
மக்கள் திலகம் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் தான் நடிகர்களிலே கவர்ச்சி நடிகர் அவருக்கு அடுத்த கவர்ச்சி நடிகர் அஜித் என்றால் மிகையாகாது. அழகிய நடிகர் அஜித், இவரது சிரிப்பும் நிறமும் உடல் அமைப்பும் கவர்ச்சியானது. இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் வாலி சிறப்பானது, காதல்கோட்டை, முகவரி, ஆசை, பவித்ரா, நேசம், உல்லாசம், தொடரும், முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பூவெல்லாம் உன் வாசம், காதல் மன்னன், வரலாறு, ஆள்வார், கிரீடம், பில்லா, போன்ற திரைப்படங்களை நான் பார்த்து இருக்கிறேன்.

நான் அதிகம் ரசிப்பது இவருடைய அழகுக்கு ஏற்ற மனைவி நடிகை ஷாலினி, அழகிய குடும்பமாக இப்போது இவர்களின் அருமை மகள் அனுஷ்காவும் இணைந்துள்ளார். நடிகை ஷாலினி இன்னும் பல தமிழ் திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும், ஷாலினி குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே அருமையாக நடிப்பவர், அதனால் நடிப்பென்பது ஷாலினிக்கு மிகவும் எளிது.

என்னைப்போன்ற ஷாலினியின் ரசிகர்கள் அவரது திரையுலக வரவை மிகவும் ஆசையாய் எதிர்பார்த்தோம், ஆனால் அவர் திருமணத்திற்குப் பின் நல்ல குடும்ப வாழ்க்கையை தேர்வு செய்து கொண்டு போனதும் சிறந்த முடிவுதான், ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றம். அழகிய தம்பதிகளின் குடும்ப வாழ்வு மகிழ்ச்சியும் நிறைவும் பெற்று சிறக்க எமது வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக