நாம் வாழுகின்ற காலத்தில் குழந்தைப் பருவம் முதல் வாழ்வின் இறுதிவரையில் எத்தைனையோ மனிதர்களையும் இடங்களையும் ஊர்களையும் நாடுகளையும் ஜடப்பொருட்களையும் மிருகங்களையும் ஊர்வன பறப்பன என்று கோடிகணக்கானவற்றை சந்திக்கின்றோம். இவை அனைத்தையும் நம்மால் நினைவில் வைத்துக் கொள்வதற்காக மூளையின் ஒருபகுதி இயங்கிவருகிறது.
பலவற்றை நாம் சந்தித்தவுடன் சில நிமிடங்களிலேயே மறந்துவிடுகின்றோம், அதற்கு காரணம் நாம் அந்த பொருளையோ மனிதரையோ இடத்தையோ நினைவு வைத்துக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை நாம் உணர்கிறோம் இந்த உணர்வானது நரம்புகளின் வழியாக மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு எடுத்துச் சொல்லப்படுவதால் நாம் அவற்றை மறந்து விடுகின்றோம்.
சிலவற்றை நாம் நினைவில் வைத்துக்கொள்வது அவசியம் என்ற போதும் கூட மறந்துவிடும் சம்பவங்களும் உண்டாக காரணமாக இருப்பது நாம் வேறு பல நடப்பு காரியங்களில் மூழ்கி விடுகிறோம் என்பதால் தான். இதனால்தான் பலர் பல வேலைகளை நாட்குறிப்பிலோ செல்போன்களிலோ எழுதி பதிவு செய்து நினைவுபடுத்தி செயல்படுகின்றனர்.
ஒரு சாதாரண பேனாவோ பென்சிலோ அல்லது நாம் வைத்திருந்த மிகவும் பிடித்த அல்லது நம்முடனேயே இருக்கவேண்டும் என்று நாம் விரும்புபவற்றை தொலைத்துவிடும் போது மிகவும் வேதனையடைகிறோம், எப்படியாவது தேடி அது கிடைத்துவிடவேண்டும் என்று ஆவல் கொள்கிறோம். அப்படி கிடைத்து விட்டால் பெருமகிழ்ச்சியில் திளைத்துவிடுகிறோம், இழந்தது இழந்ததுதான் என்ற நிலையில் மனம் உடைந்து பெரும் வேதனையடைகிறோம், அந்த சம்பவத்தை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் மனம் கிடந்தது தவியாய் தவிப்பதை பார்க்கின்றோம்.
அவ்வாறு வேதனை அடையும் போது அந்த வேதனைகளை கட்டுக்குள் வைத்திருக்க நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் ரசாயனங்கள் உதவியுடன் நாம் பல நேரங்களில் முயன்று வெற்றி பெறுகிறோம், பல நேரங்களில் தோல்வி என்றாகி விடும் போது மனதின், மற்றும் நரம்புகளின் செயல்பாடுகள் அசாதாரண நிலையை அடைந்து கொஞ்சம் கொஞ்சமாக அதன் வலிமைகளை இழந்துவிட ஆரம்பிக்கின்றது, மூளையில் மற்றும் வயிற்றிலிருக்கும் சுரப்பிகளில் சுரக்கும் திரவம் அல்லது ரசாயனங்கள் நரம்புகளுக்கும் உடலுக்கும் தேவையான திரவம் அல்லது ரசாயனங்கள் சுரப்பது நிறுத்திவிடுகிறது, அல்லது குறைந்துவிடுகிறது. இயல்பு நிலையிலிருந்து உடல் மாற்றங்கள் அடைய நேருகிறது. இதனால் உடலில் பலவித நோய்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்ப்பட ஏதுவாகிறது.
சந்தித்ததில் மகிழ்ச்சியடையும் அல்லது தனக்கு கிடைத்தவற்றில் மகிழ்ச்சியுறும் மனது, அவற்றை இழந்து அல்லது பிரிந்து விடும் போது இழப்பை ஏற்க மறுக்கின்றது. காதல் தோல்வி, மரணம், பிரிவுகள் பலவும் நம் மனதை மிக ஆழமாக பாதிப்பிற்க்குள்ளாக்குகிறது. யாரோ ஒருவரின் மரணமாக இருந்தாலும் அத்துயரம் சம்பந்தப்படாதவரைக் கூட வேதனையடையச் செய்கிறது. யாரோ ஒருவரின் மரணத்திற்காக வருந்துவது குறைவாகவும் பின்னர் மறக்கப்பட்டும் விடக்கூடியது என்பதை நாம் உணர்வதால் அது நம்மை பாதிப்பதில்லை, குறிப்பிட்ட இழப்புகள் நாம் எதிர்பார்த்திராததாகவோ நமக்கு மிகவும் வேண்டியதாகவும் இருக்கின்ற காரணத்தால் சில பிரிவுகளும் மரணமும் மன உளைச்சல் உண்டாக்குகிறது. மன உளைச்சல் என்பது உடலில் ஏற்ப்படும் அசாதாரண ரசாயன மாற்றமாகும். மனஉளைச்சல் என்பதை மருத்துவ ரீதியாக மனநோய் என்று அழைக்கபடுவதால் இதை சரிசெய்ய சரியான விகிதத்தில் ஏற்ற மருந்துகள் உட்கொள்ளும் போது இந்நோய் சரிசெய்யப்பட்டு விடுகிறது,
சந்திப்பில் கிடைக்கும் ஆனந்தத்தைவிட பிரிவில் உண்டாகும் துயரம் மனதை பாதிப்படையச் செய்யும் வல்லமை மிகுந்து காணப்படுகிறது. சந்திப்பில் எல்லையற்ற மகிழ்ச்சி மனிதனின் மனதிற்கு தெம்பூட்டுவதாக அமைவதற்கு காரணம் மகிழ்ச்சியில் பல சுரப்பிகள் தேவையான திரவங்களை சுரந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளுக்கு வலிமையையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க உதவுகிறது.
மகிழ்ச்சியை விருந்து கேளிக்கை ( பலர் விஸ்கி பிராந்தி குடித்து கொண்டாடுவதும் உண்டு ) என்று கொண்டாடுவதும், துயரத்தை குடி போதை சிகரெட் போன்ற தீய பழக்கங்களால் போக்க நினைப்பதற்கும் மனிதனின் எண்ணங்களும் நினைவுகளும் காரணமாக இருக்கிறது,
துயரம் என்பது அதிகமாகி நீடிக்கும் போது சுரப்பிகளின் வேலை குறைந்து காணப்படுவதும், துயரம் என்பது மனிதனின் உடலிலும் மூளையிலும் நரம்புகளிலும் சந்தோஷத்தின் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
நாம் வெளிநாடுகளுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ சுற்றிபார்க்க போகும்போது புகைபடங்களை எடுத்துக்கொளுகிறோம், நாம் சந்திக்கும் மனிதர்கள் இயற்க்கை காட்ச்சிகள் என்று எதுவெல்லாம் நம்மை ஈர்க்கின்றதோ அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் புகைபடமாக்கிக் கொண்டு நாம் நிரந்தரமாக வாழும் இடத்தில் வைத்துக் கொள்கிறோம். அதற்க்கு காரணம் அந்த காட்ச்சிகளையோ மனிதர்களையோ இனி நம்மால் பார்க்க முடியாது என்பதை நமது மனமும் எண்ணங்களும் உணர்வதால் அவற்றை புகைப்படமாக்கி திரும்ப பார்த்து மகிழ்ச்சியுற நினைவுச் சின்னமாக வைத்துக் கொள்ளுகிறோம். ஆனால் நாம் நிரந்தரமாக இருக்கின்ற இடத்தையோ நபர்களையோ புகைப்படமாக்கி பார்த்துக் கொண்டிருக்க விரும்புவது கிடையாது, அப்படியொரு எண்ணமோ நினைவோ ஏற்ப்படுவதும் கிடையாது.
ஒருவர் மரணத்தை எதிர்கொள்ள போகிறார் என்று தெரிந்து விட்டால் அவருக்கு அதுநாள்வரையில் கொடுத்த பராமரிப்பு பாசம் போன்றவற்றை விட அதிகம் கொடுக்கப்படுவதற்குக் காரணம் மரணம் என்ற பிரிவிற்கு கொடுக்கப்படும் உபச்சாரம். நம்மோடிருக்கும் ஒருவருக்கு நாம் ஏன் அத்தனை அன்பும் கவனிப்பும் கொடுக்கத் தவறுகிறோம்? அவர் எப்போதும் நம்முடன் தானே இருக்கப் போகிறார் என்ற 'எண்ணம் அல்லது நமது நினைவு' தான் அதற்க்கு காரணமாக அமைகிறது.
மனிதருக்குள் ஏன் இந்த எதிர்மறையான எண்ணங்கள் நினைவுகள் ஏற்ப்படுகிறது? எந்த ஒன்றையும் தன்னிடம் நிரந்தரமாக இருக்கின்ற போது அதைபற்றிய அக்கறையும் கவனமும் இல்லாமலும் அதை பிரிந்திருக்கும் பட்சத்தில் அதிகமாகிவிடுவதும் மனிதனின் இயல்புகளில் ஒன்றாக காணப்படுவதே இதற்க்கு காரணம்.
சனி, 7 நவம்பர், 2009
மனசு
மருத்துவ உலகில் மனசு என்பது மூளையின் ஒரு பகுதி என்பதை கண்டறிந்த பின்னர் மன ரீதியான நோய்களுக்கு மாபெரும் தீர்வு காணப்பட்டது. கண்ணால் காண முடியாத பல அறிய சக்திகளில் மனசின் சக்தி மகா சக்தி என்றால் மிகையாகாது.
மனதின் நினைவுகளால் மனிதனின் ஆன்மா பல காலம் வாழ முடியும் என்பது இன்னும் சில ஆண்டுகளில் நிரூபணம் ஆகப் போகும் மருத்துவ அறிவியலின் மாபெரும் கண்டு பிடிப்பாக இருக்கப் போகிறது.
ஒரு மனிதனின் குணம் என்பது பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கம் காரணமாக அமைகிறது, ஆனால் மனதின் நினைவுகள் பல்வேறு காரணங்களால் வேறுபடுகிறது, மனதின் பல்வேறு நினைவுகளில் அதன் முழுமையும் ஒரு குறிப்பிட்ட நினைவிலேயே நின்று மனதின் ஆழத்திலிருந்து வெளிப்படுத்தப்படும் எண்ணங்களின் ஒருமித்த நோக்கம் அம்மனிதனின் உயிர் உடலிலிருந்து பிரிந்த பின்னும் தொடர்கிறது.
காண முடியாத பல அறிய அற்ப்புதங்களில் இத்தகைய சக்தியும் ஒன்றாக கருதப்படும் காலம் மிக விரைவில் அறிவியல் ரீதியாக நிருபிக்கப்படும் போது மனிதனின் மூளையின் அபூர்வ சக்திகளை மனிதனால் விளங்கி கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடிந்துவிடும்.
இதனால் உடலில் உயிரிருக்கும் ஒரு மனிதனின் எண்ணம் பல கோடி மைல்களை சில நொடிகளில் கடந்து செல்லும் ஆற்றல் கொண்டவை என்பதும் நிரூபிக்கபட்டுவிடும். முன்னோர்களில் பலர் தவமிருந்து பெற்ற பல அறிய சக்திகளின் உண்மை புரிந்துவிடும், ஏற்றுகொள்ளபட்டு விடும்.
பேய் பூதம் என்று பயந்து கொண்டிருக்கும் நமக்கு பேய் பூதம் என்ற உருவமற்ற சிலவற்றிற்கும் மனிதனின் எண்ணத்தின் பலனாக ஏற்ப்படும் நிகழ்வுகளுக்குமான வித்தியாசம் என்னவென்பது புரிய வரும். இந்நிலையில் கடவுள் என்பதன் அர்த்தம் அல்லது அனர்த்தம் என்னவென்பது தெளிவாகிவிடும்.
மனிதன் தான் வாழும் நாளில் அவன் செயல்படும் விதங்களிலிருந்து மாறுபட்ட அல்லது தற்போதைய சராசரி வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, இதுவரையில் நாம் கேள்விபட்டிராத வாழ்க்கை முறைகளை தேர்ந்தெடுக்க வழி பிறந்துவிடும், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதற்கான முழு விளக்கம் நிருபிக்கபட்டுவிடும். இதனால் மனிதன் தற்ப்போது வாழ்ந்துவரும் வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறைகளை தேர்ந்தெடுப்பான்,
கடந்தகால வாழ்க்கை அர்த்தமற்றது என்பதும் கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் செயல்பாடுகள் அறியாமையினால் நிறைந்திருந்தது என்பதையும் வருங்கால சந்ததியினர் முழுமையாக ஏற்றுக்கொள்ள பல அறிய வாய்ப்புகளை அறிவியல் முன்னேற்றம் ஏற்படுத்திக் கொடுத்துவிடும் என்பது நிச்சயம்.
மனசும் அதில் ஏற்ப்படும் நினைவுகளும் எண்ணங்களும் தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவும், நிர்வகிக்கவும் உதவும் மிகப் பெரிய ஆயுதமாக விளங்குகிறது. மனிதனின் சுற்றுப்புறம் என்பது மனிதனின் இயற்கையான குணத்திற்கு சவாலாய் அமைவதும் வாழ்க்கை முறையை தலைகீழாய் மாற்றி அமைத்து விடுவதும் உண்டு, அது மிகவும் துரதிஷ்டவசமானது.
குழந்தை பருவம் முதல் வயோதிகம் வரையிலான வாழ்க்கையில் குழந்தை பருவம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவதன் காரணம் , குழந்தைபருவம் என்பது மண்போன்றது, எண்ணங்களும் நினைவுகளும் இயற்கையாக மண்ணிலிருந்து விளைந்துவரும் இளம் செடியை போன்றது, இதில் சுற்றுப்புறமும் சூழ்நிலைகளும் அந்த செடி விளையும் நிலமானது களி மண்ணினால் ஆனதா அல்லது கற்பாறைகள் நிறைந்ததா அல்லது வெறும் மணலா என்பதுதான் மனிதனின் இயல்பான குணங்களிலிருந்து முற்றிலும் வேறு அல்லது வித்தியாசமான எண்ணங்களையும் நினைவுகளையும் ஏற்படுத்தி வாழ்க்கையை மாற்றி அமைத்து விடுகிறது.
மனசின் வலிமை பற்றி நாம் முழுமையாக அறிந்தால் வாழும் வாழ்வை வளமாக்கிகொள்ள முடிகிறது என்பது நிச்சயம். அர்த்தமுள்ள வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது. அதன் மூலம் நாம் அடையும் பலனைப்பற்றி மற்றவர் சொல்லி தெரிந்து கொள்வதைவிட அதை அனுபவிக்கும் போது அதன் மகத்துவம் விளங்கும்.

வெள்ளி, 6 நவம்பர், 2009
சொல்ல முடியாத கதை 3
Friday 6 November 2009
குழந்தை பாலனுக்கு ஐந்து வயது நிரம்பியது, பெற்றோர் இறந்து விட்டதனாலும், தனது சகோதரர்களுக்கு ஜானகியுடனான தொடர்பை பற்றிய ரகசியங்கள் தெரிந்து விட்டதனாலும், போறாத குறைக்கு ஜானகியின் விடாத உபத்திரவத்தாலும் ராணுவத்திலிருந்து திரும்பி வந்து விட்டான் விக்டர். மறுபடியும் ஒரு பெண் குழந்தைக்கு தாயானாள் ஜானகி, வேறு வழி இன்றி விக்டர் ஜானகியை வைத்து குடும்பம் நடத்தியாக வேண்டும் என்ற சூழ்நிலை உருவானதால் ஜானகியுடன் வாழ்ந்து வந்தான் விக்டர்.
சிங்காரத்திர்க்கும் ஜானகிக்கும் பிறந்த தாமுவையும் வசந்தாவையும் தன் சொந்த பிள்ளைகளை விட அதிக பாசத்துடன் பராமரிப்பு செய்து வந்ததால் தாமுவிற்க்கும் வசந்தாவிற்கும் தன் சொந்த தகப்பனை பிரிந்த கவலை என்பதே இல்லாமல் போனது. ஆனால் தான் ஒரு தவறும் செய்யாது நல்ல விதத்தில் ஜானகியுடன் குடும்பம் நடத்தி வந்த போதும் ஜானகி காரணம் ஏதுமின்றி தன்னை விட்டு குழந்தைகளுடன் விக்டரிடம் குடும்பம் நடத்தி வந்ததால் சிங்காரம் மனம் உடைந்து போனார்.
ஆனாலும் சிங்காரம் எந்த கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாகாமல் வேலை உண்டு தான் உண்டு என்று தனி மரமாக வாழ்ந்து வந்தார். மகன் தாமுவிற்க்கு பத்து வயதிருக்கும் போதிலிருந்து சிங்காரத்திடம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வசந்தாவையும் தாமுவுடன் அனுப்பி வைப்பாள் ஜானகி, தன் தகப்பனை பார்த்து விட்டு சாப்பிட்டு விட்டு வருவதும் போவதுமாக இருந்தனர் தாமுவும் வசந்தாவும்.
சிங்காரத்திற்கு சொந்த வீடும் சேர்மானமாக பணமும் இருந்தது. சிங்காரம் சாகும் வரை வேறு பெண்களை ஏறெடுத்து கூட பார்க்காமல் வாழ்ந்து, தான் இறக்கும் முன் தனக்கிருந்த பணம் வீடு முதலானவற்றை தன் மகன் தாமுவின் பெயருக்கு எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார்.
விக்டருக்கு பிறந்த பாலனும் மகள் அஞ்சலி, ஸ்ரீதேவிக்கும் தன் மூத்த சகோதரன் தாமுவும் அக்காள் வசந்தாவும் வேறு அப்பாவின் பிள்ளைகள் என்ற விவரம் கருத்து தெரியும் வரையில் விளங்காமல் அல்லது தெரியாமல் இருந்து வந்தது. விக்டருக்கு தன்னுடன் வேலை செய்து கொண்டிருந்த இளம் விதவை சுமதியுடன் தொடர்பு ஏற்பட்டது.
தொடரும்...

செவ்வாய், 3 நவம்பர், 2009
சொல்ல முடியாத கதை 5
Thursday 5 November 2009
தினமும் குடித்துவிட்டு வரும் விக்டருடன் சண்டை போடுவதும் வாய் வார்த்தைகள் மீறி அடிதை என குடும்பம் போர்களமாகியது. பாலன் தான் விரும்பிய பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு வாழ அஞ்சலிக்கும் ஸ்ரீதேவிக்கும் விக்டரின் முறையில் மாப்பிளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.
தாமுவிர்க்கு சிங்காரம் வைத்துவிட்டு போன வீட்டை இடித்து புதிய வீடு கட்ட திட்டம் போட்டனர், அதற்க்கு தேவையான பணம் ஜானகியின் சேமிப்பு போக மீதம் அஞ்சலியும் பாலனும் உதவினர், தாமுவிர்க்கு தன் மனைவி மூலம் கிடைத்த சொத்துக்கள் நிறைய இருந்ததால் சிங்காரம் கொடுத்த வீட்டில் ஜானகியும் விக்டரின் பிள்ளைகளும் குடி இருந்து வந்தனர்.
அஞ்சலிக்கு தன் தகப்பன் விக்டரை கண்டாலே வெறுப்பு, காரணம் அவன் தன்னுடன் வேலை பார்த்து வந்த சுமதியுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரிந்து விட்டது, இதனால் சாப்பாட்டில் உப்பை அதிகமாக போட்டு பரிமாறுவது, பல நாட்கள் சாப்பாடு போடாமலே வெளியே துரத்துவது, வீட்டிற்கு விக்டர் வருகிறான் என்று தெரிந்து விட்டால் வீட்டை பூட்டிக்கொண்டு எங்கயாவது புறப்பட்டு போய் விடுவது என்று பழி தீர்க்கும் செய்கைகள் கணக்கில் அடங்காமல் போனது.
ஜானகி உடல் நலம் கெட்டு படுத்த படுக்கையாகி இறந்தும் போனாள், ஜானகி இறந்த பின் அந்த வீட்டில் இருந்து வந்த பாலனையும் அஞ்சலியையும் வீட்டை காலி செய்து தரும்படி கேட்டான் தாமு. காலி செய்யுமுன் தாங்கள் வீடு கட்ட கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டனர் பாலனும் அஞ்சலியும், பாலன் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டிற்கு போய் விட்டான்,
அஞ்சலி தான் அதிக பணம் கட்டிடம் கட்ட கொடுத்திருப்பதாகவும் அதை திரும்ப கொடுத்தால் தான் வெளியேறுவேன் என்று கேட்டாள், அதை ஒத்துக் கொள்ளாத தாமு தான் சம்பாதித்த பணத்தில் தான் ஜானகி சேமிப்பு செய்ததாகவும் பெரும் தொகையை அஞ்சலிக்கு தர முடியாது என்றும் வாதிட்டு வந்தனர்.
அஞ்சலி தாமுவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தாள், பல வருடம் வழக்கு நடந்த பின்னர், வேறு வழியின்றி தீர்ப்பின் படி கிடைத்த பணத்தை பெற்றுக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் விக்டருக்கு உடல் நிலை மிகவும் மோசமாகியது, மகன் பாலன் வீட்டில் தன் கடைசி நாட்களை கழித்தார், விக்டர் இறந்து போகும் முன்னரே பாலனுக்கும் அஞ்சலிக்கும் பல விதத்தில் மன வேற்றுமைகள் ஏற்பட்டு இருவரும் விரோதிகளாக இருந்தனர்
விக்டர் காலமாகி சவம் கடைசி பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த நிலையில் அஞ்சலி பார்க்க வருவாள் என்பது தெரிந்திருந்த பாலன் ஏற்கனவே அவளை அங்கு வரக்கூடாது என எச்சரித்து இருந்ததால், கடைசியாக ஒரு முறைக்கு போய் பார்க்க நினைத்து அஞ்சலி எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன, அஞ்சலியை விக்டரின் சைவத்தை பார்க்க விடாமலேயே அடக்கம் செய்தான் பாலன்.

சொல்ல முடியாத கதை 4
Wednesday 4 November 2009
தொடர்பு ஏற்பட்ட ஒரு சில வருடங்களில் விக்டர் பல நாட்கள் சுமதியின் வீட்டிலேயே தங்கி விடுவதால் ஜானகிக்கு விக்டரின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட துவங்கியது. இதன் உண்மையை தெரிந்து கொள்ள தன் மகன் பாலனையும் மகள் அஞ்சலியையும் விக்டர் வேலை முடிந்து வெளியே வரும் சமயங்களில் எங்கே போகிறான் என்று வேவு பார்க்க அனுப்பினாள் ஜானகி.
அப்போது பாலன் பள்ளி கூடத்திற்கு ஒழுங்காக போகாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்த பதினேழு வயது நிரம்பியவன், அஞ்சலி பனிரெண்டு வயது நிரம்பியவளாக இருந்தனர். வீட்டிற்கு விக்டர் வரும் போது குடித்து விட்டு வர ஆரம்பித்தான், அந்த சமயங்களில் ஜானகி விக்டரை எங்கே தங்கி விட்டு வருகிறான் என்று கேட்டு சண்டை போட ஆரம்பித்தாள்.
பல நாட்கள் சண்டை அடிதடி என்று குடும்பம் மோசமான சூழ்நிலையிலிருந்து வந்தது. தகப்பன் தன் தாய் ஜானகியை வெறுத்து விட்டு வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவதையும் குடும்பத்தில் சண்டை அடிதடி என்று பிரச்சினைகள் ஏற்பட்டு வந்ததால் விக்டரை வெறுத்தனர் பிள்ளைகள் மூவரும்.
ஆனால் எல்லா உண்மைகளையும் அறிந்த தாமுவும் வசந்தாவும் விக்டரிடம் மிகவும் அன்பாகவே இருந்து வந்தனர். தாமுவிற்க்கும் வசந்தாவிற்கும் திருமணம் முடிந்தது, இருவருக்கும் அவர்களின் தகப்பன் சிங்காரத்தின் ஜாதி முறைப்படி திருமணம் நடத்தி வைத்தனர் ஜானகியும் விக்டரும்.
மகள் அஞ்சலிக்கு ஜானகியின் உண்மை கதை சிறிது சிறிதாக தெரிய ஆரம்பித்தது, ஆனாலும் தன் தகப்பனுக்கு துரோகியாக மாறினாள் அஞ்சலி, காரணம் தன் தகப்பன் விக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் சுமதியுடனும் குடும்பம் நடத்துவது தெரிந்துவிட்டதால்.
தொடரும்....

சொல்ல முடியாத கதை 2
Tuesday 3 November 2009
கர்பமுற்ற ஜானகி விக்டர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தாள், இதை ஏற்க மறுத்த விக்டரை விக்டரின் தாய் ஷீலாம்மாவிடம் நடந்ததை சொல்லி விடுவதாக பயமுறுத்தி வந்தாள். இந்நிலையில் தன் மனைவியின் தவறான உறவு சிங்காரத்திற்கு தெரிய வந்தது, மனைவி ஜானகியின் தாய் அண்ணன் என்று இருந்த அத்தனை பெரியவர்களிடம் முறையிட்டார், அவர்கள் ஜானகிக்கு பல வழிகளில் புத்திமதிகள் கூறியும் கேட்காத ஜானகி ஒரு ஆண் குழந்தைக்கு மறுபடியும் தாயானாள்.
தான் பெற்றிருக்கும் ஆண் குழந்தைக்கு தகப்பன் விக்டர் தான் என்று கூறி சிங்காரத்திடமிருந்து பிரிந்து வந்து தன் தாயுடன் வாழத் தொடங்கினாள் ஜானகி. சிங்காரத்துடனான உடலுறவை விக்டரிடம் தொடர்பு ஏற்படுவதற்கு முன்பே விட்டு விட்டதனால் சிங்காரத்திர்க்கும் பிறந்திருக்கும் குழந்தையின் தகப்பன் தான் இல்லை என்பது தெரிந்திருந்தது.
தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இந்த தவறான உறவுபற்றி தெரிந்து விட்டால் குடும்பத்தினருக்கு பெருத்த அவமானம் என்பதால் ஜானகிக்கு அவ்வப்போது கேட்க்கும் தொகையை கொடுத்து சரிகட்டி வந்தான் விக்டர். இந்நிலையில் விக்டர் இந்த பிரச்சினையிலிருந்து விடுபட ராணுவத்தில் சேர்ந்து காஷ்மீருக்கு அனுப்பபட்டான்.
விக்டருக்கு பெற்றெடுத்ததாக ஜானகி கூறிய ஆண் குழந்தைக்கு பாலன் என்று பெயர் வைத்தாள் ஜானகி, ஆண்டுகள் கடந்தன, விக்டர் விடுமுறையில் வரும்போதெல்லாம் ஜானகியுடனான தொடர்பு தொடர்ந்து வந்தது, இதற்கிடையில் விக்டரின் தாய் ஷீலாம்மாவும் காலமாகி விட்டார். விக்டரின் தந்தையும் ஷீலாம்மாவை தொடர்ந்து காலமாகி விட்டார். விக்டரின் அண்ணன்களான சந்துரு, சினேகன் மற்றும் விஜயனுக்கு விக்டர் ஜானகியின் ரகசிய தொடர்பும் அதனால் பிறந்த குழந்தையும் மற்றும் இந்த தொடர்பால் ஜானகி தான் திருமணம் செய்த கணவனை விட்டு பிரிந்து விக்டருடன் தொடர்பை தொடர்வதும் தெரிந்து விட்டது.
தொடரும் .....

திங்கள், 2 நவம்பர், 2009
சொல்ல முடியாத கதை 1
கொத்தனார் சிங்காரத்திற்கு முப்பது வயது, சிவந்த நிறம் நெடிய உயரம், திருமணமான முதல் வருடத்திலேயே அவரது மனைவி ஜானகி சிங்காரத்தின் மறு உருவமாக ஒரு பிள்ளையை பெற்றெடுத்து விட்டாள், மனைவி ஜானகியும் நல்ல சிவப்பு நிறம் நீண்ட தலை முடி முகலட்சணம் என்று ஒரு குறையும் இல்லாதிருந்தாள்.
மகன் தாமு என்கிற தாமோதரன் பிறந்த ஒருவருடத்திற்க்குப் பின் இரண்டு கறவை மாடுகள் வாங்கி கொடுத்தார் சிங்காரம், தன் மனைவி வீட்டிலிருந்தபடியே பால் வியாபாரம் செய்து கொள்ளவும் குழந்தை தாமுவுக்கும் குடிக்க பால் கிடைக்கும் என்ற யோசனையில்.
தாமுவிற்கு மூன்று வயதிருக்கும் போது இரண்டாவது பெண் குழந்தைக்கு தாயானாள் ஜானகி, பெண் குழந்தைக்கு வசந்தா என்று பெயர் சூட்டப்பட்டது , மிக அழகிய பெண்ணாக இருந்தாள் வசந்தா.
டாக்டர் ஷீலா அந்த பகுதியில் பிரபலமானவர், அவரது வீட்டிற்கு தினமும் பசும் பால் கொடுக்கும்படி கேட்டிருந்தனர், தினமும் ஷீலாம்மாவின் வீட்டிற்குச் சென்று பசும் பால் கொடுப்பது வழக்கமாகியது ஜானகிக்கு.
ஷீலாம்மாவிற்கு நான்கு பிள்ளைகள் நான்கு பேரில் மூத்தமகனுக்கு மட்டும் திருமணம் ஆகி அடுத்த தெருவிலேயே மகனும் மருமகளும் வசித்து வந்தனர். கடைசி மகன் விக்டரின் பார்வை ஜானகியின் இளமையும் அழகையும் கவனிக்கத் தவறவில்லை, விக்டர் தன் வீட்டின் அடுத்த வீட்டில் வசித்துவந்த தீபாவை காதலித்து வருவது எல்லோரும் அறிந்த விஷயமாக இருந்து வந்தது.
ஜானகி பால் கொடுக்கும் சாக்கில் வீட்டு வேலைகள் செய்யவும் தேவைப்பட்டால் தான் வருவதாக ஷீலாம்மாவிடம் தெரிவித்தாள், மேல்வேலைகள் செய்ய ஜானகி ஷீலாம்மாவின் வீட்டினுள் போக ஆரம்பித்தாள், விக்டரின் இளமையும் அழகும் ஜானகியை கவர்ந்து விட எப்படியாவது விக்டரை அடைய ஆசைபட்டாள், ஜானகி தன் மீது பார்வை கணைகளை வீசுவதை தெரிந்துகொண்ட விக்டரும் ஜானகியுடன் உறவு வைத்துக் கொள்ள நேரிட்டது.
இதை அறிந்த தீபா விக்டரை மறக்க முடிவு செய்தாள், தன் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு வேறு ஊருக்கு போய் விட்டாள். தீபா விக்டரின் உறவு முறிந்து போனது ஜானகிக்கு மிகவும் வசதியாகி விட்டது, தீபா என்கிற தன் விரோதியால் இனி தனக்கு ஏதும் பிரச்சினை இல்லை என்கிற முடிவில் விக்டருடன் திருமணம் செய்தவளைப் போல உடலுறவுகொள்ள ஆரம்பித்து கருவுற்றாள் ஜானகி.
தொடரும்.......

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)