
நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் நடிப்பை பார்த்து வியக்காதவர் இருக்கமுடியாது, அவரைப்போல ஒரு நடிகர் இனி பிறப்பாரா என்பது சந்தேகம், அந்த நடிப்பை பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள், எம். ஆர். ராதாவின் நடிப்பு நடிப்பின் முழுமை என்னவென்பதை நடித்து காட்டிச் சென்றவர்.
அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் நவரசத்தை காண்பித்தவர் நடிகர் எம்.ஆர்.ராதா ஒருவர் மட்டுமே. நடிப்பின் இலக்கணம் நடிகர் எம்.ஆர்.ராதா. நகைச்சுவையை அவரது இயல்பான நடிப்பில் பார்க்கும் போது இப்படிக் கூடநடிக்க முடியுமா என்ற வியப்பை காண்பித்தவர், வசனங்களை அவர் பேசும் இயல்பு, அவருக்கே சொந்தமான அந்த குரலில் ஏற்ற இறக்கம் கொடுத்து பேசும்போது, அவர் நடிப்பு எத்தனை இயல்பாய், அந்த குரலின் ஏற்ற இறக்கத்திலேயே காண்பிக்க முடியும் என்று நடித்துக்காட்டிய அற்ப்புத நடிகன்.
இனி அந்த நடிப்பை காண வாய்ப்பில்லை என்பதை நினைக்கும்போது தான் அந்தஜாம்பவான்களை இழந்த இழப்பின் அருமை தெரிகிறது. காலம் சென்ற திரு எம்.ஆர்.ராதா அவர்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றிய அக்கறை என்னைப்போன்ற ரசிகர்களுக்கு தேவை இல்லாதது, அவரது நடிப்பு என்ற ஒரு பக்கம்மட்டும் போதும் என்ற திருப்தி தான் மேலோங்கி நிற்கிறது.
அவருடைய வாரிசுகள் அவரைபோல நடிக்கவில்லை என்றாலும் அவரது பெயருக்கும் நடிப்புத் திறமைக்கும் வாரிசுகளாக இருப்பது அவரது ரசிகர்களாக இருந்தவர்களுக்கு திருப்த்தியே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக