
முகம் மட்டும் ஒரு நகைச்சுவை நடிகனைப் போல இருந்தாலும், அந்த முகத்தில் அவர் காட்டும் பாவங்கள் தான் பெரும்பாலும் நகைச்சுவைக்கு மெருகூட்டுவதாக இருக்கும். அவர் நினைத்த படி கேட்க்கும் உடலால் அவரது நடனத் திறமை சிறப்பாக இருக்கும், சந்திரபாபுவைப்போல நடித்து, தன் சொந்த குரலில் பாடி, அழகான நடனத் திறைமையும் நகைச் சுவை நடிப்பும் கொண்ட வேறு ஒரு கலைஞன் இதுவரை தமிழ் திரையில் கிடையாது.
அவரது திறைமையை பார்த்தவர்கள் அவரை நிச்சயம் மறக்க முடியாது. அவரது பாடல்கள் இன்றும் கேட்ப்பதற்கு இனிமையும் பொருள் பொதிந்ததாகவும் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக