
நடிகை ஜெயலலிதாவின் அழகிய உருவம் என்னை மிகவும் கவர்ந்தது, இவரது நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்களை நான் பார்த்து ரசித்திருக்கிறேன், இவர் பேசும் கொஞ்சும் தமிழ் வசனங்களும் என்னை கவர்தவை. ஜெயலலிதாவின் நடனம் ரசிக்கும்படியாக இருக்கும், இவர் நடித்த திரைப்படங்களில் வந்த நிறைய பாடல் காட்ச்சிகளை இன்னமும் நான் பார்த்து ரசித்து வருகிறேன்.
வெண்ணிற ஆடை திரைப்படத்தில், 'என்ன என்ன வார்த்தைகளோ', 'அடிமைப்பெண்' திரைப்படத்தில் இவரது சொந்த குரலில் பாடிய 'அம்மா என்றால் அன்பு ' என்ற பாடல், எங்கிருந்தோ வந்தாள் திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் நடித்திருக்கும் நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கும். 'ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி' என்ற பாடல் காட்சியில் அருமையாக இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் 'திரைப்படத்தில் 'நாணமோ ' என்ற பாடல் காட்சி, பருவம் எனது பாடல்', 'உன்னை நான் சந்தித்தேன்', 'ஆடாமல் ஆடுகிறேன்', போன்ற பாடல் காட்சிகள் அற்புதமானவை.

குடியிருந்த கோவில் திரைப்படத்தில் 'குங்குமபொட்டின் மங்களம்', 'ஆடலுடன் பாடலை கேட்டு', ' நீயே தான் எனக்கு மணவாட்டி', யார் நீ திரைப்படத்தில் 'நானே வருவேன், 'என் வேதனையில்', 'பார்வை ஒன்றே போதுமே', ஜெயலலிதா நடித்த எல்லாத் திரைப்படத்திலும் பாடல் காட்சிகள் சிறப்பாக இருக்கும் இன்றும் அவற்றை கேட்கும்போது சுகமான ராகங்களும் ஜெயலலிதாவின் முகமும் நினைவிற்கு வரும்.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய் ஷங்கர், போன்றவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் திரைப்படங்கள் ரசனைக்குரியவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக