வகை மரங்களை ஒரு காலத்தில் மதுகுப்பிகளுக்கு கார்க் செய்வதற்காகவும் காகிதம் செய்வதற்காகவும் வெட்டி அழிக்கப்பட்டு இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக