
காலம் சென்ற திரு.நாகேஷ் அவர்களை நான் ஒரு காமெடியனாக நினைத்ததே கிடையாது, அப்படியொரு அற்புதமான நடிகர். அவர் நகைச்சுவையை ரசிக்கும் அதே சமயத்தில் அவரது நடிப்புத் திறைமை நம்மை வியக்க வைக்கும்.
அறுபதுகளில் அவரது காமெடி இல்லாமல் திரைப்படம் பார்க்க முடியாது, ஒவ்வொரு நடிகருக்கும் 'மாஸ்டர் பீஸ்' என்று நிச்சயம் ஒன்றோ இரண்டோ அல்லது நிறைய திரைப்படங்கள் இருக்கும், அந்த வகையில் இவர் நடித்த சர்வர்சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், காதலிக்க நேரமில்லை, எதிர் நீச்சல், பாமா விஜயம், திருவிளையாடல், இன்னும் ஏகப்பட்ட திரைப்படங்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
நடிப்பு என்பது இவர்களிடம் தஞ்சம் கொண்டிருந்தது, இவர்கள் எல்லாரும் நடிப்பை காதலித்தார்கள் என்றே சொல்லவேண்டும், நடிப்பு என்கின்ற கன்னி இவர்களை கடைசிவரை விடுவதாகவே இல்லை இவர்களெல்லாம் நடிப்பின் இலக்கணம் வகுத்த பிரம்மாக்கள் என்றே சொல்லத்தோன்றுகிறது.
அந்த காலத்து நடிகர்கள் சம்பாதித்தது ரசிகர்களை மட்டுமே, காலம் இவரை நடிப்பினால் சம்பாத்தித்த எல்லாவற்றையும் இழந்துவிட்டு வெறுமையாக்கி விட்டு விட்டது , காலம் சென்ற திரு என்.எஸ். கிருஷ்ணன், எம்.கே.தியாகராஜபாகவதர் போன்ற பழம்பெரும் நடிகர்களைப் போல அவர்கள் நடித்து சம்பாத்தித்த அத்தனை பணத்தையும் இழந்து கடைசியில் வெறும் கையர்களாய், வறுமையிலும் வேதனையிலும் காலம் அவர்களை வெறுமை படுத்திய சோக கதைகளை நாம் பார்த்ததுண்டு அந்த வகையில் திரு நாகேஷ் அவர்களுக்கும் அதே போன்ற நிலை ஏற்ப்பட்டு தவித்த கதையை நினைத்தால் மனம் வேதனையால் வலிக்கிறது.
அவர்கள் சம்பாதித்த ரசிக இதயங்களில் என்றென்றும் அழியா இடத்தை பெற்றது மட்டுமே அவர்கள் உழைப்பில் கிடைத்த பலன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக