தலைநகர் டெல்லியில் நடந்து வரும் தொடர் கற்பழிப்பு சம்பவங்கள் திகைக்க வைக்கின்றது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெரிந்த விஷயமே, ஆனால் பாது காவலுக்கு வேலை பார்ப்பவர்களே பெண்களை கற்பழித்து வரும் தொடர் சம்பவங்கள் போதிய கவனம் எடுக்கப் படாததையே காட்டுவதாகஉள்ளது.
கற்ப்பழிப்பவர்களுக்கு சட்டம் கொடுக்கும் தண்டனைகள் கடுமையாக்கப்படாதது தான் மேலும் பல குற்றவாளிகளை உருவாக்குகிறது. வளைகுடா நாடுகளில் பெண்களை அவதூறு செய்வது நடக்காத விஷயம், அங்கே இருக்கும் தண்டனைகளும் மிக கடுமையானவை.
குற்றங்களை செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் மிக கடுமையானதாக இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்காதபடி காக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக