
இளம் நடிகர்கள் நடித்த திரைப்படங்களில் நான் ரசித்து பார்க்கும் நடிகர் விஜய், இவரது துவக்க காலத்து திரைப்படங்களைப் பார்த்து இவர் இத்தனை வேறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பெயரும் புகழும் பெறுவார் என்று நான் நினைக்கவே இல்லை.
இவரது சிறப்பு இவர் தேர்ந்து எடுக்கும் திரைகதைகள் தான். இவரது திறமைக்கும் உடல் , உருவம் மற்றும் வயதுக்கேற்ற கதைகள். அருமையான தேர்ந்தெடுப்பு, இவரது தந்தை இயக்குநர் சந்திரசேகரின் முழுமையான கவனம் இவருக்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுக்க பெரிதும் உறுதுணையாக உள்ளது என்பது புரிகிறது. நடிகர் விஜய்யுடன் ஜோடியாக நடித்த கதாநாயகிகளில் சிம்ரனுடன் இணைந்து நடித்தது ரசிக்கும்படியாக இருந்தது. ஜோதிகா, ரம்பா, தேவயானி மற்றும் பலர்இவருடன் நடித்திருந்தாலும் சிம்ரனுடன் நடித்து வெளிவந்த திரைப்படங்கள் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.

மிகவும் அழகான, வேகமான அசைவுகளையும் வாலிப மிடுக்குடன் ஆடும் நடனம் இவரது ப்ளஸ். இவரது நடிப்பில் வெளிவந்த 'பூவே உனக்காக', 'லவ் டுடே', 'ஒன்ஸ் மோர்', 'காதலுக்கு மரியாதை', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'கண்ணுக்குள் நிலவு', 'குஷி', 'பிரியமானவளே', 'பத்ரி', 'பிரண்ட்ஸ்', 'தமிழன்', 'புதிய கீதை', 'கில்லி', 'மதுரை', இன்னும் சில திரைப்படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன்.
இன்னும் வித்தியாசமான கதைகளிலும் கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கின்றோம், மேலும் இவரது முயற்சிகள் சிறக்க எமது வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக